Friday, February 18, 2011

வாங்க, ரிஷிகேஷ் போயிட்டு வந்துறலாம்!

காலையில் கண் திறக்கும்போதே..... இன்னும் ஒன்னரை நாள்தான். எதைப் பார்ப்பேன் எதை விடுவேன்னு ஒரு யோசனை. சீக்கிரமாக் கிளம்பி முதலில் ரிஷிகேஷ் போயிடலாம். அங்கே கூடியவரை முடிச்சுட்டு நேரம் பாக்கி இருந்தால்(!?) ஹரித்துவார். ஜன்னலின் திரையை விலக்கினால் மோயல் ஆஷ்ரம். நம்ம ஹொட்டேலை ஒட்டிய நிலத்தில் மண்ணால் கட்டிய ரெண்டு யாக குண்டம். ரெண்டு ஓலைக்குடிசை. அங்கேயும் நிலத்தைச் சரி செஞ்சுக்கிட்டு இருக்காங்க. ஆசிரமம் வருவதற்கான அறிகுறி. ஒரு பக்கம் புல்டோஸர் வந்து தோண்டிக்கிட்டு இருக்கு.
இந்த ஹொட்டேலில் காலை உணவு நமக்கு இலவசம். சுமாரான காஃபியும் ப்ரெட் டோஸ்ட்டும் கிடைச்சது. ப்ரெட் வேணாமுன்னா, பூரி உருளைக்கிழங்கு வேணுமானாலும் தருவாங்களாம். அது கோபாலுக்கு ஆச்சு.

ஏழே முக்காலுக்கு கிளம்பிட்டோம். என்ன அருமையான சாலை!!!! தேசிய நெடுஞ்சாலை எண் 58. ரெண்டு பக்கங்களிலும் மரங்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் காடு. மசமசன்னு மஞ்ஞு. தேசி ஷராப் கி தூகான் பெயர்ப்பலகை மட்டும் பளிச்சுன்னு தெரியுது. ஹரித்வாரில் இருந்து ரிஷிகேஷ் வெறும் 16 கி,மீட்டர்கள்தான். ரெண்டுக்கும் இடையில் வேற ஊர்கள் ஒன்னும் இல்லாததால் வண்டிகள் நடமாட்டம்கூட அவ்வளவா இல்லை.

புராணகாலத்தில் கங்கைக்கரையில் அநேக ரிஷிகள் வந்து கங்கையில் முங்கி எழுந்து தவமும் தியானமுமா இருப்பாங்களாம். நாளில் பலமுறை கங்கையில் குளிச்சுக்கிட்டே இருப்பதால் இவர்களின் ஜடாமுடியில் இருந்து எப்போதும் கங்கைநீர் சொட்டிக்கிட்டே இருக்குமாம். அதான் ரிஷி கேசம் என்று பெயர் வந்துருக்குன்னு 'மிஸ்டர் சிங்' சொன்னார்.
வழியில் ரெண்டு மூணு பாலம் கடக்கணும். குரங்கன்மார் ஒரே தாவல். ரயில் போகும் பாலம் ஒன்னு அந்தப்பக்கம் இருக்கு. கங்கை திடீர்ன்னு கண்ணுக்குத் தெரிவதும் மறைவதுமா இருக்கு. கொஞ்சம் ஏத்தமான சாலைதான். சரியா அரைமணி நேரமாச்சு, ஊருக்குள் வந்து சேர. வழி நெடுகிலும் சின்னச்சின்னதா ஏகப்பட்ட ஆசிரமங்கள். வெவ்வேற பெயர்களின் ட்ரஸ்ட்கள். அதெப்படி இங்கே இத்தனை ஆசிரமங்கள் கொட்டிக் கிடக்குது? சாரிட்டபிள் ட்ரஸ்ட்தான் எல்லாமே........சரி.சரி. ஆண்டிக்கு எதுக்கு அம்பாரம் கணக்கு? ( முஸ்கி: இதுபழமொழி. நான் உண்டாக்குனதில்லை) வந்தமா பார்த்தமா போனோமான்னு இருக்கணும்.

இன்னும் ஒன்னு புதுசா வரப்போகுதுன்னு போன மாசம் ஒரு சேதி அடிபட்டுச்சே!

சாலை கொஞ்சம் கொஞ்சமா உயருது. ஒரு இடத்தில் சரேல்னு கீழே இறங்கும் பாதை பிரிஞ்சு போகுது. நாமோ மேல் நோக்கியே போறோம். பத்ரிநாத் செல்லும்வழின்னு தகவல் பலகை பார்த்ததும்தான்.............எங்கியாவது யூ டர்ன் அடிச்சுத் திரும்பலாமுன்னா....வாகான இடம் தென்படலை. வலப்பக்கம் கிடுகிடு பாதாளத்துலே அகலமா கங்கை வேகம்பிடிச்சு ஓடுறாள். இன்னும் கொஞ்சம்தூரம் போனதும் கிடைச்ச இடத்துலே வண்டியை வலதுபக்கம் திருப்பி நிறுத்தினோம். கண்ணெதிரில் நீண்ட கம்பிப் பாலம் கங்கையின் குறுக்கே.
இப்படி முன்னால் வந்து நிறுத்துங்கன்னு ஒருத்தர் 'கைடு' பண்ணினார்.
'இது லக்ஷ்மண ஜூலாவா?ன்னேன். இல்லை.. இது ராம்ஜூலா. இங்கேயே வண்டியை நிறுத்திட்டு அங்கெல்லாம் போய்ப் பார்க்கலாம். நானே இங்கே அஃபீஸியல் கைடுதான்னு சொல்லி கழுத்தில் போட்டுருந்த நேம் டேகைக் காமிச்சார். முன்னூறு சார்ஜ். ஆனா காலையிலே முதல்பயணி (போணி) என்றதால் அம்பது சதம் டிஸ்கவுண்டுன்னார். கௌஷலேந்த்ர சிங் சௌஹான். பத்துவருச சர்வீஸ். சொந்த ஊர் ராஜஸ்தான்.
செல்ஃப் அப்பாய்ண்டட் கைடு மிஸ்டர் சிங்.
அவரையும் வண்டியில் ஏத்திக்கிட்டு வந்தவழியாவே ஒரு 300 மீட்டர் போனோம். சிவானந்தா ஆஸ்ரமம். கார்பார்க்கில் வண்டியை விட்டுட்டு ஆஸ்ரமத்துக்குள்ளே நுழைஞ்சோம். இலவச மருத்துவமனை, வேதம் சொல்லித்தரும் வகுப்புகள் எல்லாம் கடந்து கங்கையை ஒட்டிப்போகும் பாதைக்குப் போய்ச் சேர்ந்தோம். சரிவான இடம் என்பதால் அங்கங்கே படிக்கட்டுகள் வச்சு ஆஸ்ரமத்தைக் கட்டி இருக்காங்க.
பாலத்தை நோக்கிப்போகும் வழியில் கங்கைக்கரையின் இடப்பக்கம் பூராவும் பயணிகளுக்கான கடைகளாவும் வலப்பக்கம் பாதுகாப்பா கம்பித்தடுப்புகளுமா இருக்கு. அங்கங்கே சின்னச்சின்னதா கோவில்கள். ஒரு ப்ராச்சீன் ஹனுமன் மந்திருக்குள்ளே குழந்தைகள் உக்காந்து ஆசிரியர் சொல்லிக்கொடுக்க, ஹனுமன்சாலீஸா படிச்சுக்கிட்டு இருக்காங்க.
இந்தப் பாலம் ராம்ஜூலா. 650 அடி நீளம். இதுக்கு சிவானந்தா பாலம் என்று தான் பெயர் பதிஞ்சு வச்சுருக்காங்க. . ஆனா....இந்த ஊரில் இருக்கும் லக்ஷ்மண ஜூலாவுக்குத் துணையா இருக்கட்டுமேன்னு மக்கள்ஸ் ராம்ஜூலான்னு கூப்பிடப்போய் இப்போ ராம்ஜூலா என்ற பெயரே வழக்கில் புழங்குது. அதானே ராமனையும் லக்ஷ்மணனையும் பிரிக்கலாமா? இந்த சிவானந்தா ஆஸ்ரமம்தான் பாலம் கட்டும் செலவில் பாதி கொடுத்துருக்காங்க. ரெண்டு மீட்டர் அகலம் இருக்கும். நாம் நடக்கும்போது லேசா ஒரு ஆட்டம். எதையும் சட்டை செய்யாம குரங்க்ஸ் இங்கேயும் அங்கேயுமாத் தாவிக்கிட்டு இருக்குதுங்க.

நடைப்பாலமுன்னு பெயர். ஆனால் சைக்கிள், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் எல்லாம் கூட இதன்மேல் ஓட்டிக்கிட்டுப்போறாங்க. மாடுகளும் பாலம் கடக்க நிதானமா நடந்து போகுதுங்க.


வலதுபுறமும் இடது புறமும் பார்த்தால், கங்கையை சமீபிக்க அங்கங்கே பெருசும் சின்னதுமான படித்துறைகள். சில இடங்களில் கங்கைக்கு 1.2 கிலோமீட்டர் அகலம்.
ராம் ஜூலாவைக் கடந்தால் ஸ்வர்கம்! பாலம் கடந்து வலப்பக்கம் திரும்பினால் ஸ்வர்காஸ்ரமம். பாபா காலி கம்ளிவாலா ஸ்வாமி ஆத்மப்ரகாஷ்ஜி மஹ்ராஜ் கோவில் இருக்கு. இந்தப்பக்கம் ராமேஸ்வர் மஹாதேவ் கோவில். லிங்க ரூபத்தில் இருக்கார்.

ராமேஷ்வர் கோவில்

அந்தக் காலத்துலே பத்ரிகாஷ்ரம், கேதார்நாத் எல்லாம் போக ஒழுங்கான சாலைகள் கிடையாது. நடந்துதான் போகணுமாம். இங்கே வரும் யாத்திரீகர்களுக்கு சுடச்சுடச் சாப்பாடும் போட்டு, போர்த்திக்க ஒரு கம்பளியும், மலைப்பாதையில் கால் வழுக்காமல் ஊன்றி நடக்க நல்ல கைத்தடி ஒன்னும் தருவாராம் இந்த ஆஸ்ரமத்தை உருவாக்கின ஸ்வாமிஜி. அதனால் இவரைக் கம்(ப்)ளிவாலா ஸ்வாமிஜின்னு சொல்லியிருக்காங்க. கொடுப்பது கருப்பு நிறக் கம்பளமானதால் காலி கம்ப்ளி வாலா! (காலி = கருப்பு)
கரையை ஒட்டிப்போகும் பாதையில் ஒரு கீதாபவன் கோவில், உச்சியில் குடையின் கீழ் நாலு பக்கமும் பார்த்தமாதிரி நாலு திருவுருவச்சிலைகள். ராமன், லக்ஷ்மணன், ஹனுமன். கங்கையைப் பார்த்தமாதிரி இருக்கும் சிலையில் யாருன்னு தெரியலை? சீதாவாக இருக்கலாம்.
கொஞ்சம் தள்ளி இடப்புறம் கீதா பவன் ஆஷ்ரமம். கண்ணுக்கு நேரா ஒரு லக்ஷ்மிநாராயணன் கோவில். சேவிச்சுக்கிட்டு உள்ளே போகப்போக பரந்து விரிஞ்சு கிடக்கு. 1048 அறைகள் பக்தர்கள் வந்து தங்குவதற்காகன்னா, ஆஸ்ரமம் சைஸை நீங்களே நினைச்சுப் பாருங்க. அங்கங்கே பெரிய ஹால்கள் வகுப்புகள் நடத்த, பிரசங்கம் பண்ண இப்படி. ஆயுர்வேத சிகிச்சை நடக்கும் இடங்கள். மருந்து விற்கும் இடங்கள். ஏழைகளுக்கு இலவச மருந்து கொடுக்கும் இடம், தங்கியுள்ள பக்தர்களுக்கான பலசரக்கு சாமான் விற்கும் கடை கண்ணிகள் பெரிய முற்றங்களின் நடுவில் மரங்கள். தியானம் செய்ஞ்சுக்க பெரிய ஆலமரம் உள்ள தோட்டம், புல்வெளி, கங்கைக்குப்போகும் தனிப்பட்ட படித்துறைகள் இப்படி ஏராளம் ஏராளம். இங்கே படம் எடுக்க அனுமதி இல்லை:(
ருத்திராட்ச மரம் இருக்கான்னு கேட்டேன். வேலி போட்ட தோட்டத்துக்குள் கூட்டிட்டுப்போய் இதோன்னு ஒரு மரக்கன்றைக் காமிச்சார். இந்த மரம்தானான்னு என் மனசுலே ஒரு சந்தேகம். நம்ம சிறுமுயற்சியின் பயணத்துலே பார்த்த நினைவு. சரியா எந்த இடமுன்னு நினைவில்லே. இதுக்காகவே ஒவ்வொரு இடத்திலும் இந்த மரத்தைப்பற்றி விசாரிக்கும்போதும் காடுகளைப் பார்க்கும்போதும் அவுங்க நினைவுதான்.
(கடைசியில் ஹரித்வாரில் காணக்கிடைச்சது. அது இனி வரும் பதிவுகளில்)

நம்ம ருத்திராட்ச இண்ட்ரஸ்ட்டை புரிஞ்சுக்கிட்ட கைடு, ஒரு முக ருத்திராட்சம் கூட இருக்கு. உங்களுக்குக் காமிக்கிறேன்னார். கொக்கி நம்பர் ஒன்னு:-)

ஆஸ்ரமக் கோவில்களில் ஒன்னில் ஒரு மரத்தைச் சுத்தி நவகிரகங்கள் வச்சுருந்தாங்க. நல்ல ஐடியா! எல்லா இடங்களும் சுத்தமா பராமரிச்சு வச்சுருக்காங்க.

தொடரும்.................:-)

PIN குறிப்பு. ஒரு வாரம் வகுப்புக்கு விடுமுறை. சின்னப் பயணம் . சிங்கை அழைக்கிறது! . மற்றவை திரும்பி வந்தபின்.37 comments:

said...

நான் இங்கே போயிருக்கேனே:-)

said...

இவ்ளோ அழகான இடங்களை பார்க்கும்போது, அமைதியை விரும்புறவங்க அங்கியே செட்டிலாவதில் ஆச்சரியமில்லைன்னு தோணுது :-))

said...

அற்புதமான படங்கள். அழுக்குகள் இல்லாத கங்கையை இங்கே பார்க்கிறோமொ?
விவரங்களைப் படியெடுத்துக் கிட்டேன். நாங்கள் போகும்போது ரெஃபர் செய்யத்தான்:)

said...

பதிவ படிச்சதே ரிஷிகேஷ் போயிட்டு வந்த மாதிரி இருக்கு, சிறந்த படங்கள் மற்றும் கட்டுரை.

said...

வாங்க கோபி ராமமூர்த்தி.

ஆஹா.... போயிருகீங்களா!

ஆமாம்...இந்தப்பதிவுலே சொன்னதெல்லாம் சரியா இருக்கான்னு ஒரு க்ராஸ் செக் பண்ணி இருக்கலாமுல்லெ:-)

said...

வாங்க அமைதிச்சாரல்.

அமைதியை விரும்புனா....இன்னும் மேலே நகரின் இரைச்சல் இல்லாத இடங்களுக்குப் போகணும்ப்பா.

said...

வாங்க வல்லி.

லேசான பனிமூட்டம் அப்படியே நிக்குது அங்கே. இல்லைன்னா படங்கள் இன்னும் க்ளியரா வந்துருக்கும். (நொண்டிக்குதிரைக்கு சறுக்குனதே சாக்கு)

said...

வாங்க லோகன்.

அதெப்படி? நீங்களும் சான்ஸ் கிடைச்சா விடாமல் போய்ப் பார்த்துட்டு வாங்க. இயற்கை எழிலும் பக்தியும் கலந்த ஒருவிதமான சூழல்.

said...

//ஹரித்வாரில் இருந்து ரிஷிகேஷ் வெறும் 16 கி,மீட்டர்கள்தான்//

அப்படியா! ரைட்டு

//புராணகாலத்தில் கங்கைக்கரையில் அநேக ரிஷிகள் வந்து கங்கையில் முங்கி எழுந்து தவமும் தியானமுமா இருப்பாங்களாம். நாளில் பலமுறை கங்கையில் குளிச்சுக்கிட்டே இருப்பதால் இவர்களின் ஜடாமுடியில் இருந்து எப்போதும் கங்கைநீர் சொட்டிக்கிட்டே இருக்குமாம். அதான் ரிஷி கேசம் என்று பெயர் வந்துருக்குன்னு 'மிஸ்டர் சிங்' சொன்னார்.//

நம்புற மாதிரி இருக்கு :-)

//ஒரு வாரம் வகுப்புக்கு விடுமுறை. சின்னப் பயணம் . சிங்கை அழைக்கிறது! //

வருக! வருக!! :-)

said...

ரிஷிகேஷ் பயணக் குறிப்புகள் அருமை. பகிர்வுக்கு நன்றி.

said...

பதிவ படிச்சதே ரிஷிகேஷ் போயிட்டு வந்த மாதிரி இருக்கு...

said...

கங்கா தேவிய பார்த்ததும் கை கூப்பி கும்பிட்டேன்..

கூட்டிட்டு போய் அழகா தரிசிக்க வைச்சத்துக்கு ரொம்ப நன்றிகள் டீச்சர்.

said...

கங்கை இங்கே அமைதியாகவும்,அழகாகவும் இருக்கிறது, சிங்கப்பூர் போயிட்டுவாங்க டீச்சர்:))))

said...

அருமையான பயணம்.

சிங்கையா :)

said...

புகைப்படங்கள் மிக அழகு..பகிர்வுக்கு நன்றி அக்கா!!

said...

ரிஷிகேஷ் பயணக் குறிப்புகள் அருமை.

said...

கங்கைக்கு இன்னொரு பக்கமும் இருப்பதைக் காட்டியதற்கு நன்றி. படங்களெல்லாம் அற்புதம். ஆறு மாசம் கேம்ப் போடலாம் போலிருக்கே? ம்ம்ம். லிஸ்டில் சேர்த்தாச்சு. (உங்க ப்லாக் படிச்சு பயண லிஸ்ட் நீண்டுகிட்டே போவுது)

கம்ப்ளிவாலா போன்றவர்கள் ஆச்சரியம். மனித நேயத்தில் நம்பிக்கை பிறக்க வைப்பவர்கள். அவர்கள் இருந்த உலகத்தில் நானும் இருக்கிறேன் என்பதே எனக்கு நிறைவு தான். நினைத்துக்கூடப் பார்க்கமுடியவைல்லை, இப்படியெல்லாம் பயனுள்ள வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியுமென்று.

ரொம்ப நன்றி.

said...

பகிர்விர்க்கும் புகைப் படங்களுக்கும் நன்றிகள்

புண்ணியம் சேரட்டும் உங்களுக்கு

said...

நல்ல பதிவு.
நேரில் பார்த்தது போன்ற உணர்வு. மகிழ்ச்சி.
நன்றி.

said...

நானும் சுத்திட்டு இப்பதான் வந்தேன் டீச்சர்...கங்கை பார்த்தாச்சி..நன்றி ;)

said...

இந்த தலங்களை எல்லாம் தரிசிக்க எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும்?
யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் - என எண்ணி எங்களோடு பகிர்ந்து கொண்ட தங்களை வணங்குகிறேன். இந்த சிறியவனை ஆசீர்வதியுங்கள் அம்மா

said...

Teacher!! Is everything okay in Christchurch? Pl. drop a word!

said...

வாங்க கிரி.

உங்களையெல்லாம் மீண்டும் சந்திக்க முடிஞ்சதில் மிகவும் மகிழ்ச்சி.

திங்கள் முதல் இந்தப் பயணப்பதிவு தொடர்கிறது. வருகை தரணும்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

விவரங்கள் சரியா எழுதி இருக்கேனான்னு அங்கெல்லாம் போய்வந்த நீங்கள்தான் சொல்லணும்.

said...

வாங்க கருன்.

முதல் வருகை போல இருக்கே? நன்றி.

போய்வந்தது போல் இருக்குன்னுட்டுச் சான்ஸ் கிடைச்சால் விட்டுடாதீங்க. இயற்கை அழகை ரசிக்கவாவது இங்கெல்லாம் ஒரு முறை போய் வரணும்.

said...

வாங்க சுசி.

உண்மைதான் .... அந்த அழகு கைகூப்பத்தான் சொல்கிறது!

said...

வாங்க சுமதி.

சிங்கை போயிட்டு நேற்று மாலை திரும்பி வந்தாச்சு.

said...

வாங்க மாதேவி.

ஆமாம்ப்பா. அஞ்சு நாள் சிங்கைக்கு ரெண்டு நாள் போகவரபயணத்துக்குன்னு போய் வந்தாச்சு.

said...

வாங்க மேனகா.

வருகைக்கு நன்றிப்பா.

said...

வாங்க காஞ்சனா.

நலமா? ரொம்பநாளுக்கு ரொம்ப நாளு!

வருகைக்கு நன்றி.

said...

வாங்க அப்பாதுரை.

அடியார்க்கு அடியாரா இருந்து சேவை செஞ்ச அற்புத மனிதர்கள் அவர்கள்.

நல்ல திட்டம் போட்டுக் கிளம்பினால் ஆறு மாதம் தங்குவதுகூட பிரச்சனை இல்லை. சில ஆஸ்ரமங்களில் அறைகள், மலிவாகவும் அருமையாகவும் இருக்கு.

ஆஸ்ரம விதிகளை அனுசரிக்கணும். நம் உடலுழைப்பு அங்கே தேவைப்படுகிறது.

said...

வாங்க ராம்ஜி_யாஹூ.

எழுதும் புண்ணியத்தைவிட வாசிப்பது அதிக புண்ணியம். கிடைத்த புண்ணியங்களையெல்லாம் அனைவரோடும் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே!

said...

வாங்க ரத்னவேல்.

கூடவே வருவதற்கு என் நன்றிகள்.

said...

வாங்க கோபி.

நீங்கெல்லாம் வரும் தைரியம்தான் இப்படி என்னை ஊர் சுத்தச் சொல்லுது:-)))))

said...

வாங்க சிவகுமாரன்.

இந்தக் கொடுப்பினையைக் கொடுத்த இறைவனுக்கல்லவா நாம் நன்றி சொல்லணும்.

எல்லாம் அவன் செயல்.

எங்கள் அன்பும் ஆசிகளும்.

said...

வாங்க பொற்கொடி.

கரிசனத்தோடுள்ள விசாரிப்புக்கு நன்றி.

கிறைஸ்ட்சர்ச் பற்றி ஒரு பதிவு இன்று காலை வெளியிட்டுள்ளேன்.

said...

அட எனக்குத் தேவைப்பட்ட விபரங்கள் இல்லையே?