இந்த லில்லிப்பூக்களுக்கு வந்த பெருமை யாருக்கும் வராது..... ஒரிஜினல் வகையா ஒரு நூறு இருக்குன்னாலும், இந்தப்பெயரைப் பின்னால் ஒட்டிக்கிட்டு ஒரு ஆயிரம் வகை இருக்கலாம். பெயரில் என்ன இருக்குன்னு கேட்கப்டாது.... புகழ் இருக்கே.... ஒரு நாலடி உயரச்செடியில் கூம்பு ஸ்பீக்கர் மாதிரி பூக்கள் பார்க்க ஒரு அழகுதான். பொதுவா பூமிப்பந்தின் வடகோளத்தில்தான் நிறைய இருக்குன்னாலும்.... தென்கோளம் ச்சும்மா இருக்குமா என்ன ? நாங்களும் நியூஸியில் லில்லி லவ்வர்ஸ் இல்லையோ !
நம்ம வீட்டுலேயே ஒரு ஏழெட்டு வகைகள் வச்சுருக்கோம். வருஷத்துக்கொருக்காப் பூக்கவும் செய்யுது. ஏஷியாடிக் லில்லி வகைகளும், Hybrid வகைகளும் Peace Lily, Calla Lilyன்னு சிலதும் உண்டு. கடையில் விற்கும் கிழங்கு(Bulb)வாங்கியாந்து நட்டுவச்சுருவேன்.
க்றிஸ்மஸ் லில்லின்னு ஒரு வகை இருக்கு. பண்டிகைக்கு நூறுநாள் முந்தி பல்ப் நட்டு வச்சால் பண்டிகைநாளில் பூத்துருமாம் ! எல்லாம் கோடை காலப்பூக்கள்தான்.
The New Zealand Lily Society என்ற சங்கம் இருப்பது நம்ம ஊரில்தான். இவுங்களும் வருஷவருஷம் லில்லி ஷோ நடத்துவாங்க. பொதுவா எங்க நடுக்கோடை ஜனவரி மாசம் என்பதால் ஷோ நடத்துவது இந்த மாசத்தில்தான். ஆனால் இங்கே வந்த இத்தனை வருஷத்தில் ஒரு முறை கூட போக வாய்ப்பில்லாமல் போயிருக்கு.
இன்றைக்கு புத்தர் கோவிலுக்குப் போயிட்டு வரும் வரும்போதுதான் இன்றைக்கு உனக்கு லில்லி ஷோ போகணும் னு செல்ஃபோன் ஞாபகப்படுத்துச்சு. அட! ஆமாம்லெ.... கட்டாயம் போகத்தான் வேணும். பகல் ரெண்டு மணிக்குத் திறப்புவிழா ! பகல் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு அங்கே போனோம். நம்ம பேட்டையில்தான் ஷோ. எங்கூர் குதிரைப்பந்தய மைதானத்தில் இருக்கும் பெரிய ஹாலில்தான் எப்பவும். இங்கே வீக் எண்டுகளில்தானே எல்லாமும்... முதல்நாள் சனிக்கிழமை ஒரு மூணு மணிநேரம், மறுநாள் ஞாயிறில் ஒரு ஏழு மணிநேரம்னு மொத்தம் பத்துமணி. அதுக்கும் மேலே நாளை நீட்டமாட்டாங்க. லில்லி சொஸைட்டி ஆட்களும் தன்னார்வலர்கள்தானே ?
அஞ்சு டாலர் நுழைவுக்கட்டணம். என்னென்னவோ பெயர்களில், என்னென்னவோ வண்ணங்களில் பூக்கள், கண்களுக்கு விருந்து. தரம் பிரிச்சு, மதிப்பெண்கள் போட்டு, முதலிடம் ரெண்டாம் இடம் என்றெல்லாம் போட்டு வச்சுருந்தாங்க.
மலர் அலங்காரப் பிரிவில் லாக்டௌன் என்று ... பூட்டுப்போட்டு வச்சுருந்தது.
நல்லாச் சுத்திப்பார்த்துட்டு, விற்பனைக்கு வச்சுருந்த செடிகளில் நம்மிடம் இல்லாத நிறத்தில் ஒரு பத்து மொட்டுகளுடன் இருக்கும் ஒரு செடியை வாங்கினோம். Red ford னு பெயர். பெயருக்கேத்தமாதிரி பூக்கணுமேன்னு ஒரு புதுக்கவலை வேற ! மலரும் நிலையில் இருந்த மொட்டுகள் பூத்ததும் , அப்பாடா.... நம்மிடம் இல்லாத நிறமுன்னு ஒரு ஆசுவாசம் வந்தது உண்மை.
ஆனால் சிகப்பு இல்லையேப்பா..... :-(
இப்படிக் கிழங்கு வாங்கி நடாமல், லில்லி விதைகளை நட்டு வச்சாலும் செடிகள் முளைக்குமாம். ஆனால் ஏழு வருஷம் கழிச்சுத்தான் பூக்களைக் கண்ணுலே காமிக்குமாம். நமக்குத்தான் நட்டதும் செடி அன்றே பூக்கணுமே ! ஆனாலும் இருக்கட்டுமுன்னு ரெண்டு விதைகள் வாங்கிவந்தேன். இப்ப அதை எங்கே வச்சேன்னு தேடணும்:-)
கீழே படங்கள்: நம் வீட்டில் ஏற்கெனவே இருப்பவை !
6 comments:
லில்லி ஷோ அழகு. உங்கள் வீட்டு பூக்களும் அருமை.
நீங்கள் வாங்கியது சிவப்பு இல்லாவிட்டாலும் அழகாக இருக்கிறது.
அருமை
அருமையான படங்கள்.
வாங்க மாதேவி,
செடிகளின் விலையும் மலிவுதான். மொட்டுகளோடு இருக்கும் செடி வெறும் பத்தே டாலர்தான். இனி லில்லி ஷோவை விடப்டாது :-)
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
வாங்க ஜயகுமார்,
வருகைக்கு நன்றி !
Post a Comment