டிக்கெட் ஆஃபீஸெல்லாம் ரொம்ப முன்னாலேயே இருக்கு. அதுக்கப்புறமும் ஆறேழு நிமிட் ட்ரைவ் போனாட்டுதான் ப்ரமிட் கண்ணுலே படும். இங்கே நுழைவுக்கட்டணம் நூத்தியெண்பது ஈஜிப்ட் பவுண்ட். இந்த இடம் Archaeological site. (தொல்லியல் அகழ்வாராய்ச்சி நடந்த இடம்) ஹேராம் படத்தின் ஆரம்பத்தில் மண்ணுக்குள்ளே தோண்டிப் பார்த்துக்கிட்டு இருக்கும் ஸீன் ஞாபகம் இருக்கோ ? (ஐயோ.... என் சினிமாவே...... )
இந்தப்பகுதிக்குள் நுழையும்போதே படிக்கட்டுப்ரமிட் கண்ணுலே பட்டது. அட... மாடிப்படி மாதிரி ஏறிப்போயிடலாம், இல்லே? ஊஹூம்.... ஒவ்வொரு படிக்கட்டும் அம்மாஉயரம்..... ஒரு ஏணி வச்சுக்கிட்டுப் படிக்கட்டுலே ஏறணும்.
ஆறு படிகள். Pyramid of Djoser என்று பெயர். மன்னர் Djoser காலத்துலே கட்டுனதாம். 4700 வயசு! பார்க்கச் சின்னதாத் தெரிஞ்சதேன்னு இருந்தால் இதன் உயரம் 62.5 மீட்டராம்! (அதானே.... தூரத்துலே இருந்து பார்த்தால் சின்னதாத் தெரியாம? )
இதுக்குப் பக்கமா ஆராய்ச்சியில் கண்டெடுத்த பெரிய கூடத்துக்கு இப்போ முகப்பு வாசல் வச்சுச் சுவர் எழுப்பி இருக்காங்கன்னு நினைச்சால் இல்லையாமே ! அஞ்சாயிரம் வருஷமா இப்படியேதானாமே !!! உள்ளே போனால்.... நல்லா விளைஞ்சு நிற்கும் மூங்கில்களைக் கட்டுன கட்டு போல தூண்கள் ! நாப்பது தூண்களாம். இவ்ளோ நெருக்கமாக ஏன் கட்டி இருக்காங்கன்னு தெரியலை....ஒவ்வொரு தூணுக்கும் பின்னால் சுவர் எழுப்பி அதுபோய் சுத்துச்சுவரில் சேர்ந்துருது அதனால் ரெவ்வெண்டு தூண்களுக்கிடையில் சின்னச் சின்ன அறைகள்! எதுக்காக இருக்கும்? சவச்சடங்குக்கான கட்டடமாமே இது!
சுவர்களையெல்லாம் கொஞ்சம் கூட பிசிறே இல்லாத கற்களால் கட்டி வச்சுருக்காங்க. எந்த மெஷீன் வச்சு இப்படி வெட்டி இருப்பாங்க? ஆச்சரியம்தான் போங்க. தூண்களைக் கடந்து அந்தாண்டை போனால்.... அகழ்ந்து போட்ட கற்கள் அங்கங்கே.... ஒருபக்கம் இன்னும் கட்டடங்கள் இருக்கு!
நான்பாட்டுக்குப் படங்களை எடுத்துக்கிட்டு இருந்தேனா.... திடீர்னு திரும்பினா.... இவர் கல்மேலே ஏறி நின்னு கையைத் தூக்கிக் காத்துலே எதையோ எடுக்கறாரே.... ஹாஹா.... நம்ம ரெய்னா இவர் ப்ரமிட்டைத் தொடறதை க்ளிக்கறாங்க. கைடு.... ஃபோட்டோ ட்ரிக்ஸ் எல்லாம் தெரிஞ்சுருக்கு :-)
சுத்திக்கிட்டு அந்தாண்டை போறோம். கொஞ்சம் நல்ல கூட்டம்தான் இங்கே! பார்க்கிங்லே நிறைய வண்டிகள் ! கூட்டம் வர்றதால் நினைவுப்பொருட்கள் விற்பனையும் நடக்குது. பூனை இவுங்களுக்கு சாமி, தெரியுமோ ? அழகழகா இருக்குன்னாலும் வாங்கலை.... ப்ச்....
என்னவோ தெரியலை... இங்கேயும் ஒரு செல்லம் ப்ரமிடுக்குக் காவலா நிக்குது! ஒருவேளை..... கடந்து போன ஜன்ம வாசனை.... 'அந்தக் க்ளியோவோ?'
இந்த வளாகம் ரொம்பவே பெருசு. இடப் பத்தாக்குறைக்கு இடமே இல்லாததால் எல்லாமே தள்ளித்தள்ளிக் கட்டி விட்டுருக்காங்க. ஒரு இடத்தில் இருந்து இன்னொன்னுக்குப் போக நடக்கலாம்தான். ஆனால் அடிக்கிற வெயிலில் நடக்கறது கஷ்டம் எனக்கு. அதனால் இந்தக் கார்ப்பார்க்லே இருந்து அந்தக் கார்ப்பார்க் வண்டியிலேன்னுதான் போறோம்.
Mereruka Tomb னு போர்ட் வச்சுருக்காங்க.
நிறைய சனம் வர்ற இடமான்னு தெரிஞ்சுக்க ஒரு சிரமமே இல்லை. நினைவுப்பொருட்கள் கடை இருந்தால்.... சனம் புழங்குற இடம் :-)
இங்கே ப்ரமிடுகளைத் தவிர எக்கச்சக்கமான சமாதிகள் வேற ! யாராக இருந்தாலும் கடைசியில் மண்ணுக்குள்ளேன்னுதானே ? ஆனால் இங்கே என்னன்னா.... மன்னர்கள் , மந்திரிகள்னு முக்கியமானவர்கள் உடலை எல்லாம் மம்மிஃபைடு பண்ணி, அதைக் கொண்டு போய் சமாதிக்குள்ளே வைக்கிறேன்னு....நீளமாப்போகும் குன்றுகளின் அடியில் சுரங்கம் வெட்டி, அதுக்குள்ளே போய் பெரிய பங்ளா மாதிரி விதவிதமான அறைகள் எல்லாம் கட்டிவிட்டு, நடுநாயகமா மம்மியை, ஸ்பெஷல் அறையில் வச்சுட்டு வந்துருக்காங்க.
இப்ப நாம் பார்க்கும் சமாதியும் இந்த வகைதான். ஒவ்வொன்னுக்கும் ஒரு பணியாளர் வேற ! நாம் வாங்குன டிக்கெட்டை அங்கங்கே காமிச்சுக்கணும். நீளமாப்போகும் சுரங்கப்பாதையில் போறோம். கொஞ்சம் சரிவா இருக்கு. உள்ளே போகப்போக உயரக்குறைவான பாதை என்பதால் கொஞ்சம் தலை குனிஞ்சு நடக்கணும்.
மரப்பலகை போட்ட சரிவுப்பாதை. கால் வழுக்காமல் இருக்க மரப்பலகையில் இரும்புச்சட்டம் அடிச்சு வச்சுருக்காங்க. கை பிடிக்கு மரச்சட்டம். மெள்ளத்தான் இறங்கினேன். கொஞ்ச தூரத்துக்குக் கல்தரை, அப்புறம் மரப்பலகை சரிவுன்னு போறோம்.
கடைசியில் உடம்பை ரெண்டா மடிக்கத்தான் வேணும்:-) குனிஞ்சபடியே அந்தப்பக்கம் போயிட்டால் நிமிரலாம். பெரிய தொட்டிமாதிரி இருக்கு. அதுக்குள்ளேதான் மம்மிஃபைடு பண்ண உடலை வச்சுருவாங்களாம். இப்ப மம்மி அதுக்குள்ளே இல்லை. காலித்தொட்டிதான்.
சுவர்களில் எல்லாம் பழங்காலத்து சித்திர வடிவில் இருக்கும் எழுத்துகள் (Hieroglyphic Alphabet ) என்னமோ சேதி சொல்லிக்கிட்டு இருக்கு. இப்பெல்லாம் எது என்னன்ற விளக்கம் எல்லாம் வந்துட்டாலும் நின்னு வாசிச்சு முடிக்க இந்த ஜன்மம் போதாது !
வாசலில் இருந்த பணியாளர்.... நம்ம கூடவே வந்து 'கைடு' வேலை செய்யறார். 'செல்லைக்கொடு. நான் படம் எடுக்கறேன்'னு உதவிக்கரமும் ! ஏன் விடுவானேன்? பதிலுக்கு நாமும் கொஞ்சம் உதவிக்கரம் நீட்டத்தானே வேணும், இல்லையோ?
காலையில் நம்ம ஹொட்டேலில் இருக்கும் பேங்கில் கொஞ்சம் காசு மாத்தி எடுத்து வச்சுக்கிட்டதும் நல்லதாப் போச்சு. கைச்செலவுக்கும், இப்படி அங்கங்கே பதிலுதவி செய்யறதுக்கும் வேணும்தானே?
வாசல் வரை கூடவே வந்து வழியனுப்பி வச்சார் இந்த 'கைடு'
நம்ம ரெய்னா, நாம் வர்றவரை.... வெளியில் உக்கார்ந்துருந்தாங்க. இருக்கைன்னு தனியா ஒன்னும் வேணாம். அதான் எங்கே பார்த்தாலும் கல் அடுக்கிக் கிடக்கே....
அடுத்துப் போனது........... இன்னொரு....
தொடரும் ........ :-)
ஆறு படிகள். Pyramid of Djoser என்று பெயர். மன்னர் Djoser காலத்துலே கட்டுனதாம். 4700 வயசு! பார்க்கச் சின்னதாத் தெரிஞ்சதேன்னு இருந்தால் இதன் உயரம் 62.5 மீட்டராம்! (அதானே.... தூரத்துலே இருந்து பார்த்தால் சின்னதாத் தெரியாம? )
பாதம் வச்சக் கட்டைச்சுவர் !
என்னவோ தெரியலை... இங்கேயும் ஒரு செல்லம் ப்ரமிடுக்குக் காவலா நிக்குது! ஒருவேளை..... கடந்து போன ஜன்ம வாசனை.... 'அந்தக் க்ளியோவோ?'
இந்த வளாகம் ரொம்பவே பெருசு. இடப் பத்தாக்குறைக்கு இடமே இல்லாததால் எல்லாமே தள்ளித்தள்ளிக் கட்டி விட்டுருக்காங்க. ஒரு இடத்தில் இருந்து இன்னொன்னுக்குப் போக நடக்கலாம்தான். ஆனால் அடிக்கிற வெயிலில் நடக்கறது கஷ்டம் எனக்கு. அதனால் இந்தக் கார்ப்பார்க்லே இருந்து அந்தக் கார்ப்பார்க் வண்டியிலேன்னுதான் போறோம்.
Mereruka Tomb னு போர்ட் வச்சுருக்காங்க.
நிறைய சனம் வர்ற இடமான்னு தெரிஞ்சுக்க ஒரு சிரமமே இல்லை. நினைவுப்பொருட்கள் கடை இருந்தால்.... சனம் புழங்குற இடம் :-)
இங்கே ப்ரமிடுகளைத் தவிர எக்கச்சக்கமான சமாதிகள் வேற ! யாராக இருந்தாலும் கடைசியில் மண்ணுக்குள்ளேன்னுதானே ? ஆனால் இங்கே என்னன்னா.... மன்னர்கள் , மந்திரிகள்னு முக்கியமானவர்கள் உடலை எல்லாம் மம்மிஃபைடு பண்ணி, அதைக் கொண்டு போய் சமாதிக்குள்ளே வைக்கிறேன்னு....நீளமாப்போகும் குன்றுகளின் அடியில் சுரங்கம் வெட்டி, அதுக்குள்ளே போய் பெரிய பங்ளா மாதிரி விதவிதமான அறைகள் எல்லாம் கட்டிவிட்டு, நடுநாயகமா மம்மியை, ஸ்பெஷல் அறையில் வச்சுட்டு வந்துருக்காங்க.
இப்ப நாம் பார்க்கும் சமாதியும் இந்த வகைதான். ஒவ்வொன்னுக்கும் ஒரு பணியாளர் வேற ! நாம் வாங்குன டிக்கெட்டை அங்கங்கே காமிச்சுக்கணும். நீளமாப்போகும் சுரங்கப்பாதையில் போறோம். கொஞ்சம் சரிவா இருக்கு. உள்ளே போகப்போக உயரக்குறைவான பாதை என்பதால் கொஞ்சம் தலை குனிஞ்சு நடக்கணும்.
கடைசியில் உடம்பை ரெண்டா மடிக்கத்தான் வேணும்:-) குனிஞ்சபடியே அந்தப்பக்கம் போயிட்டால் நிமிரலாம். பெரிய தொட்டிமாதிரி இருக்கு. அதுக்குள்ளேதான் மம்மிஃபைடு பண்ண உடலை வச்சுருவாங்களாம். இப்ப மம்மி அதுக்குள்ளே இல்லை. காலித்தொட்டிதான்.
சுவர்களில் எல்லாம் பழங்காலத்து சித்திர வடிவில் இருக்கும் எழுத்துகள் (Hieroglyphic Alphabet ) என்னமோ சேதி சொல்லிக்கிட்டு இருக்கு. இப்பெல்லாம் எது என்னன்ற விளக்கம் எல்லாம் வந்துட்டாலும் நின்னு வாசிச்சு முடிக்க இந்த ஜன்மம் போதாது !
காலையில் நம்ம ஹொட்டேலில் இருக்கும் பேங்கில் கொஞ்சம் காசு மாத்தி எடுத்து வச்சுக்கிட்டதும் நல்லதாப் போச்சு. கைச்செலவுக்கும், இப்படி அங்கங்கே பதிலுதவி செய்யறதுக்கும் வேணும்தானே?
வாசல் வரை கூடவே வந்து வழியனுப்பி வச்சார் இந்த 'கைடு'
நம்ம ரெய்னா, நாம் வர்றவரை.... வெளியில் உக்கார்ந்துருந்தாங்க. இருக்கைன்னு தனியா ஒன்னும் வேணாம். அதான் எங்கே பார்த்தாலும் கல் அடுக்கிக் கிடக்கே....
அடுத்துப் போனது........... இன்னொரு....
தொடரும் ........ :-)
11 comments:
பாதம் வச்ச கட்டைச் சுவரா? நான், பின்னாலிருந்து எழுந்து வந்த ம்ம்மிக்களோன்னு ஒரு தடவை திடுக்கிட்டேன்.
சின்ன வயதில் சென்றிருந்தால் தைரியமாக ஏறி இருக்கலாம்
பாதம் வச்ச கட்டைச் சுவர்! பார்க்கவே பிரமிப்பு!
தகவல்களும் படங்களும் வழமை போலவே சிறப்பு.
தொடர்கிறேன்.
அருமை சிறப்பு நன்றி
பூனை இவங்களுக்கு சாமியில்லை.... பொதுவா ஆவி சமாச்சாரம், பூனை இருக்கும் இடத்தில் வராது என்பது இவர்களின் (ப்ளஸ் அரபிக்களின்) நம்பிக்கை. அதனால் இவங்க பூனை வளர்ப்பாங்க. அதுனாலதான் பூனை பொம்மை விற்கப்படுதுன்னு நினைக்கிறேன்.
அது இருக்கட்டும்... எக்சார்ஸிஸ்ட் படம் மாதிரி, அந்த இடிபாடுகள்ல எதுவும் பொருட்களை கோபால் சார் எடுத்துவந்துவிடவில்லையே... ஹா ஹா ஹா.
பிரமிக்க வைக்கும் இடம்தான்.
ரிவி சேனலில் பார்த்து வியந்ததுண்டு இப்பொழுது உங்கள் பகிர்விலும் விரிவாக படங்களுடன் காண்கிறோம்.
வாங்க நெல்லைத்தமிழன்,
சட்னு கீழே பாதம் ஒளிஞ்சுருப்பது போல் இருந்தால் பயம் வரத்தானே செய்யும் , இல்லையோ?
பூனை இவுங்களுக்கு சாமிதான். ஆதிகாலத்து ஈஜிப்ட் மக்கள், சூரியக் கடவுளின் மகள்தான் Bastet என்னும் பூனைன்னு கும்பிட்டு இருக்காங்க. பெண் பூனைதான். மனிதப் பெண் தலையும் பூனை உடம்புமா இருந்தாளாம்!
பூனைச்சாமி எனக்கும் பிடிச்சது :-)
வாங்க வெங்கட் நாகராஜ்,
எனக்கும் வியப்பாகத்தான் இருந்தது.
தொடர் வருகைக்கு நன்றி !
வாங்க விஸ்வநாத் ,
நன்றி.
நீங்க போய் வந்த சமயத்தில் பார்த்தவைகளுக்கும் இப்போது இருப்பவைகளுக்கும் எதாவது வித்தியாசங்கள் இருக்கான்னு சொல்லலாமே!
வாங்க மாதேவி,
உண்மையிலேயே பிரமிக்கத்தான் வைக்குதுப்பா!
இவ்வளவாவது நேரில் பார்க்கக்கிடைச்சதே... அதுக்கே கடவுளுக்கு நன்றி சொல்லிக்கறேன்.
சூப்பர் :-) . பார்க்க வேண்டிய இடங்கள்.
இதைப்பார்த்தால் மம்மி படம் தான் நினைவுக்கு வருகிறது. வெயில் பளீர்ன்னு இருக்கு.. மொட்டையா இருக்கு.
தண்ணீருக்கு எப்படி சமாளிக்கிறார்கள்?
"சுவர்களையெல்லாம் கொஞ்சம் கூடப் பிசிறே இல்லாத கற்களால் கட்டி வச்சுருக்காங்க. எந்த மெஷீன் வச்சு இப்படி வெட்டி இருப்பாங்க? ஆச்சரியம்தான் போங்க"
விருத்தகிரீஸ்வர் கோவில் பாருங்க.. அவ்வளவு அழகா கற்களை அறுத்துக் கட்டி இருப்பாங்க. நான் பார்த்து வியந்து விட்டேன்.
பழைய கட்டிடம்தானே ... உள்ளே எல்லாம் சிதிலடைந்துபோய்தான் இருக்கும் என்றுதான் இவ்வளவு காலம் நினைத்திருந்தேன் ... ஆனால் இப்போ பார்க்கும்போதுதான் தெரிகிறது எவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது என்று .... அம்மாடி !!! அந்த சித்திர எழுத்துக்களை காண கண்கோடி வேண்டும் ... சூப்பர் !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
Post a Comment