Friday, April 01, 2016

தலைவலி ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ஏகதாதைய்யா ஆஃப் தல்லபாகா! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 15)

கோவிலுக்குள்ளே நுழையும்போதே ஏதோ திருவிழா நடந்து முடிஞ்சதுபோல் இருக்கு. மஞ்சள் பூசி நிக்கும் கொடிமரத்தில் திரிசூலம்! என்னடா இதுன்னு  தலையைத் திருப்பினால் கால்மடிச்சுப்போட்டு உக்கார்ந்திருக்கும்  ஒரு நந்தி!  சிவன் கோவிலா என்ன? சும்மாச் சொல்லப்டாது....   நந்தி  அதிரூப சுந்தரன்!



நந்திக்கு அந்தாண்டை நவக்ரக சந்நிதி.  ஆனால்... நந்திக்கு முன்னால்  கோவில் வாசல் இல்லை. வெறும் சுவர்தான்!  வலம் போய்ப் பார்க்கலாமுன்னு  நமக்கிடதுபக்கம் போனால்  கோவிலுக்குள் போகும் வாசல் கதவு.  வாசலில் நின்னுருந்த காவி உடைக்காரர் உள்ளே வரச்சொல்லி கை அசைச்சவர், என் கையில் இருந்த கேமெராவைப் பார்த்தார். நான்  சட்னு கைப்பைக்குள் வச்சுட்டேன். கோவிலில் மூலவரை படம் எடுக்கமாட்டேன் என்றாலுமே......   எதுக்கு வம்பு?

இவர்தான் இங்கே குருக்கள்.  பெரிய சிவலிங்கம். ரெண்டடி உசரமிருக்கும்!  தீபஆரத்தி எடுத்து  விபூதி பிரஸாதம் கொடுத்தவர், இந்தப்பக்கம்  இருக்கும் காமாக்ஷி அம்மனுக்கும் தீபம் காட்டி குங்குமமும் கொடுத்தார்.  சாதாரண ஹால் மாதிரி  இருக்கும் ஒரு பக்கத்தில் கருவறை சின்ன ரூம் மாதிரி இருந்துச்சு.

கோவிலுக்கு வயசு 1300.  ரொம்ப சக்தியுள்ளவர் சித்தேஸ்வரர்.  இவரை இங்கே பிரதிஷ்டை செய்தது கொஞ்சதூரத்தில் இருக்கும்  முனிமலையில் (முனி கொண்ட)பலகாலம் தவம் இருந்த முனிவர்களாம்.  அவர்கள் தவம் பலித்து சித்தி அடைஞ்சதால் ஸ்வாமிக்கும் சித்தேஸ்வரர் என்றே  வச்சுட்டாங்க. Sri Siddeshwara swamy temple. Tallapaka

ஹாலின் இந்தப் பக்கம் பரசுராமர் சிலை ஒன்னு  இருக்கு.  கருவறைக்கு நேரா  பொதுவா நந்தி இருக்குமில்லையா.... அது  இல்லை. சுவர்தான் இருக்கு. அதுக்கு வெளியேதான் நாம் முதல்லே பார்த்த நந்தி.

ஆனால் சுவருக்கு இந்தாண்டை சுவரையொட்டியே  மூலவரைப்பார்த்தபடி ஒரு சிலை. சின்ன பள்ளத்தில் இருக்கார். நான் முதலில் பள்ளத்துக்குள் இருந்து வெளிவர்றமாதிரி இருக்கேன்னு நினைச்சேன். இல்லை. ரெண்டு கால்களையும் மடிச்சு பத்மாஸனத்தில்.

ஏகதாதைய்யா என்னும் மகானுடைய சிலை. பலகாலம் யாத்திரை செய்துக்கிட்டே  இமயமலை வரை போய் வந்தவர், இங்கே வந்ததும் ஈசனின் அருளால்  இங்கேயே தங்கி தவம் செய்தாராம். அப்படியே கோவிலோடு ஒன்றிப் போனவருக்கு ஏகப்பட்ட சித்திகள் லபிச்சுருக்கு. அதிலொன்னு நோயாளிகளுக்கு  ஒரு சேவை.  இவரை வந்து தரிசித்தவர்களுக்கு நோய் தீர்ந்து சுகம் கிடைச்சிருக்கு.  முக்கியமா தலைவலியில் இருந்து ரிலீஃப்!

இவர் சிலைக்கு முன்னால் மண்டியிட்டு  அவர் நெற்றியில் நம் நெற்றியை வச்சு பிரார்த்தனை செஞ்சுக்கிட்டால் தலைவலி போயே போயிந்தி! இட்ஸ் கான்!  'உனக்குத்தான் எப்பப் பார்த்தாலும் தலைவலி  வருதே.... நீ கும்பிட்டுக்கோ'ன்னார் நம்மவர். கும்பிட்டுக்கிட்டேன். மண்டி போட்டபின் திரும்ப எழுந்து நிற்பதற்கு கஷ்டமாப்போச்சு. 'முழங்காலுக்கும் சிகிச்சை  கொடுங்கோ'ன்னும் வேண்டினேன்.

தலைவலி வைத்திய சேதி புதுசு என்பதால், தாத்தய்யாவை மட்டும் படம் எடுத்துக்கவான்னு கேட்டதுக்கு சரின்னுட்டார் குருக்கள்.

கோவிலை வலம் வந்தோம். அங்கங்கே  சந்நிதிகள் . தக்ஷிணாமூர்த்தி, காலபைரவர், வீரபத்ரர், புள்ளையார், வள்ளி தேவசேனாவுடன் சுப்ரமண்ய ஸ்வாமி,நவக்ரஹங்கள்,  சண்டிகேஸ்வரர்ன்னு இருக்காங்க. சிலைகளெல்லாம் கொஞ்சம் பெரிய சைஸ்தான்.
ஸ்தலவிருட்சமா இருக்கும்   வன்னிமரத்தில் கூடவே அரசும் ஆலும் சேர்ந்து வளர்ந்துருக்கு. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் சேர்ந்தே இருப்பதின்  அடையாளமாம்.  நன்மக்கள் பிறக்கணும் என்ற  வேண்டுதல்களை நிறைவேற்றும் மரமாம். பிராத்தனை செஞ்சுக்கிட்டுப் பைகளாக் கட்டிவிட்டுருக்கு சனம். பைக்குள் என்னவோ?





அவ்வளவா  பக்தர்களும் வருமானமும் இல்லாமல்  க்ஷீணமாகிக்கிட்டு இருந்த  இந்தக் கோவிலை 1991 ஆம் ஆண்டு மார்ச் மாசம் 14 முதல் திருப்பதி தேவஸ்தானம் தன்னுடைய பராமரிப்பில் கொண்டுவந்துருக்கு.  அப்போ முதல் தினசரி பூஜைபுனஸ்காரங்கள், தூபதீப நைவேத்திய ஏற்பாடுகள் எல்லாம் முடங்காமல் நடந்து வருதுன்னாங்க. ப்ரம்மோத்ஸவம் கூட நடத்தறாங்களாம்.  அந்த விழாதான் இப்போ நடந்து முடிஞ்சுருக்கு.  அதான் இன்னும் பந்தலைப் பிரிக்கும் வேலைகள் பாக்கி இருக்கோ!
கோபுரத்துக்கும் கோவில் சுவர்கள் சந்நிதிகள் இப்படி சகல இடங்களிலும் வெள்ளையடிச்சு வச்சுருக்காங்க. நம்ம பக்கங்களில் கோபுரம் எல்லாம் கலர்ஃபுல்லா இருப்பதால் இங்கே என்னவோ வித்தியாசமா இருந்துச்சு. அப்புறம் நேற்றையப்  படங்களை இன்னொருக்காப் பார்த்ததும்தான்  திருப்பதிக் கோவில்கள் எல்லாமே வெள்ளைக் கோபுரமுன்னு புரிஞ்சது :-)
இந்தக்கோவிலுக்குப் பக்கத்துலேயே இன்னொரு சமீபகாலக்  கோவில் இருக்குன்னேன், பாருங்க. மாலையைக் கையில் ஏந்தி யானைகள் கூப்புடுதேன்னு அங்கேயும் போனோம். யானைகளுக்கு ரெண்டு பக்கமும் ஒரு பத்துப்  படிகள்!  ஏறி மேலேபோனால் யானைகளுக்கு இடையில் சின்ன மேடையில் நம்ம  ஆஞ்சி! செல்லம்போல் கைகூப்பி நிக்கறார். முன்பக்கம் சின்ன மண்டபம். எதிரே கருவறையில் நம்ம ராமர்  அண்ட் கோ!




முக்கிய அட்ராக்‌ஷன் என்னன்னா... மண்டபத்தின் மேல்விதானம்!  தாமரைப்பூ போல மூணு அடுக்கு. மலரின் இதழ்கள் எல்லாம் பாம்ப்ஸ்! நட்ட நடுவில் மேலிருந்து இறங்கும் குட்டி வட்ட மேடையில் குழலூதும் கண்ணன். அவன் காலுக்குக் கீழே  மின்சாரவிளக்கு. ஐய்ய.......  இவ்வளவு அழகா எல்லாம் செஞ்சவங்க விளக்கு அமைப்பதில் கோட்டை விட்டுட்டாங்க பாருங்க:-(

வலது பக்க சுவத்துலே கண்ணுக்கு மை போட்டுருக்கும் ஒரு மஞ்சப் புள்ளையார்!

உள்ளூர்  இளைஞர்கள் ஒருசிலர்  இந்த மண்டபத்தில் உக்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தாங்க. டைம் பாஸ்!

இன்னொரு முக்கியமான கோவிலைத் தேடவேண்டிய அவசியமே இல்லாமல்  அடுத்த கோவில் ஒரு நிமிச ட்ரைவில் இருக்கு:-)
கோவிலுக்கு எதிர்வாடையில் இருக்கும் வீட்டின் சேவல்....  நம்மைப் பார்த்ததும்  உடலை சிலிர்த்துக்கிட்டு  'கொக்கரகோ.............. '  :-)

தொடரும்..........  :-)


15 comments:

said...

சேவல் கூவுச்சா, அப்போ முருகன் அருள் கெடச்சாச்சு. அப்பனைத் தரிசிச்சதற்கு மகன் அருள் பாலிக்கிறார்.

said...

எனக்கு இம்மாதிரி கோவில் சார்ந்த பதிவுகளைப் படிக்கப் பிடிக்கும் எத்தனை விதமான கதைகள் கற்பனைகள் நம்பிக்கைகள்...!

said...

நந்தி ... அபார அழகு

ஏகதாதைய்யா...மற்றும் கோவில் பற்றிய சேதிகள் சிறப்பு ..

என்ன ஒரு கலை நயம் ...கண்ணனுக்காக

said...

நந்தி எப்பவும் அழகு. திருமால் அம்சமாச்சே.
அவருக்கு ஏன் சுவர்த்தடை வச்சாங்களோ.
தலைவலித் தாத்தையா அருமை.
எல்லா வலியும் போகட்டும்..
அருமையான படங்கள் மிக நன்றி துளசி.

said...

நந்திக்குப் பக்கத்துல இன்னொரு நந்தி.. அருமை.

இரட்டை நந்திக்கு ஏதாவது காரணம் இருக்கணுமே? முந்தையது பின்னப்பட்டதால் புதுசு வைக்கப்பட்டிருக்குமோ!!

said...

தலைவலித் தாத்தையா..இதுவரைக்கும் கேள்விபடாத ஆச்சர்யமூட்டும் விஷயம்

குழலூதும் கண்ணன்//தலையை சுற்றி விளக்கு அமைச்சிருக்கலாம் ..

அந்த மஞ்சள் பிள்ளையாருக்கு நான கண் மை அழகா தீட்டி விட்டிருப்பேன் ..கனேஷ்ஜிக்கு அழகே அந்த கியூட் கண்கள்தானே !
அருமையான தகவல்கள் அக்கா .

said...

சுவற்றைப் பாத்து நந்தி உக்காந்திருப்பதை இங்கதான் பாக்குறேன். வித்தியாசமா இருக்கே. எதுவும் காரணம் இருக்கா?

அந்தக் கிருஷ்ணர் தலை மட்டும் விதானத்துல ஒட்டிக்கிட்டு காலுக்குக் கீழ புளூரசண்ட் பல்ப் வேற. பொருத்தமாவே இல்லையே. வயர் கிருஷ்ணர் ஒடம்புக்குள்ள போகுதோ? யார் கொடுத்த ஐடியான்னு தெரியலை.

மாலையைத் தூக்கிக்கிட்டு இரண்டு ஆனைகளும் அட்டகாசமா நிக்குதே. ஆந்திர மக்களோட இரசனையே கொஞ்சம் கலக்கல் இரசனைதான்.

said...

வாங்க ஜிரா.


நந்திக்கு முன் ஏன் சுவர்னு எனக்கும் தெரியலை:-(

வொயரிங் பண்ணுமுன் கொஞ்சம்கூட யோசிக்க மாட்டாங்களா இவுங்க? ப்ச்.....

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

நம்ம வீட்டுலே கோபால் முருகபக்தர்! அதான் முருகன் கூப்புட்டுத் தரிசனம் கொடுக்கறான்:-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

தொலைத்தொடர்புகள் வசதி அவ்வளவா இல்லாத காலத்தில் எப்படி இந்தக் கதைகள் எல்லாம் ஏறகொறைய ஒன்னு போலவே இந்தியாவின் பல இடங்களில் சொல்லப்பட்டுருக்கு என்பதே வியப்புதான்!

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

கலை நயத்தோட செஞ்சவங்க, வொயரிங்கில் கோட்டை விட்டுட்டாங்களேப்பா:-(

said...

வாங்க வல்லி.

ஆதிகாலத்தில் வெட்டவெளியில் சிவனும் நந்தியும் எதிரெதிரா இருந்துருப்பாங்க போல. கோவில் கட்ட ஆரம்பிச்சப்ப நந்தியை வெளியில் விட்டுட்டாங்க போல! பாவம்.......

ஆமாம்... நந்தி...... திருமால் அம்சமா? அட!

said...

வாங்க சாந்தி.

பழசு போய் புதுசு வந்தது டும்டும் டும்! ஆனால் ஏன் பழசை அங்கேயே விட்டு வச்சுருக்காங்கன்னு புரியலை.

புஷ்பகிரி கோவிலில் சின்னதும் பெருசுமா ரெட்டை நந்திகள். தம்பதிகளாம்!

said...

வாங்க ஏஞ்சலீன்.

பயணங்களில் புது விஷயங்கள் இப்படிக் கிடைச்சுருதுப்பா!

ஒருவேளை கணேஷ்ஜி, மை வச்ச கண்களை (தும்பிக்)கையால் ஈஷிக்கிட்டாரோ:-)

said...

அட! தலைவலி தாத்தையா புதுசா இருக்கே விஷயம்....உங்கள் முழங்காலுக்கும் அப்படி ஏதேனும் சிகிச்சை இருக்கிறதா என்று அவரையே கேட்டுருக்கலாமோ!! உங்கள் தன்னம்பிக்கை, நேர்மறை எண்ணங்கள், புத்துணர்ச்சி எல்லாவற்றிற்கும் ஹேட்ஸ் ஆஃப்!!!

கணேஷ் ரொம்ப அழகு!!!

சேவல் அட! முருகன்!!! அழகு! லேட்டாப் போச்சு எல்லாத்தையும் வாசிக்கணும்...ஏதொ மிஸ் ஆகுது போல தெரியுது இதப் படித்த போது..போய் பார்க்கணும்..இதோ போறோம்..