Monday, September 11, 2017

சாமிக்கு தோசை பிடிக்கும்தானே? (இந்திய மண்ணில் பயணம் 50)

சிம்பிளா ஒரு குலாப்ஜாமூனோடு  ப்ரேக்ஃபாஸ்ட் ஆச்சு.   க்ளிக்கிட்டு, தோழிகளுக்கு அனுப்பியுமாச்சு :-)
கொஞ்சம் கல்யாண ஷாப்பிங் செஞ்சுக்கணும். மகள் சொன்ன டிஸைனில் மோதிரம் கிடைக்குதான்னு பார்க்க  நகைக்கடைக்குப் போனால்....   செஞ்சு தருவாங்களாம். ஆனால்  குறைஞ்சது  ரெண்டு மாசம் ஆகுமாம்.  அங்கெதான்  அம்மா மோதிரம் பார்த்தேன்!  நல்லாத்தான் இருக்குன்னாலும்....  நமக்கு  எதுக்கு?  வியாதிகளுக்கானது அல்லவோ?

மூணே பவுன் தான். கல் வைரம் இல்லை. வேணுமுன்னா எனக்குப் பணம் அனுப்புங்க. வாங்கித்தர்றேன். எதிரிக்கட்சி ஆட்களுக்கும் சாய்ஸ் இருக்கு. எடை இன்னும் மற்ற சமாச்சாரங்கள் எல்லாம் ஸேம் ஸேம். படம் மட்டும் வேற!
ஓக்கே? எல்லாம் ஒரு ரூபாய் ஆகும். பெரிய ரூபாய் 


கல்யாண அழைப்பிதழ் கொஞ்சம்  நம்ம மக்களுக்காக  அச்சடிச்சு வாங்கிக்கலாமேன்னு மேனகா கார்ட்ஸ் போனோம்.  அழகழகாத்தான் இருக்குன்னாலும்.... குறைஞ்ச அளவில் வாங்கணுமுன்னா அதிக செலவு....   வேணுமா?  மகள் சொல்லி அனுப்பிய  மாடல் பயங்கர விலை வேற.....    அதுக்கு செலவு செய்யும் காசு வீண் செலவுதான்....
காலம் மாறி இருக்கே....   மின்னழைப்பிதழ் போதாதா  என்ன?   போதும் :-)

வடபழனியில்  ஒரு  கோவில் ... ஏழு நிலை ராஜ கோபுரம்  அட்டகாசமா  பளிச்னு இருக்கு. ஒரு நாள் போகணும்.....  என்ன கோவிலுன்னு தெரியலையே..... எந்தெந்த ஊருக்கோ போய் தரிசனம் செஞ்சுக்கறோம்....  ஆனால் உள்ளூர் கோவில் விவரம் தெரியலை பாருங்க......   :-(

பாண்டிபஸாருக்கு  வந்து சேர்ந்தோம். பகல் சாப்பாடு நம்ம கீதா கஃபேவில்தான்.  இந்த முறை சரவணபவன் வேணாமுன்னு  முடிவு செஞ்சுருக்கேன். அப்படியே  சென்னை, குமரன், போத்தீஸ் பக்கமெல்லாம்  போகக்கூடாதுன்னு  எனக்குள்ளே ஒரு தீர்மானம். பார்க்கலாம்.... முடியுதான்னு....
மாடியில் இருக்கும் ஏஸி ஹாலில்  ரெண்டு சென்னை சாப்பாடு. ஆந்த்ரா, மும்பை மீல்ஸ் கூட இருக்கு.  முதல்நாள் சென்னையாக இருக்கட்டும்!

பில்லைப் பார்த்தவுடன்....  தில்லி  காஃபிக் கடைக்கு ஒரு அர்ச்சனை ஆச்சு :-)

கல்யாணத்துலே ஃப்ளவர் கேர்ளுக்கு இண்டியன் டச் கொடுக்கப்போறோம். அளவு, வேண்டிய நிறம் எல்லாம்  குறிச்சுக் கொண்டு வந்துருந்தேன்.   நமக்கு  நல்ல நேரமுன்னுதான் சொல்லணும்....   நான் தேர்ந்தெடுத்துப் படத்தை   நியூஸிக்கு அனுப்பி வச்சுட்டு,  மற்ற வகை உடைகளைப் பார்த்துக்கிட்டு இருக்கும்போது   பதில் வந்துருச்சு.... வாங்கிருங்கன்னு !
அக்கா கல்யாணத்துக்கு தங்கைக்குத் துணி எடுக்கவேணாமா? ஜன்னுவுக்கும் ஒரு செட்  வாங்கினேன்:-) பாவாடை சட்டைதான்.
கல்யாண முஹூர்த்தத்துக்கு  புடவைதான் வேணுமுன்னு கட்டிக்கிட்டாள். அந்த ட்ரெஸை இப்போ  தம்பி பொறந்தநாளுக்குத்தான் போட்டுக்கிட்டு இருக்காள் :-)
வெய்யில் தாங்கலைன்னார் நம்மவர்.  லோட்டஸுக்கு வந்து ஒரு மணி நேர ஓய்வுக்குப்பின்  எனக்குக் கண்ணாடி சரி செஞ்சுக்கணுமுன்னு  கண்ணாடிக்கடைக்கு  ஒரு விஸிட். ஃப்ரேம் கொஞ்சம்  கோணலாகி இருந்துச்சு. சரி செஞ்சு கொடுத்தாங்க. அங்கிருந்து நாத்தனார் வீடு.
திரும்பி தி நகர் வரும் வழியில் நம்ம டெய்லர் கடைக்குப்போய் முந்தாநாள்  கொடுத்த துணிகளை வாங்கிக்கிட்டோம். நம்முடைய அவசரத்துக்கு ஏத்தபடி  ஒருநாள் ரெண்டுநாளிலே தைச்சுக் கொடுத்துருவார் முஸ்தாஃபா. இப்போதைக்கு எனக்குப் போட்டுக்கத் துணிகள் தேவையா இருக்கு பாருங்க.

இன்றைக்கு விஜயதசமி. ஊரில் இருந்தால் நம்ம வீட்டுலே கொஞ்சம் பெரிய அளவில் பூஜை நடந்துருக்கும்.... ப்ச்....
அறைக்கு வந்தவுடன்,  நேத்து வாங்கி வந்த தசாவதாரங்களை எடுத்து வச்சுச் சின்னதா   மானசீகமா  ஒரு பூஜையை முடிச்சுக்கிட்டேன். ப்ரஸாதம்?  தோசைதான். ரூம் சர்வீஸ் :-)

லோட்டஸில் வைஃபை நல்லா வேலை செய்யுது. கொஞ்ச நேரம்     வலை மேய்ஞ்சுட்டுக் கிடக்கணும்.  நாளைக்கு ஒரு  பதிவர் சந்திப்பு இருக்கு :-)

 தொடரும்..........  :-)


19 comments:

said...

வடபழனியில் தெரிவது முருகன் கோவில். ஃ பேமஸ் ஆச்சே...

said...

தோசை நைவேத்யம்.... :) நமக்குப் பிடிச்சது தானே சாமிக்கு....

தொடர்கிறேன்.

said...

தசாவதாரம் அருமை.

said...

டீச்சர்... டயரி போல் எழுதினாலும் "நடுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்"கற அளவுல சந்தேகம் வந்துடுது. அப்புறம்தான், இது போன அக்டோபர்ல, இந்த வருஷம்தான் பெண்ணுக்குத் திருமணம்லாம் நினைவுக்குக் கொண்டுவந்துக்க வேண்டியிருக்கு.

வடபழனி முருகனை தரிசனம் செய்யும் வேளை எனக்கு வரவில்லை. சென்னை புராதான கோவில்கள் லிஸ்ட் எடுத்து தரிசனம் செய்யவேண்டும்.

said...

அது அப்படித்தான் ஆகிவிடுகிறது உள்ளூரில் நாம் பார்த்திராத பலவற்றையும் வெளியூர் வாசிகள் தெரிந்து வைக்கிறார்கள்

said...

that temple name not remember it is private temple - very small one long back for one bedthorathal i went to there.

said...

Dasavatharam orderla 4 and 5 interchange aagi irukku :)

said...

தசாவதாரம் சூப்பர்.

said...

வடபழனில இப்படியொரு கோயிலா? எந்த எடத்துல இருக்குது இது? பாத்த மாதிரியே இல்லையே. ஆர்க்காடு ரோடுன்னு போட்டோ சொல்லுது. ஆர்க்காடு ரோட்டுல எங்கன்னு தெரியலையே.

அந்த மோதிரம் அடேங்கப்பா. இதையெல்லாம் போட்டுக்கிட்டுதானே ஊரை ஏமாத்துறாங்க.

தசாவதாரம் கொலு செட் அழகு. நரசிம்மர் சாந்த நரசிம்மரா இருக்காரு.

said...

வாங்க ஸ்ரீராம்.

முருகன் கோவிலா இருக்க வாய்ப்பில்லை. வடபழனி முருகர் கொஞ்சம் உள்ளடங்கி இருக்கார்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஆமாமாம். நமக்குப்பிடிச்சதுதான் சாமிக்கும் பிடிக்கும் :-)

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றீஸ் !

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

நானும் வடபழனி முருகனை தரிசனம் செஞ்சு ஒரு முப்பத்தியெட்டு வருசமாச்சு. அடுத்தமுறையாவது போய் வரணும். அங்கே ஆறுமுகன் சந்நிதி ஒன்னு இருக்கும். பின்புறச்சுவரில் பெரிய கண்ணாடி வச்சுருப்பாங்க. ஆறுமுகத்தையும் பார்க்கலாம். இப்ப இருக்கான்னு தெரியலை....

அதென்னவோ பயணம் முடிஞ்சுட்டாலும் அதன் தொடர் முடிய ரொம்பநாள் எடுக்குது.... வர்றபடி வரட்டுமுன்னு விட்டுட்டேன்.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

அதென்னமோ உண்மைதான்!

said...

வாங்க அனந்து.

அடுத்த முறை போகணும்..... நினைவில் வச்சுருக்கேன்...

said...

வாங்க மாதேவி.

எனக்கும் பிடிச்சுருக்குப்பா! இந்த வருஷக் கொலுவில் வச்சுட்டேன் :-)

said...

வாங்க ஜிரா.

தன்னைவிட பயங்கரமா இருக்கும் அரசியல் வியாதிகளைப் பார்த்து, நரசிம்மரே சாந்தமாகிட்டார் :-)

said...

வடபழனியில் இது எந்தக் கோவில்? எங்கே இருக்குன்னு குழம்பினோமே.....
நண்பர் அருள்நம்பி, சரியான தகவலைத் தந்துருக்கார். அவருக்கு நம் மனம் நிறைந்த நன்றி.

சாரதாம்பாள் கோவிலாம்!

Varadarajpet Main Rd, Minor Trustpuram, Kodambakkam, Chennai, Tamil Nadu 600024, India

https://www.google.com/maps/place/Sharadambal+Temple/@13.0535307,80.2257327,16.48z/data=!4m5!3m4!1s0x0:0x84800a2f7415284d!8m2!3d13.0542351!4d80.2278328?hl=en

said...

வாங்க நாஞ்சில் கண்ணன்.

அட.... ஆமாம்!

கவனிப்புக்கு நன்றீஸ்.

கொலுவில் கரெக்ட்டா வச்சுட்டேன் :-)