காலையில் நாம் கிளம்பும் நேரத்துக்கு இங்கே ஹொட்டேலில் ப்ரேக்ஃபாஸ்ட் ஒன்னும் கிடைக்காதே..... மூணரை மணிக்கு யார் கிச்சனைத் திறந்து வைக்கிறாங்க ?
குளிச்சு முடிச்சு ரெடி ஆனதும், அறையிலேயே காஃபி தயாரிச்சுட்டு, கைவசம் இருந்த பிஸ்கெட்ஸ், நியூஸியில் இருந்து கொண்டுபோன ம்யூஸ்லி பார்களோடு ப்ரேக்ஃபாஸ்டை முடிச்சோம். மணி இப்போ நாலே கால்.
பால்கனியில் எட்டிப் பார்த்தால்.... கீழே ஆரவாரம் ஒன்னுமே இல்லாத அமைதியில் நைல் ஓடிக்கிட்டு இருக்கு. பாலத்தில் ஒரு நாலைஞ்சு வண்டிகள். இந்தப் பாலத்துக்கு Qasr El Nil Bridge (Palace of the Nile ) என்று பெயர். கிட்டத்தட்ட ரெண்டு மீட்டர் நீளம். 1931 இல் கட்ட ஆரம்பிச்சு ரெண்டு வருஷத்துலே முடிச்சுட்டாங்க. இதுக்கு முந்தி இதே இடத்தில் இருந்த பழைய பாலம் பழுதாகிருச்சு. அதுவும் அறுபது வருஷம் உழைச்சுட்டுப் போயிருக்கு.
புதுப்பாலத்துக்கு மன்னரோட பெயர்தான் ஆரம்பகாலத்துலே! 1952 லே புரட்சி நடந்த கையோட பெயரை மாத்திட்டாங்க. நல்லவேளை.... புரட்சியை ஆரம்பிச்ச தலையின் பெயரை வைக்கலை.
இந்தப் பாலத்தைத் தவிர இன்னும் ரெண்டு பாலங்கள் கய்ரோவில் இருக்குன்னாலும் அதுலே ஒன்னு ரயில் போக்குவரத்துக்கானது. இன்னொன்னு கிட்டத்தட்ட 21 கிமீ ! ஹா.... அது ஒன்னுமில்லே.... மேம்பாலம், நதிப்பாலம்னு எல்லாம் கலந்து கட்டுனதுதான். 6 அக்டோபர் பாலமுன்னு பெயர். கட்டிமுடிக்க 27 வருஷம் ஆச்சு. (கத்திப்பாரா மேம்பாலம் கட்ட ஆரம்பிச்சு அப்படியே கிடக்குன்னு முணுமுணுத்துக்கிட்டே இருந்தோம்லே? )
நாலரைக்குக்கீழே போனதும் அஸீஸ் காத்திருந்து கூட்டிப்போனார். ஒரு இருபத்தியொரு கிமீ பயணம் போறோம். எங்கே? ஏர்ப்போர்ட்டுக்குத்தான். காலை நேரம், போக்குவரத்து ஒன்னும் அவ்வளவா இல்லாததால் முக்கால் மணி நேரத்துலே போய்ச் சேர்ந்துட்டோம். டெர்மினல் ஒன்னு போனதும், நாங்க மூணுபேரும் உள்ளே போய் செக்கின் ஆச்சு. போர்டிங் பாஸ் வாங்கிக் கையில் கொடுத்துட்டு, அப்புறம் திரும்பி வரும்போது சந்திக்கறதாச் சொல்லிட்டு அஸீஸ் கிளம்பிப் போனார்.
இங்கேயும் வரப்போகும் புது வருஷத்தைக் கொண்டாடும் வகையில் அலங்காரங்கள்தான் !
உள்ளூர் விமானப்பயணம்தான் இது. பஸ் ஸ்டாண்ட் மாதிரி நல்ல கூட்டம். அஞ்சு நாப்பதுக்கு போர்டிங்னு சொல்லிட்டு, ஆறுமணிக்குத்தான் பஸ் வந்து கூட்டிப்போய் ப்ளேனாண்டை விட்டுச்சு. நைல் ஏர் ரெடி ! அறுபத்தியஞ்சு நிமிட் ஃப்ளைட். கய்ரோவிலிருந்து சுமார் எழுநூறு கிமீ தூரத்தில் இருக்கும் ஊரான லக்ஸர் போய் இறங்கும்போது ஏழரை!
லக்ஸர் ஏர்ப்போர்ட் நல்லாவே இருக்கு. இன்டர்நேஷனல் ஏர்ப்போர்ட் இது ! டூர் லீடர் அஹமத் மொஹம்மத் அஹமத் (மூன் ரிவர் டூர்ஸ் ) நமக்காக அங்கே காத்திருந்தார்.
அன்றைய ட்ராவல் ப்ரோக்ராம்களை நமக்கு விளக்கிச் சொல்லிட்டு, நமக்கான வண்டிக்குக் கூட்டிப்போனார். அங்கே டூர் கைடு இதிஹாப் வசம் நம்மை ஒப்படைச்சுட்டு கிளம்பிப்போயிட்டார். ( ஆமாம் பாஸ். அததுக்கு ஒரு ஆள் இருக்கு பாஸ். அந்தாள்கிட்டே சொல்லிட்டா இன்னொரு ஆளை வச்சு வேலையை முடிச்சுருவான் பாஸ் !) நமக்கான ட்ரைவர் மொஹம்மத் . நமக்கு இப்போ ஒரு முப்பத்தியஞ்சு கிமீ தூரப் பயணம் இருக்கு.
வழியில் வேடிக்கைன்னு பார்த்துக்கிட்டே சின்ன ஊர்களைத் தாண்டிப் போறோம்.
அங்கங்கே கால்வாய்களும் சின்னச் சின்னப்பாலங்களுமாக இருக்கு!
அதே நைல்நதியை ஒரு இடத்தில் கடந்து அந்தாண்டை போறோம். கய்ரோவில் இருந்து படகில் கூட இங்கே வரலாம். நேரம் இருந்தால் ரயிலும் இருக்கு !
ரோடெல்லாம் அருமை !
லக்ஸர் நகரம் நம்மை வரவேற்றாலும் ஊருக்குள் போகலை....
ஊர்கள் முடிஞ்சதும் ஒரே மண் ப்ரதேசம்.......
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்தாச்சு.
இங்கே என்ன விசேஷம்?
சொல்றேன், இருங்க.... இதிஹாப் போய் டிக்கெட் வாங்கி வரட்டும்.....
தொடரும்.......... :-)
குளிச்சு முடிச்சு ரெடி ஆனதும், அறையிலேயே காஃபி தயாரிச்சுட்டு, கைவசம் இருந்த பிஸ்கெட்ஸ், நியூஸியில் இருந்து கொண்டுபோன ம்யூஸ்லி பார்களோடு ப்ரேக்ஃபாஸ்டை முடிச்சோம். மணி இப்போ நாலே கால்.
பால்கனியில் எட்டிப் பார்த்தால்.... கீழே ஆரவாரம் ஒன்னுமே இல்லாத அமைதியில் நைல் ஓடிக்கிட்டு இருக்கு. பாலத்தில் ஒரு நாலைஞ்சு வண்டிகள். இந்தப் பாலத்துக்கு Qasr El Nil Bridge (Palace of the Nile ) என்று பெயர். கிட்டத்தட்ட ரெண்டு மீட்டர் நீளம். 1931 இல் கட்ட ஆரம்பிச்சு ரெண்டு வருஷத்துலே முடிச்சுட்டாங்க. இதுக்கு முந்தி இதே இடத்தில் இருந்த பழைய பாலம் பழுதாகிருச்சு. அதுவும் அறுபது வருஷம் உழைச்சுட்டுப் போயிருக்கு.
புதுப்பாலத்துக்கு மன்னரோட பெயர்தான் ஆரம்பகாலத்துலே! 1952 லே புரட்சி நடந்த கையோட பெயரை மாத்திட்டாங்க. நல்லவேளை.... புரட்சியை ஆரம்பிச்ச தலையின் பெயரை வைக்கலை.
இந்தப் பாலத்தைத் தவிர இன்னும் ரெண்டு பாலங்கள் கய்ரோவில் இருக்குன்னாலும் அதுலே ஒன்னு ரயில் போக்குவரத்துக்கானது. இன்னொன்னு கிட்டத்தட்ட 21 கிமீ ! ஹா.... அது ஒன்னுமில்லே.... மேம்பாலம், நதிப்பாலம்னு எல்லாம் கலந்து கட்டுனதுதான். 6 அக்டோபர் பாலமுன்னு பெயர். கட்டிமுடிக்க 27 வருஷம் ஆச்சு. (கத்திப்பாரா மேம்பாலம் கட்ட ஆரம்பிச்சு அப்படியே கிடக்குன்னு முணுமுணுத்துக்கிட்டே இருந்தோம்லே? )
நாலரைக்குக்கீழே போனதும் அஸீஸ் காத்திருந்து கூட்டிப்போனார். ஒரு இருபத்தியொரு கிமீ பயணம் போறோம். எங்கே? ஏர்ப்போர்ட்டுக்குத்தான். காலை நேரம், போக்குவரத்து ஒன்னும் அவ்வளவா இல்லாததால் முக்கால் மணி நேரத்துலே போய்ச் சேர்ந்துட்டோம். டெர்மினல் ஒன்னு போனதும், நாங்க மூணுபேரும் உள்ளே போய் செக்கின் ஆச்சு. போர்டிங் பாஸ் வாங்கிக் கையில் கொடுத்துட்டு, அப்புறம் திரும்பி வரும்போது சந்திக்கறதாச் சொல்லிட்டு அஸீஸ் கிளம்பிப் போனார்.
வழியில் வேடிக்கைன்னு பார்த்துக்கிட்டே சின்ன ஊர்களைத் தாண்டிப் போறோம்.
அங்கங்கே கால்வாய்களும் சின்னச் சின்னப்பாலங்களுமாக இருக்கு!
அதே நைல்நதியை ஒரு இடத்தில் கடந்து அந்தாண்டை போறோம். கய்ரோவில் இருந்து படகில் கூட இங்கே வரலாம். நேரம் இருந்தால் ரயிலும் இருக்கு !
லக்ஸர் நகரம் நம்மை வரவேற்றாலும் ஊருக்குள் போகலை....
ஊர்கள் முடிஞ்சதும் ஒரே மண் ப்ரதேசம்.......
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்தாச்சு.
இங்கே என்ன விசேஷம்?
சொல்றேன், இருங்க.... இதிஹாப் போய் டிக்கெட் வாங்கி வரட்டும்.....
தொடரும்.......... :-)
10 comments:
படங்கள் வழமை போல அழகு.
லக்சர் பகுதியில் என்ன பார்த்தீர்கள் என்று தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.
நகரத்தை விட்டுவிட்டு மண்மேட்டுக்கு எங்க போயிருக்கீங்க? தொடர்கிறேன்
மண் மேடு பழைய நகர் ஏதாவது......
வந்தது எங்கு எதற்கு என்று தெரியாது காத்திருக்கேன்
பெருமாள் மகாலக்ஷ்மி கூட இருக்கையில் பயம் எதற்கு;
தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறேன்.
வாங்க வெங்கட் நாகராஜ்,
எல்லாம் சரித்திரமே !
இன்றைக்குப் பதிவு பாருங்க. கொஞ்சம் விவரம் இருக்கு :-)
வாங்க நெல்லைத்தமிழன்,
பாலைவனம் இருக்கும் ஊர்களில் எங்கே போனாலும் மண்ணும் மணலும்தான் இல்லையோ !
வாங்க மாதேவி.
ஆமாம்ப்பா.... ரொம்பவே பழைய நகர் !
வாங்க விஸ்வநாத்,
ஆஹா.... அதானே...... தைரியமா வாங்க :-) ஒன்னும் ஆகாது (ன்னு நினைக்கிறேன் ! )
வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
தொடர் வருகைக்கு நன்றி !
Post a Comment