Wednesday, June 08, 2022

முதியோரின் வழித்துணையாக இளையோர் !

போனபதிவில் கற்சுரங்கம் பார்த்தோமே.... அதே இடத்துக்கு அஞ்சு வருசத்துக்கப்புறம் வர்றோம். இந்த முறை  நம்ம யோகா குழுவினரோடு ! 

டிசம்பரில் இங்கத்துக்கோடை விடுமுறை வந்துருதுன்னு நாங்களும் யோகா வகுப்புக்கு  லீவு விடுறது வழக்கம்.   நம்ம சனமும் லீவில் வேற ஊர்களுக்கோ, நாடுகளுக்கோ போய் வருவாங்க தானே !  இப்ப இந்தக் கொரோனா காலத்தால்  நாட்டைவிட்டு வெளியேற அனுமதி இல்லை பாருங்க.  அதுக்காகச் சும்மா வீட்டுக்குள்ளேயே கிடக்காமல்,  கொஞ்சம் உடற்பயிற்சிக்காவது  வெளியே போய் வர்றது உசிதம் இல்லையோ !  அதான்  கற்சுரங்கத்தில் நடைப்பயிற்சின்னு கிளம்புனது.   முதலில்  கட்டிச்சோறு மூட்டையுடன் காலையில் போகலாமுன்னு ஏற்பாடு. நாந்தான் அஸ்து போட்டேன். 
அன்றைக்கு ஹனுமன் ஜயந்தி வேற. சாமிகும்பிடறதில் கொஞ்சம்  வேலை இருக்காதா... அதனால் நடைப்பயிற்சி மட்டும் என்பதால் பகல் சாப்பாட்டுக்கப்புறம்  போனால் ஆச்சு.    சோத்துமூட்டை, மற்றும் அதுக்கானவைகளைச் சுமந்துக்கிட்டுப் போக வேணாம் பாருங்க. 

இந்த மாதிரி நம்ம யோகா குழுவின் வெளி நிகழ்ச்சிகளில்  அங்கத்தினரின்  குடும்பத்தையும் சேர்த்துக்குவோம். அவுங்களுக்கும் ஒரு அவுட்டிங் ஆச்சு, இல்லையோ !  அங்கம் மட்டுமில்லாமல் அவரவர் குடும்பமும் ஈகோ பார்க்காமல் நல்ல நட்புணர்வுடன் இருப்பதால்  எல்லோருமாச் சேர்ந்து பிக்னிக், வாக்ன்னு போறதும் மகிழ்ச்சியே !

பகல் ரெண்டு மணிக்கு க்வாரி பார்க்கிங்கில் சந்திக்கணும்.  நாமும் கிளம்பிப்போகும் வழியில் அதே ஏரியாவில் இருக்கும் ஹனுமன் சந்நிதிக்கும் போயி, ஆஞ்சிக்குப் பொறந்தநாள் வாழ்த்துகளைச் சொல்லிக் கும்பிட்டுப்போனோம்.  இங்கே வசிக்கும் ஒரு ஃபிஜி இந்தியர் வீட்டு வாசல் முற்றத்தில் இந்த ஹனுமன் சந்நிதி வச்சுருக்காங்க. ஜெய்ப்பூரில் இருந்து வரவழைத்த பளிங்குச்சிலை. ஆஞ்சி, கொஞ்சம் வயசான தோற்றத்தில் இருப்பார்.  இவர்தான் நம்மூருக்கு வந்த முதல்வர்.  ஆச்சு இது அஞ்சாவது வருஷம். காலையில் நாம் போய்வந்த சநாதன் தர்ம சபா ஆஞ்சி, இளையவர்.  இங்கே வந்து வருஷம் மூணு ஆகுது. 



கீழே படம்: இளையவர்@ சநாதன் தரம் சபா
வீட்டு முற்றத்தில் இருந்தாலும், விருப்பம் உள்ள பக்தர்கள் உள்ளே போய் கும்பிடும்வகையில் வளாகத்தின் கேட்டும்,  சந்நிதிக் கதவும் ச்சும்மாச் சாத்தி வைப்பதுதான் வழக்கம். ஜூனியர் வந்ததும் சீனியரைப்போய் தரிசிப்பதுக் கொஞ்சம் குறைஞ்சுதான் போச்சு.  ஆனால் அந்தப் பக்கம் போகும்போது தவறாமல் தரிசனம் கொடுப்பார். அன்றைக்கும் க்வாரி பார்க் போகும் வழியில் தரிசனம் கிடைச்சது.
சரியா ரெண்டு மணிக்கு நம்ம மக்கள் வந்துட்டாங்க.  அங்கே நடைப்பயிற்சிக்காக  சுலபமான வழி, கொஞ்சம் கஷ்டமான வழின்னு ரெண்டு வகை இருக்கு. ஒல்லிக்குச்சி உடம்பாட்களும் மன உறுதியானவர்கள்  குன்றுகள் வழியில் ஏறிப்போகும் பாதைக்குப் போனாங்க.  என்னைமாதிரி முட்டிக்கேஸ்கள் தரைவழிதான்.  நம்மவருக்குக் குன்றுப்பாதையில் போக ஆசை என்றாலும், எனக்காக என் கூடவே வந்தார். கொஞ்சம் தாமதமாக வந்த குடும்பமும் நம்மோடு சேர்ந்துக்கிட்டாங்க.  முதியோருக்கு வழிகாட்ட ரெண்டு இளைஞர்களும் மகிழ்ச்சியோடு முன்வந்தது பாராட்டப்படவேண்டிய அம்சம்.  நம்மையெல்லாம் பத்திரமாகக்கூட்டிப்போகச் சொல்லிட்டு, அவுங்க அப்பா மலையேறிட்டார் :-)  

ஒன்னரைமணி நேர நடை எங்களுக்கு !   ஒரு அஞ்சு கீ மீ தூரம் இருக்கலாம். நாங்க அங்கங்கே  நின்னு நிதானமா வேடிக்கைப்பார்த்துக்கிட்டே போனோம் !
































மலையேறிப்போனவங்க கொஞ்சம் தாமதமா வந்து சேர்ந்தாங்க.  பொதுவில் எல்லோருக்கும் நல்ல பயிற்சி. 



















குழுவின் அங்கமாக இருக்கும்  ஒரு தம்பதியர் , நமக்கெல்லாம்  மாலைத் தேனீர் அவுங்க  வீட்டுலேன்னு  சொல்லிட்டாங்க..  அங்கே போய் ஒரு ஒன்னேகால்மணி நேரம்  கடமையை ஆத்திக் கூடிக்கும்மியடிச்சுட்டுக் கிளம்பினோம்.





வீட்டுக்குத் திரும்பி வந்தால் சோகமாக இருந்தான் ஒருவன் :-)    

6 comments:

said...

நல்ல பயிற்சி. காட்சிகளும் அழகு.

வீட்டில் நடை பயிற்சிக்கு அழைத்து செல்லாத சோகம் :) கதிரையின் கீழ் அமைதி :)

said...

அருமை நன்றி

said...

நல்ல சுவாரஸ்யமான அனுபவம்.  

பின்ன தனியாய் விட்டு விட்டுப் போனால் சோகம் இருக்காதா?  கோபம் கூட இருக்கும்!

said...

வாங்க மாதேவி,

ஆன்னா ஊன்னா கோச்சுக்கறான்ப்பா ! :-)

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க ஸ்ரீராம்,

இவுங்கெல்லாம் பொதுவாத் தனிமை விரும்பிகள்தான். ஆனால் இவன் அதுலே தப்பிப்பிறந்தவன் :-)