Friday, June 17, 2022

எல்லோரும் கொண்டாடுவோம்.......

நாம்தான் பொங்கல் பண்டிகைன்னு சொல்றோமே தவிர, இந்தப் பண்டிகையை மகர் சங்கராந்தி,  Maghi Sankrant,   என்ற பெயரில்  இந்தியாவின் பல மாநிலங்களில் கொண்டாடுறாங்க.

Thai Pongal (Tamilnadu)

Makara Jyothi  ( Kerala) 

Makar Sankranthi  ( Andhra & Telengana) 

Uttarayan (Gujarat) 

Lohri (Punjab)

Poush sôngkrānti (Bengal)

Suggi Habba (Karnataka)  

Makara Chaula (Odisha)

Maghi Sankrant (Maharashtra and Haryana)

Magh/Bhogali Bihu (Assam)

Shishur Saenkraat (Kashmir)

Khichdi Parv (UP and Bihar)

 எப்படியோ  நம்ம சூரியனைக் கும்பிடும் நாளாக இருப்பதில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி. குளிர்தேசத்தில் இருப்போர்க்குக் கண்கண்ட தெய்வம் இவனையல்லால் வேறு யார் ?

சங்கராந்தி  கெட் டு கெதர் ஒன்னு  வச்சுக்கலாமுன்னு யோகா குழுவில் ஏற்பாடு.  நம்ம குழுவில்  ஒருவரைத்தவிர மற்ற அனைவரும் பல மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்களே! ஆளுக்கொரு பதார்த்தம் செஞ்சு கொண்டுபோனால் ஆச்சு.  மஹாராஷ்ட்ரா மக்கள்  வீட்டுலே பகல் விருந்துன்னு முடிவாச்சு.  பண்டிகை வர்ற வெள்ளிக்கிழமைதான். ஆனாலும் எங்கள்  'எதெடுத்தாலும் வீக் எண்ட் ' என்னும் நியமம் அனுசரிச்சு,  ஞாயிறுன்னு வச்சுக்கிட்டோம்.

நம்மைப்போல்தான் இவுங்களுக்கும் மூணுநாள் கொண்டாட்டம். முதல்நாள்  போகி, மறுநாள் சங்ராந்தி, மூணாம் நாள் Kinkrant.  இது என்னடா  சங்ராந்தியும்  கிங்ராந்தியுமுன்னு தோணுச்சு.  விசாரிக்காமல் இருக்கலாமோ ?  தேவி மா(த்)தா, கிங்காசுரனை வதம் செய்த நாளாம். கரிநாள்னு சொன்னாங்க.


 சூரியக்கடவுளைக் கும்பிடணும், 'ஹல்திகுங்கும் (மஞ்சள் குங்குமம்)வாங்கிக்க  வாங்க'ன்னு அக்கம்பக்கத்துப் பெண்களைக் கூப்பிட்டு  மஞ்சள் குங்குமம், எதாவது சின்னப்பரிசு, கூடவே தில்குல் என்னும் இனிப்பு ( எள்ளும் வெல்லமும் சேர்த்துச் செஞ்ச இனிப்பு)கொடுத்து உபசரிக்கணும், பட்டம் பறக்கவிடணும் என்றதுதான் முக்கியமான சடங்கு.  பண்டிகைக்கான ஸ்பெஷல் சாப்பாட்டு ஐட்டம் 'புரன் போளி.'  (உள்ளே பூரணம் வச்ச போளி )
மஹாராஷ்ட்ராவில் கவனிச்சுப்பார்த்தா ஒரு வழக்கம் , விசேஷப்பண்டிகை நாட்களில் அவரவர் குடும்ப நிதிநிலமையை அனுசரிச்சு குறைஞ்சபட்சம்  ஒரு பாத்திரம் வாங்கிப்பாங்க. நம்ம பூனா வாழ்க்கையில் எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போன ஒரு சமாச்சாரம் இதுதான். நமக்குப் பண்டிகைகளுக்குக் குறைவா என்ன ? நம்ம மாடி வீட்டுக்குக் கீழேயே ஒரு கடை இருந்ததால்  சின்னதா ரெண்டு எவர்சில்வர் பாத்திரம் வாங்கிக்குவேன். இப்படிச் சேர்ந்ததுதான்  நம்மூட்டுக் குட்டிக்குட்டிக்கிண்ணங்கள் :-)  இந்த வழக்கத்தை நான் இப்பவும் நிறுத்தலை. பண்டிகைநாளுன்னு இல்லாம, இண்டியன் கடைக்குப் போகும்போதெல்லாம்  பாத்திரம் உள்ள பகுதிக்குப்போய்,  ஒன்னு ரெண்டு வாங்கிக்குவேன்:-)


நம்ம வீட்டு ஐட்டமா, எலுமிச்சம்பழசாதமும், ஆப்பிள் தொக்கும் எடுத்துக்கிட்டுப் போனோம். எலுமிச்சம்பழமும், ஆப்பிளும் நம்ம வீட்டு விளைச்சல் :-)  ஆர்கானிக் !!!    

தோழி வீட்டுத் தோட்டத்தில் பந்தல் போட்டதும்,  வெல்கம் ட்ரிங் தாக் (ताक ) பயந்துட்டீங்களா ?    மோர்தான். சீரகத்தூள், இஞ்சி, கொத்தமல்லி, உப்பு சேர்த்த மோர்.  வெயிலுக்கு இதமாத்தான் இருந்தது. 


சாஸ்திரப்படி  எள்ளுருண்டை  கிடைச்சது. 


அட்டகாசமான பகல் விருந்துக்குப்பிறகு,  அவரவர் பங்கெடுக்கும் விதமா..... கொஞ்சம் பொழுதுபோக்கு.  நிறையப்பேர் பாடுனாங்க. சிலர் பேசுனாங்க. மோனோ ஆக்டிங் , க்விஸ் எல்லாம் ஆச்சு. 'நம்மவர்' தமிழ்நாட்டுலே பொங்கல் பண்டிகை கொண்டாடும் விதம் பற்றிப் பேசினார். நம்ம ஹோஸ்ட், கதக் டான்ஸர் என்பதால்  ஒரு சின்ன நடனம் இப்படி..... கடைசியில் எல்லோருமா ஒரு கர்பா ஆட்டம்.



ஆடி முடிச்சதும் டிஸ்ஸர்ட் :-)

பந்தலைப் பிரிச்சதும், எல்லோரும் வீட்டுக்குள் போய் அங்கேயும் பேச்சுக்கச்சேரி.  நாலரைக்கு , நல்ல மஸாலா ச்சாய் குடிச்சுட்டுக் கிளம்பினோம். 

சாயங்காலம் நம்ம ஸ்வாமிநாராயண் கோவிலில் சங்கராந்தி விசேஷ பூஜைன்னு அழைப்பு. அங்கேயே டின்னரும் ஆச்சு.

நமக்கிப்போ நடுக்கோடை என்பதால் ராத்ரி பத்தரை வரை பகல் வெளிச்சம் இருக்கு.  இன்றைக்கு உள்ளே தள்ளுனதெல்லாம் ஜீரணமாகணுமே....  கொஞ்சம் தோட்டவேலை செய்யும்படி ஆச்சு :-)  

நம்ம வீட்டுலே  இன்னும் பொங்கல் டிஸ்ப்ளே அலங்காரம்  முடியலை என்பதால்  மனசு ஒருபக்கம் அதையே நினைச்சுக்கிட்டு இருக்கு. மனசுக்குத் திருப்தி ஏற்படும்வரை சதா இதை மாத்தி அதுன்னு செஞ்சுக்கிட்டே இருப்பேன். திருப்தியில்லாத  மனசுக்காரி.


6 comments:

said...

கர்பா டான்ஸ் வீடியோ எல்லாம் எடுக்கவில்லையா?

said...

பொங்கல் கொண்டாட்டங்கள் சிறப்பு. ரஜ்ஜுவும் தன் பங்குக்கு உதவிசெய்கிறான். :)

said...

கொண்டாட்டங்கள் அருமை.
ஆய்வுப்பணியால் முழுமையாக வலைப்பக்கம் வர இயலவில்லை. பணி ஓரளவுக்கு நிறைவு பெற்றபின் தொடர்வேன்.

said...

வாங்க ஸ்ரீராம்,

பாட்டு, டான்ஸ் எல்லாம் சின்னச்சின்ன வீடியோ க்ளிப்ஸ் எடுத்தேன்தான். ஆனால் இங்கே அப்லோட் செய்ய முடியலை. ஒரு நிமிட் க்ளிப்பைக்கூட எக்ஸீட் தெ லிமிட்ன்னு சொல்லுதே இந்த ப்ளொக்ஸ்பாட். :-(

said...

வாங்க மாதேவி,

நம்ம ரஜ்ஜூ பெரிய ஹெல்ப்பர்ப்பா :-)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,

வருகைக்கு நன்றி ! வலையில் இது வசதியே.... எப்ப வேண்டுமானாலும் வாசிக்கலாமே!