Monday, March 23, 2015

ஏம்ப்பா.... எதுக்காக பதிவு எழுதறீங்க? காசு சம்பாரிக்கவா?

நமக்குத் தெரிஞ்ச நாலு நல்ல விஷயங்களையோ, கெட்ட விஷயங்களையோ நம்ம மக்களுக்குச் சொல்லிக்கணும் என்பதால் தானே?

இல்லை ....இதுலே வரும் வருமானம்தான் பொழைப்பு நடத்தன்னு நினைக்கிறீங்களா?

பதிவுகளின் தலைப்பு நம்மை இழுக்குதுன்னு உள்ளே போறோம். அடுத்த விநாடி அதைப் பார்க்கக்கூட விடாம பக்கம் பூராவும் ரொப்பி விளம்பரம் வந்து கொட்டுது.

நீங்க கஷ்டப்பட்டு (!!!!) எழுதுன பதிவை நாங்க பார்க்கணும் என்ற எண்ணம் துளிகூட இல்லையா உங்களுக்கு?

இன்னிக்குப் பொழுது விடிஞ்சதும்  ப்ரேக்ஃபாஸ்ட்க்கு தமிழ்மணம் வந்ததும் கண்ணில் பட்டது கொழுப்பு. நமக்குத்தான் எக்கச்சக்கமாக் கிடக்கே.  டஜன் டிப்ஸ் தர்றாங்களாமே.... ஒன்னு ரெண்டு நமக்கானது கிடைக்காதான்னு க்ளிக்கினதும்......

உலக மகா எரிச்சல்.

கோபத்தால் கொழுப்பு கூடும் என்பதை(யும்) சொல்லத்தான் வேண்டி இருக்கு.பேசாம ஒரு லிஸ்ட் போட்டு வச்சுக்கணுமுன்னு பார்த்தால்  நடக்காது போல இருக்கு.

ஏகப்பட்ட பேர் இப்படிக் கிளம்பி இருக்காங்களே:(

இனி புதியவர்களை  'ஊக்கு விக்கப் போக வேணாம்.' நல்லாத் தெரிஞ்சவர்களின் பதிவுகளை மட்டுமே  வாசிக்கணும் போல!

28 comments:

said...

பதிவை வாசிக்க முடியாம எதையோ தட்ட முழு பக்கம் விளம்பரம் வந்து உக்காந்திச்சுக்கா !எனக்கும்ஒருமுறை ..

said...

அதான் Fபீட்லி போட்டுக் குடுத்தாச்சுல்ல. இன்னமும் அங்க என்ன வேலை?! :))

said...

சிலருடைய பதிவுகள் இவ்வாறுதான் இருக்கிறது. நான் பலமுறை அனுபவித்து விட்டேன். ஏற்கெனவே சில குறைகளைப் பற்றி தமிழ்மணத்திற்கு நானும் தமிழ் இளங்கோவும் எடுத்துக் கூறி சரி செய்திருக்கிறார்கள். நேமே குறை கூறிக்கொண்டு இருக்கக் கூடாது என்றுதான் சும்மா இருந்தேன்.

உங்களுக்கே பொறுக்கவில்லை என்றால் அந்த தளங்கள் எப்படிப்பட்ட வேதனை தந்திருக்கும் என்று என்னால் யூகிக்க முடிகிறது. யார் பூனைக்கு மணி கட்டுவார்களோ? பார்க்கலாம்.

said...

எனக்கும் அது மிகவும் எரிச்சலூட்டும் காரியம் தான் துளசி அவர்களே.....என்ன செய்வது...?

said...

பல மூத்த பதிவர்களை அடுத்து, நீங்களும் அங்கே போயிட்டீங்களா...?

நமக்கான திரட்டி எது...? http://dindiguldhanabalan.blogspot.com/2014/05/Speed-Wisdom-8.html

said...

Try reading the PDF version

said...

Try reading their PDF version.

said...

இது வலைப்பதிவர்கள் செய்வதாக தோன்றவில்லை. சில விளம்பரதாரர்கள் அத்துமீறி நம் வலைப்பக்கத்தில் நமது அனுமதி இல்லாமலே போடுவதகத்தான் தெரிகிறது.

எனக்கும் சில வலைப்பக்கங்கள் முழுவதும் படிக்க முடியாத அளவிற்கு விளம்பரங்கள் நிறைந்திருந்தன. உதாரணத்திற்கு பொக்கிஷம். நல்ல நல்ல பதிவுகள் பதிவிடும் அந்த நண்பரின் வலைத்தளத்தை படிக்கவே முடியவில்லை.

அதன்பின்தான் வலைஞானி திண்டுக்கல் தனபாலன் சாரிடம் ஐடியா கேட்டேன். அவர்தான் கூகுள் குரோமில் சென்று 'அட்ப்ளாக் பிளஸ்' என்பதை ஆக்டிவேட் செய்யும்படி கூறினார். அதன் பிறகு விளம்பர தொந்தரவுகள் இல்லை.

எனது வலைத்தளம் கூட மற்றவர்களுக்கு எப்படி தெரியுமோ என்ற பயம் இருக்கிறது.

said...

நன்றாகவே சொன்னீர்கள். சிலருடைய பதிவுகளுக்குள் நுழைந்தவுடன் ஒன்று தலையைத் தட்டும். ஒன்று கீழே இழுக்கும். சில பக்கவாட்டில் இழுக்கும். அந்த பதிவுகளைப் படிப்பதற்குள் நமது பொன்னான நேரம்தான் வீணாகும். நான் அந்த பக்கம் போவதே இல்லை. பதிவர்களின் விருப்பம் (OPTION) இல்லாமல் இவை வர வாய்ப்பில்லை. மேலும் நாம் எழுதும் பதிவுகள் வழியே விளம்பரம் செய்து காசு பார்ப்போம் என்பது ஒரு கானல்நீர்.

said...

ஆம் துளசி மேடம்.. இதனாலேயே நான் பல பதிவுகளை படிப்பதே இல்லை..

said...

சகோதரி! இந்த அனுபவம் எங்களுக்கும் ஏற்பட்டதுண்டு. மட்டுமல்ல எங்கள் ப்ளாகிலேயே கூட விளம்பரங்கள் எங்கள் அனுமதி இல்லாமலேயே வந்துவிட்டட்ன. நாம் சில டௌன் லோட்ஸ் செய்யும் போது இப்படி சில அத்து மீறல்கள். உடனே நாங்கள் அட்ப்ளாக்ஸ் செய்துவிட்டவுடன் சென்றுவிட்டன. பின்னர் இந்த டெம்ப்ரரி குக்கீஸ் இதெல்லாம் டெலிச் செய்து வேண்டாத டவுன்லோட்ஸ் எல்லாம் நீக்கிய பிறகு நிவாரணம் கிடைத்தது.

said...

விளம்பரம் நிறைய வரும் பதிவுகளையும் விளம்பரம் நிறைய வரும் சைட்களையும் பொதுவாப் படிக்கிறதில்ல. பச்சக்குன்னு பாப் அப் வந்து படிக்கிற ஆசையைக் கெடுத்துரும்.

said...

இரண்டு காசு பெறும்முயற்சிநீங்கள படித்தால் என்ன படிக்காவிட்டால் என்ன?

said...

வாங்க ஏஞ்சலீன்.

ஒருமுறைதானா? அதிர்ஷ்டசாலிப்பா நீங்க!!!!

said...

வாங்க கொத்ஸ்.

ஃபீட்லி இருக்குதான். ஆனாலும் பொறந்த வீட்டுப் பாசம் போகலையே:(

அங்கே என்ன ஆச்சோன்னு எட்டிப் பார்க்கத்தோணுதே!

பழகுன வண்டி மாடு கதைதான்:-))))

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

அந்த விளம்பரங்கள் ஒரு ஓரமா இருந்தா நாம் சொல்லப் போறோமா என்ன?

முழுசா வந்து மறைப்பதுதான் பேஜார்:(

நம்ம வீட்டுப் பூனை, மணி கட்டிக்குமான்னு தெரியலை:-)

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

அந்த விளம்பரங்கள் ஒரு ஓரமா இருந்தா நாம் சொல்லப் போறோமா என்ன?

முழுசா வந்து மறைப்பதுதான் பேஜார்:(

நம்ம வீட்டுப் பூனை, மணி கட்டிக்குமான்னு தெரியலை:-)

said...

வாங்க விசு.

ஒன்னும் புரியலைங்களே! வாசிப்பை நிறுத்தணும் போல:(

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

நம்ம கொத்தனார் எனக்கு பிறந்தநாள் பரிசாக ஃபீட்லி போட்டுக் கொடுத்துருக்கார்.

ஆனாலும் பழக்க தோஷத்தாலும் ஊக்கு விக்கவும் 'அங்கே' போயிடறேன்!

கடைசியில் பார்த்தால் டாக்டர் விகடன் என்றதில் இருப்பதை காப்பி அடிச்சு பதிவு போட்டுருக்காங்க:( விகடனில் இருந்துன்னு ஒரு சிறுகுறிப்பு கூட இல்லாமல்! என்னவோ போங்க. காப்பிக்கா இப்படி கஷ்டப்பட்டேன்னு நினைச்சால் சிப்புசிப்பா வருது:-))))

said...

வாங்க Strada Roseville.

இந்த ஐடியாவுக்கு நன்றி. எனக்குத் தோணவே இல்லை!

said...

வாங்க செந்தில் குமார்.

வலைஞானி!!!! சரியான பெயர்!

உங்கள் பக்கம் சரியாகத்தான் வருகிறது. நேத்துதான் உங்க ரயிலில் போய் வந்தேன்:-)

said...

வாங்க தமிழ் இளங்கோ.

கானல்நீர்!!! சரியான சொற்பிரயோகம்!!!

நன்றிகள்.

said...

வாங்க ரமா ரவி.

நல்லது படிக்க விட்டுப் போயிருமோன்னுதான் இப்படி தலை நீட்டும்படி ஆகிருது:(

said...

வாங்க துளசிதரன்.

சரியாச் சொன்னீங்க!

குக்கீஸை எல்லாம் தின்னுடணும் :-)

said...

வாங்க ஜிரா.

பொறுமையின் எல்லை கடந்ததால் வந்த எரிச்சல் பதிவு அது:-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

அப்ப நாம் வாசிப்பு அவுங்களுக்கு வேணாமா!!!!!

போயிட்டுப் போகுதுன்னு விட்டுடலாம் இனி.

said...

Sorry to comment in English. My blog has been attacked by these ads for so long ...I. Just delete them and start reading .now it has come down.
Have seen the remedies. Let me try them. Thanks Thulasi. And thanks to all others who have given good. Advice.

said...

("இனி புதியவர்களை 'ஊக்கு விக்கப் போக வேணாம்.' நல்லாத் தெரிஞ்சவர்களின் பதிவுகளை மட்டுமே வாசிக்கணும் போல!")
நன்றி அம்மா!
அனுபவத்தை அழகாக பதிந்தமைக்கு!
அத்தகைய பதிவாளார்கள் யார் என்று சொல்லியிருந்தால்
மிகவும் உதவிகரமாக இருந்திருக்கும் அல்லவா?
இதனால் சில நல்ல புதிய பதிவாளர்கள் பாதிக்க கூடாது அல்லவா?
நன்றி அம்மா!
புதுவை வேலு