Monday, May 12, 2014

மௌரியர்கள் ஆட்சியில் அசோகர் கட்டுன ப்ரமாண்டம்............

தாமேக்கா, தம்மேக்கா,  இல்லை தார்மீக்கா இப்படிமனசு பெயரை ஆராய்ச்சி பண்ணிக்கிட்டே இருக்கு.  ஹிந்தி மொழியில்  தாமேகான்னுதான் இருக்கு.  தாமேக் ஸ்தூப்! ஆனால்  கல்வெட்டு ஒன்னில் இதுக்கு பழைய காலத்துப்பெயர்   தர்ம சக்ர ஸ்தூபா 'ன்னு  வெட்டி வச்சுருக்காங்க.  ஆங்கிலத்தில் இருக்கு எழுத்து என்பதால் நமக்குப் படிச்சுத் தெரிஞ்சுக்க முடியுது. இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்ட சமயம் எழுதி வச்சதா இருக்கணும். இல்லேன்னா.........   ஸ்தூபி கட்டுன காலத்துலே இங்கிலிபீஸ்  நம்ம நாட்டுக்குள்ளே வந்துருக்க சான்ஸே இல்லை கேட்டோ!



எல்லாம் கி.மு. காலத்து சமாச்சாரம் பாருங்க....  ஆழ்ந்து கவனிச்சால்தான் கொஞ்சமாவது புரியும். இதுலே கைடு வேற விட்டுட்டுப் போயிட்டார்.  நல்ல'வேலை'யா  இந்திய அரசின் தொல்லியல் துறை ரெண்டு தகவல்போர்டும் வச்சு, அங்கங்கே கொஞ்சூண்டு விளக்கமும் வச்சுருக்காங்க.

தொல்லியல் துறையின் பாதுகாப்பில் இருக்கும்  புராதனச் சின்னங்கள் உள்ள இடங்களுக்குள் போய் பார்க்கணுமுன்னா ஒரு சிறிய கட்டணம்  உண்டு. நாடு முழுக்க  இவுங்க வசம் இருக்கும் எல்லா  இடங்களுக்கும் வெறும் அஞ்சே   ரூபாய்தான், தாஜ்மஹலைத் தவிர. அங்கே மட்டும் 20 ரூ வாங்கறாங்க. (அதிசயம் பாருங்க.... அதான் விலை ஜாஸ்தி!)  எதாவது புராதனச் சின்னம் பாதுகாக்கப் படுதுன்னா அதைச் சுத்திவர 200 மீட்டருக்கு ஒரு லட்சுமண ரேகை போட்டுருது  தொல்லியல் துறை.  அதுக்குள்ளே போய்  மக்கள்ஸ் யாராவது  'வேலை' காமிச்சாங்கன்னா ரெண்டு வருசம் 'களி' தின்னணும். கூடவே ஒரு லட்ச  ரூபாயும்   அபராதம்.

சுற்றுலாப் பயணிகள் திமுதிமுன்னு  பஸ் பஸ்ஸா வந்து இறங்குறாங்க.  புத்தமதக்காரர்கள் புண்ணிய  யாத்திரையா வந்து போறது ஒருபக்கமுன்னா,  நம்மைப்போல  காசி யாத்திரை வர்ற கூட்டமும் இவ்ளோ பக்கத்துலே இருக்கும் ஊராச்சேன்னு எட்டிப் பார்த்துட்டுத்தான் போறாங்க. வருசம் முழுசும் யாத்திரைக்கார் கூட்டமே!  ஒரு புத்திமுட்டுமில்லாமல்  ஆட்டோவில்கூட வந்து பார்த்துட்டுப் போயிடலாம். வெறும் 13 கிமீ தூரம்தான்  காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து!!!


நாமும்  டிக்கெட் வாங்கிக்கிட்டு   உள்ளே நுழையறோம். வாசல் கேட் கூட  சக்கரத்தோடு  அழகா இருக்கு!   சக்கரம்தான்   இங்கே தீம் ! முன்னொரு காலத்தில் பெரிய புத்த மடமா இருந்த இடம். அகழ்வாராய்ச்சி நடத்தி புதையுண்டு இருந்தவைகளை வெளிக்  கொணர்ந்துருக்காங்க.  அருமையான சுட்ட செங்கல் தளங்கள்.  பசுமையான புல்வெளி.

புத்த மடமா?  அதுக்கும் முந்தி , கி.மு. ஆறாம் நூற்றாண்டுலே இங்கிருந்த சமணர்களின் மடங்கள் இவை.  (அப்ப புத்தர் பிறக்கலை கேட்டோ!)  சமணமதம் பரவலாக  இருந்த காலக் கட்டம். கிட்டத்தட்ட மூவாயிரம் சமண பிக்குகள்  இங்கே இருந்துருக்காங்களாம்.  புத்தர்,  தன் மனைவி மக்களை விட்டுட்டு, ஞானம் தேடி  அலைஞ்சப்ப இங்கே  வந்துருக்கார்.   கொஞ்சநாள் இங்கேயே தங்கி, சமணர்களின் சந்நியாச வாழ்க்கைமுறைகளைப் பார்த்து இது 'தனக்கானதல்ல'ன்னு முடிவு செஞ்சுக்கிட்டு அங்கிருந்து கிளம்பி இருக்கார்,  இவுங்க உண்ணாநோன்புன்னு இருந்தும் பல தவங்கள் புரிந்தும் தங்கள் உடலை வருத்திக்கிறாங்க.  உடல் நலியும்போது மனமும்  சக்தி இழந்து போகுதுன்றது அவரது  அவதானிப்பு.

கயாவுக்குப்போய்  அங்கே சுற்றித் திரிந்தபோது   ஃபால்குனி  நதிக்கரை வரை போயிட்டார். அங்கே வளர்ந்திருந்த ஒரு பெரிய அரசமரத்தின் (போதி மரம்)கீழ் உக்கார்ந்து   மனசை ஒருமுகப்படுத்தி சீரியஸா தவம் செஞ்சுருக்கார்.   மூணு பகலும் மூணு இரவும் அதே நிலை.  ஞானம் கிடைச்சது  மூணுநாள் ஆனதும்!   அப்புறம்தான்  இந்த இடத்துக்கு  தர்மபோதனை கிடைச்ச இடம் என்பதால் 'போதி கயா' என்ற பெயர்  வந்துருக்கு. இது கயா  என்ற ஊரில் இருந்து  13 கிமீ தூரத்தில் இருக்கு.

கயா,  ஹிந்துக்களுக்குப் புனிதமான தலம். இங்கே விஷ்ணு பாதம் இருக்கு என்பதால் இங்கே வந்து  குடும்பத்தில்  இறந்து போன மூத்தோர்களுக்கு  நீத்தார்கடனாக  பிண்டம் கொடுத்து பூஜை செஞ்சுட்டுப்போறாங்க.  அக்ஷய வடம் என்ற ஆலமரம் கயாவிலிருக்கு. அதன் வேர் ப்ரயாகை(அலஹாபாத்)  நடு உடம்பு காசி,  இலைகளுள்ள  நுனிபாகம்  கயாவிலிருக்குன்னு  ஐதீகம்.

ஞானம் அடைஞ்சதுக்கு அப்புறம் புத்தர் அஞ்சு வாரம் கழிச்சு  மீண்டும் ரிஷிப்பட்டணம்(ம்ருகதயா வனம்)  வந்துருக்கார். அதே சமண மடத்தில் இருந்த சமணர்களுடன் வாதம் செஞ்சு  வென்று  அங்கிருந்த பலரை தன் வசமாக்கினார். அதில் இருந்தவர்களில்  ஐவர் ,இவரை குருவாக ஏற்றதும் அவர்களுக்கு  தர்மத்தையும்  தன் ஞானத்தால் அறியப்பட்ட சமாச்சாரங்களையும் போதிச்சார்.(அந்த ஐந்து சிஷ்யர்களுக்கு  உபதேசம் செய்யும் சிலையைத்தான்  கொஞ்ச நேரமுன்  மூலகந்த குடி விஹாரில் போதி மரத்தடியில் நாம்  'மூலகந்தகுடிர் விஹார்    சாரநாத்' பதிவில் பார்த்தோம்.)

ஆதியில் அந்த  சமண மடம்   இருந்த இடத்தில்தான் இப்போ நிக்கறோம்.   சமணர்களின்  குருக்களான  தீர்த்தங்கரர்கள்  மொத்தம் 24 பேர். அதில் பதினோராவது தீர்த்தங்கரர் இங்கேதான்  ரிஷிபட்டணத்தில் பிறந்தார் என்கிறார்கள். ஆமாம்னு சொல்வது போல் ஒரு சமணக்கோவில் கோபுரம் தலைதூக்கி எட்டிப் பார்க்குது. அதை விட்டுட்டு இந்தப்பக்கமாவே  சுற்றுச்சுவர் கட்டி இருக்காங்க.

இது   சமண தீர்த்தங்கரர்களில்  11 வது தீர்த்தங்கர் ஷ்ரேயன்ஸ்நாத் பகவானின்  சிலை. சமணர்களும் சக்கரம்  வச்சுருக்காங்க. அதிலும் இந்த ஷ்ரேயன்ஸ்நாத்,  இக்ஷ்வாகு  வம்சத்தில் வந்தவராம். (ஸ்ரீ ராமரின் வழி?)  இவரும் பத்மாசனத்தில்தான் உக்கார்ந்துருக்கார்.  சமணம் பௌத்தம் ரெண்டுமே  ஏறத்தாழ ஒன்னுதானோன்னு  எனக்கு ஒரு சம்ஸயம்.  உணவுப்பழக்கம்  மட்டும் வெவ்வேறன்னு  நினைக்கிறேன்., கொஞ்சம் உள்ளே போய் ஆழ்ந்து  தெரிஞ்சுக்கணும் என்ற ஆசை வருது.  ஆனால் ஆசையே துன்பத்துக்குக் காரணமுன்னு புத்தர் சொல்லிட்டாரேன்னு.........  கொஞ்சம் யோசனை!

சமண மடம் புத்த மடமான பிறகுதான் இங்கே அசோகர் வந்துருக்கார்.  தன் பங்குக்கு ஒரு பெரிய  நினைவுச்சின்னம் புத்தருக்கு அமைக்கணுமுன்னு தோணுச்சு.  ஸ்தூபின்னா நாம் தூணென்றுதான் நினைக்கறோம். ஆனால் அவருக்கு ஒரு கட்டிடமே ஸ்தூபியா இருந்துருக்கு. அந்தக் காலத்து சுட்ட செங்கல் வச்சு  வட்டமா மேற்புறமும்,  அடிப்பாகத்துக்குக் கருங்கல்லுமா கட்டி இருக்கார்.

அது போகுதுநெடுநெடுன்னு ஒரு  ஒரு  28.3 மீட்டர் உசரம்.  அடிப்பாகத்தோட சுத்தளவு  33.53 மீட்டர்.  கீழே  அகலம் அதிகமா இருக்கு ஒரு  இருவது மீட்டர்   உயரம்வரை.  அதுக்குமேலே குறுகலாப் போகுது.  பெரிய அண்டாவைக் கவுத்துப்போட்டு, அதுக்கு மேலே   மீடியம் சைஸ் அடுக்கு குண்டாவை வச்சதுபோல்! (தெரிஞ்ச உதாரணம்தானே சொல்லமுடியும்?)

இம்மாம் பெரிய கட்டிடத்துக்குள்ளே (ஒரு வேளை  சமணர்களைப் புதைச்சுருப்பாங்களோன்ற  எண்ணம் வந்திருக்குமோ? )  என்னதான் இருக்கும் என்று ஒரு சமயம் அலெக்ஸாண்டர்  கன்னிங்ஹாம் என்ற சரித்திர ஆராய்ச்சியாளர் (இவர்தான் இந்தியத் தொல்லியல் மரபின் முன்னோடி),  ஸ்தூபிக்கு மேலிருந்து துளை போட்டு நூறடி வரை இறங்கிப்பார்த்துருக்கார்.  ஒரு பேழையில் புத்தரின் எலும்புகள் சிலதும் சில பூஜைப்பொருட்களும்தான் இருந்துச்சுன்னு  சொல்லி இருக்கார். மேலே போகும் ஸ்தூபி வேலை இன்னும் முடியாமல் இருக்குன்னு சொன்னதும் இவரே!

செங்கல்கள் எல்லாம் தரத்தில்  அதிசூப்பர் என்பதால்  ஊர்சனம் அப்பப்ப வந்து  கொஞ்சம் எடுத்துக்கிட்டுப் போயிருக்கு. நம்ம காசிராஜா கூட வந்து செங்கல் கொண்டு போனாராம்!  எப்படி பெயர்த்து எடுத்தாங்க?  அதான்  முகலாயர் ஆட்சியில்  காசி விஸ்வநாதர் கோவிலை இடிச்சுப்போட்டப்ப, கையோடு இங்கேயும்  வந்து  இடிச்சுத் தள்ளுனாங்க பாருங்க. அந்தக் குவியலில் இருந்து ஆளாளுக்குக் கொஞ்சம். இப்ப நாம் பார்ப்பது போனது போக மிச்சம்.

ஸ்தூபியைச் சுத்தி  நடைமேடை போட்டுருப்பதால் நமக்கும் வலம் வர முடியுது.   அகழ்வாராய்ச்சி செஞ்சபிறகு  ஸ்தூபி வரை போகவும் நல்லதா கல்பாவிய பாதை அமைச்சுருக்காங்க.  ரெண்டு பக்கமும் குட்டியாக் கம்பிவேலியும் அதை உள்ளே ஒளிச்சுவைக்கும் செடிகளுமா  ரொம்பநீட்டா இருக்கு.


எங்கெங்கே என்ன இருக்கு/ இருந்துச்சுன்ற வரைபடம் கூட வச்சுருக்காங்க.
ஸ்தூபியில் ப்ராம்மி எழுத்துக்களில் விவரங்களும் சித்திரங்களுமா  இருக்கு.  பக்தர்கள் இதிலும் தங்க ரேக்கை ஒட்டிவச்சுட்டுப் போயிருக்காங்க. ஸ்தூபியைப் பழுது பார்க்கும் வேலை நடக்குது. சாரம் கட்டி ஆட்கள் மேலே போய் வேலை  செய்றாங்க.


கம்பி வேலி ஒன்னு போட்டு அதுலே  கலர்க்கலரா  ப்ரேயர் ஃப்ளாக் ( Prayer Flag) என்னும்  ஜெபக்கொடிகளைக் கட்டி விட்டுட்டுப் போறாங்க பக்தர்கள். ஊதுவத்திக் கட்டுகள் கூட இருக்கு.  அவுங்களோட ப்ரார்த்தனைகள் எப்படின்ற விவரம் எனக்கில்லை:(

இந்திய அரசு இலச்சினை (நாலு சிங்கம்)  இருக்கும் அசோகர் தூண்கூட  இந்த வளாகத்தில்தான் இருக்கு.  ஜஸ்ட்  பாதித்தூண் மட்டுமே.  உடைச்சுப்போட்ட  மேல்பாகத்தை ம்யூஸியத்துக்குள்ளே வச்சுருக்காங்க.

காலி இடங்களில்  அழகுக்காகப் பூச்செடிகள் நடும் வேலையை உள்ளூர் தொழிலாளர்கள்  செஞ்சுக்கிட்டு இருக்காங்க.  வேலையில் கவனமே இல்லாமல் சுற்றுலாப்பயணிகளை வேடிக்கை பார்ப்பதிலேயே முக்காவாசி நேரம் போகுது.  அங்கே அந்தப் பக்கம் பார்க்கும் பயணிகளை இங்கே வாங்கன்னு கைநீட்டிக் கூப்பிட்டுக் 'கை  நீட்டறாங்க' :(

இதைச் சுத்திப்பார்த்ததும் வெளியே இருக்கும்  தொல்லியல் துறை ம்யூஸியத்துக்குள் போனோம்.  இங்கே படம் எடுக்க அனுமதி இல்லை.  தோண்டி எடுத்த பொக்கிஷங்களும், சரித்திரச்சான்றுகளும். சிற்பங்களுமா அட்டகாசமா இருக்கு.

தொல்லியல்துறையின்  அருங்காட்சியகங்களில் இதுதான் வயசில் மூத்தது.  அபூர்வசரித்திரச் சான்றுகளைப்பாதுகாக்கலாமேன்னு  1904 இல்  தனிக் கட்டிடம் கட்ட ஆரம்பிச்சு 1910 இல் பொதுமக்களுக்காகத் திறந்து வச்சுருக்காங்க.

சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கு இது  வெல்லம்!  ஏகப்பட்ட சமாச்சாரங்கள். வெள்ளிக்கிழமை லீவு.  ஞாபகம் வச்சுக்குங்க.

வழக்கம்போல் நின்னு நிதானிக்க நமக்கு நேரம் இல்லை:(  வாசலில் இருக்கும் கடைகளில்  கைக்கடக்கமான புத்தரை  கொலுவுக்காக வாங்கிக்கிட்டுக் கிளம்பினோம்.

தொடரும்..............:-)





23 comments:

said...

அருமையான படங்கள்.

said...

பயணக்கட்டுரை எழுதவதில் தங்கள் பாணியே தனி சிறப்புதான்! பயணம்
போவதோடு பயன் தரும் வரலாற்றுச் செய்திகளையும் தருவது பாராட்டத் தக்கது!

said...

//அங்கே அந்தப் பக்கம் பார்க்கும் பயணிகளை இங்கே வாங்கன்னு கைநீட்டிக் கூப்பிட்டுக் 'கை நீட்டறாங்க' ://



யார் தான் கை நீட்டல்லே சொல்லுங்க பார்ப்போம்.

வாமனாவதாரத்திலே பலி கிட்டே பெருமாள் கை நீட்டினார்.

க்ருஷ்னவதாரதத்திலே கர்ணன் கிட்டே கை நீட்டினார்.

பாவம்.

பெருமாளுக்கு தீபம் காட்டற பட்டர் தட்டை நீட்டினா மட்டும்
நமக்கு கோபம் வர்றது.

பிச்சை எடுப்பவனும் பெருமாள்.
பிச்சை போடுபவனும் பெருமாள்.
பிச்சையே பெருமாள். குசேலர் கதை அதைத்தானே சொல்லுது.

எல்லாம் பெருமாள் செயல்.

சுப்பு தாத்தா.

www.subbuthatha72.blogspot.com

said...

// பெரிய அண்டாவைக் கவுத்துப்போட்டு, அதுக்கு மேலே மீடியம் சைஸ் அடுக்கு குண்டாவை வச்சதுபோல்!//

அம்மா,

உங்க கற்பனை புல்லரிக்க வைக்குது.

//கொஞ்சம் உள்ளே போய் ஆழ்ந்து தெரிஞ்சுக்கணும் என்ற ஆசை வருது. ஆனால் ஆசையே துன்பத்துக்குக் காரணமுன்னு புத்தர் சொல்லிட்டாரேன்னு......... கொஞ்சம் யோசனை!//

புத்தருக்கு பிறகு அவர் சொன்னதை பாலோ பண்னுற ஒரே ஆளு நீங்கதான். :))

வாழ்த்துக்கள்.

said...

எல்லாம் கி.மு. காலத்து சமாச்சாரம் பாருங்க, புரிய லேட்டகுமாக்கும்...!

said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

said...

துளசி கோபால் மேடம்,

//// பெரிய அண்டாவைக் கவுத்துப்போட்டு, அதுக்கு மேலே மீடியம் சைஸ் அடுக்கு குண்டாவை வச்சதுபோல்!////

ஆகா அகழ்வு ,வரலாற்றிலும் இறங்கிட்டிங்களா , அதை நாம தோண்டலாம்னு வச்சிருந்தது ,அதுக்கும் போட்டியா அவ்வ்!

இந்த கட்டிடம் அக்பர் கட்டியது என படிச்சேன் , ஹிமாயுன் ,ஷேர்ஷா சூரியிடம் தோற்று தலைமறைவாக ஓடிய போது புத்த பிக்குகள் தான் அடைக்கலம் கொடுத்தார்களாம், எனவே அதன் நன்றிக்கடனாக அக்பர் இந்த ஸ்தூபியை கட்டிக்கொடுத்தார்னு படிச்சேனே, அதனால் தான் பின்னாளில், அங்கிருந்த பலக்கட்டிடங்களை அவுரங்க சீப் காலத்தில் இடிக்கப்பட்டப்போதும்,இதனை விட்டு வச்சார்னும் கேள்வி.

ஒரு வேளை அக்பர் பாதியில் கட்டி முடிக்கப்படாமல் இருந்த ஸ்தூபியை கட்டிக்கொடுத்திருக்கலாம்.

செங்கல்லுக்காக மட்டுமில்லை ,புத்தரின் போதனைகள் எல்லாம் தங்க ஆல் இலையில் மொத்தமாக எழுதி புதைச்சு வச்சிருந்தாங்க , அதே போல புத்தர் மற்றும் சீடர்களின் அஸ்தி எல்லாம் தங்கப்பேழையில் தான் வைக்கப்பட்டன, எனவே பிற்காலத்தில் தங்கவேட்டை ஆடிய ஒரு கும்பலே பலவற்றையும் இடித்தன என படித்துள்ளேன்.

said...

விளக்கமான வர்ணனை.

said...

வாங்க குமார்.

நன்றீஸ்.

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

இப்படியெல்லாம் பெருமாளும் செஞ்சுட்டாரா!!!!

அட ராமா!!!!!!

said...

வாங்க குட்டிபிசாசு.

அண்டா, குண்டான்னு தெரிஞ்சதைத்தானே சொல்ல முடியும்:-)))

ஆசை மட்டும் விட்டுத் தொலையாதான்னு இப்ப ஒரு ஆசை வந்துருக்கே:-))))

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

எஸ்ஸூ. ரைட்டோ ரைட்டூ:-)

said...

வாங்க நிகண்டு.

செஞ்சுருவோம்!

said...

வாங்க வவ்வால்.

நலமா? ரொம்பநாளாக் காணோமே! இப்ப எந்த மரம்?

மௌரியர் காலத்துச் செங்கல் என்று உறுதியாச் சொல்றாங்க.

அக்பர் என்றால்.... 16 ஆம் நூற்றாண்டு. அசோகர்தான் கிமு மூணு.

காசி விஸ்வநாதர் கோவிலைத்தான் அக்பர் தன் நிதி அமைச்சர் மூலமாகக் கட்டிக்கொடுத்தார்னு சொல்றாங்க.

தங்க ஆல் இலையா? அரச இலை இல்லையா?

வரலாற்றைப் பொறுத்தவரை உண்மையான சரித்திரம் இன்னும் எழுதப்படலை என்பது எவ்ளோ உண்மை பாருங்க.

இங்கேதான் 'தாடி' வந்து நிக்கறார்.... எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் ......

மெய்ப்பொருள் உண்மையாகவே அரிதாத்தான் இருக்கு இல்லையோ!!!

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

பேராசிரியர் சொல்லுக்கு அப்பீல் ஏது!

நன்றிகள்.

said...

வாங்க புலவர் ஐயா.

சரித்திர டீச்சரா இருந்துக்கிட்டு, கொஞ்சமாவது சரித்திரத்தைத் தொடாமல்போனால் நல்லாவா இருக்கும்?

அதான் லேசா ஒரு கோடி... காமிக்கும் வழக்கம்.உண்மையான ஆர்வம் இருப்பவர்கள் உள்ளே போய் தேடிப்பார்க்கமாட்டங்களா என்ற நப்பாசையும் உண்டு:-)

said...

துளசி கோபால் மேடம்,

அவ்வப்போது படிக்கிறது தான் ,நீங்கப்பாட்டுக்கு சிங்கப்பூர் ,மலேசியானு எதாவது எழுதி வச்சிடுறிங்க என்ன சொல்லனு பார்க்கிறதோட சரி அவ்வ்!

மரம் விட்டு மரம் தாவினாலும் 'வலையில சிக்கி" கிடக்கும் வவ்வாலாகத்தான் இருக்கோம் -:))

#தம்மேகா ஸ்தூபா படம் பார்த்ததும் அக்பர் கட்டிய ஸ்தூபானு நினைச்சிட்டேன் அது வேற தனியா அங்கே இருக்கு, "Chaukhandi Stupa Sarnath" என தனியா இருக்கு ,மன்னிச்சு!

"It is said that Chaukhandi Stupa was originally built as a terraced temple during the Gupta period, between the 4th and 6th Century. This was erected to mark the place where Lord Buddha and his first disciples met traveling from Bodh Gaya to Sarnath.

The octagonal tower on the top of the ancient stupa was added during the medieval period. By the order of the Mughal emperor Akbar, Govardhan, the son of Raja Todarmal, the finance secretary in Akbar’s court, built this octagonal tower on top of the stupa in 1588."
சுட்டி காண்க:

http://www.sarnathindia.com/chaukhandi-stupa.html

தம்மேக்கா ஸ்தூபாவைக்கூட குப்தர்கள் தான் முழுமையாக கட்டினாங்களாம் -(4-6 நூற்றாண்டு அதுக்கு முன்ன தரைத்தளம் மட்டும் கட்டி முழுமையாகாமல் இருந்தது என போட்டிருக்கு.

எப்பவோ படிச்சதை நினைவில் இருந்து சொன்னது ,மேலும் படமெல்லாம் ஒரே போலவேதெரியுது அதான் ஹி..ஹி!

pipal மர இலை தான் , ஆலிலைனு சொல்லிட்டேன் , இதுக்கும் பான்யன் ட்ரீ ரெண்டுக்கும் எனக்கு இன்னும் வித்தியாசம் தெரியாது அவ்வ்!

# இதுல இன்னொரு குறிப்பிட வேண்டியது என்னனா ,சாரநாத்ல பல கட்டிடங்களும் இடிஞ்சு தனித்தனியா தான் கிடந்தது ,வில்லியம் ஜோன்ஸ் காலத்தில செங்கல் எல்லாம் எடுத்து வச்சு மீண்டும் "ரி கன்ஸ்ட்ரக்ட்" செய்துள்ளார்கள்.

பெரிய டோம் மாதிரி இருப்பவை எல்லாம் ரி கன்ஸ்ட்ரக்ட் செய்யப்பட்டவை, ஆனால் கல்லுலாம் அங்கே கிடந்தவையே.

#//வரலாற்றைப் பொறுத்தவரை உண்மையான சரித்திரம் இன்னும் எழுதப்படலை என்பது எவ்ளோ உண்மை பாருங்க. //

இதான் உண்மை ,எழுதுறவங்க பக்க சார்பின் அடிப்படையில் எழுதிடுவாங்க , ரொம்ப நேர்மை என்றால் ஒரு 90 சதவீதம் தான் உண்மை இருக்கும் ,எங்குமே 100 சதவீத உண்மையான வரலாறு இல்லை, கிராஸ் ரெஃபரன்ஸ் செய்து தான் கண்டுப்பிடிக்கணும் அவ்வ்!

said...

எவ்வளவு பெரிய கட்டிடம். இன்னும் கட்டி முடிக்கப்படலை வேற. நல்லாத்தான் யோசிச்சுக் கட்டியிருக்காரு.

ஞானங்குறது ஒருத்தருக்கு எப்போ வரனும் எப்படி வரனுங்குறதும் ஆண்டவன் முடிவு செஞ்சுதான் வெச்சிருப்பான் போல. முப்பகல் மூவிரவு கலையாத தவம். அடேங்கப்பா.

ஒரு கதை உண்டு. காட்டுக்குள்ள ஒரு புலி. அந்தப் புலிக்குப் பசி. பசியத் தீக்க செய்ய வேண்டிய கடமைக்குப் பேரு புசி. அப்படிப் புசிக்கத் தேடிய போது அந்தப் பக்கம் வந்ததொரு மான். மானைச் சாப்பிட்டுத் தன்னைக் காப்பாத்திக்க புலி பாஞ்சது. புலி வாய்ல விழாமத் தன்னைக் காப்பாத்திக்க மான் துள்ளி ஓடுச்சு. நல்லா ஓடும் மான். புலியால எளிமையாப் பிடிக்க முடியல. நல்ல வலிவான புலி. பின்னாடியே துரத்துச்சு.

திடீர்னு ஒரு எடத்துல மான் நின்னுருச்சு. மூச்சு இரைச்சாலும் அமைதியா நிக்குது. பாஞ்சு வந்த புலியும் ஒடனே நின்னுருச்சு. அதுவும் மூச்சிரைக்க நிக்குது. ஆனா அமைதியா நிக்குது.

புலி இருக்குன்னு மானுக்கு அச்சமில்லை அச்சமில்லை. மான் இருக்கு. அதைப் பார்த்தாலே பசி தீரும்னு புலியும் அமைதியா இருக்கு.

என்ன காரணம். அந்தப் பக்கமா புத்தர் தவம் செஞ்சிட்டிருந்தாரு. அவர் தவத்தின் வலிமை அந்த இடம் முழுக்கப் பரவியிருக்கு. அந்த எல்லைக்குள்ள நுழைஞ்சதாலதான் மானும் புலியும் தங்கள் நிலை மறந்து அமைதியானது.

அப்போ புத்தருடைய தவம் எவ்வளவு தூய்மையா இருந்திருக்கும்! ஆகா!

said...

அருமையான படங்கள்....

பகிர்வுக்கு நன்றி டீச்சர்.

said...

என்னங்க வவ்வால்,

ஆலுக்கும் அரசுக்கும் வித்தியாசம் தெரியலைன்னு சொன்னால் எப்படி!!!

நம்மூர்களில் அரசமரத்தடின்னா புள்ளையார் உக்கார்ந்துருப்பார்.

ஆல இலைன்னா அதில் கால் கட்டைவிரலை வாயில் வைத்தபடி, குழந்தைக் கண்ணன் படுத்திருப்பான்.

ரொம்ப சிம்பிளா அடுத்தமுறை கண்டி பிடிக்கலாம், மரம் தேடும்போது.

said...

வாங்க ஜிரா.

உங்க கதைப்படி புத்தர் தவம் மிகவும் தூய்மையானதுதான்.

அவருடைய கொள்கைகளைத்தான் மக்கள்ஸ் காலப்போக்கில் காத்துலே பறக்கவிட்டுட்டாங்க என்னும்போது மனசு வலிக்கத்தான் செய்யுது:(

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ரசித்தமைக்கு நன்றீஸ்.

said...

அண்டா:) தூபி கண்டுகொண்டோம்.