Sunday, June 05, 2022

48

தமக்குத்தாமே திட்டத்தில் திருமணநாள் பரிசாக ஒரு 'மூடு மயில்'  வாங்கியாச். 
சமாதானமாக இருக்கும்போது ஒருவரையொருவர் முகம் பார்த்துப் பேசலாம்.

சண்டைன்னா ' உம்மோடென்ன பேச்சு வேண்டிக்கிடக்கு' ன்னு முகம் திருப்பிக்கலாம்.
குடும்ப வழக்கப்படி நாளுக்கு மூணே மூணு என்பதால்... ஹாஹா...
இப்படியே 48 வருசங்களை ஓட ஓட விரட்டியாச்🤣🤣🤣



நண்பர்களுக்கும, துளசிதளம் வாசகர்களுக்கும் எங்கள் அளவிலா  அன்பும் ஆசிகளும்!




நல்லா இருங்க !

12 comments:

said...

48..... மனம் நிறைந்த வாழ்த்துகள்..... இன்று போல் என்றும் இனிதாக அமையட்டும்.

said...

வாழ்த்துகளும் வணக்கங்களும்.

said...

நமஸ்காரம் .இனிய திருமண  நாள் வாழ்த்துகள்.  அதென்ன மூடு மயில்?  அப்புறம் ரஜ்ஜு ஏன் எப்போதும் முகத்தை சீரியஸாகவே வைத்துக்கொண்டிருக்கிறான்?!

said...

கீதா, துளசி அண்ணன் நலம்தானே... மிக நீண்ட காலத்துக்குப் பின்பு வந்திருக்கிறேன்:).

நீங்கள் மேலே “துளசிதளம்” என்பதுக்கு மேலே போட்டிருக்கும் யானைக்குட்டிக் குடும்பம் எங்கள் வீட்டிலும் மரத்தில் இருக்குது அழகாக, எங்களிடம் இருப்பதில் 7 பேர் இருக்கினம்.

பதிவு எதுவும் புரியவில்லை... தொடர் பதிவு போலும்... பூஸார் மிக அழகு.. சூப்பராகப் போஸ் குடுக்கிறார்:).

said...

48 இனிய வாழ்த்துகள் . தொடரட்டும் இனிய இல்லறம் வாழ்க நலமுடன்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

வாழ்த்துகளுக்கு அன்பும் நன்றியும் !

said...

வாங்க ராமலக்ஷ்மி,

வாழ்த்துகளுக்கும் வணக்கத்திற்கும் அன்பும் நன்றியும் !

said...

வாங்க அதிரா,

பூஸாரும் இந்தப்பதிவும் துளசிதளம் என்ற வலைப்பதிவிற்கும், துல்ஸிக்கும் சொந்தம்!

அந்த அஞ்சானை ஆரம்பம் முதலே இருக்கிறது.

said...

வாங்க மாதேவி,

வாழ்த்துகளுக்கு அன்பும் நன்றியும் !

said...


//அதிரா From அந்தாட்டிக்கா:) said...
கீதா, துளசி அண்ணன் நலம்தானே... மிக நீண்ட காலத்துக்குப் பின்பு வந்திருக்கிறேன்:)///

.

ஹாஹா இவுக நம்ம பூஸ் பங்காளிதான் :) ரொம்ப நாள் கழிச்சி பிளாக் வந்ததில் குயம்பிட்டாங்க :)
//48 // துளஸிக்கா குறியீடா சொல்லியிருக்காங்க மியாவ் .

அக்கா அவர்களின் 48 வது  திருமண அனிவர்சரி 

said...

அவங்க குழம்பினதால்தான் நான் இங்கே வந்து பார்த்து அறிந்தேன் :)

இனிய மனமார்ந்த மணநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா அன்ட் கோபால் சார்.

WITH LOVE

Angel family

said...

ஆவ்வ்வ்வ் அஞ்சு..:)) எனக்கு 48 எனப் பார்த்ததும், தொடர் பதிவின் 48 ஆம் அங்கம் என நினைச்சிட்டேன்:)).. அதிலும் துளசி அண்ணன், கீதா ரெங்கன் பக்கம் என நினைச்சே வந்ததால தலை கால் புரியவில்லை, ஆனாலும் பூஸாரைப் பார்த்ததும் போக மனமில்லை..

எத்தனையோ மிஸ்ட் கோலகளால பல குடும்பங்களே இணைஞ்சிருக்கு:)) அப்படியே ஒரு மிஸ்ட்டுக் கொமெண்ட்டால இங்கின நானும் இணைகிறேன்..:).

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் துளசி அக்கா உங்களுக்கும் மாமாவுக்கும்...