வார்த்தை தவறிவிட்டாய்..... விக்டோரியா.....
மார்பு துடிக்குதிங்கே...... யம்மாடி..... சொன்னதென்ன இப்ப செய்வதென்ன......
உங்க உணர்ச்சிகள் எல்லாம் புரியுது.(நெசமாவா?) அப்படியே இடிச்சுத்தள்ளிடமாட்டோம். அன்போடு கல் கல்லா எடுத்து வச்சுப் பிரிச்செடுப்போமுன்னு சொன்னது நீ(ங்க)தானே? சொல் ....சொல்.....
(எல்லாத்துக்கும் பாட்டு இருக்கு பாருங்களேன்!!!)
எங்கூர் கதீட்ரலை இடிக்கக்கூடாதுன்னு நாங்க கரடிகளா(!!) கத்திக்கிட்டு இருக்கோம். முடியாது. ரொம்ப ஆபத்தான நிலையில் இருக்கு. இடிச்சே ஆகணும். புதுசு ஒன்னு இதே மாதிரி கட்டணுமுன்னா அதுக்கு ஏகப்பட்ட செலவாகும். அது நடக்கவே நடக்காத காரியம். உங்களுக்கு சர்ச் தானே வேணும்? இதோ இருக்கார் ஜப்பானிய தோட்டாதரணி. இவர் பத்தே மில்லியனில்(!!??) பத்து வருசம் நிக்கும் அட்டைச் சர்ச் பண்ணிக் கொடுத்துருவார். நீங்க அதுக்குள்ளே போய் சாமி கும்பிடலாம். நான் பூசாரிணியா அங்கே இருப்பேன்.
ஏம்மா.... உமக்கே இது நியாயமாப்படுதா? இடிஞ்சு நிற்கும் இதே சர்ச்சைப் பழுது பார்த்துக் கட்டித்தரோமுன்னு கட்டிடக்கலை நிபுணர்கள் பலர் இந்த 'இடிக்கக்கூடாது கட்சி' யில் இருந்து சொல்றாங்களே.... அதைக்கொஞ்சம் காது கொடுத்துக் கேக்கக்கூடாதா?
எரிஞ்சகட்சி, எரியாத கட்சின்னு ஒன்னு அந்தக் காலத்துலே நம்ம பக்கங்களில் இருந்துச்சாமே..........
' கையெழுத்து வேட்டை, கோர்ட்டுலே கேஸ், அரசாங்கத்துக்கு மனு கொடுத்து கெஞ்சுவது'ன்னு இருக்கும் உபாயங்கள் எல்லாம் செய்யுது உள்ளுர் சனங்கள். மீண்டும் கட்டி எழுப்ப நிதி தானம் செய்ய நிறையப்பேர் தயாரா இருக்கோம்.
முடியவே முடியாது. பழசு ஆபத்தான நிலையில் இருக்குன்னு ரிப்போர்ட் வந்துருச்சு.
அப்படியா அ(த்)தையாவது எங்க கண்ணுலே காட்டுன்னு அழுது புலம்பினாலும்..... இது ஒன்னும் பொது சொத்து இல்லை. சர்ச்சோட ப்ரைவேட் இடம். உங்களுக்குக் காமிக்கவேண்டிய அவசியம் இல்லைன்னு இளக்காரமா பதில் சொன்ன பிஷப் விக்டோரியா..... மக்கள் தொடர்ந்து கொடுத்த வேண்டுதலால் (நெருக்கடி?) மனம் இரங்கி.(!!!) .... இன்ன தேதிக்கு ரிப்போர்ட் வெளியிடுவோமுன்னு சொன்னதும் காதையும் கண்ணையும் டிவியில் நட்டுவச்சுருந்தோம்.
குறிப்பிட்ட நாளின் குறிப்பிட்ட நேரத்தில் ....... சொன்னாங்களே..... ஆயிரம் பக்கம் வரும் அறிக்கையை நம்ம ஸேரா (CERA: Canterbury Earthquake Recovery Authority)வலைப்பக்கத்தில் ஏத்திக்கிட்டு இருக்கோம். கொஞ்ச நேரம் கழிச்சுப் பாருங்கன்னு..... கிழிஞ்சது போ! ஆயிரம் பக்கங்கள்......... கேட்டேல்ல...... இந்தா.... ஆயுசு முழுக்க உக்காந்து வாசி........
திடீர்னு ஒரு நாள் டிவியில் காமிக்கிறாங்க.... அட்டைக்கோவிலுக்கு அடிக்கல் நாட்டுனாங்க என்ற விவரத்தை. லேட்டிமெர் சதுக்கத்தில் விழா நடக்குது. ஒரு சின்னக்கூட்டம் முப்பது பேர் இருக்கலாம்..... ஜப்பான் தோட்டாதரணி மண்வெட்டியில் ஒரு குத்து போட்டு தோண்டறார். பிஷப் அம்மா, பதவிக்குரிய அங்கி தொப்பி எல்லாம் போட்டுக்கிட்டு ஒரு கையில் தீர்த்தப் பாத்திரமும் மறுகையில் கரண்டியும் வச்சுக்கிட்டுப் புனித நீர் தெளிச்சுக்கிட்டு காலை வீசிவீசிப்போட்டு நடந்து சர்ச் வரப்போகும் இடத்தைப் புனிதப்படுத்தறாங்க. சர்ச்சோட பஞ்சபாத்ரமும் உத்தரணியும் வேற ஸ்டைலில் இருக்கு.
பட்ஜெட்டைப் பாதியாக்கிட்டாங்க.அஞ்சு மில்லியனில் கட்டி முடிச்சதும், உள்ளே இப்படி இருக்கும், அப்படி இருக்கும் என்றெல்லாம் தினசரியில் படம் போட்டுக் காமிச்சுக்கிட்டே இருந்தாங்க. பார்க்க நல்லாதான் இருக்குன்னாலும் இது நம்ம கதீட்ரலுக்கு ஈடாகுமா?
அட்டைக்கு நாலு மில்லியனை சர்ச்சே கொடுக்குமாம் இன்ஷூரன்ஸில் இருந்து கிடைக்கும் பணத்தில் இருந்து! (அதானே பார்த்தோம்.... இருவது மில்லியன் இன்ஷூரன்ஸ் காசு லட்டாட்டம் கிடைக்குது.
இடிச்சால் மட்டுமே கிடைக்கும் .பழுது பார்த்தால் நோ லட்டு)
வீக் எண்டில் கிளம்பிப் போனோம் அந்த இடத்தைப்பார்க்க. லேட்டிமர் சதுக்கம் பப்ளிக் இடம். நகர சபைக்கும் நகர மக்களுக்கும் உரியது. இதுலே போய் எப்படி? சுத்திச்சுத்தி வர்றோம் அடிக்கல் நாட்டுன இடம் கண்ணுலேயே படலை. வேற எங்கியாவது இருக்குமுன்னு கோபால் சொல்றார். டிவியில் காமிச்சபோது இங்கே நடைபாதையை ஒட்டித்தான் மண்வெட்டியின் குத்து விழுந்துச்சுன்னு சாதிக்கிறேன்.
ஒன்னையும் காணோமே... ஒருவேளை அட்டைக்கோவிலுக்கு எதிர்ப்பு காமிக்க, சனங்க ராவோடுராவா அடிக்கல் சமாச்சாரத்தைத் தோண்டி வீசி இருக்குமோ!
அடடா..... இதுவே இந்து சமயம் சம்பந்தப்பட்டதா இருந்தால்.... மஞ்சளும் குங்குமமும் பூசிய செங்கல்லும் அங்கே பூஜை செஞ்சப்பப் போட்டுருந்த பூக்களும் இடத்தைச் சட்ன்னு காமிச்சுக் கொடுத்துருக்குமேன்னு நினைச்சுக்கிட்டே அம்மாம்பெரிய சதுக்கத்தை ரெண்டுமுறை சுத்தி வந்துட்டேன். ஒரு வார நடைப்பயிற்சியை ஒரே நாளில் முடிச்சாச்சு.
நடைபாதையில் அன்பு வட்டம் போட்டு வச்சுருக்காங்க யாரோ!
கடைசியில் அட்டைக்கோவில் எங்கேதான் வரப்போகுதுன்னு மண்டையை உடைச்சுக்க வேன்டியதாப்போச்சு, சதுக்கத்தின் எதிரில் இருந்த செயின்ட் ஜான்ஸ் சர்ச் நிலநடுக்கத்தால் முழுசும் இடிஞ்சு போயிருச்சு. அதுவும் இந்த ஏங்கலிக்கன் சர்ச்சின் இடமாம். மக்களின் ஆன்மீக தாகத்தை(???!!!) தணிக்க அங்கேதான் அட்டைக்கோவில் கட்டறாங்களாம்.
நம்ம கதீட்ரலுக்குப் பின்பக்கம் ரெண்டு தெரு தள்ளி இருக்கும் சதுக்கம் இது. அகலவசத்தில்பார்த்தால் மூணு தெருக்களுக் கிடையில் இருக்கும் ரெண்டு முழு ப்ளாக்குக்கான காலி இடங்கள். நகரத்தை அமைக்கும்போதே ஊரில் நாலு சதுக்கம் வேணுமுன்னு தீர்மானிச்சு நம்ம கதீட்ரலை நடுவாந்திரமா வச்சு அதுக்குக் கிழக்காலே ஒன்னு, மேற்காலே ஒன்னு வடக்கே ஒன்னு தெக்கே ஒன்னுன்னு திட்டம் தீட்டுனதுதான். நகரம் ஆரம்பிச்சு கட்டிடங்கள் கட்டத்தொடங்குனதும் திட்டங்கள் லேசா உருமாறி வடக்கு தெற்கு ரெண்டும் கதீட்ரலை ஒட்டியே அமைஞ்சுபோச்சு. தீட்டுன திட்டப்படி அமைஞ்சது இந்த லேட்டிமெர் சதுக்கம்தான்.
மற்ற மூன்று சதுக்கங்களுக்கும் க்ரான்மெர், கதீட்ரல், விக்டோரியா (ராணியம்மா. இவுங்கதான் நகரம் முளைக்கும் சமயம் ராணியா இருந்தாங்க)) பெயர்கள் வச்சுட்டாங்க.
ப்ராட்டஸ்டண்ட் மதப்பாதிரிகளா இருந்த பிஷப் லேட்டிமர், பிஷப் க்ரான்மர், பிஷப் ரெய்லி இந்த மூணு பேரையும் 1555 வது வருசம் ராணி மேரி (முதல்) ஜோதியில் கலக்க வச்சுட்டாங்க. ராணியம்மா ரோமன் கத்தோலிக் பிரிவு. அதனால் இவுங்க கொடிய எதிரிகள்:( அப்பெல்லாம் வைக்கப்போரில் உக்காரவச்சு ஜோதி ஏத்திருவாங்களாம்.
சம்பவம் நடந்து மூணு நூற்றாண்டுகளுக்கும் மேலே ஆன நிலையில் இங்கிலாந்து அரசகுடும்பம் கிறிஸ்துவத்தின் இதர பிரிவுகளோடுள்ள வெறுப்பைக் குறைத்துக்கொண்டதுன்னு நினைக்கிறேன். அதனால்தான் அங்கிருந்து இங்கே புலம்பெயர்ந்த மக்கள் ஆரம்பிச்ச நகரத்தில் பொது இடங்களுக்கு, எரிந்த பிஷப்புகளின் பெயர்களை நினைவுபடுத்தும் விதமா நாமகரணம் செஞ்சுருக்கலாம்.
எங்க கதீட்ரல் ஊருக்கே ஒரு அடையாளமா (ஐகான்) இருப்பதால் சிட்டிக் கவுன்ஸில் இதுக்கு வருசாவருசம் மானியமா ரெண்டு லட்சத்து நாப்பதாயிரம் டாலர்கள் கொடுத்துக்கிட்டு இருக்கு. எல்லாம் சிட்டிக்கவுன்ஸில் மக்களிடம் வரி என்று கறக்கும் நம்ம காசுதான். போனவருசம் கோவிலே இடிஞ்சு விழுந்ததால் மானியம் கொடுக்கலை.
ஊரே பாழாப்போயிட்ட நிலையில் இருக்கும்போது.... இப்போ வரப்போகும் அட்டைக்கோவிலுக்கு இதே மானியத்தைக் கொடுங்கன்னு சர்ச் பிஷப் கேக்கறாங்க. எப்போ எப்போன்னு காத்துக்கிட்டு இருந்த சனம் சும்மா இருக்குமா? சர்ச் எங்க ப்ரைவேட் சொத்துன்னு சொல்லி மக்கள் வாயை அடைச்சுட்டு இப்ப மானியம் தான்னு கேட்டுக் கைநீட்டுவதா? ஐய்ய........ அசிங்கம்...
கொடுக்கவே கூடாதுன்னு கச்சைகட்டிக்கிட்டு நிக்குது சனம்.
சிவிக் ஃபங்ஷன் நடத்த சர்ச்சுலேயும் அதன் கிரவுண்டுலேயும் இடம் கொடுத்தமேன்னு சர்ச் கூவுது ஒரு பக்கம்.
இதுக்கிடையில் சர்ச்சை இடிக்கும் வேலைகள் ஆரம்பிச்சுருச்சு. கடைசியாப் பார்த்துக்கோன்னு அந்தச் சதுக்கம் வரை மக்களைப்போக விட்டப்ப நாங்களும் போய்ப் பார்த்து அழுதுட்டு வந்தோம். கல்லுகல்லா கவனமா எடுத்து வைப்போம். புல்டோஸர் கிடையாதுன்னு சொன்னவங்க மிஷின் வச்சு முதலில் பெல் டவரை இடிக்கறாங்க. அதை ஸெராவே வீடியோ எடுத்துப் போட்டுருக்கு. டிவியிலும் காமிச்சுக்கிட்டு இருக்காங்க.
எங்கூர் மந்திரவாதி இடிப்பை நிறுத்தப் படாதபாடு படறார். ஒரு அலுமினியம் ஸ்டெப் லேடரை பிரிச்சு வச்சு நடுவில் ஒரு ஆலயமணி ( அநேகமா இந்தச் சர்ச் மணிகளில் ஒன்னா இருக்கணும்) கட்டிவிட்டு சாவுமணி அடிச்சுக்கிட்டு இருக்கார். நம்ம பக்கங்களில் திருச்சபை மக்களில் யாராவது மரணம் அடைஞ்சால் சர்ச்சுகளில் அஞ்சு நிமிச இடைவெளிகளில் டாண் டாண்ன்னு மணி அடிச்சு மரணச்செய்தியை மக்களுக்கு அறிவிப்பாங்களே, நினைவிருக்கா? அதேதான். எங்களைப் பொறுத்தவரை சர்ச் இடிப்பு மரணத்துக்கு சமம்:(
பகல் முழுசும் மணிச் சத்தம் சர்ச்சுக்கு முன்பக்கத்துத் தெருவில் இருந்து கிளம்பி காற்றில் கலந்து அலைஅலையா நகரமையப்பகுதிகளில் பரவிக்கிட்டே இருக்கு.
http://restorechristchurchcathedral.co.nz/
PIN குறிப்பு: கோவிலைக் காப்பாத்த ஒரு இயக்கம் ஆரம்பிச்சு கடுமையாப் போராடுகிறோம். அரசாங்கத்துக்கு போடும் மனுவுக்கும் கையெழுத்து வேட்டைக்கும் உங்களுக்கு(ம்) விருப்பம் இருப்பின் இங்கே உங்கள் பெயரைப்பதிவு செய்ய வேண்டுகின்றேன். கோவிலைக் காப்பாத்த ஒரு பாட்டு (இதுக்கும் பாட்டுதானா?!!!) இருக்கு இதுலே. கேட்டுப்பாருங்களேன் நேரம் இருந்தால்.........

18 comments:
சர்ச் உங்க ப்ரைவேட் சொத்துன்னு சொல்லி மக்கள் வாயை அடைச்சுட்டு இப்ப மானியம் தான்னு கேட்டுக் கைநீட்டுவதா? ஐய்ய........ அசிங்கம்... கொடுக்கவே கூடாதுன்னு கச்சைகட்டிக்கிட்டு நிக்குது சனம்.
-ரொம்ப நியாயம்னு தோணுது டீச்சர். அங்க போய்ப் பாத்துட்டு வந்த உங்க அனுபவங்களும் படங்களும் அருமை.
நியயமாவே இல்லையேப்பா. அரசியல் வாடை அடிக்கிறதே. மணி சத்தம் சந்தோஷம் கொடுக்கும். இந்த மணி சாவுமணி போல இருக்கு.
எப்படியோ இன்சூரன்ஸ் பணம் வந்தா சரி.
அழக்கான எழுது நடை சார் உங்களுது
(எல்லாத்துக்கும் பாட்டு இருக்கு பாருங்களேன்!!!)
இன்சூரன்ஸ் பணம் பெற இப்படி ஒரு வழி !!!!
வாங்க கணேஷ்.
சமயத்துக்கு ஏற்ற மாதிரி பேச்சை மாத்திக்கிறாங்க பாருங்களேன்:(
நியாயமுன்னு நியாயத்தைச் சொன்னதுக்கு நன்றி.
வாங்க வல்லி.
எல்லா ஆன்மீக நிறுவனங்களும் கடைசியில் கடவுளை விட்டுட்டுக் காசு பார்க்க ஆரம்பிச்சுருக்கு!!!!
சாவுமணிதான். சந்தேகமே வேணாம் கேட்டோ!
வாங்க பழனி கந்தசாமி ஐயா.
அதெல்லாம் 'டாண்' ன்னு கிடைச்சுருச்சு!
வாங்க ராஜபாட்டை ராஜா.
சின்னதா உங்க பின்னூட்டத்தைத் திருத்தலாமா இப்போ பாருங்க
//அழக்கான எழுது நடை சார் உங்களுது//
அழகான எழுத்து நடை மேடம் உங்களுது
ஐயையோ ஒரு வேளை அழுக்கான ன்னு சொல்ல வந்தீங்களோ:-))))
வாங்க இராஜராஜேஸ்வரி.
காசேதான் கடவுளடா அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமடா.....
ஹை.... இதுக்கும் பாட்டு இருக்கு:-)))
லட்டுக்கிடைக்கும் என்றதும் "காசேதான் கடவுளடா"வுக்கு மாறிவிட்டாங்களே.
அந்த சர்ச் மீது உங்களூர் மக்களுக்கு அளவு கடந்த பாசம் போல் இருக்கு!
லட்டுன்னா திறக்கும் வாய், சர்ச்சைத் திரும்பவும் கட்டுன்னதும் கப்சுப்ன்னு மூடிக்குதே உங்கூர் அம்மாவுக்கு..
பதிவுலக நண்பர்களே,
இன்று பதிவில் கூடுதலாக சேர்த்திருப்பதையும் கொஞ்சம் பாருங்க.
கோவிலைக் காப்பாத்த ஒரு இயக்கம் ஆரம்பிச்சு கடுமையாப் போராடுகிறோம். அரசாங்கத்துக்கு போடும் மனுவுக்கும் கையெழுத்து வேட்டைக்கும் உங்களுக்கு(ம்) விருப்பம் இருப்பின் இங்கே உங்கள் பெயரைப்பதிவு செய்ய வேண்டுகின்றேன். கோவிலைக் காப்பாத்த ஒரு பாட்டு (இதுக்கும் பாட்டுதானா?!!!) இருக்கு இதுலே. கேட்டுப்பாருங்களேன் நேரம் இருந்தால்.........
வாங்க மாதேவி.
குதிரை கூட கொள்ளுன்னா வாயைத் திறக்கும்!
வாங்க குமார்.
மதுரைக்கு எப்படி மீனாட்சி அம்மன் கோவிலோ அதைப்போலத்தான் இந்த ஊருக்கு 'இந்த' சர்ச்!
இன்றைக்கு கூடுதல் விவரம் ஒன்னு இதே பதிவில் சேர்த்துருக்கேன்.
வாங்க அமைதிச்சாரல்.
எனக்கென்னமோ..... அம்மாவை முன்னே நிறுத்திட்டு ...... சர்ச்சின் உண்மையான மேலிடம் (காசோடு) விளையாடுதுன்னு தோணுதுப்பா:(
ஓ... இப்படியுமா அம்மா ஆத்தாடி...!
ஹிந்து என்று இல்லாமல் இந்து என ஒரு சொல் இருப்பதில் ஓரளவு மகிழ்ச்சி... (!)
Post a Comment