வடை வேணுமான்னு கேட்டுருக்கலாம், ஒரானா போகலாமான்னு கேட்டதுக்குப் பதிலா! கடைசியாப் போய் ஒரு பதினேழு பதினெட்டு வருசமாகி இருக்கலாம். எப்போன்னு கேட்டதுக்கு அடுத்த ஞாயிறுன்னார். அன்றைக்கு வேறேதும் நிகழ்ச்சி இல்லைன்னு உறுதிப்படுத்திக்கிட்டு, பெயர் கொடுத்துருங்கன்னேன். ஆஃபீஸ் ஓசி டிக்கெட் கொடுக்குது:-) NZ Plastic ஏற்பாடு செஞ்சுருக்கும் ஃபேமிலி டே & பிக்னிக். கோபாலோட கம்பெனியும் இதுலே அங்கம் என்பதால் இங்கிருக்கும் மக்களுக்கு அழைப்பு அனுப்பி இருக்காங்க.
பத்து மணிக்கு பார்க் திறக்கறாங்க. சல்லியமா விட்டுவிட்டு மழை வேற. இன்னிக்கு நிகழ்ச்சி இருக்கா இல்லையான்னு சம்ஸயம் வேற. பத்து மணி போல் வானம் வெளிறினதும் போய்த்தான் பார்க்கலாமுன்னு கிளம்பிப்போறோம்.
நம்மூர் ஏர்ப்போர்ட்டின் வலதுகை ரன்வே ஆரம்பிக்கும் இடத்தில் லெஃப்ட் எடுத்து உள்ளே போகணும். நம்ம வீட்டில் இருந்து ஒரு 17 கிமீ தொலைவில் இருக்கு இந்த ஒரானா வொய்ல்ட்லைஃப் பார்க்.
மொத்தம் 80 ஹெக்டேர் (197 Acre) நிலம். NZ's only open range Zoo. 1970 வது ஆண்டு திட்டம் தீட்டத்தொடங்கி அடுத்த ஆறு ஆண்டுகளில் (1976) Zoo ஆரம்பிச்சு இப்போ 39 வருஷம் ஆகுது.
நம்ம நியூஸி தவிர நாலு கண்டத்து உயிர்கள், அஸ்ட்ராலியா, ஆசியா, ஆஃப்ரிகா, அமெரிகான்னு. இதுலே(யும் ) ஆசியர்களே அதிகம்!
இந்த பார்க் பற்றியும் மீர்கேட்ஸ் பற்றியும் போட்ட பதிவு இது. திரும்ப எழுதவேணாமேன்னு சுட்டி கொடுத்துருக்கேன். இது எழுதி மூணே வருசம் தான் ஆச்சு. இப்போ விலைவாசிகள் ஏறிப்போனதால் கட்டணங்களுக்கும் ஏற்றம் வந்தாச்சு. முந்தி ஒரு காலத்தில் Friend of Orana என்ற அமைப்பில் மெம்பர்ஷிப் எடுத்திருந்தோம். அதுலே வருசத்துக்கு ஒரு கட்டணம் கட்டுனால் போதும். ஜூலை முதல் அடுத்த ஜூன்வரை எத்தனை முறை வேணுமானாலும் இங்கே வந்து போகலாம். குடும்பத்துக்கு எம்பது டாலர்தான். இப்ப அதுவும் ஏறிப்போச்.
போய்ச்சேரும்போதே பத்தரை மணி. கம்பெனி கூட்டங்களுக்குத் தனி கவுண்ட்டர் வச்சுருந்தாங்க. பெயரைச் சொன்னதும் எழுதிக்கிட்டு, நீலப்பட்டை ஒன்னை கையில் கட்டிக்கக் கொடுத்தாங்க. கூடவே பார்க்கின் வரைபடம் ஒன்னு. அவ்ளோதான். உள்ளே போறோம். ஆரம்ப வரவேற்பே நம்ம மீர்கேட்ஸ்கள்தான். ஒருவிநாடி கூட ஒரு இடத்துலே நிக்காம பயங்கரபிஸி ஒவ்வொன்னும். அப்பப்ப ரெண்டு காலில் நின்னு தூரத்துலஏன்ன நடக்குது, எதிரி வர்றானான்னு பார்த்துக்கணும் போல!
'நிக்கமுடியலை போ'ன்னு ஒன்னு கல்லு மேலே ஏறி உக்கார்ந்துருக்கு:-)
பத்தே முக்காலுக்கு ஃபீடிங் டைம் ஃபார் ஓட்டர்ஸ். அங்கே போனால் நாலுபேர். 'நண்பேண்டா' ன்னு ஒன்னாவே போறதும், ஒன்னாவே உக்கார்றதும், மரத்தண்டு மேலே ஏறுவதுமா இருக்காங்க. பார்க்கில் வேலை செய்யும் நபர்களையும், தன்னார்வத்தொண்டர்களையும் நல்லாவே அடையாளம் தெரியுது. இன்றைக்கு நம்மோடு இருந்த ஏவர்லீ யைப் பார்த்ததும் நாலு ஜோடிக் கண்கள் அவுங்க மேலே மட்டுமே. எந்தத் திசை போறாங்களோ அங்கே பார்வை தன்னாலே போகுது.ஆனாலும் அறிவுக்காரப் பசங்களா இருக்கானுங்க.
இன்னிக்கு சாப்பாடு கொஞ்சம் லேட். பேபி ஸால்மன் மீன்கள்தான் கொடுக்கறாங்களாம். இதோ வந்துட்டாங்க பக்கெட் மீன்களோடு. நாலும் மரத்தண்டிலேறி நின்னு ரெண்டு கையையும் நீட்டி மீனை வாங்கி வாயில் போட்டுக்குதுங்க! அடச் செல்லங்களா!
அடுத்து 11.15க்கு சாப்பாடு கொடுக்கப்போறது கியா பறவைகளுக்கு. இது நியூஸின் விசேஷப் பறவை. பாதுகாக்கப்பட்ட இனம். பருந்து சைஸில் இருக்கும் மலைக்கிளின்னு சொல்லிக்கலாம். மூக்கு நல்லா வளைஞ்சு பயங்கரக் கூர்மை. தோல் பொருட்கள், ரப்பர் சமாச்சாரமெல்லாம் ரொம்பப்பிடிக்கும். தெற்குத்தீவின் காடுகளுக்கு நாம் போறோம். வண்டியை பார்க்கிங்கில் விட்டுட்டுப்போய் திரும்பி வர்றதுக்குள்ளே கார் ஜன்னலில் இருக்கும் ரப்பர் லைனிங் ஒன்னும் ஆகாம இருந்தால் நீங்க ரொம்பவே அதிர்ஷ்டசாலி!
நம்ம கோபாலின் லெதர் ஷூ பிடிச்சுப்போச்சு போல. மெள்ளவந்து லேஸை இழுத்து முடிச்சை அவிழ்த்திட்டு கடிச்சுப் பார்த்தது ஒன்னு.இன்னொன்னு ஒரு பையனுடைய தலைமேல் போய் உக்கார்ந்ததும், நீங்கள் எல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்னு சொன்னேன்:-)
இங்கே மேலேயும் எல்லாப் பக்கங்களைச் சுற்றிலும் வலைக்கம்பி அடிச்சு வச்ச ஏவியரிக்குள்ளே இருக்குதுங்க.இந்தப் பறவைகளின் இறக்கைக்கு உட்புறம் ரொம்பவே அழகான ஆரஞ்சு நிறம். எனக்கு எப்பவும் ரொம்பப்பிடிக்கும். மனிதர்களோடு பழகிட்டா அச்சு அசல் கிளி தான்.
உணவூட்டுபவர் சொன்னதெல்லாம் கேக்குது. சின்னக் கல்லைக் காமிச்சு தூக்கிப்போடுன்னால் அலகால் கவ்வி எடுத்து தூரக்கே வீசுது. பேசாம இதுகளை வச்சு கிளி ஜோஸியம் பார்க்கலாம். ஆளுக்குப் பத்து டாலர்னு சொல்லி வசூலிச்சு சீட்டு எடுத்துக் கொடுக்கச் சொன்னால் எடுத்துக் கொடுக்காதா என்ன? எப்படி நம்ம பிஸினெஸ் மைண்ட்:-))))
ஒரு சின்ன வீடியோ க்ளிப் எடுத்து யூ ட்யூபில் போட்டுருக்கேன். அஞ்சு நிமிசம்தான். முடிஞ்சால் பாருங்க.நல்லா இருக்காங்களேன்னு சொல்லிட்டு எங்க நாட்டு ஸ்பெஷல் கிவி பறவைக்கு வந்துருந்தோம். இது இரவு நேரப்பறவை. வெளிச்சமே பிடிக்காதுன்னாலும் நமக்காக வெளியில் நின்னுக்கிட்டு இருந்தது. பழசுதான். ஆனாலும் பராமரிப்பு சரியாக இருக்கு.
நியூஸிக்கே சொந்தமான tuatara, gecko species இருக்கும் கட்டிடத்துக்குள்ளே வேலை நடப்பதால் கண்ணாடிக் கூண்டுகள் காலி. Bell Frog என்னும் ஒரே ஒரு தவளை மட்டும் (தேரை போல இருக்கு) ஊஞ்சலில் உக்கார்ந்துருச்சு.
பதினொன்னரைக்கு ப்ளாக் அண்ட் ஒயிட் ரஃப்டு லெமூர்க்கு சாப்பாடு. குரங்கினம்தான். மடகாஸ்கர் தீவுக்காரங்க. சின்ன நாய் மூஞ்சு. விரல்கள் எல்லாம் நீளநீளமா இருக்கு. இதுகளுக்குச் சாப்பாடு நாம் கூடக் கொடுக்கலாம். ஆளுக்கு நாப்பது டாலர் கட்டணம். ஒருநாளைக்கு நாலு டிக்கெட் மட்டும்தான் .
மடிமேல் வந்து உக்கார்ந்து கைநீட்டி வாங்கித்தின்னும்போது பார்க்க வேடிக்கையாவும் அழகாவுமிருக்கு.. மூணு பேர் தீவுக்கு உள்ளே போய் உக்கார்ந்துருந்தாங்க. விரைவாக அழிஞ்சு வரும் இனம் என்பதால் கவனிப்பு இங்கே அதிகமா இருக்கு.
இவ்ளோ பெருசா தெரியும் உடம்பு நம்ம வீட்டில் ரஜ்ஜுவுக்கு வச்சுருக்கும் சைஸிலுள்ள கேட் டோர் வழியாக அதுக்கான கட்டடத்துக்குள்ளே போய் வருது!!!
சுமித்ரன் டைகர்ஸ். இதுவும் அழிஞ்சுக்கிட்டு இருக்கும் இனம்தானாம்:( கம்பிவலைத்தடுப்புப் போட்ட தனித்தனிப் பகுதிகளில் இருக்காங்க ரெண்டு பேர். ஆனாலும் நம்மை விசாரிச்சுட்டுப்போக வந்தவங்களை ஒரே ஃப்ரேமில் பிடிக்க முயற்சி செஞ்சேன்:-) இன்னொரு லுக் அவுட்டில் இருந்து பார்த்தால் இன்னும் ரெண்டு பேர் இருந்தாங்க.
ஈமு கோழி(?!)களைக் கடந்து டாஸ்மானியன் டெவில்ஸ். அண்டை நாட்டு சொந்தம். மெல்பேர்ன் Zooவில் இருந்து இப்ப கிறிஸ்மஸ் பண்டிகைக்குக் கொஞ்சம் முன்னாலே இந்த நாலுபேர் (Evelyn, Harris, Brodie and Pumba) வந்துருக்காங்க. ஆயுசு இதுகளுக்கு வெறும் ஏழே வருசமாமே! ப்ச்....
சிங்கவீட்டைப் பார்த்ததும்தான் உள்ளே போக டிக்கெட் வாங்கிக்கலையேன்னு நினைவுக்கு வந்துச்சு. ரெண்டு மணிக்குள்ளே வாங்கினால் ஆச்சுன்னு நம்மவர் சொன்னாலும் டிக்கெட் சீக்கிரம் வித்துப்போகுமுன்னு வாசிச்சது ஞாபகம் வந்துச்சேன்னு வேக நடையில் பார்க் முகப்பில் இருக்கும் டிக்கெட் கவுண்டருக்கு வந்தோம். ஆல்ரெடி ஸோல்ட் அவுட். மணி பனிரெண்டேகால்தான் . அதுக்குள்ளே.... நெவர் மைண்ட் நெக்ஸ்ட் டைம் .
ஒருநாளைக்கு 20 நபர்கள் மட்டுமே சிங்கவீட்டுக்குள் போகமுடியும். உயரம் 1.4 மீட்டருக்குக் குறைவாக இருந்தால் அனுமதி இல்லை. ஆளுக்கு 40 டாலர் கட்டணம். ரெண்டுமணிக்கெல்லாம் குறிப்பிட்ட இடத்துக்கு வந்துட்டால் ரெண்டரைக்கு சிங்க வீட்டுக்குள்ளே போகலாம்.
இந்த டிக்கெட்டை நாம் பரிசுப்பொருளாவும் கொடுக்க முடியும்:-) கிஃப்ட் வவுச்சர். முன்கூட்டியே வாங்கி வச்சு நமக்குப் பிடிக்காதவங்களுக்குக் கொடுத்துட்டோமுன்னா... அவுங்க சிங்க வீட்டுக்குள் போனதும் அது அடிச்சுத் தின்னுரும்.நமக்கும் தொல்லை விட்டது:-))))
லஞ்சு டைம் ஆகிருச்சேன்னு அங்கே இருந்த ' ரெஸ்ட்டாரன்ட்'டில் ஆளுக்கொரு ஸாண்ட்விச்சு வாங்கித்தின்னுட்டு, ஆளுக்கொரு ஐஸ்க்ரீம் வாங்கிக்கிட்டு வெளியே போட்டுருக்கும் இருக்கைகளுக்குப்போய் ஒட்டைச்சிவிங்கியைப் பார்த்தாப்போல் உக்கார்ந்தோம்.
முந்தி இங்கே 'ஸெரங்கேட்டி Serengeti 'ன்னு ஒரு ரெஸ்ட்டாரன்ட் இருந்துச்சு. தீவு போன்ற அமைப்பில் ஒரு பாலம் கடந்து அங்கே போவோம். இப்ப அதைக் காணோம்!
உறியில் வச்சுருக்கும் வெண்ணெயை எடுக்கும் வகையில் தூக்கி மாட்டி இருக்கும் கம்பிவலைப்பொட்டியில் இருந்து வைக்கோல் மாதிரியான காய்ஞ்ச புற்களை நாக்கை நீட்டித் துழாவி எடுத்துத் தின்னுக்கிட்டு இருந்துச்சு ஒன்னு.
தரையில் இருக்கும் புல்லைத் தின்னக்கூடாதான்னு கோபால் சொல்லிக்கிட்டு இருந்தப்ப, நீண்ட கால்களும் கழுத்துமா இருக்கும்போது குனிஞ்சு தின்னக் கஷ்டமுன்னு நான் பதில் சொல்லிக்கிட்டு இருக்கும்போதே.... 'யூ ஆர் ரைட் துள்சி ' என்பதைப்போல் நின்னுக்கிட்டு இருந்த ஒன்னு தரையில் கால் மடிச்சு உக்கார்ந்து. கழுத்தை நீட்டித் தலையை மட்டும் கொஞ்சதூரத்துக்குக் கொண்டுபோய் புல்லைக் கடிச்சுக் காமிச்சது:-))))
இங்கே அஞ்சு நாட்டு உயிர்கள் இருக்குன்னாலும்...ஆஃப்ரிகா வகைகள்தான் அநேகம். நல்ல சூடான தேசத்துலே இருந்து இப்படிக் குளிரான ஊருக்குக் கொண்டு வந்து உன் இனம் அழியாமக் காப்பாத்தறோமுன்னு பெருமை அடிச்சுக்கிட்டாலும்.... பாவம் அவைகள். சாப்பாடு போட்டால் மட்டும் ஆச்சா? உள்ளூர் காலநிலை உடலுக்கு ஒத்துப்போய் புது வாழ்வு தொடங்க அதுகளுக்கும்தானே கஷ்டம் இல்லையா?
இந்த அழகில் குடும்பம் நடத்திப் பெத்துப்போடுன்னா? ஐயோ.....
இதனால் எதாவது புதுக்குழந்தை பொறந்துட்டா ஊரே கொண்டாடும். குழந்தைன்னா... சும்மாவா?
பொறந்தாலும் சரி, போனாலும் சரி எங்களுக்குப் பெரிய செய்திதான் கேட்டோ!.ஒருபத்திரிகை விடாமல் சேதி வந்துரும். ( இருப்பதே ஒரே ஒரு தினசரிதான்! காசுகொடுத்து வாங்கும் வகை. ஞாயித்துக்கிழமை இதுவும் வராது. அன்னைக்கு லீவு! ) இது இல்லாமல் ஓசி பேப்பரா வாரம் மூணு, எல்லார் வீட்டுக்கும் தபால்பெட்டியில் போட்டுட்டுப் போயிருவாங்க. இதுவும் காசு பத்திரிகையில் வந்த சேதியைக் காப்பி பண்ணிப் போட்டுரும்.
வெள்ளைக் காண்டா மிருகம் பெயர் Tamu. 17 மாச கர்ப்பகாலம் முடிஞ்சு , காதலர் தினத்துலே குட்டி போட்டுருக்கு. இன்னும் பேர் வைக்கலை. அதுக்கும் விளம்பரம் பண்ணி ஊர் மக்களைக் கேட்டு ஒன்னு தேர்ந்தெடுப்பாங்க. அன்னைக்கு அது 22 நாள் குட்டி. அம்மாவை ஒட்டிக்கிட்டே நிக்குது. சோறு கண்ட இடம் சொர்க்கம்! பிள்ளைகளுக்குத் தாயின் தேவை வேண்டித்தான் இருக்கு, வளரும்வரை!
சிறுத்தைகள் இருக்குமிடத்துக்குப் போனோம். பழைய பசங்க இப்ப பெரியாளா ஆகிட்டானுங்க.
மூணு பையன், ஒரு பொண்ணுன்னு புதுபிள்ளைகள் நாலு பொறந்துருக்கு. Matata, Kanzi, Gorse and Nia (3 boys and 1 girl), எல்லாம் மூணு மாசக்குட்டிகள். பிள்ளைகளை இடம் மாற்றி சிங்க வீட்டுக்குப் பக்கத்தில் வச்சுருந்தாங்க. பொண்ணு ரொம்ப 'ஷை' என்பதால் ரூமுக்குள்ளே இருந்துச்சு. சிறுத்தைக்குட்டியா இருந்தாலும் பொண்ணுன்னா அடக்க ஒடுக்கமா வளரணும் போல! பசங்க மட்டும் வெளியே உலாத்தல்.
திபேத்தியன் யாக் இருக்கு. எல்லாம் ரொம்பவே ரிலாக்ஸா உக்கார்ந்துருக்குதுகள். இந்த இனத்தில் க்ராஸ் ப்ரீட் செஞ்சு பிறந்ததுதான் நாம் ரெண்டு வருசத்துக்கு முன்னால் சுநிதாவின் வீட்டில் பார்த்த பேட் மேன்:-)
வரிக்குதிரைகள் அழகோ அழகு! எனக்கு ரொம்பவே பிடிக்கும்!
எங்கூர் கால நிலை யானைக்குச் சரிப்படாது என்றாலும் கூட இன்றைக்கு ரெண்டு யானைகள் அங்கே:-)))
வாட்டர் பக் ஒரு ஜோடி. ஆனால் ரொம்பவே இடைவெளிவிட்டு உக்கார்ந்துருக்காங்க. சண்டையோஎன்னவோ!
வாட்டர் பஃபெல்லோவாம். நம்மூர் எருமைகள் இல்லையோ! இதன் கொம்பை , காண்டாமிருகம் கொம்புன்னு சொல்லி ஏமாத்தி விற்கும் கூட்டமொன்னு இருக்காமே!!! காட்டெருமைகளை மனிதன் பழக்கி வீட்டெருமைகளா மாத்தி இப்போ அஞ்சாயிரம் வருஷமாகுதாம்! கிட்டத்தட்ட 16 கோடி வீட்டெருமைகள். இன்னும் 4000 காட்டு எருமைகள் தனி இனமாவே இருக்காமே! இந்தப்புள்ளிவிவரங்கள் எல்லாம் அங்கங்கே வச்சுருக்காங்க.
மணி ரெண்டாகுதேன்னு சிங்க வீட்டுக்கு வந்தோம். உள்ளே போகமுடியலைன்னாலும் வெளியே இருந்து வேடிக்கை பார்க்கத் தோதா மேடை கட்டி விட்டுருக்காங்க. அப்போ சுற்றுலாப்பயணிகள் கூட்டம் ஒன்னு கொஞ்ச தூரத்துலே போய்க்கிட்டு இருப்பதைப் பார்த்தேன். இந்தியர்கள். உடைகள் சொல்லிருச்சே!
ரெண்டரைக்கு லயன் என்கௌண்ட்டர். காத்துக்கிட்டு இருந்தோம். மேடையில் கூட்டம் சேர ஆரம்பிச்சது. தூரக்கே ஒரு கூட்டம் படுத்திருப்பதை காலையில் பார்த்திருந்தோமே... அவைகளில் ஒரு பெரியவர் மட்டும் மெள்ள எழுந்து வந்து நம்ம மேடைக்கு வலதுபக்கம் இருந்த மர நிழலில் உக்கார்ந்தார். கொஞ்ச நேரத்தில் இன்னொன்னு மெதுவா வந்து சேர்ந்துச்சு. இப்படியே மெள்ள மெள்ள அங்கிருந்த ஏழு பேரும் இங்கே வந்து சேர்ந்தாங்க.மணி அப்போ ரெண்டேகால்.
ரெண்டரைக்குச் சாப்பாடுன்னு தெரிஞ்சுருக்கும்தான். ஆனால் இப்ப மணி ரெண்டரை ஆகப்போகுதுன்னு எப்படித் தெரியும் ?
ஒன்னு ரெண்டு வந்து நம்ம பக்கக் கம்பிவலைக்கு அப்புறத்தில் நின்னு ஏறிட்டுப் பார்த்தன. ' இன்றைய லஞ்சு நான் இல்லையாக்கும்'கேட்டோ!
ஆச்சு மணி ரெண்டரை. ஒரு பெரிய கூண்டுக்குள் மனிதர்களை ஏற்றி இருந்தாங்க. முழு வண்டியுமே ட்ரைவர் கேபின் உட்பட கம்பிக் கூண்டுக்குள்ளே! உள்ளே 'அந்த' இந்தியர்கள். 20 நபர்களுக்கு மட்டும் அனுமதி என்பதால் பாக்கி ஆட்கள் நம்ம மேடையில்! எல்லாம், ச்சூஸ்கொண்டி, மனவாளே:-)
இதோ உங்களுக்காக நான் புடிச்சாந்த வீடியோ! (காப்பி ரைட்டு யாரும் கிளம்பாம இருக்கணுமே, பெருமாளே !)
காட்டுக்கே ராசா. ஒரு பெரிய மிருகத்தை அடிச்சு அப்படியே கடிச்சுத் தின்னால்தான் சாப்பிட்ட திருப்தி இருக்கும். ஆனால் பிச்சைக்காரன் போல கையேந்த வச்சுட்டாங்களேன்னு எப்பவும் போல என் மனசு அடிச்சுக்கிச்சு என்பதே உண்மை. அதை நம்ம ஏவர்லீ யிடம்(வாலண்டியராக இங்கே வீக் எண்டில் வந்து வேலை செய்யறாங்க) சொல்லிப் புலம்பினேன். ஒவ்வொரு முறை இங்கே வரும்போதும் நான் இப்படிப் புலம்புவதற்கு, வழக்கமாக் கிடைக்கும் பதில்தான் இப்பவும்.
"இது சும்மா ஒரு ஸ்நாக் போலத்தான். விஸிட்டர்ஸ்கள் பார்க்கட்டுமேன்னு . மாலையில் ஆளுக்கு அஞ்சாறுகிலோ பெரிய துண்டு இறைச்சியைக் கொடுப்போம். ஆனால் ஒருநாள் விட்டு ஒருநாள்தான் சாப்பாடு. தினம் சாப்பிட்டால் ஜீரணமாறதில்லை"
அதானே....நாளுக்கு 20 மணி நேரம் தூங்குனா எப்படி செரிக்கும், இல்லே!
கூண்டுக்குப்பின் ஓடியவர்கள் எல்லோரும் பெண்களே. ராசா கூண்டின் மேலே ஏறி நின்னுக்கிட்டு இருந்தார். இப்பெல்லாம் தலைவாரிப் பின்னிக்கக் கஷ்டம் போல ! தாடியும் காணோம். க்ளீன் ஷேவ்! எதுக்கு இப்படின்னா..... ஒரே குடும்பத்தில் உறவு கூடாது என்பதற்காகவாம். மொட்டை அடிச்சுக்கிட்டவுடன், தான் ஒரு ஆண் என்பதையே ராசா மறந்துருவாரோ என்னவோ!
இங்கே 20 சிங்கங்கள் இருந்து இப்போ 13 ஆகக் குறைஞ்சுபோச்சு:( அடுத்த வீட்டில் இன்னும் சிலர் உள்ளே இருந்தாங்க. சிலர் வெயிலில் படுத்து நல்ல உறக்கத்திலும்.
பொதுவாக் காட்டில் பெண் சிங்கங்கள் போய் வேட்டையாடிக்கொண்டு வந்ததைத்தான் கூட்டத் தலைவர் சாப்பிடுவார். அதுவும் முதலில். இங்கேயும் அது மட்டும் மறக்கலை. நாந்தான் பொண்களிடம், 'இன்றைக்கு விமன்ஸ் டே. நீங்க மொதல்லே சாப்பிடுங்கடீ'ன்னா.... கேக்கலையே:(
ரொம்ப அதிக அளவில் மிருகங்கள் இல்லை . 80 ஹெக்டேரில் 400 எண்ணிக்கை. இதில் வாத்துகளும் அன்னங்களும் அடக்கமே! ஆனா எல்லோருக்கும் வசதியா நடமாட ஏராளமான இடங்கள் பிரிச்சுக் கொடுத்துருக்காங்க.
எங்கே பார்த்தாலும் நீர்நிலைகளும் தெளிவான தண்ணீருமா அருமை. நிறைய நடந்தாச்சு. ஷட்டிலில் ஏறவே இல்லை. ஒரு மாசத்துக்கான நடை. சுமார் அஞ்சு மணி நேரம் .
காருக்குள்ளே வந்து உக்கார்ந்ததும் கால் வலின்னு முணங்கினேன்:-))))

33 comments:
காணொளி உட்பட உங்களின் பதிவின் மூலம் நாங்களும் சுற்றிப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது... கூடவே உங்களின் குரலும்... நன்றி அம்மா...
Video Limit 100mb தான்... அவ்வளவு தான் பார்ப்பார்கள் என்பது Google-லின் கணிப்பு... மாற்று...? வேறு ஒரு பதிவில் தான் சொல்லணும்...
படங்களும் பதிவும் அருமை.
அந்த வண்டியை சுற்றி எவ்வளவு சிங்கங்கள் பார்க்கவே பயமாக இருக்கு!
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
வழி கிடைச்சதும் சொல்வீங்கதானே?
வாங்க ரமா ரவி.
கூண்டு மக்களுக்கு ரெண்டு லேயர் கம்பிகள். ஆனாலும் பயம் இருக்கத்தான் செய்யும் இல்லே!
எத்தனை கோடி உயிர்கள் இந்த உலகில்... படங்களும் தகவல்களும் மிக அழகு.
சிங்கந்தான் மிகப் பெரிய male chauvinistனு சொல்லனும்.
Beautiful photos. -Ganesh
// முன்கூட்டியே வாங்கி வச்சு நமக்குப் பிடிக்காதவங்களுக்குக் கொடுத்துட்டோமுன்னா... அவுங்க சிங்க வீட்டுக்குள் போனதும் அது அடிச்சுத் தின்னுரும்.நமக்கும் தொல்லை விட்டது:-))))
//
செம ஐடியா.
நம்மூர் உயிரியல் பூங்காவில் காணக் கிடைக்காத சில விலங்குகள். ஜூ வுக்குப் போக என்றுமே ஆசைதான்
தெளிவான படங்களுடன் பதிவு சுவாரஸ்யம்.
The description, the videos and the pictures are superb. We missed the visit when we were in Christchurch but you have fulfilled that.
Thanks very much.
அட போங்க’மா ... சீனியருக்கெல்லாம் ரெண்டரை டாலர் மட்டும் தான் குறைப்பீங்களா ...?
காமிரா பொட்டி ரொம்ப பெருசோ ... நல்லா எடுக்குதே.... சாரி... நல்லா எடுத்திருக்கீங்க...........
உயிரியல் பூங்காக்கள் மீண்டும் நம்மை குழந்தைகளாக்கி விடுகின்றன... ரொம்ப நேரமாய் உங்கள் பதிவை கண்கள் அகலப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. இந்தாளுக்கு என்ன ஆச்சு என்று யோசிக்கிறாள் அருகிருக்கும் என் மனைவி!
நம்ம ஊர் ராசாக்கள் 1950லிருந்தே கையேந்தற மாதிரி இடம் விட்டு இடம் மாறினால் வாழ்க்கையும் மாறிப் போகிறது இல்லையா துளசி.
மீர் காட்ல ஆரம்பிச்சு கடைசி வரை எடுத்த அத்தனை படங்க்களும் கியா வீடியோ வும் சூப்பர்,.
கோபாலைப் பார்த்தாக் குழந்தைகள் தான் ஒட்டிக்கும்னு நினைத்தால் ஷூவைக் கடிக்க இந்தக் கியாவும் வந்துவிட்டதே.>}
சிகாகோ சூவில் பார்த்த சிங்கமும் சுணங்கிதான் இருந்தது. ஆனால் ஹேர்கட் எல்லாம் செய்துக்கலை.
ஒட்டகச் சிவிங்கி படைப்பே வினோதம்.அந்த உயரத்தைப் பராமரிக்க அது நடந்து கொண்டே இருக்கணுமாம். இல்லாட்டா இதயம் பாதிக்கப் படுமாம்.
அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தாத்தான் எல்லாத்துக்கும் மதிப்பு. அது மிருகமாயிருந்தா என்ன? மனுஷனாயிருந்தா என்ன? எல்லாம் ஒண்ணுதான்.
இந்த டிக்கெட்டை நாம் பரிசுப்பொருளாவும் கொடுக்க முடியும்:-) கிஃப்ட் வவுச்சர். முன்கூட்டியே வாங்கி வச்சு நமக்குப் பிடிக்காதவங்களுக்குக் கொடுத்துட்டோமுன்னா... அவுங்க சிங்க வீட்டுக்குள் போனதும் அது அடிச்சுத் தின்னுரும்.நமக்கும் தொல்லை விட்டது:-))))
SABBAAAAAA!!!!! :)))
நல்ல நல்ல விஷயங்கள் ,பார்க்காத கேட்டிராத மிருகங்கள் , அருமையான ZOO பயணம் எங்களுக்கும் .
வீடியோ சூப்பர் !!! ரம்யா மிகவும் ரசித்தாள் . நன்றி துளசி .
வாங்க ஜிரா.
உண்மைதான். ஆனால் பழியைத்தூக்கிப் பன்றி மேல்போட்டுட்டாங்களே!
வாங்க கணேசன்.
நலமா?
வருகைக்கு நன்றி. கிறைஸ்ட்சர்ச் வாழ்க்கை என்றும் நினைவில் இருக்கும் வகைதான், இல்லையா!
வாங்க விஸ்வநாத்.
சபாஷ்!
யாரும் கவனிக்கலையேன்னு இருந்தேன்:(
வாங்க ஜிஎம்பி ஐயா.
நமக்குள் இருக்கும் குழந்தையின் உற்சாகம், இப்படிப்பட்ட இடங்களில் தானாக வெளியே வந்துருது பாருங்களேன்:-)
வாங்க ஸ்ரீராம்.
ரசனைக்கு நன்றீஸ்!
வாங்க வித்யா.
நலமா?
அன்றைக்கு நீங்கள் விரும்பி இருந்தாலுமே போயிருக்க முடியாது.
ஒரானாவுக்கு விடுமுறை வருசத்தில் ஒரே ஒருநாள். அது கிறிஸ்மஸ் தினம் மட்டுமே!
அடுத்தமுறை வரும்போது நாம் இருவருமாக மனிதக்கூண்டில் போய் வரலாம்:-)
முதன் முதலாக தங்களின் வலைத்தளத்திற்கு விஜயம் செய்கிறேன். ஏராளமான படங்களும் ஏகப்பட்ட தகவல்களும் நேரிலே இடங்களை பார்ப்பது போல் உணர்வை ஏற்படுத்துகிறது. நல்ல பதிவு!
வாங்க தருமி.
ஒரு ஆசைக்குப் பெரிய பொட்டி வாங்கிட்டேனே தவிர, தூக்கிக்கிட்டுப் போக கஷ்டமா இருக்கு. பை எல்லாம் வேணாம் ஒரே ஒரு லென்ஸ் (18-200) போதுமுன்னா அது இன்னும் கனமான கனம். கைவலி பிடுங்கி எடுக்குதே:(
அதான் கனமில்லாமல் இருக்கட்டுமுன்னு Sony BIONZX வாங்கினேன். பதிவர் மாநாட்டுக்குக் கொண்டு வந்த ஒன்றையணா அதுதான்:-)
20 X Zoom இருப்பதால் பொழைப்பு நடக்குது!
ரெண்டரைன்னா ரெண்டரை. ரெண்டு பேருக்கு அஞ்சு டாலர் ஸேவிங்ஸ் ஆகுமே! நாங்களும் யூத்துன்னு சொல்லிக்கலாம், இல்லே:-)))
@ தருமி.
சொல்ல விட்டுப்போச்சே...இங்கே சீனியர் சிட்டிஸன் என்றால் 65 வயசுக்கு மேலே!
வாங்க மோகன் ஜி.
நம் மனசில் இருக்கும் குழந்தைத் தன்மையை மீட்டெடுக்க இது போன்ற இடங்கள்தான் உதவுகின்றன.
முதல் வருகைக்கு நன்றி.
தங்கள் மனைவிக்கும் துளசிதளத்தை அறிமுகப்படுத்திருங்களேன்.:-)
வாங்க வல்லி.
சிங்கத்துக்கும் கோபாலைப் பிடிக்குமேப்பா!!!!
உண்மையைச் சொன்னால் பாதுகாக்கிறோமுன்னு அவர்களின் சொந்த இடத்தில் இருந்து பிரிச்சுடறோம். அதன் வேதனை அவர்கள் மனசின் மூலையில் இல்லாமலா போகும்:( ஹூம்....
வாங்க சாந்தி.
ரொம்பச்சரி.
அவரவர் வேதனை அவரவருக்கு! நமக்கு மனுச பாஷை பேச முடியும் என்பதால் புலம்பித் தீர்த்துக்கறோம்.
அங்கே...மௌனராகம்:(
வாங்க சசி கலா.
நான் இன்னும் வண்டலூர் பார்க்கலைப்பா:( அடுத்தமுறை போகலாமுன்னு இருக்கேன்.
ரம்முவுக்கு என் அன்பும், நன்றியும்.
வாங்கசெந்தில் குமார்.
வணக்கம்.
முதல்வருகைக்கு நன்றி. நான் இங்கெதான் பத்தரை வருசமாக் குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன். இதுவரை 1657 பதிவுகள் வெளிவந்துருக்கு.
பயனுள்ளவைகளா சில இருக்கலாம்:-)
Anna Atkins அவர்களின் பிறந்தநாள் இன்றைக்குன்னு கூகுள் கொண்டாடிக்கிட்டு இருக்கு. படங்களோடு புத்தகம் போட்ட முதல்நபர் அவுங்கதானாம்.
நிறையப் படங்கள் போட்ட பதிவர் என்று எப்பவாவது அடுத்த நூற்றாண்டில் நம்ம பெயர் வருமோன்னு இப்ப நினைக்கிறேன்:-)))))
நன்றி.மீண்டும் வருக.
தங்கள் வட்டத்துக்குள் என்னையும் இணைத்துக் கொண்டதற்கு நன்றி!
அன்னா அட்கின்ஸ் பற்றிய தகவலை சொல்லியிருக்கிறீர்கள். அவரைப்போலவே உங்களின் பெயரும் வரலாற்றில் இடம் பெறும். கிட்டத்தட்ட 50 படங்கள் இந்த ஒரு பதிவில் மட்டும் இருக்கின்றன.
சுற்றுலாவில் பேரார்வமும், சுற்றுலா தொடர்புடைய பத்திரிகையில் நான் பணியாற்றுவதாலும் தங்களின் அனைத்து பதிவுகளும் எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று கருதுகிறேன். நேரம் கிடைக்கும் போது அவற்றையெல்லாம் படிக்கிறேன்.
தங்கள் அறிமுகம் எனக்கு பேரானந்தம்!
@ செந்தில் குமார்.
சுற்றுலா தொடர்புள்ள பத்திரிகையா!!!!
பேஷ் பேஷ்!
என்ன பெயர் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?
படங்களும், தகவல்களும் தெள்ளத் தெளிவாய்...நாங்களும் சுத்தி பார்த்தோம்..
டீச்சர் உங்க ஸ்பீடில் பதிவுகள். என்னால் பிடிக்க முடியவில்லை....:)
Post a Comment