Friday, January 05, 2024

மேடை அளவு சுருங்கிப் போச்சு !

ஒரு பத்து ரங்கோலி கோல செட் வச்சுக்கிட்டு,  அதையே ஒரு சின்னப்பலகையில்  விதவிதமான கோலமா  தினமும்  அலங்கரிச்சுருவேன்.  வீடு முழுக்கக் கார்பெட் போட்ருப்பதால்  வேற வழியே இல்லை. ஏன் ... அதே பலகையில்  சின்னதாக் கோலமே போடக்கூடாதான்னா..... போடலாம்தான். ஆனால் உடம்பு வணங்கணுமே ! சோம்பல் ஏறிக்கிடக்கேப்பா....


உள்ளூர்த் தோழிகள்  பலருக்கும் நம்ம வீட்டுக் கொலுவுக்கு வர ஆசையாத்தான் இருக்காம். ஆனால் நேரம் ஒத்துவர்றதில்லை.  இன்னொரு தோழி, கட்டாயம் உங்க வீட்டுக்கு வரணும்.  காலையில் வரட்டுமா? ன்னாங்க. இந்தியர்தான். ஆனால் வடக்கர்.   கல்லூரி ஆசிரியை.  Justice of Peace, Marriage & Civil Union Celebrant.   இவுங்க இப்ப நம்ம சிட்டிக்கவுன்ஸில் கம்யூனிட்டி போர்ட் அங்கம் வேற . (அரசியல் வியாதி ! ) இவ்வளவு பிஸியா இருக்கும்போது, நட்புக்காக நேரம் ஒதுக்கி வர்றது  ஒரு நல்ல பண்பு.



அன்றைக்குக் காலை என்றால் நமக்கும் நல்லது. சாயங்காலம் நாம் யோகா வகுப்புக்குப் போகணும்.  இந்த ஒரு ஏழெட்டு வருஷத்துலே முதல்முறையா நம்ம வீட்டுக்கு வர்றாங்க.  கொலு விஸிட்.  பொம்மைகளை ரொம்ப ஆர்வமாப் பார்த்து ரசிச்சது எனக்குப் பிடிச்சது.  ஒவ்வொரு பொம்மைக்கும் பின்னால் ஒரு கதை இருக்குல்லே ! 
சாயங்காலம்  யோகா வகுப்பில், எதிர்பாராத ஒரு பரிசு எல்லோருக்கும் கிடைச்சது.  மானஸரோவர் தீர்த்தம் & ருத்ராக்ஷம்.  நம்ம யோகா குடும்ப  அங்கத்தினரான  தம்பதிகள்,  ரெண்டு வார லீவில்  மானஸரோவர் & கயிலை போயிருந்தவங்க,  வந்துட்டாங்க. யோகா வகுப்பு முடிஞ்சதும் அதே வளாகத்தில் இருக்கும் நம்ம புள்ளையார் கோவிலுக்குப் போனோம்.  வழக்கப்படி, வகுப்பு முடிஞ்சதும்  பொதுவில் ஒரு அறிவிப்பு. "கோவிலுக்குப் போறோம். யார் யார் வர்றீங்க ? "  இந்த வளாகத்தில் கோவில் வந்த பிறகு, நம் கூடவே  கோவிலுக்கு வர்றவங்க  நாலுபேர்.  மற்றவர்களுக்கு  அவரவர் வசதி. இன்றைக்கு   இன்னும்  ஒரு நாலுபேர் கூடச்சேர்ந்துக்கிட்டாங்க.

கயிலை ரிட்டர்ன் தம்பதிகளுக்கு, நம்ம பண்டிட் ஆசி வழங்கினார். நேபாள் வழி போனவங்களை, நேபாள் பண்டிட்டுக்கு,   நேபாள் போய்வந்தவங்க அறிமுகம் செஞ்சு வச்சாங்க :-) 

கோவிலில் அன்றைக்குக் கொஞ்சம் நல்ல கூட்டம்.  சதுர்த்தி & கொலு காரணம் போல ! புள்ளையாருக்கும் மகிழ்ச்சியா இருந்துருக்கும் !   

மறுநாள் எட்டு தோழிகள் குடும்பத்தோடு வந்து கொலுவைச் சிறப்பித்தாங்க. நேரப்பிரச்சனை காரணம், ஒரு தோழி சாயங்காலம் அஞ்சு மணிக்கு வந்தாங்க. இவுங்கதான் நான் அப்பப்ப சொல்லும் அன்பு விநாயகரை வீட்டுலே ப்ரதிஷ்டை பண்ணி இருக்காங்க. கைக்குழந்தையோடும், மூத்த மகனோடும்  வந்தாங்க.  சின்னவனுக்கு உடம்பு சரியில்லையாம்.




குழந்தையைத் தூக்கிவச்சுக்க நம்ம வீட்டில் ஒருத்தர் ரெடியா இருந்தார்:-)  37 நாள் குழந்தை இவள்!   ஒரு மூணுவாரத்துக்கு முன் தொட்டில் போட்டது இந்தச் செல்லத்துக்குத்தான் ! இன்னொரு ஃபிஜித் தோழியும்  அப்ப வந்துருந்தாங்க.  Preschool Teacher. ஆளாளுக்குக் கொஞ்சநேரம்னு நேரத்தைப் பகிர்ந்து கொடுத்தேன்:-)


மற்றவர்கள் எல்லாம்  வேலைநாள் என்றபடியால்  கொஞ்சம் லேட்.  இவுங்க  வந்ததும்,   கொஞ்சநேரத்தில் அவுங்க  கிளம்பிப் போனாங்க..  பாட்டும் நடனமுமா  எல்லாம் நல்லபடி அமைஞ்சது ! ஆடியன்ஸுக்கு உக்கார இடம் வேணும் என்பதால் அரங்கத்துக்கான  இடத்தை அளந்து கொடுத்தேன்.  நடுவில் இருக்கும்  2 X3  மீட்டர்   கம்பளத்துக்குள்ளேயே நடனமணிகள் ஆடிக்கணும் :-)   

இவுங்களில் ஒரு குடும்பம், அண்டைநாட்டுக்குப்  போறாங்க. அடுத்த வருஷக்கொலுவில் நம்ம மிஷலின் நடனம் இருக்காது :-( நம்ம வீட்டில் நவராத்ரி விழா பெண்களுக்கு மட்டுமே இல்லை.   ஆண்களையும் சேர்த்துப் பொதுவா மொத்தக் குடும்பத்துக்குமான விழாதான். ஃபிஜி மக்களுக்குக்  கொலுவைப் பார்த்து வியப்பு ! அங்கே தேவிபாகவதம் வாசிப்புதான் நவராத்ரிக்கு ! குஜராத்திகள் மட்டும் கர்பா நடனம் ஆடுவாங்க. அவுங்க சங்கத்துக்குக் கட்டடம் வருமுன்  அங்கே நம் வீட்டுக்கு முன்னால் இருக்கும் பார்க் தான் அரங்கம்.

இன்னொரு தோழி வீட்டுக்கு, தமிழ்நாட்டுலே இருந்து  விருந்தினராக வந்துருந்த தோழி, கொலுவை இப்பதான் முதல்முதலாப் பார்க்கறாங்களாம் !  இதுவரை கொலுன்னு கேள்விப்பட்டுருக்காங்களே தவிர  பார்த்ததே இல்லைன்னு சொன்னதும்  எனக்கு ஒரே வியப்பு !  நெசமாவா ..... நெசமாவா.....

ஒரு தோழி கண்ணனை அன்புப்பரிசாகக் கொண்டுவந்தார்.  ஹைய்யோ !
பொதுவா நவராத்ரி சமயம் எல்லோரும் கொஞ்சம் பிஸியாத்தான் இருக்கோம்.  அவரவர் பாணியில் கொண்டாட்டங்கள்  நடத்தறாங்க இல்லையா !  ஒரு தோழி வீட்டில்  நவராத்ரி கெட் டு கெதர்ன்னு  டின்னர் ! ஒரு குறிப்பிட்ட குடும்பங்கள் மட்டும்.  நாங்க இங்கே வந்தபின் ஒரு பத்து வருஷத்துக்குள்ளே  வந்தவங்கதான்.  அப்பெல்லாம்  இந்தியர்கள்  இங்கே அதிகம் இல்லை. அங்கே ஒன்னு, இங்கே ஒன்னுன்னு  நாங்க அஞ்சாறு  குடும்பங்கள்தான்.  நாங்க எல்லோரும்  ஒவ்வொரு வகையில் குறைஞ்சது வருஷத்துக்கொரு முறை  அவரவர் வீட்டில் இப்படி  கெட் டு கெதர் வச்சுக்கறது இதுவரை தொடர்ந்துக்கிட்டு இருக்கு! (டச் வுட் !)


நம்ம வீட்டு கெட்  டு கெதர் எப்பவும் விஜயதசமிக்குத்தான்.  ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வோம்.  வேலைநாள் சரிப்படாது என்பதால் , விஜயதசமி பூஜை,  நவராத்ரியைத் தொடர்ந்துவரும் சனிக்கிழமைன்னு கணக்கு.   ஆனால் 'உண்மையான விஜயதசமி' நாளில் நம் வீட்டுவரை பூஜையைச் செஞ்சுக்குவோம்தான். எப்பவாவது விஜயதசமி சனிக்கிழமையில் அமைவதும் உண்டு ! அப்படி வந்தால் ஏகப்பட்ட மகிழ்ச்சி எனக்கு ! நம்ம வீட்டுப்பூஜைக்கு மேற்படிக் குடும்பங்கள்  மட்டுமில்லாமல்  நம்ம நண்பர்கள் சிலரையும்  சேர்த்துக்கொள்வோம்.  முப்பது முப்பத்தியஞ்சுபேர்வரை கலந்துகொள்வார்கள். முந்தியெல்லாம்  இத்தனைபேருக்கும் சமையலை நானேதான் செய்வேன்.  சின்ன வயசு உடம்பு ஒத்துழைச்சது. இப்போ.....  ஹூம்....   

டின்னரில் எல்லோரும் கூடி இருக்கும்போதே நேரில் அழைப்பு வச்சுடலாமுன்னு  சொன்னால்.... ஒருவரைத்தவிர மற்ற மூவருக்கும்  வரமுடியாத நிலை. ஊரில் இருக்க மாட்டார்கள்.  ஆளில்லாமல் என்ன பாராயணம் ?  அதனால்  எல்லோரும் திரும்பியபின் ஒரு சனிக்கிழமையில் பாராயணம் பண்ணினால் ஆச்சு  !


8 comments:

said...

அந்த நடனம் ஆடும் பெண் வருடா வருடம் வருகிறார் என்று நினைக்கிறேன்.  பரிசாக வந்த அந்த கிருஷ்ணர் பொம்மை அழகோ அழகு.

said...

கொலுவும் அருமை. விருந்தினர்களும் அருமை.

கோபால் சார், பேரனுடன் பிசி போலிருக்கு. ஜிலேபி அழகு. ஜாங்கிரி பண்ணியிருக்கீங்களா?

said...

கொலு விழா களை கட்டி ரொம்பச் சிறப்பாக இருக்கு.

கொலு எக்ஸிபிஷன் (அதானே!!!) போல பார்க்கவே ரம்மியமா இருக்கு. ரசித்துப் பார்த்தேன் எல்லாத்தையும்.

கீதா

said...

வாங்க ஸ்ரீராம்,

அந்த நடனம் ஆடும் பெண், ஃபிஜி தோழியின் மகள். இந்தமுறைதான் கடைசி. அண்டைநாட்டுக்குக் குடிபெயர்ந்துட்டாங்க.

அழகு க்ருஷ்ணாதான் !

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

ரசித்தமைக்கு நன்றி !

பேரன் வந்துட்டால் போதும்.... கோபாலுக்கு எங்கள் நினைவுகூட இருக்காது ! நானும் ரஜ்ஜுவும் பாவமா இருப்போம் :-)

said...

வாங்க கீதா,

நீங்க ரசித்துப் பார்த்தது எனக்கு மனநிறைவு !

said...

விருந்தினர் வருகை நடன நிகழ்ச்சிகள் என களைகட்டிய வீட்டு விழா.

said...

வாங்க மாதேவி,

நம்ம பண்டிகைகளில் நட்புகளுடன் சேர்ந்து கொண்டாடுவது நவராத்ரிதான் இல்லையோ !!!! அதுவும் ஒன்பது நாட்கள் !!!!