தோ............ குளிர்காலம் தெருமுனையில் நின்னு எட்டிப்பார்க்குது. ஊர் கிடக்கும் கிடப்பில் இளைஞர்களுக்கு வேற போக்கிடம் இல்லைன்னா.... ஆபத்துதான்!
இங்கே முக்கிய மதம் என்ற லெவலுக்கு நாடே 'விளையாட்டு மதம்' பிடிச்சுக் கிடக்கு. கோடைகாலத்துக்கு க்ரிக்கெட் & குளிருக்கு ரக்பி. நாட்டின் எல்லா ஊர்களிலும் ரக்பி பார்க் ஒன்னு இல்லாமப் போனதா சரித்திரமே இல்லையாக்கும். எதாவது கப்பு கிப்பு ஜெயிச்சாலும் ஊருராக் கொண்டுபோய் காட்டிட்டுத்தான் மறுவேலையாக்கும்.
நாங்க இந்தூருக்கு வந்து சேர்ந்தப்ப லங்காஸ்டர் பார்க் என்ற நாமத்துடன் இருந்தது உள்ளூர் ஸ்டேடியம். இந்திய மக்கள் க்ரிக்கெட் போட்டிகளில் பார்த்திருக்கலாம். இங்கிலாந்தில் மெழுகுவத்தி யாவாரம் செஞ்சுக்கிட்டு இருந்த பெஞ்சமின் லங்காஸ்டர், இடத்தைப் பார்க்காமலேயே நியூஸிலாந்துலே ஒரு இடம் வாங்கிப் போட்டுக் கிட்டாத் தேவலைன்னு 150 பவுண்டு காசுகளை நியூஸிலாந்து கம்பெனிக்குக் கட்டுனார். இந்தக்கம்பெனி, உள்ளுர் பூமிபுத்திரர்களான மவொரிகளிடம் இருந்து ஒப்பந்தம் என்ற பெயரில் வாங்குன நிலங்களையெல்லாம் கூறுபோட்டுச் செமவிலைக்கு இங்கிலாந்தில் வித்துக்கிட்டு இருந்துச்சு.
ஆமாம் போ...பெரிய நூத்தம்பது பவுண்டுன்னு யாரும் பல்லுமேலே நாக்குப்போட முடியாது. அந்தக் காலத்துலே அது பெரிய தொகை. அவுன்ஸ் தங்கம் அப்போ 18.93 டாலருக்கு கிடைச்சது. விவரம் சரியாச் சொல்லணுமுன்னா 1833 முதல் 1871 வரை இதே விலைதான். (ஹூம்.... அப்பவே ஒட்டியாணம் செஞ்சுக்காமப் போயிட்டேனே:(........
1872 லே தங்கம் விலை ஏறுச்சு! அநியாயமாஒரு செண்ட் ஏத்திட்டாங்கப்பா......!!! ஏத்திட்டாங்க. 18.94 !!!!!! இந்தப்பதிவு எழுதி வெளியிடும் இத்தருணம் 1671.24 டாலர்கள்! (தங்கம் விலையை ஆராயப்புகுந்தால் அதுக்குன்னு தனிப்பதிவு போடணும். அம்மாந்தூரம் இப்பப்போகவேணாம். பின்னொருக்கில்.... பார்க்கலாம்)
1850 வது வருசம் நாலு கப்பல்கள் புறப்பட்டு நியூஸிக்கு வந்து சேர்ந்துச்சு. மூணு மாசம் கழிச்சு அதே வருசம் டிசம்பர் 16க்கு மொதக்கப்பல் வந்து நின்னுச்சு. சர்வேயர்கள் நகரை எங்கே அமைக்கலாமுன்னு கணக்குப்போட்டுப் பார்த்து அவரவர் கட்டுன தொகைக்கு ஏற்ப நகர் எல்லைக்கு வெளியே பண்ணை அமைச்சுக்க இடம் ஒதுக்குனாங்க. அதே சமயம் நகர் எல்லைக்குள் வீடு கட்டிக்க, கால் ஏக்கர்ன்னு கொஞ்சம் இடமும் கொடுத்தாங்க. நம்ம பெஞ்சமின் லங்காஸ்டருக்கு நகருக்கு வெளியே கிடைச்சது அம்பது ஏக்கர். நல்ல அதிர்ஷ்டக்காரரா இருந்துருப்பார் போல!
கப்பல் நின்ன துறைமுக ஊரான லிட்டில்டன்னில் இருந்து நகருக்கு வரும் சாலையில் நகர எல்லையை ஒட்டியே இவ்ளோ இடம் கிடைச்சுப்போச்சு பாருங்க! பல்க் பையர் என்ற கணக்கில் இவருக்கு நகர எல்லைக்குள்ளே கால் கால் ஏக்கரா ரெண்டு வீட்டுக்கு இடங்கள் கிடைச்சது. ரெண்டு மனைகளிலும் வீட்டைக்கட்டிப்போட்டு ஒன்னு தன் குடுமபத்துக்குன்னு வச்சுக்கிட்டு இன்னொன்னை லீஸுக்கு விட்டு வருமானத்துக்கு ஏற்பாடு செஞ்சுக்கிட்டார் இந்த அதிர்ஷ்டக்காரர்.
அப்புறம் சில வருசங்களில்(1866) அவருடைய நிலத்துக்குப் பக்கத்துலே ரயில்பாதை வருதுன்னு கொஞ்சூண்டு இடத்தை அரசாங்கத்துக்குத் திருப்பிக் கொடுக்கவேண்டியதாப் போச்சு. நஷ்ட ஈடா 198 பவுண்டு காசு கிடைச்சதாம்! 'குளிருக்கு இதமா வெய்யில் காய'ன்னு இங்கிலாந்துலே ஆரம்பிச்ச க்ரிக்கெட் விளையாட்டும் இவுங்க கூடவே இங்கே வந்துருந்துச்சு. அங்கங்கே பொது இடத்துலே விளையாடிக்கிட்டு இருந்தவங்க ஒரு க்ளப் மாதிரி ஆரம்பிச்சு தனியா ஒரு இடம் வாங்கி அதுலே விளையாடலாம். நிலம் வாங்கும் செலவை ஈடுகட்ட வேடிக்கை பார்க்க வரும் மக்கள்ஸிடம் கேட்(டு) வசூல் செய்யலாமுன்னு திட்டம். இடம் தேடுனப்ப வாகாக் கிடைச்சது பெஞ்சமின் லங்காஸ்டரின் இடம். அதுலே கிட்டத்தட்ட பதினொரு ஏக்கர் இதுக்குன்னு ஒதுக்கி அதை வித்துட்டார். எவ்வளவு காசுக்கு? 2841 பவுண்ட். இது நடந்தது 1880 வது வருசம். அதுக்குள்ளே நகரம் வளர்ந்து இந்த இடம் நகர எல்லைக்குள்ளே போயிருந்துச்சு! இந்த இடத்துக்கே லங்காஸ்டர் ப்ளொக் Lancaster block என்றும் பெயர் தானாவே ஏற்பட்டுப்போச்சு. முப்பதே வருசத்தில் எவ்வளோ லாபம் பாருங்க! அதிர்ஷ்டக்காரர் ஐயா இவர்!
Lancaster Block in those days.
இந்த க்ரிக்கெட் க்ளப்புக்கு ஏது இவ்வளோ பணம் இதை வாங்கன்னு நினைச்சால்..... அப்பவே பணம் பண்ணிக்கத் தெரிஞ்ச விளையாட்டா இது மாறி இருந்துச்சு என்பதே நிஜம்:-) பப்ளிக் ஷேர் ஒன்னு பத்து பவுண்டு என்ற மேனிக்கு 450 ஷேர்களை வித்து 4500 பவுண்டு கையில் வச்சுருந்தாங்க. நிலத்துக்குக்கொடுத்தது போக மீதம் இருந்த பணத்தில் ஏழரை ஏக்கரில் புல் விதைச்சு நல்ல க்ரவுண்டு தயார் செஞ்சு Pபிட்ச் எல்லாம் ரோலர் போட்டு அருமையாச் செஞ்சுட்டாங்க. இந்த பிச்சுக்கு வெளியே பதினைஞ்சு அடி அகலத்தில் ஒரு ரன்னிங் ட்ராக் வேற! ஆகக்கூடி எல்லாவருக்கும் ஏதோ பயன்!
ஷேர் ஹோல்டர்ஸ் தவிர பொதுமக்களில் இந்த க்ளப்புக்கு வருசாவருசம் அங்கத்தினர் கட்டணமா ஆண்களுக்கு ஒரு பவுண்டு பத்து ஷில்லிங், பெண்களுக்கும், பதின்மவயதினருக்கும் பத்து ஷில்லிங், ஆறு பென்ஸ் என்று வசூலிச்சாங்க. அங்கத்தினரா இல்லாம ச்சும்மா விளையாட்டையும் போட்டிகளையும் பார்க்க வர்றவங்க கிட்டே டிக்கெட் போட்டுத் தனியா ஒரு கட்டணம். (இந்தப்பழக்கம் பிரிட்டிஷ் ஆண்ட எல்லா நாடுகளுக்கும் பரவி இருந்துச்சுல்லே?)
அடுத்த ரெண்டு வருசத்தில் (1882) ரக்பி விளையாட்டும் இந்த ஊருக்குள் வந்துருச்சு. க்ரிக்கெட் விளையாடும் இடத்திலேயே ரக்பி விளையாட்டையும் நடத்திக்கிட்டு இருந்தாங்க. முன்னது கோடைகாலத்துக்குன்னா இது குளிர்காலத்துக்குன்னு பாகப்பிரிவினை:-) இதே வருசத்துலேயே பெஞ்சமின் லங்காஸ்டரின் நிலத்தின் (போனதெல்லாம் போக பாக்கி இருக்கும்) மதிப்பு ஏணிமேலே ஏறுவதுபோல விறுவிறுன்னு ஒரே ஏத்தமாகிப்போய் 11,775 பவுண்டாக ஆகி இருந்துச்சு. உண்மையான அதிர்ஷ்டக்காரர்தான் ஐயா இவர்!!!
தன்னுடைய 86 வது வயசுலே(1887) பெஞ்சமின் சாமிகிட்டே போனப்ப இங்கே அவரது மொத்த சொத்துக்களின் மதிப்பு 135,000 பவுண்டுகள்! அதுலே ஒரு பகுதியை தர்ம காரியங்களுக்கு எழுதிவச்சுட்டுத்தான் போயிருந்தார். நல்ல அதிர்ஷ்டக்காரர் ஐயா..... நல்ல அதிர்ஷ்டக்காரர்!
lancaster Park
இந்த ஸ்டேடியம் லங்காஸ்டர் பார்க் Lancaster Park, என்ற பெயரில் எப்போதும் அவர் புகழைப்பாடி வந்தது. பணம் பெருசா... இல்லே சரித்திரம் பெருசான்னு நடந்த போட்டியில் பணம் பாதாளம்வரை பாய்ந்துருச்சு ஒரு சமயம். ஸ்டேடியத்தை இன்னும் நல்லாக் கட்டிக்கலாமுன்னு எண்ணம் வந்ததும் ஜேடு என்ற கம்பெனி(Jade Software Corporation) நாங்க ஆதரவு தர்றோமுன்னு ஏகப்பட்ட பணம் செலவு செஞ்சு நவநாகரிக வசதிகளோடு கட்டி முடிச்சதும் நன்றிக்கடனா ஜேடு ஸ்டேடியம் (Jade Stadium)என்ற பெயர் மாற்றப்பட்டது 1998 முதல்.

jade Stadium
வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு என்பதால் ஒன்பது வருசம் இருந்த பெயர்ப்பலகை 2007 இல் ஏ எம் ஐ பெயரை ஏந்திக் காட்சி கொடுத்ததும்(AMI Stadium) உண்மை! இந்த ஏ எம் ஐ இன்ஷூரன்ஸ் கம்பெனி. நஷ்டம் இல்லாம ஓடுன யாவாரம். எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு நிலநடுக்கம் வரும்வரை! போன வருசம் 2011 ஃபிப்ரவரி 22 ஊரையே புரட்டிப் போட்டப்ப இதையும் விட்டுவைக்கலை:(
AMI Stadium on 27/8/2011
PIN குறிப்பு: பதிவின் நீளம் கருதி மீதி, தொடரும்........

14 comments:
சுவையாக இருக்கிறது, தொடருங்கள்.
வாங்க பழனி கந்தசாமி ஐயா,
நல்லவேளை நீங்க(ளாவது) வந்திங்க. சிலசமயம் ஆளில்லாக் கடையில் டீ ஆத்துவதும் நடக்குதே:-))))
விளையாட்டாவே சம்பாதிச்சுட்டார் லங்காஸ்டர் ;-)))
நல்ல தகவல்கள். காத்திருக்கிறேன்
எனக்கு இரண்டு கப் ஜிஞ்சர் டீ கொடுங்கப்பா.
ஏதாவது நிலம் இருந்தாச் சொல்லுங்க. நானும் நாலு ஏக்கர் வாங்கிப் போடறேன்.
அழகாக Lancaster Park,ஐ பற்றி விவரிச்சு சொல்லியிருக்கீங்க மேடம். படிக்க மிகச் சுவாரசியமாக இருக்கு. அடுத்த பகுதியை எதிர்பார்த்திருக்கிறேன். விரைவில் எழுதுங்க..
நிலநடுக்கம் வரும்வரை! போன வருசம் 2011 ஃபிப்ரவரி 22 ஊரையே புரட்டிப் போட்டப்ப இதையும் விட்டுவைக்கலை:(
நிலநடுக்கம் இந்த இடத்தையும் புரட்டிப்போட்டதா !
வாங்க அமைதிச்சாரல்.
அவரைப்போல அதிர்ஷ்டக்காரர் முதலில் வந்தவர்களில் இல்லைன்னுதான் சொல்லணும்.
மெழுகுவத்தி (வித்த காசு) எப்படிக் கரையாம நின்னுச்சுன்றதுதான் வியப்பு:-)
வாங்க புதுகைத் தென்றல்.
நாளைக்கு அடுத்ததை வெளியிடுகிறேன். கட்டாயம் வந்து போகணும் நீங்க.
வாங்க வல்லி.
கால யந்திரத்தில் ஏறி நாம் 1850க்குப் போனால்..... ஆளுக்கு 100 ஏக்கர் வாங்கிடலாம்:-)
ஜிஞ்சர் டீ (எவர்)ரெடி. சீக்கிரம் கிளம்பி வாங்கப்பா.
வாங்க ராம்வி.
நாளைக்கும் உங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன்.
வாங்க இராஜராஜேஸ்வரி.
நிலநடுக்கம் எதை விட்டு வச்சது சொல்லுங்க:(
தோலிருக்க சுளையை முழுங்கிருச்சு.....
கடைசியில் பூமாதேவியின் கைக்குப் போய்விட்டது.
மீண்டு ஆர் வாங்கப் போகிறார்களோ...
வாங்க மாதேவி.
இனி அந்த இடத்தை விற்பதோ நிலத்தை பழுதுபார்த்துச் சரியாக்குவதோ நடக்காத காரியம்தானாம்:(
Post a Comment