Monday, September 18, 2017

பதிவர் சந்திப்பில் எளக்கியவியாதி சுட்ட பச்சை வடை ! (இந்திய மண்ணில் பயணம் 51)

பொழுது விடிஞ்சதும் எல்லாம் வழக்கம்போல்.  காலை உணவு  இட்லி, வடைகள், கிச்சடி, கேசரி போல ஒன்னு, கொண்டைக்கடலை சுண்டல்னு! லோட்டஸ்லே எனக்குப் பிடிச்ச விஷயம் ஒவ்வொரு தளத்திலும் வாசலுக்குப் பக்கம் வச்சுருக்கும் வட்டக் கண்ணாடி!  முந்தி இது  லிஃப்ட் கதவுக்கு எதுத்தாப்லெ இருக்கும். இப்போ அங்கே புதுசா ஒரு கண்ணாடி லிஃப்ட் வச்சுட்டதாலே இதை இடம் மாத்தி இருக்காங்க. ஆனாலும்  தளத்தை விட்டு வெளியே வரும்போது கண்ணில் படாமல் இருக்கச் சான்ஸே இல்லை :-)

நம்மவருக்கு இன்று ஆஃபீஸ் போகணு(மா)ம். ஒன்பது மணிக்கெல்லாம்  வண்டி அனுப்பி, அவர் கிளம்பிப்போயிட்டார்.  எனக்கு பதிவர் சந்திப்பு இருக்கு. பதினொரு மணிக்குத்தான்  நம்ம சீனிவாசனை வரச்சொல்லி இருந்தேன்.

அலைகள் அருணா வீட்டில் சந்திப்பு ஃபாலோடு பை லஞ்ச் ! மலர்வனம் லக்ஷ்மி, ஒலிக்கும் கணங்கள் நிர்மலா, நுனிப்புல் உஷா , நாச்சியார் வல்லி, இவர்களுடன் துளசிதளம் துளசியும்!   பாட்லக் போல.....  ஆளாளுக்கு  ஒரு வகைன்னு   வகைவகையா சாப்பாடு!  எனக்குத்தான் அடுப்பில்லையே....  எதுக்கு இருக்கு  சுஸ்வாத்? நோ ஒர்ரீஸ்னு   அங்கெ போய்  (நாலெட்டு நடந்துதான்) சில தீனிகளை வாங்கிக்கிட்டு வந்தேன்.

சீனிவாசன் வந்ததும் கிளம்பிப் போயாச்சு.  எங்களையெல்லாம் மயக்க அங்கே மாயக்கண்ணனும் வந்திருந்தான் :-)
தான் பெற்ற இன்பம் வகையில்  எனக்கும் இன்பமூட்டியே ஆகணும் என்ற பிடிவாதத்தோடு,  'பிரபல  எழுத்தாளினி'    ஏகாம்பரி  வடைக்கான மாவை  அரைச்செடுத்துக்கிட்டு வந்துருந்தாங்க.  இலக்கிய வியாதி சுட்ட பச்சை வடை !  முதல் ஈட்டின் முதல் வடை எனக்கு நைவேத்தியமாச்சு :-)சிரிப்பும் கொண்டாட்டமுமா  பகல் சாப்பாடு அமர்க்களம்.  நாங்க போட்ட கும்மாளத்தில், அருணாவின் ரங்க்ஸ் ,   தன் அறைக்குள் இருந்த இடமே தெரியலை!
அடடா.... அப்படி விடலாமா?  எங்களுக்கு  ஃபொட்டாக்ராஃபரா இருக்கும்படிச் செஞ்சோம்.


மூணுமணிக்கு சம்ப்ரதாயமா காஃபி ஆச்சு.  அதன்பின்  நுனிப்புல்லின் மகளுடைய அலுவலகத்துக்குக் கிளம்பிப்போனோம்.  வக்கீலம்மா ! புதுசா  அலுவலகம் செட் செஞ்சுக்கிட்டு இருக்காங்க.  அங்கேயும்போய்  இடத்தையே அதிர வச்சுட்டு,    (  ஹௌஸ் வார்மிங்)      அவுங்கவுங்க கிளம்பிப்போனதும்,  நானும் அருணாவும்,  அருணாவின் வீட்டுக்கு வந்தோம்.


கோபால், அவர் போன வேலையை முடிச்சுட்டு  இங்கே வந்து சேர்ந்துக்குவார் என்பது  திட்டம். வீட்டுக்குள் போனா...  காஃபி குடிச்சுக்கிட்டு இருக்கார் கோபால்.  நாங்க  அப்படிப்போனவுடன், இவர் இப்படி வந்துருக்கார். விருந்தோம்பலைக் கைவிடாமல் அருணாவின் ரங்க்ஸ், காஃபி போட்டுக் கொடுத்து உபசரிச்சுக்கிட்டு இருக்கார்:-)

கொஞ்ச நேரம் ஃபேமிலீஸ்  Tடாக் ஆனதும்,  கிளம்பி  நாங்க அடையார் அநந்தபதுமனை தரிசனம் செஞ்சுக்கிட்டு,  திநகர் போயாச்.
பிறகு அங்கேயே  கொஞ்சம் ஷாப்பிங், கீதா கஃபே விஸிட்ன்னு  நேரம் போனது உண்மை.

மறுநாளும்  சைடு பை சைடா  ஷாப்பிங், பதிவர், எழுத்தாளர் ,பத்திரிகை ஆசிரியர் என்ற மூணவதாரம் எடுத்த  நண்பருடன் இன்னுமொரு இனிய சந்திப்பு.  எனக்கு ஒரு அன்பளிப்பு  கிடைச்சதுன்னா நம்புவீங்களா?
ஹை.... ஐநூறு!

 சக்தி விகடனில் வந்த  பிருந்தாவன் முதல் பிரயாகை வரை என்ற தொடருக்கு  அப்பப்பப் படங்களை சப்ளை செய்த வகையில் ! ஒரு ரெண்டு வருசமா அவர் சொல்லிக்கிட்டே இருக்கார், 'உங்க காசு என்னாண்டை இருக்கு'ன்னு!  பேசாம வட்டிக்கு விடச் சொல்லி இருக்கலாம்...இல்லே?  போச்சு :-)
இங்கே லோட்டஸ் தரை தளத்தில் இருக்கும் க்ரீன்வேஸிலேயே சாப்பாடு ஆச்சு.
காலையில் ப்ரேக்ஃபாஸ்டே  கூட  பதிவர் சந்திப்பு சமாச்சாரம்தான்!  போண்டா ! (பார்த்தவுடன் நம்ம டோண்டு நினைவு வந்ததுப்பா.... ப்ச்.....)

இந்தப் பயணத்தில் கீதா கஃபே பஜ்ஜிகளில் நம்ம பெயரை எழுதிட்டார் பெருமாள்.!
மகள் கல்யாணத்துலே ப்ளவர் கேர்ளுக்கான  அலங்காரமா வளைகள், கழுத்தணிகள் வாங்கிக்கன்னு  அங்கே பாண்டிபஸாரிலேயே சுத்தித் திரிஞ்சும், தைக்கக் கொடுத்தவகைகளை  சேகரிச்சுக்கிட்டுமா இருந்துட்டு,  கடைசியில்  மயிலை வரை போய் கபாலியையும் கப்புவையும் கும்பிட்டவுடன்,    சரவணபவனில் ராச்சாப்பாடு முடிச்சுக்கிட்டு  அறைக்கு வந்தோம்.


எனக்கு இடியப்பம், நம்மவருக்கு இட்லி.  கூடவே பாதாம் பால் !


தொடரும்.........  :-)


17 comments:

said...

பதிவர்களில் உங்களைத்தவிர வல்லிம்மாவை மட்டும் தெரிகிறது.

said...

இப்பத்தானே சில வருடமா பதிவுலகைப் பார்க்கிறோம், அதனால இருக்கும்னு நினைச்சேன். ஶ்ரீராமுக்குத் தோன்றியதுதான் என் மனசிலும் தோன்றியது. தொடர்கிறேன் (லோட்டஸ் பிரேக்ஃபாஸ்ட்ல கேணரி, அச்சுவெல்லம் மாதிரி இருக்கு)

said...

வாங்க ஸ்ரீராம்.

அலைகள் அருணா, ஒலிக்கும் கணங்கள் நிர்மலா, மலர்வனம் லக்ஷ்மி பாலகிருஷ்ணன், நுனிப்புல் ராமசந்திரன் உஷா, நாச்சியார் ரேவதி நரசிம்ஹன் ஆகியோர் படத்தில். எல்லோரும் மரத்தடிகால மக்கள்ஸ் :-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

மேலே நம்ம ஸ்ரீராமுக்குச்சொல்லி இருக்கும் பதில்தான் உங்களுக்கும் :-)

கேசரியைத் துண்டு போட்டு வச்சுருந்தாங்க. அது நான் தோண்டி எடுத்த அச்சு வெல்லம் :-)

said...

இட்லி வடை பொங்கல் பாதாம்பால் - பிரமாதம் அருமை செம.

said...

ஐ ரேவதிம்மா!

இதுலாம் பார்க்கும்போது பொறாமையா இருக்கு..

said...

இதெல்லாம் நடந்த கால ம் எது

said...

இது 2015 ஆ, துளசி?.... வடை ருசி நன்றாகவே இருக்கு இன்னும் நாவில்.:)

said...

வலைப்பதிவர்கள் சந்திப்பா? எப்போது நடந்தது. இவர்களில் உங்களையும், வல்லிசிம்ஹன் அவர்களையும் மட்டும்தான் நான் அறியும்.

said...

சந்திப்பும் மகிழ்ச்சியும் தொடரட்டும்.

said...

வாங்க விஸ்வநாத்!

ருசியும் அருமையே!

said...

வாங்க ராஜி.

ஆஹா... பொறாமையா? ஏன்? எதுக்கு?

நேரம் இருந்தால் இங்கே(யும்) எட்டிப் பாருங்க.

http://thulasidhalam.blogspot.com/2012/10/blog-post_12.html

said...

வாங்க ஜிஎம்பி ஐயா!

எல்லாம் இந்தக் கலிகாலத்தில்தான் :-)

இன்னும் ஒரு வருஷம் ஆகலை. அக்டோபர் 13, 2017.

said...

வாங்க வல்லி.

இன்னும் புதுசுப்பா! 2016 அக்டோபர் 13 :-)

இப்ப அவுங்க பஜ்ஜி ஸ்பெஷலிஸ்ட்டா ஆகிட்டாங்க (ளாம்!)

said...

வாங்க தமிழ் இளங்கோ.

போன வருச இந்தியப் பயணத்தில் நடந்த சந்திப்பு. சென்னையில்தான். பழைய மரத்தடி மக்கள்ஸ் :-)

said...

வாங்க மாதேவி.

அப்பப்ப நினைச்சு மகிழ இது போல சந்திப்புகள் கட்டாயம் வேணும்தானே!

said...

இனிமையான சந்திப்புகள். கூடவே சுவையூட்ட உணவும். தொடரட்டும் சந்திப்புகள்.