Friday, May 11, 2012

அம்மான்னா சும்மா இல்லை !

ஒரு ரெண்டு மாசமான்னு நினைக்கிறேன்..... ஃப்ரோஸன் ப்ளானட் என்ற சீரியல் (எல்லாம் பிபிஸி உபயம்) 'வாரம் ஒரு நாள்.'ன்னு வரத்தொடங்கி இருந்துச்சு. எல்லாம் நம்ம டேவிட் அட்டன்பரோ எடுத்தது. நாம் நேரில் போனால்கூட (?) இவ்ளோ நல்லா நெருங்கிப் பார்க்க முடியாது என்ற வகையில் அருமையான படப்பிடிப்பு. அண்டார்ட்டிக்கா காமிக்கும்போதும், பெங்குவின்கள் குளிரில் நடுங்கியபடியே நின்ற நிலையில் பாதங்களின்மேலே முட்டையை வச்சு கைகளால்(கைச்சிறகு!) மூடி அடைகாக்கும் விதம் பார்த்து மனசு கரைஞ்சு போனாலும் இது நம்மஊர்(பக்கம்) என்ற மகிழ்ச்சியும் கொஞ்சூண்டு அப்பப்ப வந்து தலைநீட்டுனது உண்மை. இந்த இனத்தில் முட்டை அடைகாக்கும் வேலை செய்வதெல்லாம் தாயுமானவர்களே!

வடதுருவம் காமிக்கும்போதுதான் போலார் கரடிகள், யானை ஸீல்கள், வால்ரஸ்கள் என்று பலவகை இருந்தாலும் மனம் இளகிப்போனது கரடிகள் பார்த்துத்தான். குளிரில் திங்கக்கிடைக்காமல் நாலு மாசம் பட்டினி கிடக்குதுங்களாம்:( அந்த சமயம் குட்டிகள்வேற போட்டுப் பாலூட்டும் அம்மாவுக்கும் அதே கதிதான். கொஞ்சம் நடக்க ஆரம்பிச்சதும் தாயோடு போய் தீனிக்கு அலையுதுங்கப்பா.............
பனிகாலம் முடிஞ்சு கோடை(??!!!) வரத் தொடங்கியதும்தான் குறைஞ்சபட்சம் ரெண்டு மீனாவது தின்னக் கிடைக்குது. ஒரு நாலைஞ்சு வாரம் தொடர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி,  'த க்ரேட் மைக்ரேஷன்'  என்று உணவுக்காகவும் குடிநீருக்காகவும் விலங்கினங்கள் பல, மூவாயிரம் கிலோமீட்டர் தூரம் நடையா நடப்பதும் போற வழியில் இருக்கும் ஆபத்துகளுமா.... திகில்படம்தான். அதுவும் குழந்தைகுட்டிகளோடு நடக்கும்போதும், சினையா நடந்து வழியிலேயே பெத்துப்போடும் கன்னுகளையும், பிள்ளை பிடிக்கன்னே சுத்திவரும் ஓநாய்களும், சிங்கமும் புலியும், கழுதைப்புலியுமா....

அதுகளைச் சொல்லியும் குற்றமில்லை..... அதுக்கும் சின்னக்குழந்தைங்க இருக்கு பசியாலே துடிக்குதுன்றப்ப.... 'எல்லாமே' நியாயம்தான், போங்க:( அதுவும் நாலுமாசம் அஞ்சுமாசம் பட்டினின்னு கிடக்கும்போது ...... எட்டுமாசமா சாப்பாடு கிடைக்காம இருந்த சிங்கம் ஒரு காலடி வச்சு நடக்கமுடியாம கீழே மெதுவாப் படுத்து சாவை எதிர்பார்த்துக் கிடக்கு:( பசி பசி பசி பசி...... கொடுமையானது............. படைச்சவனை சபிக்கணும்.

 பொதுவா எல்லா விலங்குகளிலும் புள்ளைகளைப் பெத்து அதுகளைக் காப்பாத்தி வளர்த்துவிடுவதுன்னு எல்லாப் பொறுப்பும் தாயின் கடமையாத்தான் இருக்கு.

இதுகளோடு ஒப்பிட்டால் மனித இனம் எவ்வளவோ தேவலை. தாய்க்கு உதவியா தகப்பனும் புள்ளைவளர்க்க உதவுறாங்க. குறைஞ்சபட்சம் வேலைக்குப் போய் சம்பாரிச்சுக் குடும்பத்தைக் காப்பாத்தும் கடமை உணர்வுள்ள ஆண்கள் பெரும்பாலும் இருப்பதை மறுக்கமுடியுமா?

ஞாயிற்றுக்கிழமை மத்ர்ஸ் டே(யாம்) கடைகண்ணிகள் எல்லாம் கூவிக்கூவி ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்காங்க. நாலுநாள் முந்தி ஒரு கடைக்குப்போனப்ப கொஞ்சநாளுக்கு முன்னே பார்த்து வச்சுருந்த கப் & சாஸர், 'மதர்ஸ் டே ' ஸேலில் இருந்துச்சு.
வேணுமான்னு கேட்ட கோபாலிடம் வேண்டாம் என்றேன்(!) நான் வாங்கித்தரேன்ம்மா. மதர்ஸ் டே கிஃப்ட்ன்னார். 'இதுலே காஃபி குடிக்க முடியாதே' ன்னேன். ஒரு அஞ்சு லிட்டர் கொள்ளளவு இருக்கு:-) கடையில் இருந்தே மகளுக்கு டெக்ஸ்ட் கொடுத்தார். அம்மாவுக்குக் கப் & சாஸர் வாங்கியாச்சுன்னு! அவள் உடனே பதில் கொடுத்தாள் அவளும் மனசுலே அதைத்தான் யோசிச்சு வச்சுருந்தாளாம். நல்லவேளை சொன்னீங்க. இல்லேன்னா ரிப்பீட் ஆகி இருக்கும் என்றாள்.. அப்பாவும் மகளும் ரகசியமா(!!!) பேசிக்கிறாங்க(ளாம்!)

குழந்தை வளர்ப்பில் மட்டுமின்றி எல்லா வகையிலும் தாய்போல அன்பு செலுத்தும் எங்க வீட்டுக்கு தாயுமானவனுக்கு நானும் பரிசு கொடுக்க நினைத்த வகையில் மூணு பூச்செடிகளையும் (Cyclamen) வாங்கினேன். கொஞ்சம் கலர்ஃபுல்லா இருக்கு!
இப்பதான் பரிசுப்பொருள் முழுமை பெற்றிருக்கு, இல்லே! 

இந்தப் பூச்செடி ஸைக்ளமென் (லத்தீன் பெயர் மருவி இப்படி ஆகி இருக்கு)குளிர்காலத்தில் பூக்கும் பூ! இதில் 24 வகைகள் வரை உண்டு.. மைனஸ் 20 டிகிரி தாக்குப் பிடிக்குமாம். சில இடங்களில் -30 வரை! இங்கிலாந்து பக்கங்களில் இதுக்கு பன்றி ரொட்டின்னு (sowbread) ஒரு பெயர் அங்கத்து பேட்டை பாஷையில்! இந்தப்பூக்களை பன்றிகள் (விரும்பி) தின்னுமாம். போயிட்டுப்போகுது, பெயரில் என்ன இருக்கு? நம்மூட்டுக்குள்ளே பன்றி வர ச்சான்ஸே இல்லை:-)
நியாயமாப் பார்த்தால் பச்சிளம் குழந்தைகளைப் பரிவுடன் கவனிக்கும் தாய்மார்களுக்கு வருசம்பூராவும் மதர்ஸ்டேதான்.

உலகின் அனைத்து இனத் தாய்களுக்கும் அவர்களுக்கு உதவி செய்யும் தாயுமானவர்களுக்கும் மனமார்ந்த அன்னையர் தின வாழ்த்து(க்)கள்.

16 comments:

said...

வாழ்த்துக்கு நன்றி.

said...

//உலகின் அனைத்து இனத் தாய்களுக்கும் அவர்களுக்கு உதவி செய்யும் தாயுமானவர்களுக்கும் மனமார்ந்த அன்னையர் தின வாழ்த்து(க்)கள். //

துளசி அம்மா,
விலங்கு, மனித இனம் என மொத்த தாய்களுக்கும் வாழ்த்து சொல்லும்
உங்களுக்கு சிறப்பு நல்வாழ்த்துகள்.

said...

நியாயமாப் பார்த்தால் பச்சிளம் குழந்தைகளைப் பரிவுடன் கவனிக்கும் தாய்மார்களுக்கு வருசம்பூராவும் மதர்ஸ்டேதான்.

மிகச் சரியான வார்த்தை

பசிக்கான பெரும் பயணம் குறித்து சொன்னவிதம் அருமை
மனம் கவர்ந்த பதிவு
வாழ்த்துக்கள்

said...

கப் அண்ட் சாஸர்ல அந்தப் பூச்செடியப் பாக்கறப்ப கொள்ளை அழகு. அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

said...

//நியாயமாப் பார்த்தால் பச்சிளம் குழந்தைகளைப் பரிவுடன் கவனிக்கும் தாய்மார்களுக்கு வருசம்பூராவும் மதர்ஸ்டேதான்.//

மிக அழகாக சொல்லிட்டீங்க மேடம்.

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்..

said...

அஞ்சு லிட்டர் கப்பின் லோ ஆங்கிள் ஷாட் ரொம்ப அழகு. ரகசியமா பேசி பிரமாதமா வாங்கித் தந்திருக்காங்க:)!

தங்களுக்கும் அனைவருக்கும் நானும் சொல்லிக்கறேன் அன்னையர் தின வாழ்த்துகளை!

said...

டீச்சருக்கும் மனமார்ந்த அன்னையர் தின வாழ்த்துக்கள் ;))

said...

அருமையான கோப்பை. தாயுமானவருக்கும் தாய்க்கும் எங்கள் அன்பு அன்னையர் தின வாழ்த்துகள்.

said...

வாழ்த்துக்கள்.......

said...

அருமையான பரிசு.

அன்னையர் தின வாழ்த்துகள்.

said...

உங்களுக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!!

said...

கப் அண்ட் ஸாசரில் அழகான பூக்கள். பார்க்கவே ரம்மியமா இருக்கு. அன்னையர்தின வாழ்த்துக்கள் சார்.

said...

இப்பதான் பரிசுப்பொருள் முழுமை பெற்றிருக்கு,

இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!!

http://jaghamani.blogspot.com/2012/05/blog-post_12.html

said...

வாங்க வாங்க வாங்க!

பழனி கந்தசாமி ஐயா

கோவியார்

ரமணி

கணேஷ்

ரமாரவி

ராமலக்ஷ்மி

கோபி

வல்லி

பாபு

மாதேவி

மனோ

விச்சு

இராஜராஜேஸ்வரி

உங்கள் அனைவரின் வருகைக்கும் அன்புக்கும் மனமார்ந்த நன்றிகள்.

said...

பெரிய கோப்பையையும் சின்னக்கோப்பையையும் பக்கத்துல பக்கத்துல வெச்சுப் பார்க்கறப்ப தாயும் சேயும் மாதிரியே தோணுது,.. அன்னையர் தினத்துக்கேத்த படம். ஜூப்பர் ;-)

said...

வாங்க அமைதிச்சாரல்.

//....தாயும் சேயும்....//

அட! நல்ல சொல்லாடல்! வெல் செட்!

இது எனக்குத் தோணலைப்பா!!!!