Wednesday, September 20, 2017

1995 நவம்பர் 17 சாமி செத்தே போச்சு ! (இந்திய மண்ணில் பயணம் 52)

தினம் தினம் எதாவது ஷாப்பிங்னு கடைக்குப் போறதும் வாரதுமாத்தான் இருக்கோம்.  'நான் என்ன எனக்காகவா வாங்கறேன்? எல்லாம் மகளுக்கு'ன்னதும்  ஒரு சின்ன முணுமுணுப்பு கூட இல்லாமல்  கூப்பிட்ட இடத்துக்குக் கிளம்பிடறார் நம்மவர் :-)

பாண்டி பஸாரில்  ரெண்டுமூணு கடைகளில் ஏறி இறங்கி வந்துக்கிட்டு இருந்தோம். அப்பதான்  நம்ம ரேமண்ட்ஸ்  கடைக்கு எதிர்வாடையில் இருக்கும்  இளநீர் வண்டிக்காரரிடம் தாகத்துக்கு வாங்கிக்கலாமுன்னு   குறுக்கே வரும் நெரிசலான சந்து (தெருவாமே! ) கடக்கும்போது 'டோபாஸ் வளையல் கடை' கண்ணுலே பட்டது.

மேட்ச்சிங் வளையலுக்காகத்தான் அலைச்சல் இன்றைக்கு. எதுக்கும் அங்கேயும் பார்த்துடலாமேன்னு போனால்...  ஹைய்யோ!!!   இத்தனை வருசம் இந்தக் கடை கண்ணுலேயே படலை பாருங்க.  ஆனால் கண்ணாடி, ஃபேன்ஸி வளைகள் போட்டுக்கறதை விட்டே பல காலம் ஆச்சுன்றதால் தேவையும் இருக்கலைன்றதுதான் உண்மை.

முழுக்க முழுக்கப் பெண்களால் நடத்தப்படும் கடை இது. ஆரம்பிச்சு இப்போ சரியாப் பத்து வருசமாச்சாம்!   கொண்ட்டாட்டம்தான்!  கடையின் ஓனர்களே  கடையை நடத்தி வியாபாரத்தையும் கவனிச்சுக்கறாங்க. கூட வேலை செய்ய ஒரு சில உதவியாளர்கள் மட்டும்தானாம்.

அப்போ ட்யூட்டியில்  இருந்த   திருமதி குப்பம்மா ரொம்பவே நல்லவங்களா இருக்காங்க. என்ன ஏதுன்னு நம்மை விசாரிச்சு, தேடோ தேடுன்னு தேடி கடைசியில் பொருத்தமான நிறமும் டிஸைனுமா கிடைச்சே போச்சு!  இதுக்கிடையில் மகளுக்குப் படங்களை அனுப்பி, டிஸைனும் கலரும் சரியான்னு கேட்டு, பதில் வரும்வரை காத்திருந்துன்னு.... நேரம் ஓடியே போனது உண்மை!
குப்பம்மா அவர்களுக்கு  நன்றியைச் சொன்னதுடன்,  பத்தாண்டு விழாவுக்கான வாழ்த்துகளையும்  தெரிவிச்சுட்டு  சில க்ளிக்ஸ் :-)
அவுங்களும் பதில் மரியாதையாக, மகளுக்குத் திருமணத்துக்கான ஆசிகளையும் தெரிவிச்சாங்க.
இன்னும் இளநீர்  ஆக்ட்டிவிட்டி பாக்கி இருக்கேன்னு  அங்கே போனால் , கடைக்கொரு குடை தர்றதா ஒருவர் வந்து சொல்ல, இளநீர்க் கடைக்காரர் ஏழுமலை, இதுக்குப் பின்னணியில் என்ன இருக்கோன்னு முழிக்க,  நாம் குடைக்காரரிடம் பேச்சுக் கொடுத்து விவரம் விசாரிச்சோம்.
இலவசமாத்தான் தர்றாங்களாம். அவுங்க  வியாபாரத்துக்கான விளம்பரம் குடையில் இருக்கு!  இருந்துட்டுப் போகட்டும்,     அடிக்கிற  வெயிலில்  அந்த  இளநீர்கள் கொதிக்காம இருக்கே ... அது போதாதா?

ஆளுக்கொரு இளநீர் வாங்கிக்கிட்டுக் குடிக்கும்போதுதான் சிவரஞ்சனியைப் பார்த்தேன். என்ன ஒரு அழகான அமைதியான முகம்.  கை மட்டும் பரபரன்னு மணிகளைப்பின்னி  மாலையாக்கிக்கிட்டு இருக்கு!   நவநிற மாலை போல ஒன்னு   பார்த்தவுடனே எனக்குப் பிடிச்சுப் போச்சு. நாஞ்சொல்லலை.... நேபாள் போனதுலே இருந்து மணிப்பித்து பிடிச்சுருக்குன்னு :-)
யாரோ  ஆர்டர் கொடுத்துட்டுப் போயிட்டு, திரும்ப வரவே இல்லையாம். 'எதாவது அட்வான்ஸ் வாங்குனீங்களா'ன்னு கேட்டால்.... சிரிக்கிறாங்க. இப்படி இருந்தால் என்னத்தை வியாபாரம் செஞ்சு.....  மாலையைக் கையில் எடுத்துப் பார்த்தேன். நல்ல நீளம். சாதாரண அளவை விட டபுள் நீளம்.  லாங்க் செயின் போட்டுக்கும் பழக்கம்  சின்ன வயசுலே பார்த்துருக்கேன். அதில் ஒரு சிலுவையைப் பென்டன்ட்டாப் போட்டுருப்பாங்க!   அதைப்போல ஒன்னு வாங்கிக்கணுமுன்னு ஆசை அப்போ இருந்தது......   ஐ மீன்  த செயின்.
'ஆர்டர் கொடுத்தவங்க வந்தால் அட்வான்ஸ் வாங்கிக்கிட்டுச் செஞ்சு கொடுங்க'ன்னு  ஒரு  வியாபார நுணுக்கம் சொல்லிக் கொடுத்துட்டு, அந்த மணிமாலையை வாங்கியாச்.  எல்லா நிறமும் இருப்பதால் எல்லா நிற உடைகளுக்கும் மேட்ச் ஆகும். ( இதை எழுதும்போதுதான்  ஞாபகத்துக்கு வருது....   இதை இன்னும் நியூஸியில் போட்டுக்கலைன்னு.... தேடணும்!)

சிவரஞ்சனி, ப்ரேம்குமார் தம்பதிகளுக்கு அழகான ரெண்டு குழந்தைகள். பெரியவனை ஸ்கூலில் போடச் சொல்லி, கல்விதான் உண்மையான செல்வம்னு நம்ம ரெண்டு பைசாவை சொன்னதுக்கு  சம்மதம்ன்னாங்க.
இப்பவே மணி ரெண்டு. பசியும் இல்லை. இளநீரும் தேங்காயுமா வயிறு நிறைஞ்சுதான் இருக்கு. (எனக்கு எப்பவும்  கொஞ்சம் தேங்காய் இருக்கும் இளநீர்தான் பிடிக்கும். முழுக்க முழுக்கத் தண்ணீர் இருக்கணும் நம்மவருக்கு!)

பகல் சாப்பாட்டை இன்னைக்கு ஒழிக்கலாமான்னதுக்கு எஸ்ன்னார்.  அறைக்குத் திரும்பிட்டோம். மூணுமுணரை வரை நமக்கும், சீனிவாசனுக்கும் ரெஸ்ட்தான் .

குட்டித்தூக்கம், வலை மேய்ச்சல் கடமைகளை முடிச்சுட்டு மூணரை வாக்கில் கிளம்பி காஞ்சிபுரம் போறோம்.  மயிலை மாடவீதியில்  காஞ்சிபுரம் நெசவாளர் கூட்டுறவு சங்கம் நடத்தும் கடையைப் பத்திச் சொல்லி இருக்கேனே   நினைவிருக்கோ?  அவுங்க இப்போ லஸ் சர்ச் ரோடில் நம்ம ரங்காச்சாரிக்கு எதிர்வாடையில் புதுக் கடை  திறந்துருக்காங்க.
கடை அமர்க்களமா இருக்கு!  பழைய கடையும்  இன்னும் இருக்குதாம்.  கடை ஓனர் சீதாராமன் & தனலக்ஷ்மி தம்பதியர் நமக்கு நண்பர்களாக ஆகி ஒரு  ஒன்பது வருசம் ஆச்சு. நம்ம வல்லியம்மா அறிமுகம் செஞ்ச கடைதான் இது!

 நமக்கு வேண்டிய டிஸைன் கலர்ஸ் சொன்னால் அதைத் தயாரிச்சும் கொடுப்பாங்க.  மகளுக்கு இப்படி ஒரு முறை வாங்கி இருக்கேன்.  அவள் பாட்டுக்காரி(யும் கூட) என்பதால்  அவுங்க குழுவின் நீலநிறத்தில், ம்யூஸிக் நொட்டேஷன்ஸ்  டிஸைன் பார்டரும் முந்தானியுமா ரொம்பவே அழகா செஞ்சு கொடுத்தாங்க.

நாம் போன நேரம்  சீதாராமன் அங்கே இல்லை. அவரோட மாமனார் இருந்தார்.   இங்கே இருந்த விற்பனையாளர்கள் சிலர்ஏற்கெனவே பழைய கடையில் நமக்குத் தெரிஞ்சவங்கதான் என்பதால் குசல விசரிப்பு முடிஞ்சு புது டிஸைன்களை எடுத்துக் காமிச்சாங்க.  இப்ப அது என்ன ட்ரெண்டோ.....  புடவைக்குக் கொஞ்சம் கூட சம்பந்தமில்லாம ஒரு முட்டாய் பிங்  கலர் அநேகமா எல்லாப் புது டிஸைன் புடவைகளிலும் இருக்கு.  வாங்கினால் மகள் கொன்னுருவாள்.

அடுத்த விஜயம் பதிவர் வீட்டுக்கு:-) ஏற்கெனவே அங்கே ஒரு பதிவர் சந்திப்பு நடந்துக்கிட்டுத்தான் இருந்தது.  நானும் கலந்தேன் :-)     நெல்லை உலகம்மாள்.  எனக்கும் அறிமுகம்  ஆச்சு.      இதுவரை வாசிச்சதில்லை  என்ற 'உண்மை'யை இருவரும் உரக்கச் சொன்னோம்  :-)
நாச்சியாரும் இப்போ சென்னைக்கு வந்துருக்காங்க.  அடுத்த முறை ரெண்டு பேரும் சந்திக்க எப்போ வாய்க்குமோன்னு  மனசுக்குள்ளே ஒரு புலம்பல் இடைவிடாது இருக்கு  .....

எதுக்கு இப்படி ரெக்கை  கட்டாமலேயே பறக்கிறாய்?  கடிகாரத்தைச் சபிக்கத் தோணுச்சு.  வல்லியம்மாளின் இளைய மகனும் நம்மவரும் ஒரு பக்கமா கலந்துரையாடல் :-) நாங்க இன்னொரு பக்கம் !

அஞ்சேகால் மணி போலக் கிளம்பினோம்.  எனக்குக் கொஞ்சம் ஷாப்பிங் இருக்கு. (எப்பதான் இல்லை? ) மாடவீதி சரவணபவனில் நம்ம பெயர் எழுதி இருந்த பஜ்ஜியையும், காஃபியையும் முழுங்கிட்டு, விஜயா ஸ்டோரில் தேடிப்போனது கிடைக்கலைன்னு அப்படியே பார்த்தசாரதியைக் கண்டுக்கலாமேன்னு  அல்லிக்கேணி போய்ச் சேர்ந்தோம்.
அருமையான தரிசனம். பெருமாள் வழக்கம்போல் மிரட்டும் கண்களும் முரட்டு மீசையுமா ஸேவை சாதிச்சார்.
 ஏற்கெனவே பல முறைகள் வந்துபோன கோவில் என்பதால்  நின்னு நிதானமா  சந்நிதிகளில் போய் தரிசனம் செஞ்சுக்கிட்டேன்.  நின்றும் இருந்தும், கிடந்தும், பறந்தும், இளவலோடும் மனைவியோடும் ராமனாகவும் அஞ்சு பெருமாளா இங்கே  கண்ணும் மனமும் நிறையப் பார்க்கலாம்.  108 திவ்ய தேசக்கோவில்களில் இதுவும் ஒன்னு!  
அங்கேயே அக்கம்பக்கம் ஜவுளிக்கடை இருக்குதான்னதுக்கு,  'போறவழியில் மயிலாப்பூரில்  நல்லி இருக்கு'ன்னார் சீனிவாசன்.  புள்ளையாருக்கு சார்த்த ஒரு வேஷ்டியும் துண்டும், கூடவே ஒரு பொன்னாடையும் வேணும். கிடைச்சது. ஆனால் அதைவிட சுவாரசியமான தகவல் ஒன்னும்  கூடுதலாக் கிடைச்சது பாருங்க!

இந்தக் கடை ஆரம்பிச்சு  65 வருசங்களாச்சாம்.  திநகர் கடை போல  பெருசாவோ, ஆடம்பரமாவோ இல்லை. பார்க்க ரொம்பவே சாதாரணமாத்தான் இருக்கு. இங்கே ரமணின்னு ஒருத்தரை சந்திச்சோம்.
சாமிக்கு சார்த்த ஒரு செட்ன்னு சொன்னதைக் கேட்டு  அவர் ஒரு குண்டு போட்டார்!  சாமி செத்துப் போச்சு!

ஐயோ.... எப்ப?

1995 நவம்பர் 17 சாமி செத்தே போச்சு.

அப்புறம்?

மக்கள் எல்லாரும் ஒரு அபிமானத்தால் கடவுள்  உள்ளதுன்னு நம்புகிறார்கள்.  ஆனால் கடவுள்கள் எல்லாம்  போய் விட்டார்கள்....

எங்கே?  ஙே.....

அவர் ஒன்னும்   பதில் பேசாமல் நின்னார்.

சரிதான். எதோ மனநிலை சரி இல்லாதவரா இருக்கலாம். இல்லைன்னா அந்தக் குறிப்பிட்ட நாளில் எதாவது அதீத சோக நிகழ்ச்சி அவருக்கு  நடந்துருக்கலாம்.....

மனுசர், தாங்க முடியாத சோகம் அனுபவிக்க நேரும்போது....  கடவுளே இல்லைன்னு விரக்தியில்  சொல்றதுண்டே....

என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர், கல்யாணமாகி  ரெண்டாம் வருசம் கணவனை இழந்துட்டாங்க. கையில்  மூணு மாசக் குழந்தை.  இயற்கையா எதாவது மரணம் நடந்துருந்தால் மனசாவது   கொஞ்ச காலத்துக்குப் பின் அடங்கி இருக்கும். இவுங்க வாழ்க்கையில்  வேற விதமான அதிர்ச்சி.  அப்ப இருந்து  கடவுள் நம்பிக்கை இல்லாமல் போச்சு.  அவுங்க எந்தக் கோவிலுக்கும் போகமாட்டாங்க. வீட்டுலே பூஜை நடக்கும் சமயம், அந்த சாமி அறைப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்க மாட்டாங்க.  

இவுங்களைப் பத்தி ஒரு  பதிவு கூட ஒரு  பனிரெண்டு வருசத்துக்கு முன் எழுதி இருந்தேன். நேரமும் விருப்பமும் இருந்தால் இங்கே பார்க்கலாம்.



பாவம்.... ரமணிக்கு என்ன நடந்ததோ.....   ப்ச்....

திரும்ப லஸ் சர்ச் ரோடு வழியா வரும்போதுதான்  பட்டப்பாவின் தளிகை  கண்ணில் பட்டது.  அங்கே எதாவது வாங்கிக்கலாமுன்னு போனோம்.
ரொம்ப ஒன்னும்வேண்டி இருக்கலை. ஒரு தயிர் சாதம் போதும்.  வாங்கிக்கிட்டு லோட்டஸ் திரும்பியாச்.

கொஞ்சம் விலை அதிகமுன்னு தோணல் எனக்கு.   தயிரில் கொஞ்சம் புளிப்பும் அதிகம்..... வடாமும், மோர் மிளகாயும் கொஞ்சம் ஊறுகாயும் தொட்டுக்க வச்சுருந்தாங்க. நம்மவர் ஒரு ஊறுகாய் ப்ரேமி !
நாளைக்குக் காலையில் ஒரு சுவாரசியமான இடத்துக்குப் போகணும்.  காலை  ஆறுமணிக்கு சீனிவாசனை வரச் சொல்லியாச்சு :-)


தொடரும்...........  :-)

14 comments:

said...

அருமை நன்றி

said...

அந்த வளையல் கடை விலாசம் ப்ளீஸ்..

புடவை ஒரிஜினல் பட்டு போல தெரியலியே! எத்தனை ரூபாய்?!

படங்கள் அழகும்மா

said...

பட்டுப்புடவை கடையை குறித்துக்கொண்டேன். பட்டப்பா தளிகை, பயங்கர ஏமாற்றம் எனக்கு. நன்றாக இல்லை. தொடர்கிறேன்.

said...

தலைப்பை பார்த்து பயந்து போய் ஓடி வந்தேன் . படித்தபின்புதான் அப்பாடின்ன்னு இருந்தது. வல்லியம்மாவை இப்படித்தான் பார்க்க முடியுது.ராஜி கேட்டது போல் வளையல் கடை அப்படியே புடவை கடை விலசமும் கொடுத்துடுங்கோ.சென்றமுரை சென்னை பயண்த்தில் மகளுக்கு நிரைய ட்ரெசஸ் கிடைத்த்து மேட்ச்சிங் வளையல் கிடைக்காம்ல் ஒரே புல்ம்பல்.

மீராபாலாஜி

said...

காஞ்சிபுரம், மயிலாப்பூர் சுற்றி வந்தோம்.

said...

எங்க போச்சு என்னோட கமென்ட்? இடுகையில் உள்ள உணவு படங்களையும், புடவையையும் ரசித்தேன். நிறம் நல்லா இருக்கு. 'தளிகை' உணவுதான் எனக்குப் பிடிக்கலை. பேருக்கேத்தமாதிரி இல்லை.

said...

வாங்க விஸ்வநாத்.

வருகைக்கு நன்றி !

said...

வாங்க ராஜி.

வளையல் கடை Topaz Bangles No 36, Sivapraksan Street, Pondy Bazaar-

புடவை விலை பத்து. சொந்தத் தறியில் ஸ்பெஷல் ஆர்டர். அதென்ன ஒரிஜினல் பட்டான்னு பட்னு கேக்கறீங்க? :-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

ரெண்டு பின்னூட்டங்களும் வந்துருக்கே!

எனக்கும் பட்டப்பா பிடிக்கலை :-(

காஞ்சிபுரம் புடவைக் கடை ரெண்டு இடத்தில் இருக்கு. பழைய கடை மயிலை கபாலி சந்நிதித் தெருவில்.

said...

வாங்க மீரா.

வளையல் கடை விலாசம், Topaz Bangles No 36, Sivapraksan Street, Pondy Bazaar

said...

வாங்க மாதேவி.

ஹாஹா.... இந்தக் காஞ்சிபுரம் மயிலாப்பூரிலேயே இருக்குப்பா !

said...

எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது கடவுளைச் சாகடிக்கிறார்கள் ஐயோ பாவம் கடவுள்

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

மனிதன் படைச்சான், மனிதனே சாகடிக்கவும் செய்யறான்!

எல்லாம் இறைவன் செயல் !!!

said...

வளையல் கடை பிரமிக்க வைக்கிறது. தொடர்கிறேன்.