Saturday, January 20, 2024

இன்று எட்டாம் நாள் !

நவராத்ரி அஷ்டமி இன்றுதான். துர்காஷ்டமி !  ஞாயிறாக அமைஞ்சு போனதால் நாமும்   ஒரு நண்பர் வீட்டுக்கொலுவுக்குப் போகணும்.  இன்னும் சில  முக்கியமானவைகளையும் கவனிக்கணும். 
நம்ம வீட்டுப்பூஜையை சிம்பிள் & 'ஸ்வீட்டாக '  முடிச்சுக்கிட்டு  நண்பர் வீட்டுக்குப் போனோம். ஊரிலிருந்து அம்மா அப்பா வந்துருக்காங்க. இதோ அடுத்தவாரம் கிளம்பிப்போறாங்களாம். அதுக்குள்ளே மூணுமாசம் ஓடிப்போச்சுன்னு சொன்னாங்க.  நண்பர் இங்கே நம்மூரில்தான் இருந்தார். அப்புறம்  நம்ம தீவிலேயே இன்னொரு ஊருக்குப் போயிட்டு (அங்கே தம்பி குடும்பம் இருக்கு ) ஒரு வருசம் கழிச்சு இப்ப மறுபடி நம்மூருக்கே திரும்பிட்டார்.  

நண்பர் வீட்டுலே  கண்ணைக்கட்டி இழுத்தது கொலுப்படிகளே !   கிரியில் வாங்கியதாம்.  மச்சினர் அனுப்பிவைத்தார்னு சொன்னார். கொஞ்சம் 'விவரம்' வாங்கிக்கிட்டேன். 

அங்கிருந்து கிளம்பி நேரா நம்ம ஹரேக்ருஷ்ணா கோவிலுக்குப் போனோம்,  நேத்து  சனிக்கிழமை தரிசனம் கிடைக்கலையேன்னு....  காலையில் கோவிலை மதியம் ஒரு மணிவரை திறந்து வைப்பதால் நமக்கு சௌகரியமாத்தான் இருக்கு !  ஞாயிறு மாலை சத்சங்கத்துக்காக  கோவிலை ரெடிபண்ணி வச்சுருக்காங்க.   நாங்க  ஏகாந்த தரிசனம் செஞ்சுக்கிட்டு வீட்டுக்கு வந்தாச்சு.



இன்னொரு தோழியின் குடும்பம் பகல் மூணு மணிக்கு வர்றதாச் சொல்லியிருந்தாங்க.  எல்லா வருஷமும் நம்ம வீட்டு கொலுவுக்கு முதல்நாள் முதல் ஆளா வர்றவங்க  FDFS இவுங்கதான்.  இந்த வருஷம் வேற ஊருக்கு மாறிப்போனதால் வர முடியலைன்னு  வருத்தப்பட்டவங்க,   லாங் வீக்கெண்ட் என்பதால் நேத்துக் கிளம்பி வந்துருக்காங்க. நாலரை மணி நேர ட்ரைவ்தான் !!!!   நாத்தனார் வீடு இங்கே நம்மூரில்தான்.  நம்ம ஜன்னுவின் விசிறி இவுங்க என்பது கூடுதல் தகவல் :-)









எல்லோருமா வந்துட்டுக் கிளம்பிப்போன கொஞ்ச நேரத்துலே இன்னொரு தோழியும் நண்பரும் வந்தாங்க. நம்ம புள்ளையார் கோவில் ட்யூட்டியில் இன்றைக்கு இவுங்க முறை.  அதனால் கோவிலுக்குப்போகுமுன் வந்துட்டுப்போறதா ஏற்பாடு.

அந்தக் காலத்துலே   தினமுமே  சாயங்காலமாக் கொலுவுக்குக் கிளம்பிப்போய் ஒரு அஞ்சாறு வீடுகளுக்கு விஸிட் பண்ணிட்டு  எட்டுமணிபோல வீடு திரும்புவோமே.... அதெல்லாம் இந்தக் காலத்துலே நடக்காது.  அநேகமா எல்லோரும் உத்யோகஸ்தராக  இருக்காங்க இல்லையோ ! அதனால்  ஒரு வீட்டுக்குப்போய் வர்றதுக்கே  நேரமில்லாமப் போயிருது.



நம்மூரில்  கொலு வைக்கும் குடும்பங்கள்  ஒரு ரெண்டுமூணு இருக்கும். அதுக்கே இந்தப் பாடு. நாமும் வர்றவங்களுக்கு எந்தநாள், நேரம் தோதுப்படுமுன்னு கேட்டுக்கிட்டுக் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்தானே ? 

அவுங்க வந்துட்டுப்போனதும் நாங்களும் கிளம்பிட்டோம். தோழியின் நடனப்பள்ளியில் சலங்கைப் பூஜை.  இவுங்களை நம்ம கொலுவில் நிறைய முறை நடனமாடிப் பார்த்துருப்பீங்க.  இவுங்களும் நம்மூர் வழக்கப்படி நவராத்ரியில் வரும்  சனி ஞாயிறில்தான்  இதை வச்சுக்கணும்.  நேத்து ஊர் தீபாவளியாப் போனதால் இன்றைக்கு இவுங்க நிகழ்ச்சி.








பாட்டும் நடனங்களுமா  அமைஞ்ச நிகழ்ச்சியை ரசித்துப் பார்த்துட்டு, அங்கேயே  டின்னரையும் முடிச்சுட்டு வீடு வந்தோம். நண்பர்தான் கேட்டரிங் . நடன வகுப்பு  மாணவிகளின் பெற்றோர்களும், ஆளுக்கொன்னு பல வகை  சாப்பாடு  ஐட்டங்களைக் கொண்டு வந்துருந்தாங்க.

இப்படியாக  அன்றைய நாள் முடிந்தது !



6 comments:

said...

படங்களை ரசித்தேன்.  படங்களே பாதிக் கதையைச் சொல்லி விடுகின்றன.

said...

நவராத்திரி நிகழ்வுகள், கொலு, நண்பர்களின் வருகை என அமர்க்களம். தகவல்கள் அனைத்தும் கண்டு ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

said...

வாங்க ஸ்ரீராம்,

உண்மை ! பேசாமல் படப்பதிவுகளாகப் போட்டால் என்னன்னு ஒரு யோசனை !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

இப்பெல்லாம் ஏராளமான நிகழ்வுகள். ஒன்றும் இல்லாத காலத்தில் இருந்து, எதற்குப்போகன்னு தீர்மானிக்க வேண்டி இருக்கு !

said...

நடனம் விருந்து என அசத்தலான விழா.

said...

வாங்க மாதேவி,

நம்ம நடனப்பள்ளி மாணவிகள் அருமையாக ஆடுகிறார்கள்! நமக்கு ரசிக்கவேண்டிய வேலை மட்டுமே !