Monday, June 08, 2015

உள்ளூர் ப்ரெட் மாவு, நம்ம சப்பாத்திக்கு சரி வரலையாமே:( (தலைநகரத்தில் ! பகுதி 7)

நாலாவது தளத்தை விட்டு வெளியில் வரும்போதே  20 ஆம் நூற்றாண்டில்  சொர்கத்தில் ஒரு துண்டுன்னு  பார்த்துட்டு அங்கே நுழைஞ்சுட்டோம். சொந்த நாட்டையும், ஊரையும் உறவினர்களையும் விட்டுட்டு, இதுவரை கண்டோ, கேட்டோ அறியாத புது இடத்துக்குப் போக மூட்டை முடிச்சுக் கட்டுனவங்களின் மனநிலையை உணரமுடிஞ்சது. ஒரு முப்பத்திமூணு வருசங்களுக்கு முன்னே இதே நிலையில் நாங்களும் இருந்துருக்கோமே!




பொக்கிஷமா தாங்கள் நினைப்பதைக் கொண்டு வந்துருக்காங்க.

(நமக்கேது பொக்கிஷம்?  கொஞ்சூண்டு சமையல் பாத்திரங்கள், ஒரு ஏழெட்டு செட் துணிமணி...  மணின்னும் சொல்லமுடியாது.  அப்போ ஃபாரின் எக்ஸ்சேஞ்சு ரொம்பவே  கடுமை.  கோபாலுக்கு 20, எனக்கு 21 என்ற கணக்கில்  இந்திய அரசாங்கம் நமக்கு  யு.எஸ். டாலர் கொடுத்துச்சு:(  பொம்நாட்டி என்பதால்  எனக்கு  கூடுதல் செலவுக்கு ஒரு டாலர் எக்ஸ்ட்ரா!)


இந்தியாவில்   குஜராத்  மாநிலத்தில் இருந்து  முதலாம் உலகப்போர் முடிஞ்ச பிறகு  சில ஆண்கள் கப்பலில் வந்துருக்காங்க.   பலவருசங்கள் இங்கேயே இருந்து  கிடைச்ச வேலைகளைச் செஞ்சு  செட்டிலானபிறகு,  ஊரில் இருந்த  குடும்பத்தை ஒரு  சிலரே  கூட்டி வந்துருக்காங்க.  அப்படி வந்தவர்களும் வடக்குத்தீவில்தான் இருந்தாங்க. காய்கறிகள் பயிரிட்டுச்  சின்ன முறையில் விவசாயம்.  காய்கறிக் கடைகள் வச்சு வித்துக்கிட்டும் இருந்துருக்காங்க.  

பெண்கள் வருமுன்  எல்லா ஆண்களும் ஒரே வீட்டில். ஆளாளுக்கு முறைபோட்டுக்கிட்டு  சமையல் இப்படி. ஒரு காக்கா( மாமா, சித்தப்பா) சமையல் செய்யும்போது மட்டும் சப்பாத்திகள் ஒரே அளவில் வட்டவடிவமா அழகா இருக்குமாம். ஒரு நாள் ரகசியத்தைக் கண்டுபிடிச்சுட்டேன். கோணல்மாணலா பரத்தும் சப்பாத்தியை, பாத்திரத்தின் மூடி வச்சு அமுக்கி அழகா வெட்டிடுவார்.   நான் சொல்வேன் பாருங்க  ரமண் பையான்னு அவர் சொன்னது இது.  அவரும் அவருடைய அப்பாவும் மட்டும்  ஃபிஜி போகக் கப்பல் ஏறுனவங்க, தவறுதலா  நியூஸி வந்துட்டாங்களாம்!


நியூஸிலேண்ட் குஜராத்திகளைப் பற்றி  அவுங்க கம்யூனிட்டி ஒரு புத்தகம் போட்டுருக்காங்க. நானும் ரமண் பையா வீட்டிலிருந்து கொண்டு வந்து படிச்சேன். ஆரம்பகாலத்துலே ரொம்பவும்தான் கஷ்டப்பட்டு இருக்காங்க.


1948 லே இங்கே வந்த ருக்ஸ்மணி  பென் கஸன் ஜி,  நியூஸியில் கிடைக்கும் மாவு,  சப்பாத்தி செய்ய லாயக்கில்லைன்னு வரும்போதே மாவு திரிக்கும் திருகைக்கல்லைக் கையோடு கொண்டு வந்துருக்காங்க. கப்பல் பயணம் என்பதால் எடை ஒன்னும் பிரச்சனையா இருந்துருக்காது!  புது மாப்பிள்ளை சொல்லி இருப்பார் போல!  "நீ வந்துதாம்மா  எனக்கு நல்ல ரொட்டியாச் சுட்டுப்போடணும்"


மெல்லிசான பூரிக்கட்டை,  மாவைச் சலிக்க சல்லடை,  சுக்காச் சப்பாத்தி செய்ய  துளையுள்ள தட்டு (ஜாரணி) இப்படி!  இது அந்தக் காலத்துலே உள்ளூர் வெள்ளையர்களுக்கு அதிசயமாத்தான் இருந்துருக்கும்!



மதங்களைப் பொறுத்தவரை மக்கள்ஸ் தங்களுடைய சொந்த மதப்பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்க தடைகள் ஒன்னும் இல்லை. கல்வியும் எல்லோருக்கும் பொதுவானதே!  மருத்துவ வசதிகளும் எல்லோருக்கும் பொது. மனிதர்கள் எல்லாம் ஒன்னுபோல என்பதில்  ஆரம்பத்தில் இருந்தே கவனமாகத்தான் இருந்துருக்காங்க.


குழந்தை பிறப்பும் அதன் வளர்ப்பும்  ஆரம்பகாலங்களில் இருந்தே அதிகமாக் கவனம் பெற்றது இங்கே!  இப்பவும்தான்  ஏழு நட்சத்திர ஹொட்டேல் வசதிகளுடன் பிள்ளைப்பேறுக்கான  மருத்துமனை  எங்கூரில்  செயல்படுது. ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக் கவனிப்பு!

என்ன ஒன்னு .....  ப்ரிட்டிஷ் பாஸ்போர்ட் வச்சுருந்தால்தான்  இங்கே  குடியேற முடியும்!  அப்ப எப்படி இந்தியர்கள்?  அவுங்களுக்குத்தான் அப்பெல்லாம் ப்ரிட்டிஷ் இண்டியா பாஸ்போர்ட் இருந்துச்சே.

அதுக்கப்புறம் இன்னொரு செட் குஜராத்திகள்  வந்தது இடி அமீன் காலத்துலே   உகாண்டாவிலிருந்து  துரத்தப்பட்டு  ப்ரிட்டனில் போய்ச் சேர்ந்தவர்கள். அவுங்களும் ப்ரிட்டிஷ் பாஸ்போர்ட் வச்சிருந்த மக்கள்ஸ் என்பதால்  அங்கிருந்து இங்கே வந்து சேர்ந்தாங்க.

நடந்த  சம்பவங்களை   டைரியில்  ரொம்பவே விஸ்தாரமா எழுதி  வைக்கும் பழக்கம் அப்போவே   நிறையபேருக்கு இருந்ததால்  நமக்கும் முக்கிய சரித்திரக் குறிப்புகள் கிடைச்சிருக்கு. பதிவர்கள்!


என்ன நீட்டா எழுதி வச்சுருக்கார் பாருங்க!

தொழில்கட்சி ஆட்சிக்கு வந்தபின் தான்  இந்த கெடுபிடிகளைத் தளர்த்தி மற்ற நாடுகளில் இருந்து மக்கள் வர ஆரம்பிச்சாங்க.  ஆரம்பத்தில்  இங்கே வேலை கிடைச்சதால்  வந்தவங்க  என்று மட்டும்  அனுமதி  இருந்தது.   அவுங்களும்  வந்தவுடனே  வேலையில் சேர்ந்து சம்பாரிப்பதோடு, வரிகளும் கட்டுவாங்க.  அதனால்  அரசு  கஷ்டப்படவேண்டாம் என்று இருந்த  நிலைமையை மாத்தி அமைச்சு, பாய்ண்ட் சிஸ்ட்டம் கொண்டு வந்து  இத்தனை பாய்ண்ட் இருந்தால் இங்கே வந்து வேலை தேடலாம்  என்றாகி இருக்கு.


இதைத்தவிர  சமீபகாலமாக்  கல்வி வியாபாரம் ஒன்னும் ஜரூரா நடக்குது. 
இங்லீஷ் படிக்க வர்றோமுன்னு  ஒரு பெரிய கூட்டம்,  மற்றபடி சமையல் கத்துக்க வர்றோமுன்னு ஒரு கூட்டம்  இப்படி  இந்தியாவில் இருந்துதான்  அதுவும்  குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் இருந்து  அதிக அளவில் மக்கள்ஸ் வர்றாங்க.  இந்தியாவில் ஏஜண்டுகள்  பலநகரங்களில்  இதுக்குன்னே   இருப்பதை  நாங்களே சண்டிகரில் இருந்தப்பப் பார்த்துருக்கோம். யூகே, கானடா, ஆஸ்ட்ராலியா, நியூஸிலாண்ட் இங்கே போய் கல்வி கற்கணுமா?  வேலை செய்ஞ்சுக்கிட்டே படிக்கலாம் என்றெல்லாம் கவர்ச்சியா  விளம்பரம் செஞ்சுருக்காங்க.


 பாஸ்போர்ட்டுன்னே ஒரு பகுதியில்  நிறைய சமாச்சாரங்களைக் காட்சிப்படுத்தி இருக்காங்க. இது  இல்லாமல்  நிறைய நாடுகளில் இருந்து  அரசியல் காரணங்களுக்காக,  அகதி நிலையில்  இங்கே தஞ்சம் அடைந்தவர்களும் ஏராளமாக இருக்காங்க.

அகதிகள் சொன்ன 'கதைகள்'  ஒரு ஹாலில்  படத்தொகுப்புகளா வச்சுருந்தாங்க.


அக்கம்பக்கத்துத் தீவுகளில் இருந்தும் மக்கள்ஸ்  குடியேறுவதும்  ஆரம்பகாலத்தில் இருந்தே ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வருசாவருசம் அனுமதிக்கிறாங்க. இந்த தீவு மக்களின் கலை கலாச்சாரம், அணிமணி வகைகள்  என்று  இருக்கும்  காட்சிப்பகுதியும் பார்க்க நல்லாவே இருக்கு!
தேங்காய் நார் உடைகள்.   தென்னை ஓலையில் பின்னிய  நடன உடைகள் எல்லாம் பார்க்கவே வியப்புதான்!  ஓலை ப்ரா நல்லாத்தான் இருக்கு!


பஸிஃபிக்  தீவு மக்களுக்குத் தென்னைதான் பெரும் செல்வம். அதனால் முழுத் தென்னைகளையே வாசலில் நிறுத்திய ஒரு கூடம்,  நமக்கு தீவு மக்களின் இசைக்கருவிகளை (எல்லாம் மரத்தால் ஆன  ட்ரம் வகைகள்தான்)  வாசிச்சுப் பார்க்கலாம். வாழ்க்கை முறைகளைச்  சொல்லும்  படக்குறிப்புகள் ,  கணினி மூலமும் பார்த்துத் தெரிஞ்சுக்கும் வகையில் சில பல சிடிக்கள்  இப்படி வச்சுருக்காங்க.



டெ பாபாவுக்கு வெளியில் இருந்த  கார்பார்க்கில் சண்டே வெஜிடபிள் மார்கெட் நடந்துக்கிட்டு இருக்கு.  மதியம் மூணு மணியுடன்  மார்கெட் முடிஞ்சுரும். வெளியே போய்ப் பார்க்க ஆசை இருந்தாலும்....   போகலை. இங்கேயே இன்னும் ஏராளமானவைகளைப் பார்க்கணுமே!

 சாப்பிடப்போன இடத்தில் கோபாலுக்கு ஒரு  வெஜி ஸாண்ட்விச், எனக்கு ஒரு குக்கி,  ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கிக்கிட்டு, ஒரு  ஃபிங்கர் சிப்ஸ்க்கு சொல்லி வந்து சாப்பிட ஆரம்பிச்சோம். வேறென்னவோ இருக்குதுன்னாலும் அவையெல்லாம் எனக்கானதில்லை!


திரும்பி  அஞ்சாவது மாடிக்குப்போகும் போது  ரெண்டாவது  தளத்தில் இருக்கும் வரவேற்பில் போய்  ' டாமில் பெல்  (தமிழ்மணி ) எங்கே இருக்கு'ன்னு விசாரிச்சேன்.

ஒரு விநாடி யோசிச்சவங்க....  'அதை எப்பவாவதுதான் டிஸ்ப்ளே யில் வைப்பாங்க.  மற்ற சமயங்களில் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு போயிருவாங்க.  இந்தக் கட்டிடத்துக்குள்ளேயே  இப்ப இல்லை 'னு சொன்னாங்க. நம்ம கிவியனும்  தமிழ் மணியைக் கட்டாயம் பாருங்கன்னு சொல்லி இருந்தார். நமக்கு அதிர்ஷ்டம் இல்லை பாருங்க:(

ஒரு பத்து வருசத்துக்கு முன்னே  வைட்டாங்கி ஒப்பந்தம் பற்றி துளசிதளத்தில் ஒரு பதிவு போட்டுருந்தபோது  அதுக்கு வந்த பின்னூட்டம் ஒன்னு இந்த மணியைப் பற்றி இருக்கு.  ரொம்பப் பெரியதா இருப்பதால் இங்கே காப்பி செஞ்சு போடலை.  ஆர்வம் இருப்பவர்கள்  இந்தச் சுட்டியில் இருக்கும் பின்னூட்டம் பாருங்க.


எனக்கு  இந்த மணியைப் பற்றிய விவரம் ஒன்னும் கிடைக்கதாதால் நான் ஒன்னும் சொல்வதற்கில்லை!

 வாங்க  அஞ்சுக்குப் போகலாம்....

தொடரும்..........:-)



16 comments:

said...

படங்கள் பார்க்கவே வியப்பு மேலிடுகிறது அம்மா...

சரித்திரக் குறிப்புகள் - அந்தக் காலத்தில் blogspot இல்லையோ...?

said...

அதென்ன ரவுண்டா இருந்தா தான் சப்பாத்தியா? எனக்கு அதெல்லாம் பார்க்க தோனாது.பசி என்று வரும் போது பறந்து போவதில் இது பதினினொன்றாவது. :-)

said...

சூப்பர் சரித்திரக் குறிப்புகள்,,,,,அருமையான விளக்கங்ங்கள் வழக்க்ம் போல ..ம்ம்ம் எப்படித்தான் இப்படி அழகா நினைவு வைச்சுக்கிட்டு எழுதறீங்களோ. குடோஸ்...

சரிதானே ப்ரெட் ஃப்ளோர் வித்யாசமாச்சே அது மைதா வித் சோடா உப்பு, பேக்கிங்க் பௌடரோட வருமில்லையோ...அங்க எல்லாம்...அதனாலதான் சப்பாத்தி வராதா இருக்கலாம்...

டாமில் பெல் பத்தி அறிய இந்த விக்கி லிங்க் பாருங்க.....http://en.wikipedia.org/wiki/Tamil_bell

கொஞ்சம் வேலைப் பளு இருவருக்கும் அதனால் தான் வர இயலவில்லை இதோ உங்கல் பழைய மிஸ் ஆன இடுகைகளையும் பார்த்துடறோம்...ஒவ்வொண்ணா....

said...

நீங்கள் சொல்லிப் போகும் விஷயங்களை நினைவில்வைத்துக் கொள்வதே சிரமம். இருந்தாலும் உங்களுக்கு யானை மெமொரி.

said...

எத்தனை தகவல்கள்.....

அனைத்தையும் உங்கள் தளத்தின் மூலம் தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி.

திருகை..... அட அந்தக் காலத்தில் இங்கிருந்து எடுத்துப் போனாங்களா!

said...

தகவல் ,படங்கள் எல்லாம் அருமை ...
இங்கே leicester என்று ஒரு சிட்டி முழுதும் உகாண்டா குஜராத்திகள் ஏரியா ...40 ,50 ஆண்டுகள் ஆனலும் இன்னும் ஆங்கிலம் தெரியாத முதல் ஜெனரேஷன் இன்னும் இருக்காங்க ..அவர்களின் பேரபிள்ளைகள் சப்பாத்தியா ..நோ என்று அலறுகிறார்கள் :)

said...

ஊரு விட்டு ஊரு வந்துங்குறதே பெரிய வேலை. இதுல நாடு விட்டு நாடு வந்துன்னா.. அப்பப்பா.. அதுவும் தகவல் தொடர்புகள் வளராத அந்தக் காலத்துல எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க. ஒரு கடிதம் போட்டா வர ஒரு மாசம் ஆகும். அதையெல்லாம் ஏத்துக்கிட்டு கஷ்டப்பட்டு இந்த இடம் பெயரல்கள் நடந்திருக்கு. எல்லாரும் வாழ்க.

அதென்ன டீச்சர் ஒரேயொரு குக்கி? அங்க ஒரு பஜ்ஜி கடை போட்டா நல்லாப் போகுமா? banana frittersனு பேர்ல பஜ்ஜி வித்தா அவங்க வாங்கித் திங்க மாட்டாங்களா?

said...

வாங்க யாதவன் நம்பி.

குழலிசைக்கு இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ப்ளொக் ஸ்பாட்டைத்தான் இப்பக் குற்றம் சொல்லணும்? ஏன் இவ்ளோநாள்(???) எடுத்துக்கிட்டாங்களாம்?

said...

வாங்க குமார்.

ஆஹா.... அப்ப நீங்கள் வரவேண்டிய இடம் துளசிதளத்தின் ஹெட் ஆஃபீஸுக்குத்தான். உலகப்படம்தான் உங்களுக்கான சப்பாத்தி:-)

said...

வாங்க துளசிதரன்.
டாமில் பெல் சுட்டிக்கு நன்றி.
நீங்க சொல்லும் மைதா+ பேக்கிங் பவுடர் மாவுக்கு இங்கே ஸெல்ஃப் ரெய்ஸிங் ஃப்லொர்ன்னு பெயர். கேக், பிஸ்கெட் வகைக்குச் சரியா இருந்தாலும், இதுலே நம்ம பட்டூரா அட்டகாசமா வருது:-)
ப்ரெட்மாவுன்னு தனியா இல்லை. உள்ளூர் கோதுமை மாவு கிடைக்கும். கொஞ்சூண்டு லேசா கோர்ஸா இருக்கும். இதுலே ஈஸ்ட் கலந்துக்கணும் ப்ரெட் செய்ய. நாங்க வந்த புதுசுலே எல்லாம் இதே மாவைத்தான் கொஞ்சம் சல்லடையால் சலிச்சுட்டு, சப்பாத்தி செய்வோம். அப்புறம் இங்கே மாவு மில்லில் வேலைக்குச் சேர்ந்த மகராஷ்ட்ராக்காரர் தனியா சப்பாத்தி ஆட்டான்னு ஒன்னு தயாரிக்க ஏற்பாடு செஞ்சார் அவர் வேலை செய்யும் மில்லில். அங்கே 20 கிலோ மாவுதான் விப்பாங்க. வேற வழி இல்லாமாதை வாங்கி வச்சுக்கிட்டு ஒரு வருசத்துக்கு சப்பாத்திதான்:-) இங்கே புழுபூச்சிகள் வராது என்பதால் அதுபாட்டுக்குக் கிடக்கும்!
இப்ப சிலவருசங்களா புதுசா ஆரம்பிச்ச இண்டியன் ஸ்டோர்கள் புண்ணியம் கட்டிக்கிட்டாங்க. சக்கி கி ஆட்டான்னு அஞ்சு கிலோ பொதிகள் கூட கிடைக்குது:-))))) அதுவும் வெவ்வேற ப்ராண்டுகள்!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

எப்பவாவது யாருக்காவது பயன்படலாம் என்றுதான் கொஞ்சம் விஸ்தாரமா எழுதி வைக்கிறேன். ஆனால் யானைக்கும் இப்ப வயசாகுது பாருங்க..... மெமரி முன்பு போல் இல்லை:(

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அதிசயப் பொருட்கள் வரிசையில், நம்ம வீட்டில் தென்னந்துடைப்பம், முறம், சாந்தா வெட் க்ரைண்டர் , அருவாள்மணை, பல்லாங்குழி, தாயக்கட்டை, பரமபதம் எல்லாம் வச்சுருக்கேன். தெற்குத்தீவில் நம்மிடம் மட்டுமே உள்ளவை. எல்லாம் இங்கே வந்து 28 வருசங்களாச்சு.

இப்ப சமீபத்துலே நாலைஞ்சு வருசமா ஒரு தோழி வீட்டில் டேபிள்டாப் வெட் க்ரைண்டர் கொண்டுவந்து பயன்படுத்தறாங்க.

said...

வாங்க ஏஞ்சலீன்.

இங்கே உள்ளவர்கள், இந்தியாவில் இருந்து கல்யாணம் செஞ்சுக்கிட்டு வந்த மணப்பெண்கள், கிவி ஆக்ஸென்டோடு பேசுவாங்க. எல்லாம் இங்கே வந்து இங்லீஷ் வகுப்பில் சேர்ந்து படிச்சதால். க்ளீன் ஸ்லேட்டா வர்றதால் ஏற்பட்ட நன்மை!

ஏற்கெனவே ஆங்கிலம் தெரிந்த நமக்குத்தான், சட்னு கிவி ஆக்ஸென்டு வர்றது கஷ்டம்.

இங்கே குஜ்ஜுப் பிள்ளைகள் நல்லாவே சப்பாத்தி செய்யறாங்க. நோ நோ இல்லை:-))))

said...

வாங்க ஜிரா.

உண்மைதான். அதுவும் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் புலம்பெயர்ந்ததால்.... கடிதம் எழுத விலாசம் சொல்லக்கூடத் தெரியாமல் போன மக்கள்தான் ஃபிஜி இந்தியர்களின் முன்னோர்கள். இந்தியாவோடுள்ள தொடர்பு போயே போச்:(

குக்கி பெரிய குக்கிதான்.
பஜ்ஜிக்கடைக்கு நோ நோ தான். எண்ணெய் சமாச்சாரம் இல்லையோ?

இப்படிச் சொல்லிக்கிட்டு, ஃபிஷ் அண்ட் சிப்ஸ் கடைகள் எல்லா ஏரியாவிலும் பரவலா இருக்கு!

said...

Super but mutual padatha end Venkiji en iru mathiru look vidaraar.Unga ezhuthu nadai RoMBA etharthama iruku.