Wednesday, February 02, 2011

கேபின் பேகில் புளிக்காய்ச்சல் வேண்டாமே ப்ளீஸ்:-)))))

Bபர்கிட் ரோடைத் தாண்டி நிக்குது வால் பகுதி. நாம் சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டே ஆட்டோவில் போறோம். வெங்கடநாராயணா சாலை திரும்பி நேராப் போகும்போது சவுக்கு கட்டைகள் வச்சுக் கட்டுன வரிசைக்குள் மனிதர்கள். வருசப்பிறப்புக்குப் பெருமாளின் பார்வைக்காக நிக்கறாங்க. நேத்து இரவு முழுசும் கோவிலை மூடவே இல்லையாம்.

நமக்கு சனிக்கிழமைப் பெருமாள்தான் எப்பவும் என்றபடியால் வேற எங்கே பார்த்தாலும் சரின்னு சிவா விஷ்ணு கோவிலுக்குப் போய்கிட்டு இருக்கோம். மஹாலக்ஷ்மி தெரு உஸ்மான் சாலை சந்திப்பில் இறங்கி சாலையைக் கடந்தால் கோவில். மணி பத்தாகப் போகுது. ரெண்டு முழம் 'துளசி'யோடு பெருமாளை சேவிச்சாச்சு. தொட்டடுத்த சந்நிதியில் தாயார். எதிரில் தனிச்சந்நிதியில் ஹனுமன். அடுத்து ஸ்ரீ ராமர் அண்ட் கோ. இங்கேயும் வழக்கத்தைவிடக் கூட்டம் அதிகம்தான். ஆனாலும் தரிசனம் அஞ்சு நிமிசத்தில் ஆச்சு. பெருமாளுக்கு இடப்புறத்தில் இருக்கும் இடத்தில் யாக குண்டமும் ஆண்டாள் படமும்தான். சின்னதாகவேனும் ஆண்டாளுக்கு ஒரு சந்நிதி கட்டி இருக்கலாமோ? . தனியா வச்சு அடைக்காமல் திறந்த வெளியில் எல்லோரையும் பார்த்தபடி இருப்பதுகூட ஒருவேளை நல்லதாப்போச்சோ?

போனமுறை பார்த்தப்ப, கோவிலில் தரை எல்லாம் பெயர்த்து பளிங்குக்கல் போடும் வேலை நடந்துக்கிட்டு இருந்துச்சு. இப்போ எல்லா வேலைகளும் முடிஞ்சு கோபுரங்கள் புது வர்ணம் அடிச்சு ரொம்ப நல்லா இருக்கு.

ஆண்டாள் இருக்குமிடத்தில் இடப்புறமா முருகனுக்குத் தனிச்சந்நிதி. அப்புறம் அப்பா அம்மாவுக்குத் தனித்தனியா சந்நிதிகள். கடந்து போனால் நவகிரகம். தெருவைப் பார்த்த மாதிரி புள்ளையார் சந்நிதி. நவகிரகத்துக்கு அந்தப் பக்கம் காசி விஸ்வநாதர். விஷ்ணுவுக்கு ஒன்னு, சிவனுக்கு ஒன்னு புள்ளையாருக்கு ஒன்னுன்னு தெருவைப் பார்த்தமாதிரி மூணு வாசல்களும் மூணு சின்னக் கோபுரங்களுமா இருக்கு இந்தக் கோவில். இங்கேயும் ஸ்ரீநிவாசப்பெருமாள்தான் நின்ற கோலம்.. தரிசனம் முடிஞ்சதும் கோபாலுக்கு ஒரு வேஷ்டி வாங்கித்தரலாமேன்னு (புது வருசத்துக்கு ஒரு புதுத்துணி இருக்கட்டுமே) பாண்டி பஸார் ராம்ராஜ் ஷோ ரூம் போனோம்.
அதிகாலை பத்தரை மணிக்கு வாசலில் கோலம் போட்டுக்கிட்டு இருந்தாங்க பக்கத்துக் கடையில்.. ரங்கோலி. கடைக்குள்ளே போனால் ஷர்ட் எல்லாம் மாடியில் இருக்குன்னதும் வேட்டியை விட்டுட்டு சட்டைக்குத் தாவினோம். நல்ல பெரிய கடைதான். ரெண்டரை வருசமா இங்கே இருக்காமே! நாந்தான் கவனிக்காம விட்டுட்டேன்:( மூணு ஷர்ட் (அதுலே ஒன்னு பட்டு) எனக்கு ஒரு நைட்டி வாங்கியாச்சு. பெண்களுக்கான உடைகள் செக்ஷன், சின்னதா ஒரு மூலையில்!
வெளியே வந்தால் கோலம் அநேகமா முடியும் நிலையில். அழகா இருக்குன்னு பாராட்டிட்டு பக்கத்துலே இருக்கும் நரசூஸ் போய் காப்பிப்பொடி வாங்கிக்கிட்டேன். ஒரு மூணு மாசம் தாங்கும். இப்ப நரசூஸ் இன்ஸ்டண்ட் காஃபி வேற போடறாங்க. அதுலேயும் சின்னப் பாக்கெட்டா ( 50 கிராம்) வெவ்வேற சிக்கிரி அளவில். 30% கூட இருக்கு. ரொம்ப மோசம்:(

உன் ஷாப்பிங் அவ்ளோதானே? இனிமேல் வாங்க ஒன்னும் இல்லைதானே? இப்படியே பலமுறை கேட்டு உறுதிப்படுத்திக்கிட்டே இருந்தார் கோபால். யாருக்குத் தெரியும்? திடீர்னு கண்ணுலே பட்டா வாங்கிக்கணும். அது என்னன்னு எனக்கே தெரியாது. இன்ஸ்டண்ட் பதில் கொடுக்க நமக்குத் தெரியாதா:-))))
சரியா ஒரு மணிக்குச் சாப்பாடு. எங்கே? அதே ஞானாம்பிகா! வாணி மஹால். இனிப்புக்கு ரஸகுல்லா. மெனு இங்கே படத்தில்.
சாப்பாட்டை முடிச்சுட்டு இந்த ஆண்டுக்கான முதல் பதிவர் சந்திப்பை பதிவர் வல்லி சிம்ஹன் வீட்டில் நடத்திட்டு, நம்ம கபாலியைக் கண்டுக்கலாமேன்னு போனால்........எள் போட்டால் எண்ணெய் விழுமுன்னு சொல்வாங்க பாருங்க அப்படி ஒரு கூட்டம். நெரிசல். தாங்காதுன்னு அப்படியே ஜகா வாங்கிக்கினோம்.

ஆறு மணிக்கு துயில் வெளியீடு. சரியான நேரத்துக்குக் கட்டிடத்தின் உள்ளே நுழைஞ்சால் , முன்னால் டாக்டர் ருத்ரன். அவருக்கு ஒரு வணக்கம் சொல்லிட்டு 'புத்தக வெளியீடு எங்கே'ன்னு கேட்டவரிடம் மாடின்னு கைகாமிச்சு மேலே போனால் ரசிகர்கள் கூட்டத்துடன் எஸ்.ரா. பேசிக்கிட்டு இருக்கார். ரசிகையின் வணக்கம் ஒன்னு. ரெண்டு க்ளிக்ஸ்.

கொஞ்ச நேரத்துலே பரபரன்னு ஹால் நிறைஞ்சுருச்சு. மேடையிலும் நல்ல கூட்டம். நம்ம கிருஷ்ணப்பிரபு வந்து கண்டுக்கிட்டுப் போனார். கவிதாயினி மதுமிதா வந்து பக்கத்துலே உக்கார்ந்தாங்க. வெளியீடு நிகழ்ச்சிகள் ஆரம்பிச்சது. வழக்கம்போல் மனுஷ்யபுத்திரனின் வரவேற்புரை. துயிலின் 'முதல்' பிரதியை இந்திரா பார்த்தசாரதி பெற்றுக்கொண்டார். அவர் பேச்சு கச்சிதமா இருந்துச்சு. நாவலுக்கு அறிமுக உரையாக சித்ரா ரொம்ப நல்லாப் பேசுனாங்க.
சுத்துமுத்தும் பார்வையை ஓட்டிக்கிட்டு இருந்த கோபால், ஒரு பொன்மொழியைக் கவனிச்சுப் பார்த்துட்டு எனக்கும் காமிச்சார். அட!!!!!!!!!!!!!!!!!!!!!

விழாவை சில பகுதிகளாப் பிரிச்சு நிகழ்ச்சிகளைத் தொகுத்து இருந்தாங்க. இயக்குனர்கள் ஒரு ஏழெட்டுப்பேர் 'பேசி' முடிச்சதும் ஈரோடுலே புத்தகக் கண்காட்சி அமைக்கும் பொறுப்பாளரா இருக்கும் குணசேகரன் பேசி 'முடிச்சதும்' அடுத்த பகுதிக்குச் சின்ன இடைவெளி. நமக்கு நேரமாயிருச்சுன்னு கிளம்பிட்டோம்.

நம்ம பாரதி மணி ஐயாவுடன் நாலு வார்த்தை. எப்ப வந்தீங்கன்னார். விடியக் காலையில் கிளம்பறேன்னேன்.
தெரிஞ்ச முகங்களா நம்ம இவுங்களுக்கு, ஒரு Hi & bye.


விழாவின் மற்ற விவரங்களை 'ச்சும்மா' நம்ம கார்த்திக்கின் பதிவில் இருந்து இப்போ தெரிஞ்சுக்கிட்டேன்.

எனக்குக் கடைசிவரை இருந்து எஸ்ரா பேச்சைக் கேக்க ஆசைதான். ஆனால் காலை 4 மணிக்கு எழுந்திருக்கணும். மறுநாள் நீஈஈஈஈண்ட பகலாக இருக்கப்போகுதேன்னு ............

அரைத்தூக்கத்தோடு குளிச்சு முடிச்சு ரெடியாகும்போது ஃப்ளைட் கேன்ஸலாயிருச்சுன்னார் கோபால். சென்னை விமானநிலையப் பக்கத்தில் போட்டிருக்காம். தொலை பேசலாமுன்னா யாராவது ஃபோனை எடுத்தால்தானே? கிங்ஃபிஷருக்கு போன் அடிச்சா......... இல்லையே சரியான நேரத்துக்குக் கிளம்புதுன்றாங்க. மறுபடி சென்னை விமானநிலையத்தை வலையில் பார்த்தால்............. கேன்சல்டு.. மறுபடி கிங் ஃபிஷரைக் கேட்டால் நேத்து அந்த ஃப்ளைட் கேன்ஸலாச்சுன்றாங்க. நேத்து விவரம் அப்படியே கிடக்கு. இதுபோல முக்கிய விஷயத்தை உடனுக்குடன் அப்டேட் பண்ண வேணாமா? இதை நம்பி தூங்கப்போயிருந்தா என்ன கதி?

அஞ்சு மணிக்கு வண்டி வந்துருச்சு. லோடஸ்ஸில் கணக்கை செட்டில் செஞ்சுட்டு விமானநிலையம் போய்ச் சேர்ந்து அங்கேயே ஒரு காஃபி (யக்) குடிச்சுட்டு செக் இன் பண்ணி உள்ளே போனால் ........... கேபின்பேக் லே இருந்த பருப்புப் பொடி துரோகம் செஞ்சு புளிக் காய்ச்சலைக் காட்டிக்கொடுத்துருச்சு. தூக்கி எல்லாம் எறிய முடியாதுன்னு அந்தப் பெட்டியையும் திரும்பிக் கொண்டுபோய் 'உள்ளே' அனுப்பிட்டு வந்தார்.
டெல்லி வந்து சேர்ந்து அஞ்சு மணி நேரம் தேவுடு காத்து, நாலரை மணி சண்டிகர் ஃப்ளைட்டில் ஏறி வீடு வந்தப்ப மணி ஆறு. டெல்லி விமான நிலையம் எங்கே பார்த்தாலும் அபிநய முத்திரைகளோடு (ராரா.... ) அலங்காரமாத்தான் இருக்கு.

உள்ளே அசப்பில் பார்த்தால் கொஞ்சம் சிங்கை விமானநிலையத்தின் சாயல். நிறைய ட்ராவலேட்டர்ஸ் போட்டு வச்சுருக்காங்க. கிறிஸ்மஸ் & பனிமனிதர்கள் பொம்மை அலங்காரம். எல்லாம் ஓக்கே. கார்பெட்டின் தரம்தான் சரியா இல்லைன்னு கேட் கிட்டே நம்ம பக்கத்துலே உக்கார்ந்துருந்த கொரியன்களுக்கு ஒரே கவலை. தொட்டுத் தொட்டுப் பார்த்து மாய்ஞ்சு போயிட்டாங்க.
அடுத்தமுறை புதுப்பிக்கும்போது நல்லது கிடைக்கட்டுமுன்னு வேண்டிக்கலாமா?

பயணம் உள்ளத்துக்கு நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!!!!

39 comments:

said...

//பயணம் உள்ளத்துக்கு நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!!!!// நல்ல கொள்கை :)))) பயணம் நமக்கும் பிடித்த விஷயம்....

பகிர்வுக்கு நன்றி.

said...

/பயணம் உள்ளத்துக்கு நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!!!!//

பயணம் உள்ளத்துக்கு புத்துணர்ச்சி அளிக்கும் உண்மை.

said...

என்னது பருப்ப்புப்பொடி காமிச்சுக் கொடுத்தீடுச்ச்சாஆஆஆ. ஏன்ன ஒரு அநியாயம்:)
பாக்கிங் நல்ல்லா இருக்குமே எப்படி புட்டுக் கொண்டது:)
அது ரா ரா வா இல்ல மோன நிலைத் தியானமா? கொரியன்ஸ் கவலைப் படக் காரணம் என்னவோ. அவங்களா சப்ளை செய்தாங்க.

said...

மெட்ராஸ்ல பாக்க மிச்சம் ஏதாவது இடம் பாக்கி இருக்கா:-)

said...

//பயணம் உள்ளத்துக்கு நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்//

ரொம்ப சரி..

புளிக்காய்ச்சல் பத்திரமா வந்துசேர்ந்ததா :-))

said...

ரொம்ப சுவாரசியமா இருந்துச்சு துளசி..:)) அதுவும் பருப்புப் பொடியின் துரோகம் படித்து கன்னா பின்னான்னு சிரிச்சேன்..:))

said...

அபிநய முத்திரைகள் ரசித்தேன்! இறுதியில் புதுமொழியை அதைவிடவும்:)!

said...

//திடீர்னு கண்ணுலே பட்டா வாங்கிக்கணும். அது என்னன்னு எனக்கே தெரியாது. இன்ஸ்டண்ட் பதில் கொடுக்க நமக்குத் தெரியாதா:-))))//

:))))

நல்ல பகிர்வுகள் டீச்சர்.

said...

டெல்லி விமான நிலையத்தில் பல இடங்கள் சும்மாவே இருப்பது அந்த இடத்தில் நடப்பதை கூட போரடிக்கவைக்கிறது.

said...

\\பயணம் உள்ளத்துக்கு நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!!!!\\

உண்மை டீச்சர் ;)

said...

எங்கே பார்த்தாலும் கை... காங்கிரஸ் கட்சி பிரசாரமா? (க்ளோசப் கை பயமுறுத்துதே?).
ஆதலினால் பயணம்... நைஸ் டச். (நைசா னைசா? எது சரி?)

said...

பருப்புபொடி புளிக்காய்ச்சலை எறியாமல் உள்ளே வைத்த நல்ல மனம் வாழ்க.

said...

I am reading Blogs your regularly. I am making ready Blog for "Thirumukkulam" belonging to Sri Andal Temple, Srivilliputtur. You are my Idol for Blog writing.
Thank You Madam.

said...

மீண்டும் சண்டிகரா.. வாழ்த்துகள்.

said...

கிங் ஃபிஷர் ப்ளைட் எப்படி? விரைவில் சண்டிகர் பதிவுகள் கள கட்டுமுன்னு சொல்லுங்க. யப்பா பருப்புப் பொடி தப்சுருச்சு!

said...

ஒரே நாளில் அனைத்து இடங்களும் நன்றாக உள்ளது டீச்சர்:))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பயணம் பிடிக்குதுன்னா ஒரு தடவை இந்தப் பக்கம் வாங்க.

இந்த ஊருக்குள்ளே வருவது உங்க ஊருக்குள்ளே வருவதைவிட எளிது:-))))

said...

வாங்க கோமதி அரசு.

உண்மையிலேயே நீங்க சொன்னது உண்மைதான்.

said...

வாங்க வல்லி.

நல்லவேளை புட்டுக்கலைப்பா. ஸ்கேன் செஞ்சப்ப வெள்ளையா காமிச்சுருக்கு அந்த பருப்புப்பொடி. (ட்ரக்கோ என்னவோன்னு) திறந்து காட்டச் சொல்லி இருக்காங்க.

திறந்தால் பக்கத்துலே கருப்பா ரெண்டு பாட்டில் கண்ணை முழிச்சுப் பார்த்துருக்கு:-))))

ஏகப்பட்ட கைகள் பலவித முத்திரைகளில் இருக்குப்பா:-))))

ஒருவேளை லஞ்சம் வாங்குவதன் அடையாளமோ!!!!

said...

வாங்க கோபி ராமமூர்த்தி.

இருக்கே இன்னும் ஏராளமான இடங்கள். அடுத்தமுறைக்காகக் கொஞ்சம் பாக்கி வச்சுட்டுத்தான் வருவேன் எப்போதும்:-)))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

ரெண்டு + ஒன்னு மூணும் பத்திரமா வந்து சேர்ந்தாச்சு:-)

said...

வாங்க தேனே.

பருப்பு, புளிக்கு செஞ்ச துரோகம்னு தலைப்பு வச்சுருக்கலாமோ!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அரசியல்வியாதிகள் சொல்றதுக்கெல்லாம்
ஆடுங்கோன்னு அரசு நாசூக்கா சொல்லுது போல:-))))

said...

வாங்க சுசி.


கோபால் சாமியை நல்லா வேண்டிக்கிட்டே இருந்துருப்பார் போல! சரியா ஒன்னும் என் கண்ணுக்குப்ப்டலை:(

said...

வாங்க குமார்.

ஹைதராபாத் விமானநிலையத்திலும் ஏராளமான காலி இடங்கள் இருக்கு.

எப்பப்பார்த்தாலும் கூட்டம் நிரம்பி வழிவதைப் பார்த்துப் பழக்கப்பட்ட கண்கள் இதை ஏத்துக்க மாட்டேங்குதோ!!!

நியூஸியில் பப்ளிக் ஹாஸ்பிடல் போகும்போது இந்த நினைப்புதான் எனக்கு எப்பவும் வரும். கட்டிப்போட்டு வச்சுருக்கும்
காலி இடத்துலே நடந்து போய்க்கிட்டேஏஏஏஏஏ இருப்போம்.

said...

வாங்க கோபி.

அதான் கோரல் ஐலண்டு போய் வந்துட்டீங்களே. அடுத்த பயணம் எங்கே?

said...

வாங்க அப்பாதுரை.

நைசா என்ன கேக்கறீங்க;-))))

புளிக்காய்ச்சலைத் தூக்கி எறிஞ்சுருவாரா????????? அப்புறம் புவ்வா????????

said...

வாங்க ரத்னவேல்.

ஆஹா....ஸ்ரீவில்லிபுத்தூரா!!!! எனக்குப் பிடிச்ச கோவில் அது.
பதிவு ஒன்னு போட்டுருந்தேன். பாருங்க நேரம் இருந்தால்.....

http://thulasidhalam.blogspot.com/2009/04/2009-13.html

வரேன் உங்க வீட்டுக்கு.

said...

வாங்க மாதேவி.

சண்டிகர் இந்த சண்டியை சீக்கிரம் விடாது போல:(

said...

வாங்க குலோ.

கிங் ஃபிஷர் பரவாயில்லை. தடியா ஒரு ப்ரெட் (ஃபொகாசியா போல) கொடுப்பாங்க முந்தி. இப்போ நல்லவேளையா தண்ணிர் உள்பட ஒன்னுமே கொடுக்கறதில்லை. பீடை விட்டதுன்னு நிம்மதியா இருக்கு:-))))

சண்டிகர் பற்றி ஏற்கெனவே அளந்துவிட்டாச்சு. இங்கே இருந்து நூல் பிடிச்சுப்போங்க நேரம் இருந்தால்:-)

http://thulasidhalam.blogspot.com/2010/03/blog-post_15.html

said...

வாங்க சுமதி.

சுத்திச்சுத்தி காலு வலிக்குதா:-)))))))))

said...

hi thulasiakka,
kuduthu vacha magarasi.nalla enjoy pannunga. neenga 'ooku vithathai'ippa than padichaen. naanum veedu katti , palai kachiyachu.veetuku vaanga. thanks.

said...

வருசப்பிறப்புக்குப் பெருமாளின் பார்வைக்காக நிக்கறாங்க.

வருடம் முழுக்க லட்சுமிகடாட்சமும் சேர்த்துக்கிடைக்க
வாழ்த்துக்கள்!

said...

கடைசி படமும் கடைசி வரியும் அள்ளிக்கிட்டு போவுது.

said...

வாங்க தேனீக்காரி.

இப்பத்தான் உங்க வூட்டாண்டைப்போய் நம்ம ரெண்டு செண்ட்டைச் சொல்லி வந்தேன்.

said...

வாங்க ராஜேஸ்வரி.

லோகமாதா....உங்க தாமரையில் இருக்காளே!!

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

said...

வாங்க நானானி.

அருள் புரியும் 'அம்மா'வின் கருணைக் கையல்லவா? அதான் அள்ளிக்கிட்டுப் போகுது:-)))))

said...

//பயணம் உள்ளத்துக்கு நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!!!!

//

இதுதான் உங்க இரசியமா?

said...

வாங்க ரோஸ்விக்.

பாய்ண்டை 'பட்'ன்னு புடிச்சுட்டீங்களே:-))))

உங்களை சந்திச்சதில் மகிழ்ச்சி.