ஒரு வீட்டை பாகம் பிரிக்கிறாங்க. பெரிய வீடு. பாத்தியதைப்பட்டவங்களில் ஒருத்தர் மட்டும் தனிப்பாகம் வேணுமுன்னு ஒத்தைக்காலில் நிக்கறார். அவருக்கு ஒரு பக்கம் ஓரமா, அவர் விரும்புன பாகத்தைக் கொடுக்கறாங்க. இதுவரைக்கும் சரி. ஆனால் அவர்..... உங்க பாகத்துலே இருக்கும் வீட்டுலேயும் எனக்கொரு அறை வேணுமுன்னு கேட்டால் கொடுக்கணுமா ?
கொடுக்கலாமா ? கொடுத்தால் என்ன ஆகும் ? மற்ற பகுதிகளுக்குள் புகுந்துதானே அந்த அறைக்கு வரமுடியும் ? அதெப்படிப் பிரிஞ்சுபோனவரை, என்னதான் அவருடைய அறைக்கு, அவர் போகணும் என்றாலும் அந்த அறையில் வசிப்பவர்கள் வெளியே வாசலுக்கு வரணும் என்றாலும் நம்மூட்டுக்குள்ளே விடுவது? தலைவலி இல்லையா ? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.... இது எவ்ளோ பெரிய அபத்தமுன்னு புரியும்....
காலையில் போன துர்கை பூஜை விழாவில் பகல் சாப்பாடு கிடைச்சதுன்னு சொன்னேனில்லையா? அங்கிருந்து வீட்டுக்கு வந்து நம்மவனுக்கு லஞ்ச் கொடுத்துட்டுக் கொஞ்ச நேரம் கழிச்சு இன்னொரு துர்கா பூஜைக்குக் கிளம்பினோம். இங்கே போய் வண்டியைப் பார்க் பண்ணும்போதே காலைப்பூஜையில் பார்த்த சிலர் கண்ணில் பட்டாங்க. நம்ம ஐடியாதான் அவுங்களுக்கும்போல ! நிகழ்ச்சி நிரல் எல்லாம் அங்கேயும் இங்கேயும் ஒன்னுபோலத்தான். என்ன.... அந்த மேஜிக் ஷோ இங்கே மிஸ்ஸிங். ஆனால் பிள்ளைகள் விளையாட Bouncy Castle போட்டுருந்தாங்க.
ஹாலுக்குள்ளே போனால், ஒரு மேடை அமைப்பில் துர்கை ! சாமிகள் எல்லாம் காலையில் பார்த்த அதே அமைப்பில்தான். போய் சாமியைக் கும்பிட்டுக்கிட்டோம். நடனக் கலைஞர்கள் நிகழ்ச்சிக்குத் தயாரா இருந்தாங்க. நம்ம மிஷலிடம் கொஞ்சம் குசலம் விசாரிச்சுட்டு, சில போஸ்களை க்ளிக்கினேன்.
இன்னொரு ஸ்ரீலங்கன் தோழி, தன் சிங்களத்தோழியுடன் வந்துருக்காங்க. இவுங்களும் ஒரு சின்னக்குழு வச்சு நடனம் சொல்லிக் கொடுக்கறாங்க. அந்தப்பிள்ளைகளும் இங்கே ஆடப்போறாங்க ! இவுங்க குழு நடனத்தை கொஞ்சநாட்களுக்கு முன்னால் வேறொரு இடத்தில் பார்த்திருக்கேன். மயில் நடனம் அருமைன்னு அப்போ பாராட்டியும் இருக்கேன்.
மிஷலின் நடனம் இங்கே...
https://www.facebook.com/1309695969/videos/1031154527991416/
சிங்கள நடனம் இங்கே
https://www.facebook.com/1309695969/videos/2003194370067275/
எல்லோரும் பகல் லஞ்ச் முடிச்சுட்டுப் பிற்பகல் நிகழ்ச்சிக்கு ரெடி ஆகிக்கிட்டு இருக்காங்க, இங்கே ! இன்னுமொரு சமாச்சாரம் உண்டு. நம்ம புள்ளையார் கோவில் நிதிக்காக தோசை ஸ்டால் ஒன்னு போட்டுருக்கோம். எனெக்கென்னவோ இது உசிதமாப் படலை. இங்கேயும் காலைப் பூஜை முடிஞ்சதும் இலவச லஞ்ச் ஏற்பாடு இருக்கு. இப்பப்போய் காசு கொடுத்து யாராவது தோசை வாங்குவாங்களான்னு எனக்கொரு சம்ஸயம். கோவில் நிர்வாகம் அப்படி நினைக்கலை போல. நடப்பது நடக்கட்டுமுன்னு இருந்தேன்.
ஹாலின் பின்பக்கத் தோட்டத்தில் போய்ப் பார்த்தால் தோசை ஸ்டால் இருக்கு. நம்மாட்கள் நாலைஞ்சுபேர் இருக்காங்க. கடைசித்தோசை அடுப்பிலே ! வியாபாரம் எப்படின்னதுக்கு, நல்லாவே போச்சுன்னாங்க. ரொம்ப நல்லது !
நம்ம ஜன்னுவுக்கு பத்து நாளைக்கு முன் ஸ்ரீலங்கன் ஸ்டைலில் புடவை கட்டியிருந்தேன். ஒஸாரிய (Osariya )ன்னு பெயர். அதை ஃபேஸ்புக்கில் போட்டதைப் பார்த்துருக்காங்க போல ! நம்ம தோழி இம்மா க்றிஸ், படத்தைப் பார்த்துட்டு, பொட்டு, மூக்குத்தி எல்லாம் இந்த அலங்காரத்துலே இல்லைன்னு சொன்னப்ப , இதெல்லாம் போட்டுக்கறது இப்போ ஃபேஷன்ன்னு சொல்லி இருந்தேன். புடவையைக் காட்டிலும் இதுக்கான நகைநட்டுகளைத் தேடுறது ரொம்பவே கஷ்டம் :-) இன்றைக்கு அந்த சிங்களத்தோழி ஒஸாரிய ஸ்டைல் புடவைதான் உடுத்தி வந்துருந்தாங்க.
கலைநிகழ்ச்சிகள் ஆரம்பம் ஆச்சு. நாஞ்சொல்லலை...... ஒரு நடனத்தை பல இடங்களில் பார்க்கலாமுன்னு..... அதேதான் அதுலே சின்ன மாற்றமா , ஒரு நடனக்குழுவை பல இடங்களில் பார்க்கலாமுன்னு இருக்கணும். நடனமணிகளில் சிலர், நம்ம மிஷல் உட்பட நம்ம தோழி நடத்தும் நடனப்பள்ளியின் (Revathi Performing Arts ) மாணவிகளே ! புதுசா ஒரு பெண் நடனம் ஆடுனாங்க. வா பிளந்து நின்னேன் ! ஹைய்யோ !!!! கேரளாவில் நடனம் பயின்றவங்க. கொஞ்சநாள் ஆக்லாந்தில் இருந்துட்டு, இப்போ நம்மூருக்குக் குடிபெயர்ந்துருக்காங்க! இவுங்க நடனத்தை அப்பவே ஃபேஸ்புக்கில் போடலாமுன்னால் எட்டு மினிட்டுக்கு மேல் வர்றதால் போட முடியலை. இப்போ இந்தப் பதிவு எழுதும் சமயம், தேடி எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டாச்சு. சுட்டி இது. விரும்பினால் பாருங்க.
https://www.facebook.com/1309695969/videos/225803313832507
ஆமாம்... எதுக்கு ரெண்டு குழுவாப் பிரிஞ்சு துர்கா பூஜை செய்யறீங்கன்னு நிர்வாகிகளில் ஒருவரைக் கேட்டேன். ஒரே மொழி பேசினாலும் அவுங்க வேற நாடு, நாங்க வேற நாடுன்னாங்க ! ஹா.....
பங்ளாதேஷ் மக்களாம் இவுங்க! நாடு பிரிவினைக்குமுன் ஒரே பெரிய மாநிலமா இருந்துருக்கும் இல்லே ? அதைக் கிழக்கு மேற்குன்னு பங்குவச்சுக் கிழக்கை தாரை வார்த்துருச்சு மதர் இண்டியா :-( அது வேற்று நாட்டின் பகுதியாக இருந்து, ஒரு காலக்கட்டத்தில் தனிநாடாக ஆனதும்கூட உங்களுக்குத் தெரிஞ்சுருக்கும்தானே ? அங்கே இருந்து நியூஸியில் குடியேறிய மக்கள் இவர்கள். நல்லவேளை.... வேற்று நாட்டில் ஹிந்துக்களை விரட்டியடிச்சுக் கொன்னு களைஞ்சதெல்லாம் இங்கே இல்லைன்னுதான் நினைக்கிறேன். மதத்தின் பெயரில் கொஞ்சம் கொடுமைகள் இருந்துருக்கலாம், என்றாலும் கூட !
ஆங்.... சொல்ல விட்டுட்டேனே...... எங்க ஊரை மல்ட்டிக்கல்ச்சர் சொஸைட்டின்னுதான் சொல்லணும். இருநூறுக்கும் மேற்பட்ட எத்னிக் க்ரூப் இருக்கு இங்கே ! (உலக நாடுகளின் எண்ணிக்கையே 195 தான் !!!! )எங்கூர் சிட்டிக்கவுன்ஸிலின் ஒரு பிரிவான எத்னிக் கம்யூனிட்டி கவுன்ஸிலின் தலைவர், நம்ம நெடுநாள் நண்பர்தான் !
பாட்டும் குழு நடனக்களுமாக் கலை நிகழ்ச்சிகள் ஒவ்வொன்னா நடந்துக்கிட்டே இருக்கு. நமக்கோ நேரம் ஓடிக்கிட்டே இருக்கு. இன்றைக்கு இன்னொரு முக்கியமான விழாவுக்குப் போயாகணும். அது நம்மவர் சம்பந்தப்பட்ட விழா வேற !
நாலரை ஆகும்போது கிளம்பிட்டோம். இப்போ ட்ரம்ஸ் வாசிப்பு நடந்துக்கிட்டு இருக்கு. எனக்குப் பிடிக்கும் என்றாலும் கூட... நின்னு பார்க்க நேரமில்லை.
சில க்ளிக்ஸ் ஆனதும் கிளம்பினோம். நம்மைத் தொடர்ந்து இன்னும் சிலர் கிளம்பிட்டாங்க. அதில் மிஷல் குடும்பமும் ஒன்னு. இப்போ நாம் போகப்போகும் விழாவிலும் மிஷலின் வேறொரு நிகழ்ச்சி இருக்கு !
இப்படித்தான் சில நாட்களில் ஒரேடியா அடுக்கடுக்கா நிகழ்ச்சிகளை அமைச்சுடறாங்க. நாமும் ஓடறோம்!
6 comments:
இந்த துர்கா பூஜை நிகழ்வுகளும் சிறப்பு.
வாங்க ஸ்ரீராம்,
வருஷத்துக்கொரு விழா என்பதால் ரொம்பவே சிரத்தை எடுத்துப்பண்ணறாங்க போல !
படங்களும்/ஃபோட்டோ ஷூட்!! நிகழ்வுகளும் சொன்ன விதமும் வழக்கம் போல் சூப்பர்!
கீதா
வாங்க கீதா,
நன்றிப்பா !
'மல்ட்டி கல்ச்சர் சொசைட்டி 200க்கு மேல்' ஆச்சரியம்தான் வாழ்க உறவுகள் .
படங்கள் நிகழ்ச்சிகள் சூப்பர்.
வாங்க மாதேவி,
எனக்கும் இதே ஆச்சரியம் உண்டு. வெளிநாடு என்னும் பட்சத்தில் ஏன் அமெரிக்கா, இங்கிலாந்துன்னு போகாம உலகின் கடைக்கோடியில் இருக்கும் நியூஸிக்கு வர்றாங்கன்னு.......... புரியாத புதிர் !
Post a Comment