Tuesday, August 11, 2015

தமிழில் பேசுனா ஆபத்து:-))))

உஸ்க்கே ஸாம்னே ஹிந்தி மே பாத் கரோ!

ஸோனேகே பகலே உன்கா ச்சோட்டா தர்வாஸா பந்த் கர்னா படேகா  ன்னு கோபாலிடம் சொல்லி வச்சுருந்தேன்.

அதே போல ஆச்சு.  ஆனால் அதிகாலை 4.40க்கு என்மேலே யாரோ நடக்கறாங்க!  பொதுவா காலையில் சாப்பாட்டுக்காக  கோபாலை எழுப்புவது தானே வழக்கம்? என்னன்னு பார்த்தால் இவர் முணங்கிக்கிட்டே எந்திரிக்கறார்.  ராத்ரி ஒன்னே காலில் இருந்து அட்டகாஸம் ஆரம்பிச்சுருக்கு.

தீபாவளிக்குக்கூட இவ்ளோ சீக்கிரம் எழுந்த ஞாபகம் இல்லை! கேட் டோர் மூடி இருப்பதைக் கண்டுபிடிச்சுட்டான்.

கீழே நேற்றையப்புலம்பல்:

ஒரே டென்ஷனா இருக்கேன். இன்றைக்கு நம்ம ரஜ்ஜுவுக்கு வருசாந்திர வேக்ஸினேஷனுக்கான Vet's அப்பாய்ண்ட்மென்ட் காலை 11.30க்கு.
பொழுது விடிஞ்சதும் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கிட்டு வெளியே போனவன் இதுவரை வீடு திரும்பலை. பதினொன்னேகால் வரை வெளியே தோட்டத்தில் இந்தக் குளிரிலும் போய் நின்னு ரஜ்ஜூ, அஜ்ஜூ, செல்லம்னு கூப்ப்பிட்டுக் கூப்பிட்டு, இப்போ எனக்குத் தொண்டை கட்டுனதுதான் மிச்சம். வெட் க்ளினிக்குக்கு ஃபோன் செஞ்சு இன்றைய நேரத்தைக் கேன்ஸல் செஞ்சு நாளைக்கு ஒன்பதே முக்காலுக்கு நேரம் வாங்கி இருக்கார் நம்ம கோபால்.

தமிழ் என்னதான் புரிச்சயும் என்றாலும் நாளைக்கு அவனுடைய இருமலுக்கும் சேர்த்து ஊசி போட்டுட்டு வரணும் என்று சொல்லிக்கிட்டு இருந்தது புரிஞ்சுருக்குமா என்ன? எஸ்கேப் ரூட் வேற என்னன்னு பார்த்து வச்சுருக்கறான் போல. ஒவ்வொரு கதவுக்குப்பக்கமும் போய்  கையால் பிராண்டுவதும், ஜன்னலில் போட்டுருக்கும் லேஸ் கர்ட்டன்களை நகத்தால் பிடிச்சுக் கீறிக் கிழிப்பதுமா போய்க்கிட்டு இருக்கு. இவன்  கிவி என்றபடியால் இங்லீஷ் ரொம்ப நல்லாத் தெரியும். அதிலும் 'நோ'  ரொம்ப நல்லாவே!  தமிழ் வீட்டுக்கு வந்தது இப்போ ஒரு நாலு வருசமாத்தான். அதிலும் முதல் ஒரு வருசம் பக்கத்து வீட்டுப் பூனைன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். அவுங்க வீட்டைக் காலி செஞ்சுட்டுப் போனபோதுதான் தெரிஞ்சது, இவன்  நமக்காக வந்தவன்னு!

காலை ஒன்பதரை வரை எப்படி சமாளிக்கப்போறோமுன்னு எனக்கு ஒரே கவலை. ஒன்பதே முக்காலுக்குத்தான் இவனுக்கான  நேரம் கிடைச்சுருக்கு.  பறவைகளுக்காக ப்ரெட் துண்டுகளைப் பிய்ச்சுக்கிட்டு இருக்கும்போது பக்கத்தில் நின்னு கவனிச்சவன் முகத்தில் ஒரு சின்ன மகிழ்ச்சி. கண்கள் வட்டமா விரிஞ்சுருக்கு! எப்படியும்  ப்ரெட் போட புழக்கடைக் கதவைத் திறப்பாங்கதானே?

கோபால் வழக்கம்போல் ஆஃபீஸுக்குக் கிளம்புனவர்,  நீங்கெல்லாம் ரெடியா இருங்க. ஒன்பதரைக்கு வந்துருவேன்னு  சொன்னார்.

சின்னச்சின்ன வேலைகளை ஆரம்பிச்சுச் செஞ்சுட்டு, நாங்க(!) ரெடி ஆனோம்.  இவனோட பிடுங்கல்கள் தாங்கமுடியாமப் போய்க்கிட்டு இருக்கும்போது சொன்ன நேரத்துக்கு  பத்து நிமிசம் முன்னாலேயே கோபால்  வந்துட்டார்.


கூடை ரெடியான்னதுக்கு  ரெடின்னார். கதவைத் திறப்பதைப்போல் கதவாண்டை போனதும் ஓடிவந்து காலடியில் நின்னவனை, ஒரே அமுக். கூண்டில் வச்சாச்சு.வெட் க்ளினிக் போய்ச் சேர்ந்தோம். ஏழு நிமிஷ ரைடுதான். அதுக்குள்ளேயே ஐயோஅம்மான்னு ஒரே அனத்தல். நமக்கு முன்னே இன்னொருத்தர் வரிசையில் இருக்காங்க. அவுங்க பூனையைப் பார்த்தால்....  அட! ஏறக்கொறைய  ரஜ்ஜு சாயல்!

பையன். பெயர்  ஜூன். சீனப்பெற்றோர்!  நம்ம ரஜ்ஜு அழகுன்னு  சொல்லி அந்தம்மா சின்ன சீனக்குரலில் கொஞ்சுனாங்க.  அவனுக்கு  டேஷ்.....  வருதாம். நமக்கு? வருசாந்திர செக்கப் & நோய்களுக்கு எதிர்ப்பான தடுப்பூசி போட்டுக்கறது.வெட்நரி  இங்கே பெரிய பிஸினஸ். பாருங்க நாங்க குளிக்க வாங்கும் Dove ஸோப்  ஒரு டாலர்தான்.  ஆனா நாய் ஸோப் 8 டாலராம்!!!!

 நம்ம முறை வந்ததும் உள்ளே கொண்டு போனோம். பீட்டர் மெக்ளீன் இருந்தார். வழக்கமா ரஜ்ஜுவின் டாக்குட்டர் இவர்தான்.  ஜெர்மனிக்காரர்.

எனக்கென்னமோ  தூக்குனப்ப   லேசா இருந்ததால்  எடை குறைஞ்சு போச்சுன்னு புலம்பினேன்.

எடை பார்த்தால்   ஏறக்கொறைய போன வருசம் இருந்ததுதான்.   போனவருசம்   4.32 கிலோ.  இன்றைக்கு 4.23 கிலோ .   நடுவில்  ஒரு 6 மாசம் முன்பு சரியாச் சாப்பிடலைன்னு கொண்டு போனப்ப இளைச்சுப் போயிருந்தான். அப்போ  3.6 கிலோ.  நல்லவேளை எடை பிக்கப் ஆகிருச்சு.

ஊசி வேலையும் முடிஞ்சு ரெக்கார்ட் புக்லே பதிவும் செஞ்சாச்சு.  இது இல்லைன்னா  கேட்டரியில் (பூனை ஹாஸ்ட்டல்)எடுக்கமாட்டாங்க.

கொஞ்சநாளா இருமிக்கிட்டு இருக்கான்னேன். தும்மலும் ஏராளம். சொன்னதும்  பீட்டர் கேட்ட முதல் கேள்வி...  கேட்டரிக்கு போயிருந்தாளா? என்பதே!  ஆமாம்னதும் எதாவது  வைரல் பிக்கப் ஆகி இருக்கும். மூக்கிலே நீர் வடியலோ,  மூக்கடைச்சுச் சளி இல்லாததால்.... மருந்து ஒன்னும் வேணாம்.  இன்னும் ரெண்டு வாரத்துக்குள்ளே தும்மல், இருமல் நிக்கலைன்னா ஆன்டிபயாடிக் கொடுக்கலாம். பார்த்துட்டு ஃபோன் பண்ணுங்கன்னார்.

பல்லு வேலை கொஞ்சம் இருக்காம்.  ரெண்டு பல்லில் ஓட்டை விழுந்துருக்கு. கொஞ்சம் பல் ஈறு சரி செய்யணுமாம்.  காலையில் அட்மிட் செஞ்சு மாலையில் டிஸ்சார்ஜ் செஞ்சுருவோம் என்றார்.  அடுத்த மாசம் ஒரு நாள் அதுக்கான  நேரம் வாங்கிக்கணும்.
அடுத்த மாசம் பிடிச்சுக் கூண்டில் அடைப்பதைப் பற்றி இப்போதிருந்தே என் விசாரம் தொடங்கி இருக்கு. இந்த  மூணு வருசத்துலே இப்படிப் படுத்துனது இது முதல்முறை.  ஒருவேளை கேட்டரியில் மற்ற பூனைகளிடம் இருந்து  பேச்சுவாக்கில் கத்துக்கிட்டானோ?  பொதுவா..... வீட்டு வளர்ப்புலே இருந்து பள்ளிக்கூடமுன்னு போக ஆரம்பிச்சப்புறம்தானே புள்ளைங்கஎல்லாத்தையும் கத்துக்கிட்டு வருது, இல்லையோ!

வீட்டுக்கு வந்ததும்  முன்வாசலில் வச்சே கூண்டைத் திறந்தவுடன்....  வீரநடையில் அங்குமிங்கும் நாலடி எடுத்து வச்சவன், சட்னு  வேலி தாண்டி அடுத்த வீட்டுக்குள் குதிச்சு, நீ யாரோ நான் யாரோன்னு போனான்.


போயிட்டுப் போகுதுன்னு  இருந்தேன். பத்தேகால்தானே.  அப்புறம் வருவான்.
சமையலை முடிச்சுட்டுக் கொஞ்சநேரம் வெயில் காய்ஞ்சுக்கிட்டு இருந்தேன். பதினொன்னரை மணி.  மெள்ள எட்டிப் பார்த்தான். கேட் டோரை தலையால் முட்டிப் பார்த்தான்.  அட!  என்ன மேஜிக்!  திறக்குதே!!!!

உள்ளே வந்து  மிட்மார்னிங் ஸ்நாக்ஸ் ஆச்சு.  வீட்டுக்குள் இருந்த எல்லா அறைகளுக்கும்  போய்ப் பார்த்தான். கதவுகள் எல்லாம் திறந்து இருக்கு. இந்த வழியாப்போய் அந்த வழின்னு கொஞ்ச நேரம் விளையாட்டு. எல்லாம் இப்ப சரியா இருக்கே.....  காலையில் அப்படி இல்லையே.....

எப்படியும் இவளை நம்பக்கூடாதுன்றது போல ஒரு பார்வை! தோட்டத்துக்குள் போயிட்டான். வரும்போது வரட்டுமுன்னு விட்டுட்டேன்:-)

பூனைகளைப் பற்றிய சில சுவையான சமாச்சாரங்கள்:

1. செல்லப்பூனைகள் நம்ம மடியில் ஏறி மிதிமிதின்னு மிதிப்பது  அவங்களோட வியர்வை மணத்தை நம்மேல் பதிச்சு  நாம் அவுங்களுக்கு உரியவர்கள் என்று  உரைப்பிக்கத்தான்.  பூனைகளுக்கு வியர்வை சுரப்பியில் இருந்து வரும் வியர்வைக்கு வாசல் அவற்றின் பாதங்கள்தானாம்!

2. மனிதரை விட  முகர்வுத்திறன் 14 மடங்கு அதிகம் பூனைகளுக்கு!

3. பூனைகளின் மூக்கில் இருக்கும் ரேகைகள், மனிதரின் கட்டை விரல் ரேகைகளைப்போல். ஒவ்வொன்னும் தனிப்பட்ட வகையில்!

4. பூனைகளின் இதயத்துடிப்பின் வேகம் மனிதர்களுக்குள்ளதைப்போல்  ரெண்டு மடங்கு! நிமிடத்துக்கு  110 முதல் 140 வரை....

5. நடக்கும்போது  ஒரே சமயம்  ரெண்டு இடது கால்களையும்  அப்புறம் அடுத்த அடிக்கு ரெண்டு வலது கால்களையும்  எடுத்து வச்சு நடக்கும் மிருகங்கள் மூன்றே மூன்று வகை மட்டுமே.   ஒட்டகம், ஒட்டைச்சிவிங்கி அப்புறம் பூனை!

6.  பூனைக்குட்டிகளின் குழுவுக்குப்பெயர் கிண்டில்.(Kindle)

7. பூனைக்காதுகளில் ஒவ்வொன்றுக்கும்  32  muscles!

8.  பூனைகள் சிலசமயம் புல்லைக் கடிச்சுத் தின்பது...   தன் உடம்பை நக்கிச் சுத்தம் செய்யும்போது வயிற்றில்  சேர்ந்துருக்கும்   ரோமத்தை  வெளியேற்றவாம். (நாட்டு மருந்து!)

9. குட்டிகள் பிறந்து, முதல் மூணு வாரத்துக்குள் 26 பால்பற்கள் முளைச்சுருமாம்.  அப்புறம் ஆறு மாசத்தில்  30 நிரந்தரப்பற்கள்  முளைச்சு வருதாம்.

10.  பூனைப்பிரியர்களைக் குறிக்கும் சொல்...  Ailurophile
27 comments:

said...

இனி பாத்துப் பேசுங்க:).

பூனைகள் குறித்த தகவல்கள் சுவாரஸ்யம்.

said...

இன்னும் கொஞ்ச நாள்ல ஹிந்தியும் கத்துக்குவானோ என்னவோ!! எதுக்கும் 'க'னா பாஷையை அண்ணனுக்குப் பழக்கி விட்ருங்க :-)

said...

பூனைகள், அன்பை நாய்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு புரிந்து reciprocate செய்யுமா?

said...

ரொம்ப ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம். நிஜமாவே பேசறதைப் புரிஞ்சுதான் ஓடிடறானா?

said...

32 muscles...! அதனால் தான் பூனைக் காது என்று சொல்கிறார்களோ...? சுவாரஸ்யமான தகவல்கள் அம்மா...

said...


பூனைகள் பற்றிப் பல விஷயங்கள். நாய்கள் வளர்ப்பொரிடம் விசுவாசமாய் இருக்கும். பூனைகள் இருக்கும் இடத்துக்கு விசுவாசமாய் இருக்கும் குழந்தைகள் பேசும் சப்தங்களுக்கு தாய்மார்கள் பொருள் கொள்வதைப்போல பூனையின் நடவடிக்கைகளுக்கு அர்த்தம் கொள்கிறீர்களோ.?

said...

//அவுங்க வீட்டைக் காலி செஞ்சுட்டுப் போனபோதுதான் தெரிஞ்சது, இவன் நமக்காக வந்தவன்னு!//

உண்மை டீச்சர்.. ”நமக்காக வந்தவன்”
மனித உறவுகளும் அப்படியே தான்.. நாம தான் தாமதமாப் புரிஞ்சிக்கிறோம்

அருணகிரியார் மயில் விருத்தம், சேவல் விருத்தம் பாடுனாரு
நீங்க பூனை விருத்தம் பாடி இருக்கீங்க:)
அழகான ரஜ்ஜூவுக்கு ஆனந்தமயமான வாழ்த்துக்கள்...

//நடக்கும்போது ஒரே சமயம் ரெண்டு இடது கால்களையும் அப்புறம் அடுத்த அடிக்கு ரெண்டு வலது கால்களையும் எடுத்து வச்சு நடக்கும்// is new to me.. wow.. marching soldiers, amazing!

said...

பூனைகள் பற்றி நிறைய அறிந்து கொள்ள முடிந்தது! அந்த கருப்பு பூனை செமை அழகு!

said...

ஸ்வாரசியம்......

said...

Ailurophileநாமதான் :) MIYAAV MIYAAV

...அக்கா அவனுக்கு தமிழ் புரிஞ்சிருக்கு ,ஜெஸியும் இப்படிதான்கா
அக்டோபர் வாக்ஸின் போடணும் கூடைய பாத்தா ஓடிடுவா .போன தடவை பயத்தில் உச்சா போயிட்டா :) அத அந்த டாக்டரே டவல் வச்சி துடைச்சாங்க !!
நகம் வெட்ட 17 £ இன்க்ளூடிங் VAT !

said...

எப்படியோ திரும்பி வந்துட்டான் இல்லையா துளசி.
ஹிந்தியிலயே பேசுங்கோ.இல்லட்ட மலையாளம் இருக்கவே இருக்கு:;)
நிஜமாவே ராஜ நடைதான்.

said...

Arumai,Appo neenga oru Aurophile ah??Enga appa solluvanga manithargala vida mirugangal better nu.

said...

கபூ, கனை கக் ககு கத் கதெ கரி கயா கம கல் கபே கசு கங் கக. இல்லைனா இய்னந்த பாய்னஷையிலே பேய்னேசிப் பாய்னருங்க/

said...

வாங்க ராமலக்ஷ்மி.

பார்த்துப்பார்த்துப் பேசிப்பேசி...வரவர யாருக்குத்தான் பயப்படணுமுன்னு விவஸ்தை இல்லாமப் போச்சுப்பா:-)

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஹிந்தி கூடப் புரியுதுப்பா. பேச்சுவாக்கில் நேத்துச் சலோன்னு உங்க அண்ணனிடம் சொல்லிக்கிட்டு இருக்கேன். கட்டிலில் காலடியில் கிடந்தவன் சட்னு எழுந்து கதவுகிட்டே போறான்:-)

கோபால் க னா கத்துக்கிறதுக்குள்ளே இவன் கத்துக்கிட்டு கானாப் பாட்டே பாடிருவான். ரொம்ப ஷ்ரூடு.

said...

வாங்க சசி கலா.

உண்மையைச் சொன்னால் பூனைகள் நாயைவிட அன்பு காமிக்கும். ஆனால் நம்மூரில்தான் பூனைக்குத் திருட்டுப் பட்டம் கட்டிவிட்டுருக்கோமே! பூனை பாலைத் திருடிக் குடிக்கும்:-(

said...

வாங்க ஸ்ரீராம்.

ஆமாங்க. அப்படித்தான் தெரியுது!!!! திருப்பிப் பேசத் தெரியலை. நம்ம பழைய பூனை ஒன்னு ஸ்பஷ்டமா அம்மா ன்னு சொல்லும். மியாவ் அம்மாச் சொல்லுன்னதும் அம்மா ன்னும். டேப் பண்ணி வச்சுருக்கேன். டைட்டிலே மியாவ் அம்மாச் சொல்லு! தேடணும்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசித்து வாசித்தமைக்கு நன்றீஸ்.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

கொஞ்சநாள் கூடவே இருந்தால் இன் அண்ட் அவுட் புரிஞ்சுருது பாருங்க:-)

வருகைக்கு நன்றி.

said...

வாங்க கே ஆர் எஸ்.

இவன் எங்கிருந்தோ வந்தான் என்பது இன்னொரு உண்மை. எர்த்க்வேக் விக்டிம்:-( எந்த வீடோ..... நல்லவங்களாத்தான் இருக்கணும். இவனை பிக்ஸ் செஞ்சுருக்காங்க. அப்படியே ச்சிப் வச்சுருந்தால் கண்டு பிடிக்க முடிஞ்சுருக்கும்.

மனசுலே வீட்டைப் பிரிஞ்ச துன்பம் இருக்குமோன்னு நினைக்கும்போதே.... எனக்குப் பாவமா இருக்கும்.ப்ச்.....

said...

வாங்க சுரேஷ்.

அந்தக் கருப்பு நம்மோட கற்பகம். கப்புன்னு கூப்பிடுவோம். 15 வருசம் நம்மோடு இருந்து, லிவர் பெருசாகி, சாமிகிட்டே போயிருச்சு:-(

ரொம்ப உயர்தர குணங்கள் கொண்டது. ஹிந்தியில் சொன்னால் அவள் 'காந்தானி'!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஆஹா.... நன்றி.

said...

வாங்க ஏஞ்சலீன்.

நம்ம கோபால்கிருஷ்ணனும் (கோகி) இப்படித்தான். சரியான பயந்தாங்கொள்ளீ. கூடையில் வச்சதும் ஒன் போயிருவான். சரின்னு வேற பேப்பரை மாத்தி உள்ளே எடுத்து வச்சதும் இன்னொரு முறை ஒன். இங்கேயும் வெட்கள் எல்லாம் நல்லவங்க. ஒரு முறை பல் சுத்தம் செய்யக்கொண்டு போனப்ப எப்பப் பார்த்தாலும் என்ன 1? இப்பப் பாரு 2 ன்னுட்டான்:-) அவுங்களேதான் பொறுமையா சுத்தம் செஞ்சாங்க.

முடி வெட்டிக்க முதல் முறை 70 $. கோபால்தான் சொல்லிக்கிட்டே இருந்தார்.... என்னை மட்டும் பத்துடாலர் கடைக்குப் போகசொல்றே... இவனுக்கு மட்டும் ராஜமரியாதையான்னு. அப்புறம் அங்கேயும் விலைவாசி அதிகமாகி கடைசி முறை 95 வாங்கிட்டாங்க.

செல்லங்களே காஸ்ட்லிதான்!

ஆமாம்... ஊருக்குப்போகும்போது ஜெஸ்ஸியை எங்கே விட்டுட்டுப்போறீங்க? கேட்டரியிலா?

said...

வாங்க வல்லி.

பகல் ரெண்டேகாலுக்கு வந்தான்ப்பா.

எது பேசுனாலும் இனி தகராறுதான் போல. இப்ப ஹிந்தியும் தெரியுதே!

said...

வாங்க சரவணன் ராம்.

உண்மைதான். அன்கண்டிஷனல் லவ் இவுங்கதான் தருவாங்க. நம்ம பொருளாதாரம், அழகு, இனம், அது இதுன்னு எதையுமே பொருட்படுத்தாமல் அன்பு காட்டும் உயிர்கள்!

said...

வாங்க கீதா.

க னாவையும் ஐனாவையும் கோபாலுக்குப் புரியவச்சுச் சொல்லித்தர்றதைப் பார்த்தால் அவருக்கு முன்னே இவனே கத்துக்குவான்:-)

said...


துளசிதரன் : அருமையா சுவாரஸ்யமா எழுதியிருக்கின்றீர்கள் தங்களின் செல்லத்தைப் பற்றி...

கீதா : அட ரஜ்ஜு ஸோஓஓஓ ஸ்வீட்....அவனுக்கு மொழி புரியுதோ இல்லையோ நம்ம டோன் நல்லாவே புரியும் இந்த செல்லங்களுக்கு அது நாய்செல்லமாக இருந்தாலும்...அதான் டபாய்க்க முயற்சி......மகன் பூனை நாய் ஸ்பெஷலிஸ்ட் குறிப்பாக பூனை கிளினிக்லதான் வேலை செய்யறான்...ஸோ இந்தப் பதிவ அவன படிக்கச் சொன்னேன் ஃபோட்டோஸ் காமிச்சேன்....ரொம்ப ரசிச்சான்....நானும் ரொம்பவே ரசிச்சு சிரிச்சேன் ரஜ்ஜுவைப் பத்தி நீங்க விவரிச்சத வாசிச்சு...

கீதா...