நம்மூரில்தான் பண்டிகை எல்லாம் அந்தந்த நாளில் மட்டும்..... இங்கே நாங்க ஒவ்வொரு பண்டிகையையும் 'புடவை தீர்ந்து போகும்வரை'க் கொண்டாடுவோம், கேட்டோ :-) இன்றைக்கு ஒரு மஹாயக்ஞம் போறோம். காயத்ரி ஹோமம்.
இங்கே நம்மூரில் ஒரு பதினெட்டு வருஷங்களாச்சு, ஆர்ய சமாஜ் சத்சங்கம் ஆரம்பிச்சு. நண்பர் தலைமைப்பொறுப்பிலும், அவர் மனைவி 'வேதிக் ப்ரோஹித்' என்ற வகையில் யாகம் நடத்திக்கொடுப்பவராகவும் இருக்காங்க.
மாதம் ஒரு நாள் பக்தர்/ அங்கத்தினர் வீடுகளில் நடப்பதும், வருஷம் ஒருமுறை காயத்ரி மஹாயாகம் என்று பொதுவான ஹால்களிலும் நடத்திவர்றாங்க. பொதுவான ஹால் என்றாலும், பள்ளிக்கூட ஹால், சிட்டிக்கவுன்ஸில் கம்யூனிட்டி ஹால் போன்றவைகளில் நடத்தும்போது, ஹாலுக்குள்ளே அக்னி வளர்ப்பது தடைதான். வெளியே வெராந்தாக்களில் வச்சுத்தான் நடத்தணும்.
இதே நிலைதான் நம்ம ஃபிஜி மக்கள் நடத்தும் ராமாயண் மண்டலிகளிலும். இப்போ ஒரு அஞ்சு வருஷமா, நமக்குச் சொந்தக் கட்டடம் வாங்கிட்டதால் யாகம் செய்வதற்கெல்லாம் கொஞ்சம் வசதியாகப் போயிருக்கு என்பதே உண்மை. அப்படி இந்த ஆர்யசமாஜமும் நம்ம சநாதன் தர்ம ஹாலில் நடத்திக்கறாங்க. நாங்களும் இந்த மாதாந்திர சத்சங்கத்துக்குப்போவது ரொம்பக்குறைவு, ஹாலில் நடப்பவைகளுக்கு மட்டும் கூடியவரை போய்க் கலந்துக்கறதுதான் !
வருஷத்துக்கொருமுறை சங்கராந்தி சமயம்தான் (உத்தராயணம்) இந்த காயத்ரி மஹாயக்ஞமும் நடக்கும். உலகப்பொதுவான புது வருஷமும் அப்பத்தானே ஒரு ரெண்டு வாரத்துக்கு முன் பொறந்துருக்குது இல்லையா!
காலையில் பத்துமணிக்கு, வந்துருக்கும் அனைவரும் பங்குபெறும் வகையில் ஆரம்பிச்ச யாகம், பகல் ஒரு மணிக்கு நிறைவானது. அப்புறம் ஒரு சில பஜனைப்பாடல்கள், நன்றி உரை ஆனதும் ஒன்னரை மணிபோல் மஹாப்ரஸாதம் விளம்பல்.
நம்ம யோகா குழுவினரில் முக்கால்வாசிப்பேர் இங்கேயும் அங்கங்களே !
நமக்கெல்லாம் சம்மர் சீஸனுக்கான வேலைகள்னு ஏகப்பட்டவை உண்டு இங்கெல்லாம். தோட்டம், வீட்டுப் பராமரிப்புன்னு ஒத்திப்போட்டவைகளில் கொஞ்சத்தையாவது முடிக்கணும். திண்ணை ரிப்பேர் செய்யும் அப்பாவுக்குத் துணையா சித்தாள் இருக்கார் :-)
கோடை & பள்ளிக்கூட விடுமுறைக்குப் பாட்டி வீட்டுக்கு வரும் குழந்தைகள், பாட்டியின் நெருங்கிய தோழி வீட்டுக்கும் வந்துட்டுத்தான் போவாங்க. வருஷத்துக்குக் குறைஞ்சது ரெண்டு முறை வந்துபோவதுண்டு. வேற ஊரில் அப்பாம்மா, ப்ளேனில் ஏத்திவிட்டால், 500 கிமீ தாண்டி இங்கே வந்ததும் தாத்தா பாட்டி போய் ஏர்ப்போர்ட்டிலிருந்து கூட்டி வருவாங்க. அஞ்சு வயசுமுதல் பிள்ளைங்க தனியாத்தான் வந்து போறாங்க.
நம்ம வீட்டில் பொங்கல் டிஸ்ப்ளே எல்லாம் பார்த்துப் புரிஞ்சுக்கிட்டு, ரஜ்ஜுவுக்கு ஒரு ஃப்ரீ செக்கப்பும் செஞ்சுட்டுப்போனாங்க. வெட்நரி பெற்றோர்களின் மக்கள் !!!! பேரன் ஒரு 'Bug Man' ரெண்டு பூச்சிகளைப் பிடிச்சுக்கொண்டு போனான் :-)
நம்ம யோகா குழுவில் ( இப்போ குழு போய், குடும்பமாகிருச்சு ! ) ஒரு குடும்பம், பொங்கல் டிஸ்ப்ளே எடுத்தாச்சான்னு கேட்டதுக்கு, இன்னும் இல்லைன்னேன். சவுத் டிஸைன் பார்க்க வந்துபோனாங்க. இவுங்க ராஜஸ்தான் மக்கள். தம்பதிகள் இருவரும் மருத்துவர்கள் என்றபடியால் சேர்ந்து ஒரு வீட்டுக்கு விஸிட் போறதுக்கு நேரம் அமையாது. அம்மாவும் கூட வந்தது விசேஷம் !
ஆச்சு. இனி பொங்கலைப் பிரிச்செடுத்து வைக்கணும்.
பலசரக்கு வாங்கக் கடைக்குப்போகும் வழியில் Eco சென்டருக்குப் போனதில் ஒரு பொதி பொம்மை கிடைச்சது. வீட்டுக்கு வந்து, பிரிச்சுப் பார்த்தால் பத்து பெண்களும், மூணு குழந்தைகளும் ! எல்லோரும் ஏதோ விபத்தில் அடிபட்டு கிடக்கறாங்களா இல்லை எதையாவது பார்த்து பயந்து துண்டைக் காணோம் துணியைக் காணோமுன்னு ஓடி வந்தாங்களா ? அடடா......
எதாவது செய்யணுமே............
9 comments:
அருமை நன்றி
After very long time coming to your blog. Happy to see many following our culture there.
Nice.
Coming to your after very long time. Nice to hear many following our customs and being close knit.
படங்கள் சிறப்பு.
யாக ஹோமம் நன்று. சித்தாள் :)
ஸ்மாட்டாக இருக்கிறார்.
விடுமுறைக்கு வரும் நண்பியின் பேரக்குழந்தைகள் முன்பும் வந்திருந்தார்கள்.
புதிதாக வந்த பெண்களும் குழந்தைகளும் அழகு.
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
வாங்க ஸ்ரீகாந்த்,
எதை விட்டுட்டு வந்தோமோ அதை நாடித்தானே மனம் போகுது ! அப்புறம் எப்போ நாட்டை விட்டு வந்தோமா.... இனி இங்கே இருப்பவர்தான் குடும்பம் மாதிரி !
சரிதானே ?
வாங்க ஸ்ரீராம்,
ரசித்தமைக்கு நன்றி !
வாங்க மாதேவி,
பேரக்குழந்தைகள் வருவதே நம்ம வீட்டுப் பூனைகளைக் கொஞ்சத்தான் :-) நம்ம கோபாலகிருஷ்ணன் இருந்தானே.... அவந்தான் பசங்களைப் பார்த்ததும் பதுங்குவான் :-)
Post a Comment