Wednesday, May 02, 2012

There is a dragon on the wall !!!

கண்களில் ஒரு மிரட்சியோடு எதிரில் இருக்கும் சுவரைப் பார்த்தபடியே கிசுகிசுப்பான குரலில் மகள் சொன்னதும் தூக்கிவாரிப்போட்டது எனக்கு. அதற்குள் எங்கள் பேச்சைக் கவனித்துவிட்ட என் அண்ணன்,  'எங்கே எங்கே'  என்று பாய்ந்து வந்தார்.


அந்த ட்ராகனைக் காணோம்! அவள் கண் போன திசையில் குழல்விளக்கு மட்டும் கொட்டக் கொட்ட ஒளிர்ந்து கொண்டிருந்தது.  என்னவாக இருக்கும் என்ற யோசனையில் இருந்தேன். நாலரை வருசப் பேச்சு பாக்கி இருக்கேன்னு அதை முடிப்பதில் தீவிரமாக இருந்தது என் வாய்.

அதோ..... மறுபடி வந்துருக்குன்னு மகள் கை காட்டினதும்..... அட! இதுவா!!! மகளுக்கு அதனுடன் முதல் என்கவுண்ட்டர். (சம்பவம் நடந்து ஆச்சு 23 வருசம்!. இடம் சென்னை வீடு)  நியூஸியில் இல்லாதவைகளில் இதுவும் ஒன்னு. இதுக்குப்பெயர் 'பல்லி' என்று சொல்லி மகளுக்கு அறிமுகப்படுத்தி வச்சேன்:-)


 பூவுலகில் 5600 வகைகளுக்கு மேலேயே இருக்காம். ஒரு இனத்தில் இத்தனை வகைகளான்னு பிரமிப்புதான் வருது. ரெண்டு மூணு அங்குலத்தில் இருந்து பதினோரு அடிகள் நீளம்வரை வகைவகையா! உலகின் சின்னப் பல்லி 29 மில்லி(மீட்டர்)

உலகின் சின்னப்பல்லியும்
உலகின் பெரிய பல்லியும்

 நியூஸியில் வீட்டில் இருக்கும் வகைகள் இல்லையே தவிர Skink, Gecko என்ற வகைகள் உண்டு. அதுவும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மட்டுமே!




 ஊரில் இருந்த மூணுவாரங்கள் மகளுக்கு இதைக் கவனிப்பதிலேயே பொழுது போச்சு. நம்மை வேற ஒன்னும் வாங்கித்தரச்சொல்லித் தொந்திரவு பண்ணலை. காஞ்சி வரதனைக் காணப்போயிருந்த சமயம் கோவிலில் தங்க வெள்ளிப் பல்லிகளைத் தொட்டு வருடிவர அவளுக்கு ஒரு ச்சான்ஸ் உண்டாக்கிக் கொடுத்தேன்.

இந்துமதத்தில் பல்லிக்கு ஒரு இ டம் கொடுத்துவச்சுருக்காங்க பாருங்க. பஞ்சாங்கத்தைப் பிரிச்சால் பல்லி விழும் பலன் உள்ள பக்கம் கட்டாயமா இருக்குல்லே! விழுந்தால் மட்டும் இல்லாம,  அது வாயைத் திறந்து  'சொன்னாக்கூட'  பலன் இருக்கு! மனிதர்கள் பேச்சை எல்லாம் காதைத் திறந்துவச்சுக் கவனிச்சுக்கிட்டே இருக்கும் பல்லி அப்பப்ப நம்ம பேச்சிலும் கலந்துக்கும். அது சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத்தவிர வேறில்லை! பல்லியே சொல்லிருச்சு பாருங்கன்னுவாங்க!!!!

 சண்டிகர் வீட்டுலே ஏராளமான ட்ராகன்கள். அறைக்கு ஒரு நாலைஞ்சுன்னு நின்னு முறைச்சுப் பார்க்கும். அறையில் உள்ள பல்லிகளை விரட்ட கடைகளில் ஒரு மருந்து கிடைச்சது. அதுலே சின்னதா அஞ்சு க்யூப்ஸ். பின்னாலே ஒட்டும் ஸ்டிக்கி டேப். அறையில் ட்யூப் லைட்டுக்குப் பக்கத்தில் ஒரு க்யூபை ஒட்டுனாப்போதும். பல்லி அறைக்கு வரவே வராதுன்னு போட்டுருந்துச்சு அந்த பாக்கெட்டிலே.    ஒட்டிவச்சேன். அன்று முதல் பல்லிகள் அதைத் தொடாமல் சுற்றிச் சுற்றிப்போக பழகிக்கிச்சுங்க.

புழுப்பூச்சிகளைப் பிடிச்சுத் தின்னு ஜீவிச்சுக்கும் என்று பல்லிகளைப்பற்றி எங்கோ வாசிச்ச காரணத்தால் அதுகளுக்கு சோறு போடலை நான்:)



காசியில் மட்டும் பல்லி ஒன்னும் சொல்லாது!!  பல்லி சொன்னாப் பலிக்கும் என்பதால் அங்கே 'மூச்'விடக்கூடாதுன்னு கடவுள் சொல்லி இருப்பார்! ஏற்கெனவே அங்கே கடைசி மூச்சைவிட ஒரு பெரிய கும்பலே காத்துக்கிடக்கும்போது இது வேற!

பல்லியை நாம் கொன்னுட்டாலோ இல்லை பல்லி நம்ம மேலே விழுந்துட்டாலோ நமக்கு தோஷம் ஆகிரும். தீர்க்கும் வழி? காஞ்சிக்குப்போகணும். (போறபோக்கிலே) பல்லி சாக்கிலே பட்டுப்பொடவை வாங்குனாலும் தோஷம் போகுமுன்னு கோபாலிடம் சொல்லணும்)

ஸ்ருங்கிபேரர் என்னும் முனிவரின் குமாரர்கள் ஹேமன், சுக்லன் இருவரும் கெளதம முனிவரின் சீடர்கள். குருகுலத்தில் இருந்த இவர்கள் குருவுக்கெனக் கொண்டு வரும் தீர்த்தத்தில் சுத்தமில்லாமையால் இரு பல்லிகள் துள்ளிக்குதித்து வெளியே வர, சீடர்களின் கவனக்குறைவைக் கண்ட குருவானவர் இருவரையும் பல்லிகளாய்ப்பிறக்கும்படி சாபம் கொடுக்கிறார். சாபவிமோசனம் வேண்டிய இருவரையும் சத்தியவிரத க்ஷேத்திரமான காஞ்சியில் ஸ்ரீவரதராஜரை வழிபட்டு வரச் சொல்லி அனுப்பி வைக்க, இங்கே வந்து தவம் செய்த இருவருக்கும், யானை ரூபத்தில் வழிபட்டு வந்த இந்திரனுக்கும் ஒரே சமயம்சாபவிமோசனம் கிடைக்கிறது. இவர்களின் கதையைக் கேட்ட இந்திரன் தங்கப் பல்லி ஒன்றும், வெள்ளிப் பல்லி ஒன்றும் செய்து இங்கே பிரதிஷ்டை செய்ததாகவும் இந்தப் பல்லிகளைத் தொட்டுப் பிரார்த்திப்போருக்கு சகல தோஷங்களும் விலகும் என்றும் சொல்கின்றனர்.

மேற்படி பாரா நம்ம கீதாவின் பதிவில் இருந்து சுட்டது. முழுப்பதிவும் இங்கே! நன்றி கீதா. 

 காஞ்சி கோவில் பல்லிகளின் புகழ் வடக்கே இமயமலைவரை பரவி இருக்குபோல. தனி மண்டபத்தின் விதானத்தில் கைக்கு எட்டாமல் உயரே இருக்கு. கலங்க வேணாம். ஏறி இறங்க ஏணிப்படிகள் எல்லாம் பக்காவா போட்டு வச்சுருக்காங்க. கோவிலுக்கு வரும் வட இந்தியப்பயணிகள் உள்ளே நுழையும்போதே 'சிப்கோலி கஹா(ங்) ஹை' ன்னுதான் கேக்கறாங்க. வரதனைப் பார்ப்பது ரெண்டாம்பட்சம்தான். பல்லிக்கு ஸ்ட்ரிக்ட் டைமிங் வேற! டிக்கெட் கூட வாங்கணும். வரதன் ஃப்ரீ சேவை சாதிப்பார். ஆனால் பல்லி?

 கோபால் ஒரு சமயம் பார்ஸிலோனா போனப்ப அங்கே இருக்கும் பல்லி பார்க்கில் Park Guell, இருந்து ஒரு பல்லி வாங்கியாந்தார். அதென்னமோ வாலில்லா பல்லியா இருக்கு!
பல்லிக்கு வால் அழகு இல்லையோ? ஆபத்து காலத்தில் வாலைக் கழட்டிவிட்டுப் போகும் குணம் வேற யாருக்கு இருக்காம்? பல்லி பல்லின்னு இருந்தப்ப பல்லியைப்பத்தி நம்ம அருண் நரசிம்மன் எழுதுனது ஆப்ட்டது. மனுசர் என்னமா பல்லியைப் பத்திச் சொல்லி சொல்லி ஸிக்ஸரா அடிச்சுத்தள்ளி இருக்கார் பாருங்க. ஹைய்யோ!!!  தலைப்பே  தூள்!!!!  நம்மாலே எசப்பாட்டோ எதிராட்டமோ ஆடமுடியாது என்பதால் அவரை இங்கே பார்த்து வாசியுங்கோ! ரொம்ப விவரம்!!!! 

ஏன் பல்லி கொன்றீரய்யா

இப்படியாக இருந்த காலத்துலே சமீபத்தில் ஒரு நாள் நம்மூர் சந்தையில் பித்தளைப் பல்லி ஒன்னு கண்ணில் 'விழுந்துச்சு'! வீட்டுக்கு ஒரு செல்லமா இருந்துட்டுப்போகட்டும். அப்பப்ப நம்ம சொல்லுக்கு எசச்சொல் சொல்லவும் வேண்டித்த்தானே இருக்குன்னு வாங்கியாந்தேன். அநேகமா இந்த நகரின் ஒரே பல்லி இதுவாத்தான் இருக்கணும்.
 சாப்பாட்டுலே விழுந்தால் விஷமாம். ஆனால் நான் பயப்படாம அடுக்களையில்தான் (மாட்டி) வச்சுருக்கேன்.

சொல்லமறந்துட்டேனே..... இந்த வருச தினக் காலண்டரில் என் ராசிக்கு எப்பப் பார்த்தாலும் 'பயம்' னு போட்டுருக்கேன்னு இன்னிக்கு பயத்தோட தேதியைக் கிளிச்சால்..... அப்பாடா.... பயம்ன்னு போடலை. அப்ப?  'அச்சம்' ' ன்னு போட்டுருக்கு! 

இனி யாருக்காவது பல்லி தோஷமுன்னா நம்ம வீட்டுக்கு வந்து அதைத் தொட்டு வருடி தோஷத்தைப் போக்கிக்கலாம். டிக்கெட் புக் இன்னும் அச்சடிக்கக் கொடுக்கலையாக்கும் கேட்டோ! 

31 comments:

said...

கோபால் வாங்கிட்டு வந்தது பல்லி இல்லைங்க, அது தவளை.

said...

பல்லி புராணம் வெகு சுவாரசியம் மேடம். பல்லி விஷமே இல்லைன்னும் தியோடர் பாஸ்கரன் எழுதிய புத்தகத்தில் வாசித்த நினைவு. ஆனாலும் பயம் விடமாட்டேங்குதே. சின்னப் பல்லியும் பெரிய பல்லியும் பிரமிக்கவைக்குது. வீட்டில் பல்லிகள் இருப்பதால் ஒரு நன்மையும் கூட. கொசுக்கள் கொஞ்சமாவது குறையும். செல்லப்பல்லி ரொம்ப அழகா இருக்கு.

said...

பல்லி புராணம் சூப்பர்....

பல்லியா இல்லை தவளையா... ஒரு பட்டிமன்றம் வைச்சுடலாமா? :)

கீதாம்மா லிங்க் வேலை செய்யலை. ஆரம்பத்தில் http: - ல ஒரு h-ஐ உங்க வீட்டு பல்லியோ/எலியோ சாப்பிட்டுடுச்சு! :) வேற ஒரு h சேருங்க முன்னாடி!

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

இது மொஸைக் (ட்ராகன்) பல்லின்னுதான் சொன்னாங்களாம் அங்கே!

கூடுதல் தகவல்களுக்கு இந்த சுட்டியில் பாருங்க.

http://en.wikipedia.org/wiki/Park_G%C3%BCell

said...

வாங்க கீதமஞ்சரி.

உண்மைதாங்க. அது விஷம் இல்லைன்னாக்கூட விஷமோ என்ற பயத்துலேயே உயிர் போயிருது பாருங்க!

பலவித பாம்புக்கடிகளும் இப்படித்தானாம்! பயம் பயம் பயம்:(

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பட்டிமன்றம் ஐடியா சூப்பர்! சன் டிவி யின் தீபாவளி ஸ்பெஷலா வச்சுக்கலாமா? :-)

கீதாம்மா லிங்கை ப்ளொக்கர் பல்லி என்னமோ படுத்தி வச்சுருச்சு. இப்பப் பாருங்க சரியா வருதான்னு.

உங்க கவனிப்புக்கு விசேஷ நன்றிகள்.

said...

ம்ஹும்... மாட்டேன்... நான் கருத்து சொல்ல மாட்டேன். உலகத்துலயே நான் ரொம்ப வெறுக்கற ஒரு இனம் பல்லியினம்தான். அதையா சுவத்துல மாட்டி வெச்சிருககீங்கன்னு கேட்டு, உங்க கிட்ட குட்டு வாங்கிக்கணுமா? ம்ஹும்... நான் கருத்து எதுவும் சொல்லலைப்பா. வரேன்!

said...

தலைப்பப் பார்த்து ஆவலா வந்தேன்.. என்னை உவ்வே...ன்னு சொல்ல வச்சுட்டீங்களே!! ;-))))))

நான் வெறுப்பவற்றில் இதுவும் ஒன்று. பயமும்கூட!!

நேத்துதான் என் பெரியவன் சொல்லிட்டிருந்தான்... “சிட்-அவுட்டில் ஒரு பல்லி நிக்குது. நீ பாட்டுக்கு வாப்பாகிட்ட சொல்லி பல்லியை அடிச்சுடாதே.. அது இருக்கிறதாலத்தான் இலையைத் தின்னும் சில பூச்சிகள் இல்லாமலிருக்கீறது”ன்னு... இருந்தாலும் அதைப் பார்க்கும்போதெல்லாம் ஏனோ ஒரு கோபம் வருது... உவ்வேயும் கூடவே..

அப்புறம்.. இந்தப் பதிவின் முதல் படத்தைப் பார்த்ததுமே, கண்ணை மூடிக்கொண்டு ஸ்க்ரோல் செய்து அடியில் கமெண்ட் பக்கத்தீற்கு வந்துவிட்டதால், பதிவில் என்ன எழுதிருக்கீங்கன்னும் வாசிக்கலை என்பதையும் தெரிவிச்சுக்கிறேன்... :-)))))))))

said...

ஆஹா.. தி ட்ராகன் எண்டர் ஆகிருச்சா உங்கூட்டுக்குள்ள!!..

வாலைக் கழட்டி விட்டதுமில்லாம தவக்கா மாதிரியே தன்னை மாத்திக்கிட்டிருக்கு அந்தப்பல்லி. ஏதாச்சும் ஆபத்துக் காலத்துலதான் பல்லிகள் இப்படிச் செய்யும்.. இப்ப ஏன்:-))

said...

பல்லிக்கு ஸ்ட்ரிக்ட் டைமிங் வேற! டிக்கெட் கூட வாங்கணும். வரதன் ஃப்ரீ சேவை சாதிப்பார். ஆனால் பல்லி?//


அங்கே ப்ளூ டங்க என்றொரு உயிரினம் பல்லி இனம் என்று சொல்கிறார்கள்..

said...

http://jaghamani.blogspot.com/2011/02/blog-post_07.html

நீல நாக்கு --படித்துப்பாருங்கள்...

said...

http://jaghamani.blogspot.com/2011/02/blog-post_07.html

நீல நாக்கு --படித்துப்பாருங்கள்...

said...

//அதைத் தொடாமல் சுற்றிச் சுற்றிப்போக பழகிக்கிச்சுங்க. //ஹா ஹா ஹா நம்ம ஊர் பல்லிக்கு மூளை ஜாஸ்தி.

பல்லிக்காக இவ்வளவு பெரிய பதிவா என்று அதிசியப்ப்டேன். அருமை.

said...

உங்களின் படைப்பை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். சமயமிருப்பின் பார்த்துக் கருத்திடும்படி வேண்டுகிறேன்.

http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_04.html

said...

பல்லியாகப்பரணியே பாடீட்டீங்க :)

பல்லிகள் டைனோசாரின் எச்ச மிச்சங்களோ? நெறைய ஒத்துப் போகுதே!

இதைச் சில பேரு Balliன்னு உச்சரிப்பாங்க. அது தப்பு. Palliன்னுதான் உச்சரிக்கனும்.

சினிமாக்கள்ள பல்லிப் பாயாசம் ரொம்பப் பிரபலம். குறிப்பா எல்லா இராம.நாராயணன் படத்துலயும் நல்லவங்களுக்கு யாராச்சும் பல்லிப் பாயாசம் குடுப்பாங்க. அதைக் கொரங்கோ யானையோ பாம்போ ஆடோ மாடோ தட்டி விட்டுரும்.

இன்னும் சில படங்கள்ள விசம் கலந்த பால்/பாயாசம் குடுப்பாங்க. குடிக்கப் போற நேரத்துல அதுல பல்லி விழுந்து நல்லவங்கள காப்பாத்தீரும்.

இப்பிடி எத்தையோ இருக்கு. எடுத்துச் சொல்லிக்கிட்டேயிருக்கலாம் :)

said...

வாங்க கணேஷ்.

வலைச்சர ஆசிரியர் வேலையில் முழுசா முழுகி முத்தெடுத்துக்கிட்டு இருக்கீங்க. அதுலே பல்லி விழும் பலன் வேற சொல்லணுமா?

எட்டிப்பார்த்துப்போனதே போதும். நோ ஒர்ரீஸ்:-)))))

said...

வாங்க ஹுஸைனம்மா.

பாவம் பல்லி ....உங்களை இப்படிப் படாப் படுத்திருச்சே..த்ச் த்ச்....

உங்க பெரியவன் சொன்னது உண்மைதான். இதுங்க இல்லேன்னா ஒரே பூச்சி க்ராலிங்தான்:-))))

பதிவை முழுசும் படிக்கலைன்னா.... போச் போயே போச் ஒரு பட்டுப்பொடவை:-)

said...

வாங்க அமைதிச்சாரல்.
எண்ட்டர் த ட்ராகன்:-)))))

பதிவுலகுக்கு வந்ததே பெரிய ஆபத்துன்னு நினைச்சு வாலைக் கழட்டி இருக்கும்:-)))))

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.


வருகைக்கும் சுட்டிக்கும் நன்றிங்க.

பொதுவாவே ஊர்வன வகைகள் ப்ரிஸ்பேனில் கொஞ்சம் அதிகம்தான்.

கரவாத்தாக் காட்டுப்பகுதியில் 164 வகை இருக்கு.

said...

வாங்க சீனு.

பதிவில் இருக்கும் ஒரு சுட்டி 'ஏன் பல்லி கொன்றீரய்யா?'வின் நீளம் நம்ம பதிவையே தூக்கி லபக்கிருச்சுன்னா பாருங்க.

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க ஜீரா.

பாம்புகளில் பல அப்புராணிகளா இருப்பது போலவே பல்லிகளிலும் பல அப்புராணிகள்தான்.

ஆனா.... பயத்துலேயே உசுரை எடுப்பதில் ரெண்டும் ஒன்னே!

நமக்கும் பழிபோட ஒன்னு வேண்டித்தானே இருக்கு:-))))

சினிமாமட்டும் இதை விட்டுவைக்குமோ!!!!

said...

ஓஹோ இதுதான் பல்லி புராணமோ.

எல்லாருடைய அருவருப்பையும் சம்பாதிச்சாலும் வீட்டில் இருக்கும் கரப்புகளுக்கு இது நல்ல எமன்,

said...

ஆகா புராணம் நல்லாகவே இருக்கின்றது.

நாங்கள் எல்லாம் பல்லிக்குப் பயப்பிடவே மாட்டோமே.
எங்க ஊரு பல்லி எல்லாம் சிறிதாகவே இருக்கும் :))

said...

இது கொஞ்சம் 'பழைய' பல்லி ;-)


http://puthupunal.blogspot.in/2006/09/blog-post_18.html


அன்புடன்,
'சுபமூகா'

said...

/நம்ம சொல்லுக்கு எசச்சொல் சொல்லவும் /

அவசியம்தான்:)!

said...

வாங்க வல்லி.

நம்மூர்லே கரப்பும் இல்லை பல்லியும் இல்லை.

இருந்தால் தானிக்கி தீனி சரிபோயிந்தின்னு விடலாம் :-)

said...

வாங்க மாதேவி.

ஊருக்குத் தகுந்த அளவுன்னு சொல்லலாமா?

இங்கே ஈக்கள்கூட ஒவ்வொன்னும் பெரூசா இருக்கேப்பா:-)

said...

வாங்க சுபமூகா.

உங்க சுட்டியில் போய்ப் பார்த்தேன்.

ஆஹா..... அருமை!

மரணம்.... நமக்கல்ல. அந்தப் பல்லிக்குன்னு என் அண்ணன் சொல்வார்!

ஆமாம்.....அதென்ன கடையிலே ஆளையே காணோம்?

said...

வாங்க ராமலக்ஷ்மி.

தனியாப் பாடுனா போரடிக்காதா:-))))))

said...

எங்கேயோ போனவளை பல்லிங்க இங்கே இழுத்துட்டு வந்துடுச்சு. பார்த்தால் நம்ம பதிவோட சுட்டி ஒண்ணு இருக்கு! :)))) இங்கே பல்லி சுவத்திலே இருக்கிறதை விடத் தரையிலே தான் ஜாஸ்தி நடமாட்டம். நடக்கறச்சே கையைப் பிடிச்சுக் கொண்டு விடாத குறை தான்! கூடவே வருதுங்க. மிதிச்சுடப் போறோமேனு பயம்மா இருக்கு! :)))

said...

அந்த வீட்டிலேருந்து வரச்சே சாமான்களோட பல்லியும் இங்கே குடித்தனம் வந்தாச்சு! :)