எப்பவோ ராமர் கோவிலை இடிச்சு மசூதி கட்டிட்டாங்கன்னு... அது ஆச்சு வருசம் கிபி 1528 லே பாபரின் அரசவையில் இருந்த ஒரு மந்திரியால். பாபருக்கே தெரிஞ்சுருக்குமான்னு எனக்கொரு சந்தேகம். இந்த பாபர்தான் முகலாய சாம்ராஜ்யம் இங்கே, நம்ம நாட்டில் உருவாகக் காரணமா இருந்தவர்.
எப்படியோ தில்லியில் இடம்பிடிச்சு உக்கார்ந்தவங்களுக்கு ஹிந்துக்கோவில்களில் இருக்கும் செல்வங்கள் கண்ணை உறுத்தி இருக்கலாம்.
கோவில்கோவிலாக் கொள்ளை அடிக்க ஆரம்பிச்சுருக்காங்க. நமக்குத்தான் சிறப்பானதை சாமிக்குக் கொடுக்கணும் என்ற எண்ணம் இருக்கே. (இப்ப அந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கிட்டு இருக்கோன்னு சம்ஸயம். கோவில்நகைகளை நம்மாட்களே ஓசைப்படாம அபேஸ் பண்ண ஆரம்பிச்சுருக்காங்க. சமீபத்துச் செய்திகள் (திருப்பதி, திருவனந்தபுரம்) இதை உறுதிப்படுத்துதே!... .) ஆனாலும் இப்பவும் கோவில்களில் சாமிச்சிலைகளை, நகை நட்டால் அலங்கரிச்சு வழிபட்டுக்கிட்டுத்தானே இருக்கோம்.
ஆனாலும் தில்லி எங்கே... அயோத்யா எங்கே? இத்தனாம் தூரம் வந்து ராமர் கோவிலை இடிச்சுட்டு அந்த இடத்தில் மசூதி கட்டி இருக்காங்கன்னா..... ஹிந்துக்களுக்கு புகைஞ்சுக்கிட்டே இருந்துருக்கு. ஒரு முன்னூத்தி இருபத்தியேழு (327) வருசம் கழிச்சு 1855லே ஹனுமன்கட் என்ற ஊரிலிருக்கும் கோவிலில் இருந்து பைராகிகள் (சாமியார்கள்) பலர் கூட்டமா வந்து, எங்க கோவிலை எப்படி இடிக்கப்போச்சுன்னு மசூதியின் பொறுப்பில் இருந்தவங்களோடு சண்டை போட்டு ஜெயிச்சுருக்காங்க(??!!)
அதுக்குப்பின் ரெண்டு வருசம் கழிச்சு அங்கே ஒரு ஓரமா மேடைபோட்டுக் கூரை கட்டி ராமர் சிலையை ப்ரதிஷ்டை பண்ணிக் கும்பிட ஆரம்பிச்சு இருக்காங்க.
இதுக்கிடையில்தான் குறுமிளகு, மசாலாச் சாமான் வாங்க வந்து அப்படியே கம்பெனி ஆரம்பிச்சு (1757 ) மெள்ள மெள்ள நாட்டைப்பிடிச்சுக்கிட்ட ப்ரிட்டிஷ்காரர்கள் 1858 முதல் ராஜாங்கம் பண்ணவும் ஆரம்பிச்சுட்டாங்க. அப்போ சின்னசின்ன சமஸ்தானமா பாரதம் முழுசும் இருந்த ராஜாக்களுக்கு ஒற்றுமை என்பதே இல்லாமப் போயிருந்த காரணத்தால் வெள்ளையருக்குக் கொண்டாட்டம். குரங்கு அப்பம் பிட்ட கதையா ஆகிப்போச்சு.
'எங்க இடத்துலே ஹிந்துக்கள் கோவிலைக் கட்டுறாங்க'ன்னு மசூதிக்காரர்கள் புகார் கொடுக்கறாங்க, வெள்ளையர்களுக்கு. 'இல்லே, இது ஆரம்பத்துலே எங்க இடம்தான். எங்க கோவிலை இடிச்சுத் தரைமட்டம் ஆக்கிட்டுத்தான் மசூதி கட்டுனாங்க'ன்னு இவுங்க சொல்ல....
இது என்னடா புதுத் தலைவலி......... இந்தியாவுலே நாம் இன்னும் முழுசா கொள்ளையடிச்சு முடிக்கலையே, அதுக்குள்ளே இவுங்களுக்கு நாட்டாமை பண்ணும் வேலை வேற எக்ஸ்ட்ராவா வந்துருச்சேன்னு கோவிலுக்கும் மசூதிக்கும் இடையில் ஒரு வேலியைப்போட்டு பாகம் பிரிச்சுட்டாங்க வெள்ளைக்கார மாஜிஸ்ட்ரேட் ஐயா சொல்படி . இது 1859 லே.
மொத்த வளாகத்துலே கிழக்குப்பக்கமா கோவிலுக்கு வழி. வடக்காலே மசூதிக்கு. இப்படி ஒரு 26 வருசம் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துருக்கு. அவுங்கவுங்களுக்குத் தனி வழின்னு. கோவிலை பக்காவாக் கட்டிக்கலாமுன்னு அனுமதி கேட்டுருக்காங்க. பத்துமாசம் யோசிச்சுப் பார்த்த வெள்ளையர் அரசு, மனுவை தள்ளிருச்சு. திரும்பத்திரும்ப கோர்ட் கேஸ்ன்னு நடக்குது. அவுங்களும் விடாம நிராகரிச்சுக்கிட்டே இருந்துருக்காங்க.
இதுக்கிடையில் சுதந்திரப் போராட்டம் ஆரம்பிச்சு (1947) வெள்ளையர்களை ஆட்சியில் இருந்து வெளியேத்துனாங்க இந்தியர்கள். சுதந்திரம் கிடைச்சது. ஆனாலும் கவர்னர் ஜெனரல் தலைமையில்தான் ஆட்சி.
அடுத்த ரெண்டாம் வருசம்......... 1949 லே யாரோட துர்போதனையோ........... மசூதிப்பகுதிக்குள்ளே போய் ராமர் சிலையை வச்சாங்க ஹிந்துக்கள். தேவையா இது? மதக்கலவரம் ஆகப்போகுதேன்னு ரெண்டு பக்க வாசலையும் மூடி ஸீல் வச்சது அரசு.
அதுக்குப்பிறகும் மக்கள்ஸ் சும்மா இல்லை:( எங்களுக்கு சாமி கும்பிட அனுமதி வேணுமுன்னு கேஸ் போடறதும் அதுவும் இதுவுமா கலகத்தீயை அணைக்காமப் பார்த்துக்கிட்டாங்க:( இதுலே அரசியல் நிறையப்புகுந்து போய் தீயில் குளிர்காயும் கூட்டமும் பெருகி என்னென்னவோ நடந்து போயிருக்கு. சரித்திரத்துக்குள்ளே போனால் வியப்பும் வன்மமும் ரத்தமும் பகையும் பார்க்கப்பார்க்க விநோதம்தான்.
1992 டிசம்பர் 6. நாட்டுக்கே தலையிடி நாள். சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த நாள் என்றே சொல்லலாம். ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வேலிதாண்டிப்போய் மசூதிக்கு மேலே இந்துமதக்கொடி(??!!)ன்னு ஏத்திவச்சு, கொஞ்சம் மசூதியையும் இடிச்சுருக்காங்க.
பழிக்குப்பழின்னு மசூதி மதக்காரர்களும் அங்கே இங்கேன்னு குண்டு வைக்கப்போய் இப்ப என்னன்னா வருசாவருசம் டிசம்பர் 6 திவசம் நடக்குது:( முடிவில்லாத ஒரு பகை:(
(ஆமாம். எனக்கொரு சந்தேகம். குண்டு வச்சு நாசம் ஏற்படுத்தணுமுன்னு நினைக்கிறவங்க, எப்ப சரியான டைம் கிடைக்குதோ அப்ப வைப்பாங்களா, இல்லே தீவுளிக்குத் தீவுளி போல டிசம்பர் ஆறுக்குத்தான் வைப்பாங்களா? )
இந்த ஊரில் ராமர் பிறந்த எக்ஸாக்ட் இடம் இதுதான்னு சின்னதா ஒரு சிலையை வச்சுக் கும்பிடுது சனம். மசூதியில் சில நூற்றாண்டுகளாகவே அவுங்க பூஜை புனஸ்காரம் ஒன்னும் இல்லாமச் சும்மாத்தான் இருக்குதுன்றாக. ஆனாலும் இது எங்க இடமுன்னு அவுங்களும் விட்டுக்கொடுக்கலை.
நமக்குத்தான் சாமி தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்.அவன் சர்வவியாபின்னு இருக்கும்போது தகராறு வேணாம். பேசாம ஒரு கோவில் புதுசாக் கட்டிக்கிட்டாப் போதாதா? இல்லே 'அங்கேயும்' அவனே அருவமா இருந்து 'அவுங்க' பூஜையையும் ஏத்துக்குவான் தானேன்னு நினைக்கப்டாதா?
எனெக்கென்னவோ மேலுலகில் மஹாவிஷ்ணு என்று நாம் கும்பிடுபவரும், அல்லா(ஹ்) என்று அவர்கள் கும்பிடுபவரும் ஜாலியா ஒன்னாவே இருப்பாங்கன்னு தோணுது. அவரவர் கண்களுக்கு அவரவர் வழிபடும் தெய்வம்:-)
பேசாம ரெண்டு பேருக்கும் இந்த இடம் இல்லைன்னு வெவ்வேற இடத்துலே ஆளுக்கு ரெண்டு ஏக்கர் ஒதுக்கிட்டு எப்படியோ கட்டிக்குங்கன்னு அரசு சொல்லப்டாதா? அப்ப அந்த இடம்? அதைக் குழந்தைகளுக்கான தோட்டம்/பார்க் அமைச்சுட்டால் ஆச்சு. குழந்தையும் தெய்வமும் ஒன்றில்லையோ!!!!
(புதுசாக் கட்டப்போகும் ராமர் கோவில் இப்படிடிதான் இருக்குமாம்)
இப்படியெல்லாம் மனசுலே எண்ணங்கள் சுழன்று சுழன்று பெரும் புயலா உருவாகிக்கிட்டே இருக்கு.
இவ்வளோ கலாட்டா ஆன கோவிலான ராமஜென்மபூமியை தரிசனம் செய்யலாமுன்னு இப்போ போய்க்கிட்டு இருக்கோம். ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தச் சொன்ன ஆனந்த், இதுக்குமேல் அங்கே வண்டிகள் போக அனுமதி இல்லை. நடந்துதான் போகணும் என்றதுடன், கேமெரா, கைப்பை, செல்ஃபோன் இப்படி எதுவும் கூடாது. வெறுமனே கை வீசிக்கிட்டுத்தான் போகணும் என்றதும், பைப்பொருட்களை வண்டியிலே வச்சுட்டு ட்ரைவரிடம் ஒப்படைச்சோம்.
பொட்டல் காடா இருந்த இடைவெளியில் நடந்து போறோம். அக்கம்பக்கம் ஒன்னுமே இல்லை. ஒரு பத்து நிமிச நடை இருக்கும். திடீர்னு முளைச்சமாதிரி ஒரு வரிசைக் கடைகள். அதைக் கடந்து போய் ஒரு வேலிக்குள் உள்ள இடைவெளியில் 'இந்தப்பக்கம் லேடீஸ், அந்தப்பக்கம் ஆத்மி' ன்ன ஆனந்திடம், 'நீ வரலையான்னா....' இல்லே, நான் இங்கே தான் இருப்பேன். நீங்க வெளிவரும் வழி வேற பக்கம். அங்கே அந்தப்பக்கம்'னு இடப்பக்கம் காமிச்சதும் சரின்னு அவரவர் வாசலுக்குள் நுழைஞ்சோம். ஒரு ஏழெட்டுபெண்கள் பாதுகாப்புப்பணியில். ஜாலியாச் சிரிச்சுப்பேசிக்கிட்டு இருந்தாங்க. எந்த ஊர் என்னன்னு விசாரிச்சுக்கிட்டே அடுத்த பக்கத் திரையைக் காமிச்சு அது வழியா உள்ளே போங்கன்னு உத்தரவாச்சு. ஹிந்தி பேசத் தெரிஞ்சால் வடக்கே போகும்போது கொஞ்சம் நல்லதே.
வெளியே போய்ப் பார்த்தால் யாருமே இல்லாமல் பாதை ஜிலோன்னு இருக்கு. பக்கத்து திரையைப் பார்த்தால் அனக்கம் இல்லை. வழக்கம்போல் விடுவிடுன்னு முன்னாலே போயிட்டாரோன்னு நடக்க ஆரம்பிச்சேன். ஒரு நூறு மீட்டர் தாண்டினதும் இடப்பக்கம் வலைக்கம்பி போட்ட ஃபென்ஸ். பக்கத்துலே ஒரு பாதுகாப்பு ஆசாமி. ராணுவம்.
இந்தப்பக்கம் ஒருத்தர் போனாரான்னு கேட்டால் இல்லைன்னார். அப்ப கோபால் வர்றவரை அங்கேயே நிக்கலாம். இவர்பாட்டுக்கு நம்மைத்தேடி அலையப் போறாரேன்னு நின்னு, ராணுவத்திடம் பேச்சு கொடுத்தேன்.
கம்பி வலைக்கு அந்தப் பக்கமிருக்கும் வெட்டவெளியில் ரெண்டு மாடுகள் நின்னு மேய்ஞ்சுக்கிட்டு இருப்பதைக் காட்டி அவை இரண்டும் ரொம்ப 'பக்தி மாடுகள்' என்றார். தினமும் காலை கோவில் வளாகம் முழுசையும் மூணு சுத்து சுத்தி வந்துதான் காலை புல்மேயவே ஆரம்பிக்குமாம். (பரிக்ரமா தீன் தஃபா) ஆஹா.... இன்னும் கொஞ்சநாளில் 'ராமா ராமா' ன்னு சொல்லிக்கிட்டே பரிக்ரமா வரும் பாருங்க!! அதுகளுக்கு 'மா......... மா...........'ன்னு சொல்லத்தெரியாதா என்ன?:-))))
இன்னிக்கு அவ்வளவா கூட்டம் இல்லை போலிருக்கேன்னேன். ஆமாம். தில்லியில் இருந்து பார்லிமெண்ட் அங்கங்கள் வந்துருக்காங்க. அதான்..... ( பொதுமக்கள் கூட்டத்தை வரவிடலை என்று அவர் தன் வாயால் சொல்லலை !!!) அபி த்தோ வோ லோக் நிக்கல் கயா.
அதுக்குள்ளே நம்ம கோபால் ஓட்டமும் நடையுமா வந்து சேர்ந்தார். ஏன் இவ்ளோ நேரம்? அப்படியா செக் பண்ணாங்க? 'கைக்கடிகாரத்துக்கு அனுமதி இல்லை. வெளியே போய் எங்கியாவது லாக்கரில் வச்சுட்டு வா'ன்னுட்டாங்கன்னார்.
அட ராமா.........
தோசைக்கல் வாட்ச் வாங்கிக்குங்கன்னு நான் எவ்ளோ சொன்னாலும் அதெல்லாம் தனக்குச் சரிப்படாதுன்னு எப்பவும் சாதாரணமா ஒரு ஸீக்கோ வாட்ச்தான் வாங்கிப்பார். அதுக்கே இப்படியா?
'அதான் வெளியே போய் லாக்கர் இருக்குமிடத்தை விசாரிச்சுத் தேடிக் கண்டுபிடிச்சு, ஒரு கடையில் வச்சுட்டு வந்தேன். இதோ சாவி'ன்னார். நம்பகத்தன்மைக்காக பூட்டிட்டு சாவியை நீங்களே வச்சுக்குங்கன்னு சொல்லிடறாங்க:-)
என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். கணிசமா இருவது மினிட் கடந்து போயிருந்தது:(
இன்னும் கொஞ்சதூரம் நடந்து வலப்பக்கம் இருக்கும் இன்னொரு செக்யூரிட்டி செக்கப்பைக் கடந்து கட்டங்கட்டமா கம்பித் தடுப்புகளுக்கிடையில் நடந்து போறோம். ஜஸ்ட் ஒரு ஆள் போகும் அகலம்தான். ரெண்டு பக்கமும் கம்பிவலைவேற அடிச்சு வச்சுருக்காங்க. நமக்கு முன்னும் யாருமில்லை. பின்னும் யாருமில்லை! எஸெஸ்ஸா வளைஞ்சு போகுது கம்பித்தடுப்புப் பாதை. விறுவிறுன்னு போய்ப்போய் ஒரு இடத்தில் சட்னு நின்னார் கோபால். எதுக்கு நிக்கறார்னு பார்த்தால் அங்கே வலதுபக்கக் கம்பி வலையில் பெரிய ஜன்னல் மாதிரி கட் பண்ண இடத்தில் குட்டியூண்டு மேடையில் ஒரு பண்டிட் உக்கார்ந்துருக்கார். பக்கத்தில் கொஞ்சம் பூக்கள், ஒரு பெரிய கிண்ணத்தில் சக்கரை மிட்டாய். (வடக்கே இதுதான் கோவில் ப்ரசாதம்)
'வோ ஹே ராம் லாலா.சியா ராம் கா ஜனம் இதரி ஹுவா ' ன்னார். எங்கே? கை காட்டிய திக்கில் பார்த்தால் ஒருமுப்பது மீட்டர் தொலைவில் ஒருமேடை போன்ற அமைப்பில் பூக்குவியல். குவியலின் மேல் ஒரு உலோகக் குடை. (வெள்ளியா இருக்கலாம்!) 'குச் நை திக்தா ' ன்னேன். ஃபூல் கே அந்தர், ஃபூல் கே அந்தர் என்றார்.
கண்ணு வேற சரியாத் தெரியலை. அங்கே பாரும்மா அங்கேன்னு கோபாலும் கையை நீட்டிக் காமிக்கிறார். சின்னதா ஒரு ஒன்னரை ரெண்டடி உசரத்துலே குட்டியா ஒரு சிலை லேசாத் தெரிஞ்சது.
அட ராமா...................
கை கூப்பி வணங்கிக்கிட்டேன். அள்ளியெடுத்த கொஞ்சூண்டு சக்கரை மிட்டாய்களைக் கையில் தந்தார் பண்டிட். வாங்கின கையோடு திரும்பினால் கம்பி வலையில் கீழ் பாகத்தில் சின்னக் கையொன்னு! மெள்ள நீட்டின கையில் முட்டாய்களை வச்சதும் சரேல்னு கையை இழுத்துக்கிச்சு ஒரு பாப்பா நேயுடு. குழந்தை ராமனுக்கேத்த சைஸில் குழந்தை அனுமன் !!!
எப்படி இங்கே நமக்கு ஏகாந்த ஸேவை கிடைச்சதுன்னு மனசு விம்மியது நெஜம்! யாரும் இல்லை. நின்னு நிதானமா இன்னும்கூடப் பார்க்கலாம். அட்லீஸ்ட் பண்டிட்டுக்குப் பேச்சுத்துணை:-)
இன்னொருக்காப் பார்வையை விரட்டி ராம் லாலாவை ( குழந்தை ராமன்) ஸேவிச்சுக்கிட்டு நடையைக் கட்டினோம்.
போனவழியே திரும்பமுடியாது. மறுபடியும் இடம் வலம் என்று கம்பிப்பாதையில் போய் கடைசியில் ஒரு தடுப்பில் இருந்த வாசலுக்கு வந்தால் ரெண்டு ஆர்மி ஆட்கள் இருந்தாங்க. இடது பக்கம் போகச் சொல்லி கை காமிச்சாங்க.
வலது பக்கம் திரும்பிப் பார்த்தால் அந்தத் தடுப்புக்குப் பின்னால் ஏராளமான கூடாரங்கள். கொஞ்ச தூரத்தில் கல்யாண வீட்டுச் சமையல் போல் பெரிய பாத்திரங்களும் கோட்டை அடுப்புமா இருக்கு. ஆர்மி கா ரஸோயி:-)
சாமியைப் பார்த்தீங்களான்னு கோபாலிடம் கேட்டதுக்கு, சாமி எங்கெருக்கு? ஆர்மிதான் இருக்குன்னார். (பதிவின் தலைப்பு : உதவியவர், நம்ம கோபால் !!!)
மூணாயிரம் ராணுவ வீரர்கள் இங்கே டேராப் போட்டுருக்காங்களாம். ( ஓ ...ஆர்மி குவிக்கப்பட்டதுன்னு அடிக்கடி தினசரியில் வாசிக்கிறோமே... இப்படியா!!!)
சுத்திமுத்தும் கண்ணை ஓட்டினாலும் மசூதியின் ஒரு சின்ன பாகம் கூடக் கண்ணுக்குப் புலனாகலை. அப்படி பாதையை அமைச்சுருக்காங்க போல! அப்புறம் என்ன ப்ரச்சனையாம்? க்ருஷ்ணஜென்ம பூமி மதுராவிலும் சரி, நம்ம காசி விச்சு கோவிலிலும் சரி , கோவிலையொட்டியே மசூதி பளிச்ன்னு கண்ணுக்குத் தெரியும்விதமாத்தானே இருக்கு. காஞ்சியிலும் பரமபதநாதன் கோவிலுக்கு அடுத்து மசூதிதானே? அங்கெல்லாம் மக்கள்ஸ் ஒத்துமையாத்தானே இருக்காங்க. என்னமோ போங்க:(
இன்னும் கொஞ்சதூரம் போய் ரெண்டு திருப்பத்தில் 'ராம்ஜென்ம பூமி' வேலிக்கு வெளியே வந்து சேர்ந்தோம். நம்ம ஆனந்த் அங்கே! இன்னொரு பையனுடன் பேசிக்கிட்டு இருந்தவன், நம்மைப் பார்த்ததும் ஓடி வந்தான். வாட்ச் எடுக்கப்போனோம். எந்தக் கடைன்னு தெரியாமல் ரெண்டு நிமிசம் முழிச்சுட்டுக் கடையைக் கண்டு பிடிச்சார் கோபால். வாட்ச் திரும்பக் கிடைச்சது. இருவது ரூபாய் வாடகை.
மறுபடி கார் நிறுத்தம் வரை நடையோ நடை. உள்ளே சுத்துனது, வெளியே நடந்ததுன்னு கணக்கு வச்சால் ஒரு ஏழெட்டு கிலோ மீட்டர் இருக்கும் போல!
தொடரும்.............:-)
PINகுறிப்பு: கையிலே கேமெரா இல்லையேன்னு நான் துடிச்சது எனக்குத்தான் தெரியும்! அதுக்காகப் பதிவை மொட்டையா விடமுடியுமா?
சுட்டபடங்கள் சில போட்டுருக்கேன் (குறிப்பா நம்ம ரிஷானுக்காக!)
2. அயோத்யான்னதும் ராமனின் நினைவு கட்டாயம் வரத்தானே செய்யுது. இது ஒரு காலத்தில் ராமனின் கால் பட்ட பூமி என்பது மனசுக்குப் பரவசம் ஊட்டுது இல்லையா? அப்ப ஊரில் எங்கே ராமனுக்கான சிறப்புக்கோவில் கட்டுனா என்ன? சண்டை சச்சரவு, மதக்கலவரம் எல்லாம்வேணாமே:(
எப்படியோ இந்தப் பதிவு வரும்நாள், இந்தியாவில் புது ஆட்சி பதவிக்கு வர்றநாளா அமைஞ்சு போச்சு. மதத்தைப் பின் தள்ளிட்டு, மனுசருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நல்ல அரசாக அமையணும். மனுசனா அவதரிச்சு வாழ்ந்து மறைந்த ஸ்ரீராமர், கோச்சுக்க மாட்டாருன்னு உறுதியா நம்பறேன்!
புது அரசுக்கு நம் நல்வாழ்த்து(க்)கள்.

24 comments:
என்னமோ போங்க... நல்லது இனி நடந்தா சரி தான்...
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
இன்னிக்கு ஆளில்லாத கடையில் 'டீ' ஆத்துவதாப் போச்சே:-)))
ஒருவனே தேவன்! உங்க ஆதங்கம் எல்லாம் சரியானதே.
அன்பின் டீச்சருக்கு,
புகைப்படங்களுக்கு நன்றி டீச்சர். :-)
கவலையே பட வேண்டாம். அடுத்த முறை போகும்போது கேமராவுக்கு அனுமதி கிடைக்கும் பாருங்க...
ஏழெட்டு கிலோமீற்றர்கள் நடையா? :( அதுவும் பொட்டல்வெளியில் நடை, வேண்டாமென்றாகி விடும். சுற்று வர ஏதாவது இருந்தால் பார்த்துக் கொண்டாவது நடக்கலாம்.
இந்தக் காலத்தில் ஏன் இப்படி? எல்லையிலிருந்து ஆட்களைக் கூட்டிப் போக அவர்களே ஏதாவது வண்டிகளை ஏற்பாடு செய்யலாம். சிறு கட்டணத்தை அறவிடலாம் இல்லையா?
//மதத்தைப் பின் தள்ளிட்டு, மனுசருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நல்ல அரசாக அமையணும்.//
நானும் பிரார்த்திச்சுக்குறேன் டீச்சர்.. அந்தக் குழந்தை ராமர் ஃபோட்டோவை நெட்டில் தேடினேன்..கிடைக்கல..பார்க்க ஆசையாயிருக்கு டீச்சர் :(
என்னைக்கோ நடந்ததுக்கு இன்னைக்குப் பழி வாங்குறது சரியான்னு தெரியல. ஆனா மக்கள் உணர்ச்சிவசப்பட்டவர்கள். அதுவும் நம்பிக்கைன்னு வரும் போது ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டவங்க.
ஆப்கானிஸ்தான்ல பாமியான் புத்தரை இடிச்சதுக்கும் இங்க மசூதியை இடிச்சதுக்கும் ஒரே காரணம் தான். மதவெறி.
அங்க கோயில் கட்டுனாத்தான் சாமி ஒத்துக்குமா? சாமிக்கு தீட்டு ஆயிரும்னு சொல்ற மாதிரி இதுவும் அசட்டுத்தனமா இருக்கு.
எந்தப் பேரைச் சொல்லிக் கும்பிட்டாலும் எல்லாம் ஒன்னுதான். எப்போ மக்களுக்குப் புரியுமோ!
ஆனாலும் டீச்சர்... உங்க ரெண்டு பேர் எனர்ஜியையும் பாராட்டுறேன். இத்தனை எடத்துக்கும் ஆர்வத்தோட போறது லேசில்ல. அந்தப் பரந்தாம பார்த்தசாரதி உங்களுக்கு எப்பவும் துணையிருக்கட்டும்.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா நின்சேவடி செவ்வித் திருக்காப்பு!
ராமர்ன்னாலே கொஞ்சம் பெரிய வளர்ந்த ,தந்தை சொல்
தவறாத, சீதையின் மணாளனாக உருவகப்படுத்தி இருப்பதால், குழந்தை ராமனை கண்கள் தேடியது :( கூகுளிலும் கிடைக்கவில்லை என்று புரிந்துகொண்டேன் .
மதம், சாமிங்கற பேர்ல கடவுளர் இருக்கும் இடத்தை இடிக்ககூடியவர்கள் எப்போ தான் பூண்டோடு அழிந்து போவார்களோ ... என்ற ஆதங்கம் எழுவதை தவிர்க்கவே முடியலை . உங்களைப்போலவே மொத்த இந்தியாவும் அதே நம்பிக்கையோடு & ,சிறிது பயத்தோடு தான் பதவி ஏற்ப்பு விழாவை பார்க்கிறோம் . பாப்போம் நல்லது நடக்கட்டும் நல்லது மட்டுமே நடக்கணும் .
மதத்தைத் தாண்டி மனிதநேயம் வளரவேண்டும். தீர்க்கமான அற்புதமான எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள். மதத்தின் பெயரால் பிளவுபட்டுக் கிடக்கும் நெஞ்சங்கள் ஒவ்வொன்றும் உணர்ந்து திருந்தினால் வாழ்க்கை எவ்வளவு அற்புதமாக இருக்கும்?
அரசியலையும் ராமரையும் முதலில் பிரிக்க வேண்டும்
ஒரு ஊரை மேய்க்க வக்கில்லை, இந்தியா பூராவும் எப்படி மேய்க்கப் போறாங்க?
வாங்க ராமலக்ஷ்மி.
புலம்புவதைத் தவிர வேற வழி இல்லையே:-(
வாங்க ரிஷான்.
ஆறுதலான பதிலுக்கு நன்றீஸ்.
ராணுவம், வண்டி ஏற்பாடு செஞ்சால் அது இன்னுமொரு கஷ்டமாப்போய்விட வாய்ப்பு உண்டு!
பொட்டல்வெளியா வச்சிருக்கவும் அவுங்களுக்கொரு காரணமுண்டுதானே:(
படம்..... எனக்கும் கிடைக்கலை:(
பேசாம ஒரு குழந்தை க்ருஷ்ணனின் படத்துக்கு ராமன் தலையை ஒட்டவச்சால் உண்டு.
ஃபோட்டோ ஷாப் வேலை:-)
வாங்க ஜிரா.
//எந்தப் பேரைச் சொல்லிக் கும்பிட்டாலும் எல்லாம் ஒன்னுதான். எப்போ மக்களுக்குப் புரியுமோ!//
அதே அதே.
எம் பேரு மாணிக்கம்.ஆனால் பாம்பாயில் எனக்கு வேறொரு பேர் இருக்கு ...பாட்ஷா!
நாலாயிரத்தின் முதலாயிரத்தில் முதல்பாட்டு எம் பெருமாளுக்கே!
அவனருளால்தான் எல்லாமே!
வாங்க சசி கலா.
நம்பிக்கை இல்லைன்னா வாழ்வே இல்லை.கூடவே கொஞ்சம் பயமும் வேணும்தான்.
பயபக்தி:-)))
வாங்க கரந்தை ஜெயக்குமார்.
சரியாச் சொன்னீங்க!!!
வாங்க பழனி கந்தசாமி ஐயா.
அதான். அதனால்தான் இப்ப வெறும் 44 கிடைச்சுருக்கு.
வாங்க கீதமஞ்சரி.
நாமெல்லாம் இவ்ளோ தூரத்துலே இருந்தாலும்,அங்கெ ஒன்னுன்னால் நெஞ்சம் பதைக்கத்தானே செய்யுது!
ஆஹா ராம். பால ராம். அவன் பலராமனாக இருந்தே பொறுமை காத்தான். அவன் பக்தர்களுக்குப் பொறுமை கிலோ என்ன விலைன்னு கேட்க வச்சுட்டான். கோபம் தலைக்கேறினா என்ன நடக்கும்னு இரு பிரிவினரும் சாட்சி. அந்த சாமியாப் பார்த்துக் கண்ணு கொடுக்கணும். நீங்க பரவசப் படுவது எனக்கே ராமனைப் பார்த்த திருப்தி. எல்லாம் சரியாக அவனே சரண்.
ராம் லலா.... இத்தனை பிரச்சனைகள் இருப்பதை பார்த்துட்டு அந்த குட்டி ராம் லலாவும் சும்மா தான் இருக்கார்! :(
இதில் இறைவன் நம்பிக்கையை அரசியலாக்கி மனிதர்கள் நிறைய விளையாடுகிறார்கள் என்பது தான் உண்மை.
சாமி எங்கே இருக்கு ஆர்மி தான்! நல்ல தலைப்பு!
டீச்சர் நலமா? பாபர் மசூதி இடிப்பு கால கட்டத்தில் இந்தியா டுடே ராமர்,பாபர் இடத்தை என்ன செய்யலாம் என பொது கருத்துக்களை கேட்டது.பெரும்பாலான கருத்துக்கள் அதனை பொது நல மையமாக செய்து விடுவதுதான் நல்லது என்ற கருத்தை வெளியிட்டார்கள்.
இஸ்ரேலின் யூத,பாலஸ்தீனிய பிரச்சினை இடமான ஜெருசலம் மாதிரியான இடம் ராமர்,பாபர் நிலம்.இடித்த மசூதியை திரும்ப கட்டினாலும் பழைமை போனது போனதுதான்.இதில் ராமர் கோயில் கட்டினாலும் இந்துத்வாக்களின் கோயிலுக்கான புனிதம் வெளிப்படப்போவதில்லை.
மதக்குண்டர்கள்...(குண்டு வைப்பவர்களை அப்படித்தானே அழைக்கமுடியும்) இரு நம்பிக்கையாளர்களிடமும் இருக்கிறார்கள்.குண்டர்களின் மத்தியிலும் இந்தியாவின் செகுலரிசத்தை காப்பாற்றுபவர்கள் உங்களைப் போன்றவர்களும்,பின்னூட்ட கருத்து சொன்னவர்களுமே.
எனக்கு ஒரு பின்னூட்டம் போடவே ஒரு மணி நேரமாகுது.நேரம் பத்தலை டீச்சர்.
வாங்க வல்லி.
மனசுக்குள் சோகம் இருந்தாலும், அவன் பிறந்த மண்ணை மிதிச்சபோது பரவசம் வந்ததும் உண்மையே!
ஏன் புத்தி கொடுக்காம இருக்கார் இந்தக் கடவுள் என்று கோபமும் வரத்தான் செஞ்சது:(
வாங்க வெங்கட் நாகராஜ்.
தலைப்பு உபயம் நம்ம கோபால்:-)))
அரசியல் அரசியல்... பாழும் அரசியல் யாரைத்தான் விட்டு வைச்சது:(
வாங்க Nat.
நலமா? ரொம்ப நாளாச்சே இந்தப்பக்கம் பார்த்து!!!!
நல்லவேளை...கோவிலை வேற ஒரு இடத்தில்தான் கட்டப்போறாங்க.
தப்பிச்சார் சாமி:-))))
அருமை
வாங்க ஜோஸஃபின் பாபா,
வருகைக்கு நன்றி !
Post a Comment