Tuesday, May 15, 2012

அடங் 'கொய்யா 'லே!

ஆனாலும் இதுக்கு ஆயுசு கெட்டிதான்! முந்தி இருந்த வீடு மெயின்ரோடுலே இருந்துச்சுன்னாலும் அதிலும் பல வசதிகள் இருக்கத்தான் செஞ்சது. ஒரு நிமிச நடையில் ஷாப்பிங் செண்டரும் அதுக்குள்ளே சூப்பர்மார்கெட்டுமா , சட்னு ஒரு சாமான் வாங்க ஓடிப்போய் ஓடிவரமுடியும்.

எண்பதுகளின் கடைசியில் கார்கோ கிங் என்ற ஒரு கடை நம்மூரில் நடந்துக்கிட்டு இருந்தது. மலிவு விலையில் சீனப்பொருட்கள் விளையாட்டு சாமான்கள் இப்படி அவுங்க வியாபாரம். அப்போ இவ்வளவு சீனா சாமான்கள் நாட்டுலேயே கிடையாது. மற்ற எல்லா இடங்களிலும் தரமான உள்நாட்டு அண்ட் ஐரோப்பிய பொருட்கள்தான் விற்பனை.

 சீனாவோடு ஒப்பந்தம் போட்டுக்கிட்டு, அரசு அவுங்களுக்கான மார்க்கெட்டைத் திறந்து வச்சதில் இப்போ 90 சதமானம் பொருட்கள் அங்கிருந்துதான் இறக்குமதி. ஹாங்காங், பிரிட்டிஷார் கைவிட்டுப்போன சமயம் இங்கே ஏராளமான சீனர்கள் வரத்தொடங்கி...... காலம்போற போக்கைப் பார்த்தால் இவுங்க எண்ணிக்கை கூடியவிரைவில் மற்ற இனங்களை எல்லாம் தூக்கி முழுங்கிரும்போல இருக்கு! ஒரு ஷாப்பிங் ஏரியான்னால்.... அங்கே இருக்கும் வியாபாரங்கள் எல்லாம் ஒன்னொன்னா சீனர்கள் வசம் போய் கடைசியில் அந்த ஏரியா முழுக்க முழுக்க ச்சைனா டவுன் ஆகிவருவதைக் கண் முன்னால் கவனிச்சுக்கிட்டே இருக்கோம். இன்னும் நுழைவு வாசல் அமைச்சு, சிகப்பு நிறமடிச்சு சிங்கம் வைக்கலை!

இந்த கார்கோ கிங் ஓசைப்படாமல் நகர்ந்து வேர் ஹவுஸ் என்ற வியாபார நிறுவனம் விஸ்தரிக்கத் தொடங்குனது அப்போதான். மலிவான சீனப்பொருட்கள் மலிவு விலையில் விற்கத்தொடங்கி இப்போ இந்த நிறுவனம் சக்கைப்போடு போடுது. ஆரம்பிச்ச புதுசுலே ஷேர் அம்பது சதமுன்னு தொடங்குனது இப்போ..... 2.7 டாலர். கொஞ்சம் தரமான சாமான்களும் உலகின் பலபகுதிகளில் இருந்து இறக்குமதி செஞ்சு விக்கறாங்க. தங்கமும் வைரமும் கூட விக்கறாங்கன்னா பார்த்துக்குங்க.

ஆரம்பகாலத்தில் (1982) ஆக்லாந்து நகரில் சின்னதா ஆரம்பிச்ச கடை. ஸ்டீஃபன் டிண்டால் என்றவர், முதலுக்காக தன்னுடைய கேரவானையும் மனைவியின் காரையும் விற்று, தன்னுடைய சூப்பரானுவேஷன் காசை ( இது நம்மூர் ப்ராவிடண்ட் ஃபண்ட் போல ஒன்னு) எல்லாம் எடுத்துப்போட்டு தொடங்குனது. கடையின் கோலம் ஒரு பழைய ஷெட்டுலே இருக்கும் வேர்ஹவுஸைப்போல இருந்துச்சுன்னு கடைக்கே வேர்ஹவுஸ்ன்னு பெயர் வச்சுட்டார். where everyone gets a bargain. என்ற இவுங்க தாரகமந்திரம் எல்லோரையும் சட்னு கவர்ந்துருச்சு. இப்போ நியூஸி முழுசுக்கும், அண்டை நாடான அஸ்ட்ராலியாவுக்கும் சேர்த்து 253 கடைகள். பதினாலாயிரத்து எண்ணூரு பேருக்கு வேலை, வருசத்துக்கு தொன்னூறு மில்லியன் டாலர் லாபம்ன்னு ஜமாய்க்கிறாங்க. நம்மூரில் இருக்கும் ஆறு கடைகளில் பல இந்திய மாணவர்கள் குறிப்பா கேரளமாநிலத்தினர் வேலை செய்யறாங்க. நியூஸியில் மாணவர்களுக்கு வாரம் 20 மணி நேரம் வேலை செய்ய ஒர்க் பர்மிட் உண்டு. (படம்: முதல் கடை)
ஒரு இருவது வருசத்துக்கு முன்னே ஸ்டேஷனரிக்குன்னே ஒரு பிரிவு தொடங்கி வியாபாரம் எல்லாமே ஏற்றுமுகம்தான்!

 இப்படி இந்தக் கடையின் ஆறு கிளைகளில் ஒன்னு நம்மூட்டுக்கு எதிரில் இருந்த ஷாப்பிங் செண்ட்டரில் இருக்கும்போது சும்மாவாச்சும் ஒரு நடை போய் சேவிச்சுக்கிட்டு வருவேன். தினசரி நடைப்பயிற்சி உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லதில்லையோ!!!! வீட்டுத்தோட்டம் சம்பந்தமான பொருட்களுக்கே தனிப் பகுதி ஒன்னு எல்லாக் கிளைகளிலும் உண்டு. ஒருநாள் கொய்யாச்செடி ஒன்னு ரெண்டு டாலருக்குக் கிடைச்சது. ஸ்ட்ராபெர்ரி கொய்யான்னு போட்டுருக்கு. சின்னச் செடிதான். ஒரு பத்து செமீ உயரம் உள்ள பேபி ப்ளாண்ட்.

 இந்த செடி எட்டுவருசமா தாக்குப்பிடிச்சு நிக்குது என்பதே வியப்புதான். வளரவளர வெவ்வேறு அளவுள்ள தொட்டிகளில் மாத்திக்கிட்டே இருந்தேன். இந்தியா வந்த சமயம் இங்கே உள்ளூர் தோழி வீட்டில் விட்டு வச்சேன். அப்போ சின்னதா சில காய்கள் வரத்தொடங்கி இருந்துச்சு. கொஞ்ச நாளில் அந்தப்பிஞ்சுகள் உதிர்ந்துபோச்சுன்னு தோழி மெயில் அனுப்பினாங்க. நாம் திரும்பி வந்தபிறகு செடியும் நம்மூட்டுக்குத் திரும்பிருச்சு. நல்லவேளை பொழைச்சுக்கிடக்கேன்னு தான் மகிழ்ச்சி.

 இன்னும் கொஞ்சம் பெரிய தொட்டியில் மாற்றிவச்சேன். இப்ப ஏராளமான பிஞ்சுகள் வரத்தொடங்கி.... இந்த நாலைஞ்சு மாசத்தில் பெருசாகிப் பழுக்கத் தொடங்கிருச்சு.

இந்தச்செடிகளில் ரெண்டு வகை இருக்கு. சிகப்பு நிறப்பழங்கள் ஸ்ட்ராப்பெர்ரி கொய்யா, மஞ்சள் நிறப்பழங்கள் எலுமிச்சைக் கொய்யாவாம். அடங்கொய்யாலே!

நம்மது சிகப்பு. சின்னச்சின்ன சைஸ் பழங்கள். முதல் பழத்தை ஆவலோடு பிச்சுப் பார்த்தால்.... க்யூட்டா ஒருத்தர் உள்ளே சாப்பிட்டுக்கிட்டு இருந்தார். ரெண்டாவது நமக்கு. ஸ்ட்ராபெர்ரியின் லேசான புளிப்பும், கொய்யா விதைகளோடு சதைப்பிடிப்பும்.
 ஆப்பிளுடன் ஒரு ஒப்பீடு  :-)

சின்ன மரமாகவும் வளருமாம்.ஒரு 20 இல்லை 25 அடி உசரம். Psidium cattleianum என்று பெயர், இது நம்ம கொய்யாவுக்கு நெருங்கிய சொந்தம்தான், ஒன்னு விட்டு ரெண்டு விட்டுன்னு எல்லாம் இல்லை:-) Peruvian guava என்ற பெயரும் சில இடங்களில் உண்டு. ப்ரேஸில் நாட்டுப்பகுதிகளில் நிறைய வளருதாம். இந்தப் பழங்களை ஜாம் செஞ்சும் ரொட்டியில் தடவிக்கலாம். (எல்லாம் அறுவடையைப் பொறுத்து!!)
இது சுட்டபடம்! கூகுளாருக்கு நன்றி.


சிகப்புத்தோல் கொஞ்சம் தடிமனா இருக்கு. சுவையில் கொஞ்சம் லேசான துவர்ப்பு. தோலை எல்லாம் சீவ முடியாது. கத்தி வைக்க இடம் வேணாமா? நடுவில் ரெண்டா வெட்டி, ஒரு ஸ்பூனால் தோண்டி எடுத்து வாயில் போட்டுக்கலாம். சின்ன ஸ்பூனா இருக்கட்டும் கேட்டோ:-)))


எப்படியோ நம்ம ட்ராப்பிக்கல் கலெக்‌ஷனில் கொய்யாவும் சேர்ந்தது மகிழ்ச்சிதான்!

 PIN குறிப்பு: ஆமாம்.... இந்த '' அடங்கொய்யாலே'' வுக்கு உண்மையான பொருள் என்ன? தெரிஞ்சவுங்க சொல்லுங்க. புதிய அகராதியின் பொதுமன்றத்தில் கேட்டு வச்சுருக்கேன். என்ன பதில் வருதுன்னு பொறுத்திருந்து பார்க்கலாம்!

44 comments:

said...

எப்படியோ கொய்யாவை வெச்சு ஒரு பதிவு தேத்தியாச்சு.

said...

‘அட கொய்யாலே’:)!

அடடா, எட்டு வருஷம் கழிச்சு கிடைச்சதுல முதல் போணி உங்களுக்கில்லையா? போகட்டும். அவர்களுக்கும் ஆனதன்றோ இவ்வுலகம்:)!

ஆப்பிளுடனான ஒப்பீடும் தகவல்களும் அருமை.

said...

இது இலங்கையில ஏரளமா கிடைக்கும்... சாதாரண மரமா வளரும் நாம புளி கொய்யா மரம்னு சொல்லுவோம்... நல்ல சிவப்பா இருக்கு உங்க மரத்து காய்...(நாம பலத்த பழுக்க விட்ட தானே:) )
எட்டு வருஷம் கழிச்சு கிடைச்சிருக்கு காய்... வாழ்த்துகள்... நம்மளையும் நினைச்சிகிட்டு சாப்பிடுங்க...

said...

வாங்க ராஜி.

இல்லையா பின்னே?

கண்ணையும் காதையும் கருத்தையும் எப்பவும் திறந்து வைக்கவேண்டிய
பதிவர் கடமையைச் சரியாச் செஞ்சேனா? :-))))))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

கல்லினுள் தேரைக்கும் ஆண்டவன் படியளக்க வேணாமா?

புழுவாருக்கு இப்படி 'அளந்துட்டார்'!!!

said...

வாங்க காற்றில் (வந்த) எந்தன் கீதமே!!!!!

புளிக்கொய்யாவா? ஆஹா..... சரியான பெயர்!

இன்னிக்கு அறுவடை மூணு பழம்.
கட்டாயம் உங்களை நினைச்சுக்கறேன்.

முதல் வருகைக்கு நன்றிகள்.

said...

வித்தியாசமான கொய்யாதான்.

said...

கொய்ய செடி, மரம்?? பற்றி நிறைய தகவல்கள். படங்கள் ரொம்ப அழகா இருக்கு.

said...

இந்தப் பழத்தை நான் இதுவரை இங்கு பார்த்ததே இல்லை.

ப்ளம்ஸ் பழம் போல் சுவையா ?

***

எங்க வீட்டு பலா செடியை ஒருவழியாக இடம் மாற்றி வைத்துவிட்டேன், டவுன் கவன்சில் பராமரிப்புல வளருது, இன்னும் ஒரு மாமரமும், லாங்கோன் மரமும் இருக்கு, அதுக்கு இன்னும் வேலை வாய்க்கவில்லை

said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

said...

ஆஸ்திரேலியாவுக்கு பற்ந்து போய் ஒரு மரம் வாங்கி வளர்க்க ஆவல் ஊட்டிய பதிவு..

said...

//ச்சைனா//

சொல்லும்போதே புரியுது!! இங்கே சீனர்கள் இபோத்தான் பரவத் தொடங்கியிருக்காங்க. ஆனா, ஃபிலிப்பைனியர்கள் மயம்தான் எங்கும்!!

’லாலாக்கு டோல் டப்பிமா’வுக்கே அர்த்தம் இன்னும் கண்டுபிடிக்கல. நேத்துமுளைச்ச ‘கொய்யா’வுக்கெல்லாம் அர்த்தம் தேடுனா எப்படி? :-)))))))))))

said...

அடங்கொய்யாலே தெலுங்கு வார்த்தை துளசி:)
எட்டு வருஷம் . மஹா பொறுமை!!!
உப்ப்பும் மிளகு போட்டுக் கூடச் சாப்பிடலாம்பா. அழகா இருக்கு. விதை இல்லையா.

said...

டீச்சர் நான் வந்ததே PINகுறிப்புக்குத்தான்.வல்லி சிம்ஹன் ஏமி மாட்டல?தெலுங்கா!

எங்க ஊர்ப்பக்கமெல்லாம் இது ஒரு கெட்டவார்த்தைல திட்டறமாதிரி.வடிவேலுவின் தமிழ் பரப்பும் உணர்வால் இந்த சொல்லின் பொருள் புரியாமலே சங்கோஜமில்லாமல் அனைவரும் உச்சரிக்கிறார்கள்.

ஆனாலும் உங்களின் கொய்யாப்பழ இரட்டை நயம் சொல்லுக்கு அங்கீகாரம் வழங்குகிறது:)

said...

என்னாதிது டீச்சர்!உங்களுக்குமா மாடரேசன்?அவ்வ்வ்வ்வ்வ் என்ற அதே வடிவேல்.

said...

க்ளாஸ்ரூமில் கெட்ட வார்த்தை பேசும் ரீச்சரை என்ன செய்யலாம்? :)

said...

Mysore bonda mathirithan.

i have'nt seen this fruit in Peru.

said...

It's like mysore bonda.

peruthan.

In Peru I have'nt seen in this Friut.

said...

‘அட கொய்யாலே’:)!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

said...

ஸ்ட்ராபெர்‌ரி கொய்யா..! புதுசா இருக்கு. படம் பாக்கறப்பவே சாப்பிடத் தோணுது. லேசான புளிப்போட, கொய்யாவின் டேஸ்ட்டும்...! ஆனா இதுக்காக 8 வருஷம் வெயிட் பண்ற பொறுமை நமக்கில்லை. பார்சல் ப்ளீஸ்!

said...

ஸ்டாபெர்ரி கொய்யா புதுசா இருக்கு! ஆனால் அருமையான வண்ணங்களில் அந்த புகைப்படங்கள் மிக அழகு!!

said...

எட்டு வருடம் காத்திருந்து கிடைத்த பழம் மகிழ்ச்சியாக சுவைத்திடுங்கள்.

வாழ்த்துகள்.

said...

எட்டு வருடம் காத்திருந்து கிடைத்த பழம் மகிழ்ச்சியாக சுவைத்திடுங்கள்.

முயற்சிக்கு வாழ்த்துகள்.

வாழைமரம் நலமா ?

said...

வாங்க ஸாதிகா.

ஆமாம்ப்பா!

said...

வாங்க ரமாரவி,

கொய்யாவை ரசிச்சதுக்கு நன்றிப்பா.

said...

வாங்க கோவியார்

இதை கமர்ஸியலா இன்னும் விளைவிக்கலை போல இருக்கு.

சுவை லேசான புளிப்புடன் இனிப்பும் துவர்ப்புமா இருக்கு. கொய்யா விதைகள் போல இதிலும் விதைகள் உண்டு.
சைஸ் ஒரு நெல்லிக்காய் அளவுதான்:-)

நல்லவேளை ...பலாமரம் தப்பிச்சது. மற்ற மரங்களுக்கும் வேளை வரணும். வந்துரும்.

said...

வாங்க வலைஞன்.

நன்றி.

said...

வாங்க புதுகைத் தென்றல்.

நன்றி நன்றி.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

ஆஸி வேணாம், நியூஸி வாங்க.

said...

வாங்க ஹுஸைனம்மா.

ஹைய்யோ..... இப்படி உண்மையைப் பிட்டு வச்சால் எப்படி:-)))))

சினிக் கவிஞர்கள் எங்கே இருந்துதான் சொற்களை பிடிக்கிறார்களோ!!!!!

said...

வாங்க வல்லி

என்னது.... தெலுங்கா?????
உய்யாலென்னு தெலுங்கில் உண்டு. ஆனால்....

தினம் அறுவடை மூணு இல்லே நாலு. இதுக்கு உப்பும் மிளகுமா? செஞ்சுருவொம்:-)))))

said...

வாங்க ராஜ நடராஜன்.

மாதிரியா..... அப்ப தப்பிச்சேன்னு சொல்லுங்க:-)

தானிகி ஏமி அர்த்தமுன்னுதான் இங்க தெலியலேது!

டீச்சருன்ன என்ன ஸ்பெஷல்? மாடு ரேஷன் கூட நல்லதுதான்.

said...

வாங்க கொத்ஸ்,

ஐயோ..... யூ டூ............

said...

வாங்க பெருசு.

மைசூர் போண்டா......ஹாஹா

பதிவு எழுதும்போது உங்களை நினைச்சது உண்மை.

said...

வாங்க அருணா.

சிரிப்பானுக்கு நன்றி.

said...

வாங்க கணேஷ்.

சுண்டைக்காய் ஸைசுக்கு சுமைகூலி அதிகம்:-)

பேசாம அடுத்த சீஸனுக்குக் கிளம்பி வாங்க.

said...

வாங்க மனோ.

சுவையைவிட பெயர்தான் அதிகக் கவர்ச்சி:-))))

உங்க ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க மாதேவி.

புளிக்கொய்யா உங்க பக்கங்களில் இருக்குன்னு கீதம் சொல்லி இருக்காங்க.

வாழைமரம்...... அந்த சோகத்தில் இருக்கேன். என்னமோ நோய் வந்து இலைகள் எல்லாம் ப்ரவுணாகிப் புள்ளி விழுது. நடுவில் முளைக்கும் புது இலைகள் ரெண்டைத் தவிர மற்றதையெல்லாம் தரிச்சுப் போட்டாச்சு.

முயல் காதுகள் போல ரெண்டும் நீண்டு கிடக்கு இப்போ. விதிப்படி ஆகட்டும் என்று மருந்தடிச்சு வச்சுருக்கேன்:(

said...

ராஸ்பெர்ரி ஐஸ்க்ரீம் மாதிரி கொய்யா ஐஸ்க்ரீமுக்கும் ஒரு இடுகையை எதிர்பார்க்கலாமா :-)))

முதல் அறுவடையை கடவுளுக்கு அர்ப்பணிச்சுட்டு அப்றம் பிரசாதமா மத்தவங்களுக்கு விளம்பறது வழக்கம். இங்கே புழுவார் தனக்குத்தானே திட்டத்தில் எடுத்துக்கிட்டார் போலிருக்கு ;-)

said...

வாங்க அமைதிச்சாரல்.

இடுகை அளவுக்குப் பழம் பெருசு இல்லையேப்பா:-)))))

தனக்கு மிஞ்சிதான் தானதருமம் என்பது புழுவாருக்கும் தெரிஞ்சுருக்கு!

கலிகாலம்:-))))))

said...

இரண்டு இலையுடன் இருந்தாலே உயிர்வாழ்கின்றார் என்றே அர்த்தம்.

நலமாக வாழட்டும்.

said...

மாதேவி,

உயிர் இருக்கு.
ஆனால் நோயாளி ஐ ஸி யூ வில்:(

said...

நான் கூகிளில் இந்த கொய்யா பற்றி பார்த்திருக்கிறேன். பார்க்க அழகாக இருக்கிறது. தொட்டியிலே வளர்ந்து விட்டதா?. நம்ம ஊரு கொய்யா அங்கே வளராதா?

செடிக்கேன்றே கடையில் தனி செக்சனா.. கேட்கவே நல்லா இருக்கே..

said...

வாங்க சிவா.

குளிர் பிரதேசம். அண்டார்டிக் பக்கத்தில் இருக்கு.
கோடைகாலம் வெய்யில் 24 டிகிரி வந்தாலே அதிகம். அத்தி பூத்தாப்போலே
அந்த மூணு மாசத்தில் ஒரு நாள் 30 டிகிரி வரலாம்.

என்னோட ட்ராபிக் கலெக்‌ஷன் எல்லாம் கன்ஸர்வேட்டரியில்தான். வேற வழி இல்லை:(

இங்கே சூப்பர் மார்கெட்டில் கூட செடிகள், அதுக்குண்டான சாப்பாடுகள் எல்லாம் விக்கறாங்க.காய்கறி, பூச்செடி நாத்துகள் கிடைக்கும்.