Thursday, May 31, 2012

நாளை முதல் குளிராம்

அப்படித்தான் அதிகாரபூர்வமான அறிக்கை சொல்கிறது. ஜூன் ஒன்று முதல்! இது அந்த பாழாப் போனதுக்குத் தெரியலை. ஒரு மாசத்துக்கு முன்னேயே வந்து தொலைச்சுருச்சு:(
இந்தக் கணக்கில் பார்த்தால் நாளை முதல் மிட் விண்ட்டர் இல்லையோ?

 மாட்சிமை தாங்கிய மகாராணியின் பொறந்தநாளுக்காக எங்க நாட்டில் லாங் வீக் எண்ட் ஜூன் 4 ஆம் தேதி. உண்மையைச் சொன்னால் ராணியம்மா பிறந்தது ஏப்ரல் 21 (1926) அவர்களின் குடிமக்களான நாங்க எங்க வசதிக்காக ஆறுவாரம் தள்ளி வச்சுக்கிட்டோம். மவராசன்களுக்கும் மகராணிகளுக்கும் வருசம் முழுசும் வைபவங்கள்தானே!

இந்த வருசம் இன்னுமொரு விசேஷமுன்னா ராணியம்மா பட்டத்துக்கு வந்து வருசம் அறுபதாச்சு! இந்த அறுபதுலே எவ்ளோ கஷ்டம், துக்கம், மகிழ்ச்சி, நிம்மதின்னு நிறையப் பார்த்துட்டாங்க.  மகாராணி விக்டோரியாவுக்குப்  பிறகு நிறைய வருசங்கள் ஆட்சியில் இருப்பது   மகாராணி எலிஸபெத் அவர்கள்தான். இன்னும்  மூணு வருசம் 217 நாட்கள் ஆண்டால் அவுங்களை பீட் பண்ணிறலாம்.

லண்டன் மாநகரில் பிரமாண்டமான கொண்டாட்டங்கள் நடக்குது. நம்ம சார்பில் எங்க பிரதமரும் போயிருக்கார்! அவர் அந்தப்பக்கம் கிளம்புனதும் நாங்களும் அண்டை நாட்டுக்கு ஒரு சின்னப்பயணம் வச்சுக்கிட்டோம்.

பார்க்கலாம், பதிவுக்கு எதாவது மேட்டர் தேருமான்னு:-))))) அப்படியே ஒரு வாரம் குளிருக்கும் டாட்டா சொன்ன மாதிரி இருக்கும்.

வந்து வச்சுக்கறேன்  கச்சேரியை. வர்ட்டா மக்களே?

20 comments:

said...

இங்க இப்ப அடிக்கிற வெயிலிற்கு அங்கு குளிர் என்று படிக்கும் போதே ஆசையாய் இருக்கே.

said...

ம்... ஒரு வாரம் நல்ல பயணமும் நல்ல நல்ல அனுபவங்களும் அமையட்டும்னு வாழ்த்தறேன் உங்களை. அப்பதானே எங்களுக்கும் நல்ல பயணக் கட்டுரையப் படிக்க வாய்ப்புக் கிடைக்கும...

said...

பான் வாயேஜ். என்சாய். இப்படிக்கு வாடி வதங்கும் சென்னை;)

said...

நாளை முதல் சுற்றுலாவா:)? பயணம் இனிதே அமைய வாழ்த்துகள்!

தலைப்புக்குப் பொருத்தமா பொம்மையம்மாவுக்கு ஸ்வெட்டரை மாட்டி நிற்க வைத்திருப்பது அழகு:)!

said...

வாங்க அமுதா.

இதமான குளிர் என்றால் ஓக்கே. பனி பெய்தாலும் ஓக்கே. ஆனால் தென்துருவக் காற்றோடு சேர்ந்து வரும்போதுதான் எலும்பெல்லாம் ச்சில்:(

இப்பக் கொஞ்சம் பழகிப்போயிருச்சு. ஆனால் இங்கே வந்த புதுசில் அடிமைப்பெண் எம் ஜி ஆர் நடைதான்:-))))

said...

வாங்க நிரஞ்சனா.

நல்ல நல்லதா அமையணுமுன்னு வாழ்த்தும் உங்க நல்ல மனசுக்கு நன்றி..

said...

வாங்க வல்லி.

முயற்சிக்கிறேன், எஞ்சாய் பண்ண:-)))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நம்மூட்டு இளவரசியாச்சே! அதான் ராணியம்மாவுக்குப் போட்டியா ட்யாரா:-))))

அது அவளுடைய விண்ட்டர் உடுப்பு:-)
கழுத்துக்கு ஷால் எல்லாம் போட்டு விடுவேன். பாவம் குட்டிப்பொண்ணு.

said...

உங்கூட்டு ராணியம்மா இங்கிலாந்து ராணியம்மாவை விட அழகா இருக்காங்க.

ஆஸிக்குப் போயி நிறைய தேத்திட்டு வாங்க.எஞ்சாய் :-))

உங்கூரு குளிரை கொஞ்சம் எங்கூருக்கும் அனுப்புங்க. வெய்யில் கொஞ்சமாவது தணியட்டும். மே மாசம் முடியப்போவுது இன்னும் மழையை வேற காணோம் :-))

said...

அட அடுத்த பயணமா... எங்களுக்கெல்லாம் கொண்டாட்டம் தான். உங்கள் பயணக் கட்டுரைகள் எங்களுக்குக் கிடைக்குமே....

உங்கள் நியுசிலாந்து புத்தகம் ஒரே நாளில் ரயில் பயணத்தின் போது படித்து முடித்து விட்டேன் - மிக மிக அருமை.

said...

அக்னி நட்சத்திரம் முடிஞ்சு இன்னைக்குத்தான் 37 டிகிரிக்கு வந்திருக்கு வெயில். மழைக்காலத்திற்கு காத்திருக்கும் வேளையில் குளிர்னு பதிவு...

பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்

said...

அங்க குளிரா.. ம்‌ம்.. உங்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு சுவையான பதிவைப் போடுங்கள்.

அந்த பொம்மை போட்டோவை நான் சுட்டுக்கவா மேடம் ?

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஜூன் முதல் தேதிக்குத்தானே கேரளாவில் இடவப்பாதி பருவமழை ஆரம்பிக்கும். அது நகர்ந்து உங்க பக்கம் வர ஒரு ரெண்டு வாரம் ஆகுமே!

மான்ஸூனைத் துரத்திக்கிட்டு அதன் வழியே போகும் பயணக்கதை ஒன்னு ரொம்பநாளுக்கு முன்னே வந்துச்சே.

எழுதுனவர் ஒரு ஆங்கிலேயர். கோபால் அந்தப்புத்தகத்தை ரொம்ப சிலாகிச்சுச் சொல்லிக்கிட்டு இருந்த ஞாபகம்.

ஆஸியில் ஒன்னும் தேத்தும்படியா இல்லை. மழை பெய்கிறது. அதுவும் ப்ரிஸ்பேன் நகரில்!!!!!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வெளியே போகமுடியாமல் மழை சல்லியமா இருக்கு இங்கே:(

பேசாம முன்பு எழுதிய பிரிஸ்பேன் பயணத்தையே மீள் பதிவாக்கிடலாம்:-)

நியூஸி புத்தகத்தைப் பொறுமையா வாசிச்சதுக்கு நன்றி.

முடிஞ்சால் ஒரு விமரிசனம் எழுதுங்களேன்.

said...

வாங்க புதுகைத்தென்றல்.

விடியாமூஞ்சு கதையா ஆகிப்போச்சு.

இங்கேயும் மழை! கூடவே ஒரு குளிர்.

ஸ்வெட்டர்ஸ் இல்லாம முடியாது போல இங்கேயும்:(

said...

வாங்க மோகன்ஜி.

பொம்மை படம் உங்களுக்கே கொடுத்தாச்சு.

said...

ஆஸியில் ஒன்னும் தேத்தும்படியா இல்லை. மழை பெய்கிறது. அதுவும் ப்ரிஸ்பேன் நகரில்!!!!!

பிரிஸ்பேன் நகருக்கு இப்பத்தான ஸ்கைப்பில் மகன்களுடன் பேசியதில் தொடர் மழையை கணிணி திரையில் பார்த்தேன்..

எப்போதும் பௌர்ணமி நிலவை காட்சியாக்குவார்கள் ...

மழை மேக மூட்டத்தால் நிலா கண்ணாமூச்சி காட்டுகிறது !

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

இன்னிக்குக் கொஞ்சம் வானம் வெளுத்துருக்கு. பார்க்கலாம் நாள் எப்படி அமையப்போகுதுன்னு. இருக்காங்க.

போனவருசம் வரலாறு காணாத மழையும்வெள்ளமும் வந்துருச்சுன்னு இங்கே மாய்ஞ்சு மாய்ஞ்சு சொல்லிக்கிட்டு இருக்காங்க.

போட்டும் அவுங்களுக்கு மழை எங்களுக்கு நிலநடுக்கம்:(

said...

இனிய பயணத்திற்கு வாழ்த்துகள்.

எமக்குக் கொண்டாட்டம்தான்:))ஆஸி பயணம் படிக்கக் காத்திருக்கின்றோம்.

said...

வாங்க மாதேவி.

சின்னதாப் பயணக்கதை எழுதி புது ரெக்கார்ட் நிறுவணும்:-))))))