Wednesday, April 15, 2020

மார்கெட் போலாமா? (பயணத்தொடர் 2020 பகுதி 39 )

கோட்டையிலிருந்து ரொம்ப தூரம் இல்லை. வெறும் ஆறு கிமீ தூரம்தான். காமணியில் அங்கே போய்ச் சேர்ந்தோம்.  சரியான முகப்பு வாசல்னு சொல்ல முடியாது.
பயங்கரப்போக்குவரத்து இருக்கும் சாலையில் ஒரு இடத்தில் குட்டிச்சுவருக்குப் பின்னே போன ரெய்னாவைப் பின் தொடர்ந்து போறோம். ஒரு   சந்து தான். ரெண்டு பக்கங்களிலும்  கடைகள்.  பாதிக்கடை சந்தின் தரையில்தான். பார்த்து நடக்கணும். தடுமாறி விழுந்தால் போச்சு... தரையில் அடுக்கி வச்சதெல்லாம்  உடைஞ்சு போயிரும்.

உள்ளே போகப்போக  சந்து சந்தாப் பிரிஞ்சு போகுது. கடைகளோ கடைகள்தான்.


இந்த இடத்தை சௌக் (சதுக்கம்) என்று சொல்றாங்க.  ஆதிகாலத்தில்,  (பண்டமாற்று நடந்த காலக்கட்டத்தில்? ) வியாபாரிகள் தங்கள் பொருட்களை  விற்கக் கொண்டு வந்து கூடும் இடம். விக்கறதும் வாங்கறதுமா இருக்கும் சந்தை இல்லே? பதினாலாம் நூற்றாண்டு சமயம், Jaharkas al-Khalili என்றவர்,  பக்காவா ஒரு கட்டடம் கட்டி இருக்கார் இந்த இடத்தில்.  வியாபாரத்துக்கு வர்றவங்க தங்கி இருந்து வியாபாரம் செஞ்சுக்கத்தான்.  இஸ்லாமியர்களின் கட்டடக்கலை !
அப்படியே  கடைகள் ஒவ்வொன்னா நிரந்தரமா ஆரம்பிச்சுருக்கு. நாள் போகப்போக  அக்கம்பக்கத்துலே விரிவடைஞ்சு ஒரே சந்து பொந்தாத்தான் இப்போ.  சந்துக்குள்ளே நடந்து போனால் ரெண்டு பக்கமும் இடைவெளியே இல்லாமக் கடைகளோ கடைகள்.  கய்ரோ நகரின்  ஏற்றவும் பழைய மார்கெட் இது. ஏழு நூற்றாண்டா நடக்குதுன்னா பாருங்க. Khan el-Khalili  என்று பெயர். ஒரிஜினல் கட்டடத்தைச் சுத்தியே ஏகப்பட்ட கடைகள் ஆகி இருக்கு.

சுற்றுலாப்பயணிகள் இங்கே வராமல் பயணம் முடிஞ்சதா சரித்திரமே இல்லை. அதான் எல்லா கைடுகளும்,  பயணிகளைக் கொண்டு வந்து குவிச்சுடறாங்களே!


நகைநட்டு, அலங்காரச்சாமான்கள், இன்னபிற எல்லாமே இங்கே இருக்கு. இவ்ளோ கலாட்டாவுக்கு நடுவிலும் காஃபி டீ கடைகள் வேற !
ரொட்டி விற்பனை  !
பெல்லிடான்ஸ் அவுட்ஃபிட்.... ஓ....


  சாமிச் செல்லம்ஸ்  :-)



மகளுக்கு மெட்டி வேணுமாம்.  அதைத்தேடி ஒரு கடைக்குள் நுழைஞ்சோம்.  வெள்ளி சமாச்சாரம். ஒரு மூணு மெட்டி வாங்கியாச். அதுலே பாருங்க மெட்டின்னா ஒரு ஜோடி இல்லை. ஒத்தை மெட்டிதானாம்..... ப்ச்....



இங்கெல்லாம் கடைக்காரர்கள் ஓரளவு நல்லாவே இங்லிஷ் பேசறதால் நமக்கு பேரம் பேசிக்க முடியுது !  விலைகள் எல்லாம் அமெரிக்கன் டாலரில்தான். அதை உள்ளுர்க்காசுக்கு மாத்திக்கணும்.



எனக்குன்னு 'ஒன்னுமே'  வாங்கிக்கலை. சொன்னா நம்பணும்....  :-)  ஒன்லி விண்டோ ஷாப்பிங் ! 
ஒரு கடையில் அட்டகாசமான ஒரு செட் இருந்தது.  பசங்க கார்ட்ஸ் விளையாடறாங்க. கெசீனோ?  கொஞ்சம் பெருசுன்றதால் கப்சுப்.
அலங்காரச்சாமான்களுக்கான நிறையக் கடைகள் கட்டடத்துக்குள்ளே. வெளியே தெருவில் எல்லாம் கலந்து கட்டி.... தீனிக்கடைகள் உட்பட....

 ஒரு கடையில் சீயக்காய் போல ஒன்னு !  ஆனா கொஞ்சம் பெரிய சைஸ்.  இது Carob Pods. அப்படியே தின்னலாமாம் ! சரின்னு கண்ணால் தின்னேன் :-)  சாக்லேட் செய்ய இதை, கோகோவுக்குப் பதிலாப் பயன்படுத்துவாங்களாம். ஓ.....
பரிச்சயமான சில தீனிகள் கண்ணில் பட்டது உண்மை :-)  இருக்கட்டும்.



உள்ளுர் மக்களும், சுற்றுலாப்பயணிகளுமா இந்த இடம் கலகலன்னு இருக்கு.  இந்த இடத்தில்கூடத்  தீவிரவாதிகள், வேலையைக் காமிச்சாங்களாமே!  2005 ஆம் ஆண்டு, ஏப்ரலில் தொடர்ச்சியா மூணு இடத்தில் ....  பாவம்.... 21 பேர் மரணம். அதுலே பத்துப்பேர்  சுற்றுலாப்பயணிகள்.  அதுக்கப்புறம் சுற்றுலாப்பயணிகள் வருகை கொஞ்சம் நின்னுதான் போயிருக்கு.  இந்த நாட்டில் நிறைய வருமானம்  சுற்றுலாத்துறையால்தான்.  மெள்ள மீண்டு வந்துருக்காங்க.

அப்புறம் 2009 ஆம் ஆண்டு  இன்னொரு சம்பவம். குண்டு வச்சுட்டான். ஒரு சுற்றுலாப்பயணி மரணம். 22 பேருக்குக் காயம் பட்டுருக்கு.  தீவிரவாதிகளுக்கு இதே வேலைதான் போங்க...ப்ச்...

இந்தப் பகுதியை இஸ்லாமிக் கய்ரொன்னு சொன்னாங்க. அப்போ க்றிஸ்ட்டியானிட்டிக்கு ஒரு கய்ரோ இருக்கான்னா.... இருக்கே ! அங்கெதான் இப்போ போறோமுன்னு சொன்னாங்க ரெய்னா.



சரி.  கிளம்பலாம். நமக்கு எப்படியும் ஒரு நாள் கடைசியில் ஃப்ரீ டே ஆக இருக்கு. அன்றைக்குத் திரும்ப  வரணுமுன்னு மூளையில் முடிச்சு!
தொடரும்........ :-)

12 comments:

said...

கடைகள்லாம் நெருக்கமாக இருக்கு, பஹ்ரைன், துபாய் போன்ற இடங்களில் இருப்பதுபோல

வாஸ்துக்காக பிரமிட் கூட வாங்கலையா?

அங்கு அல்வா ஜிலேபி கடைகளைப் பார்த்தீர்களா?

said...

கடைவீதி கலகலக்கிறது!

எத்தனை பொருட்கள் இந்த கடைகளில்!

உங்கள் வழி நாங்களும் கண்டோம். நன்றி.

said...

அருமை சிறப்பு நன்றி

said...

படங்களே செய்திகளாக

said...

கடைகள் அருமை. துபாய் கடைகளை நினைவூட்டின.

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

துபாய் ஏர்ப்போர்ட் மட்டும்தான் ! ஊருக்குள்ளே போகலை....

ஒருமுறை ரிஷிகேஷில், க்றிஸ்டல் மஹாமேரு வாங்கினேன். அதுதான் நமக்கு வாஸ்து !

அல்வா ஜிலேபி கடைகளைப் பார்க்கலையே.... பார்த்துட்டாலும் கெமெராக் கண்ணால்தான் தின்பேன், இல்லையோ !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

அன்றைக்கு வெள்ளிக்கிழமையாப் போயிட்டதால் நிறைய கடைகள் திறக்கலையாம் !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க வேல்முருகன்,

ஒரு படம், ஓராயிரம் சொற்களைச் சொல்லிடாதோ !!!

said...

வாங்க மாதேவி,

துபாய், ஊருக்குள்ளே போகலையேப்பா....

said...

ஆஹா ... எத்தனை எத்தனை கடைகள் ... இங்கேயும் தீவிரவாதிகள் குண்டு வைக்கிறாங்களா ? ... தீவிரவாதிகள் மீதும் தப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும் ... ஏனென்றால் அவர்கள் இப்படி குண்டுவைத்து ஓரு 500 பேரையாவது கொன்றால்தான் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்று யோரோ ஒரு அழகிய முன்மாதிரியான பெரிய மனிதர் எழுதி வைத்து விட்டு சென்றுள்ளாராமே ..!!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

said...

வாங்க சிவா,

ரொம்பநாளாச்சே உங்களை இங்கே பார்த்து ! நலம்தானே ?

சொர்கத்தில் வெறும் இடம் மட்டுமா ? சேவை செய்ய 72 கன்னியர்கள் வேற கிடைப்பாங்களாம் !

என்னமோ போங்க.... இப்படி ஒருத்தரை ஒருத்தர் அழிச்சுக்கிட்டே போவதுதான் இப்போதைய நடைமுறை.... ப்ச்...