Wednesday, February 09, 2011

தேரே முஸ்குரானா யாத் ஆனேகி காபில் நஹி ஹை !!!!

க்யோன்? தும் தோ ஏக் பேவஃபா ஹை.

ஓ ரியலி??

பஞ்சாப் யுனிவர்ஸிடியில் மாலைநேர வகுப்புகளுக்காக ஒரு தனிக் கட்டிடம். அதுக்குள்ளே ஒரு சின்ன ஆடிட்டோரியம். போய்ச்சேர்ந்தப்ப மேடை அலங்காரம் முடிஞ்சபாடில்லை. ஒரு இளம்பெண் அறிவிப்பாளரா இருக்கப்போறதுக்காக இன்னிக்குப் புடவைகட்டி, தலைமுடியை ஸ்டைலா அப்படியே பரத்திவிட்டு. நாஸுக்கா அப்பப்ப முடியைக் கோதிவிட்டுக்கிட்டே மைக் பிடிச்சு இன்னிக்கு என்ன ஏது ன்னு அறிவிப்பு செஞ்சு பார்த்தார். சும்மா ட்ரயல்தான். நாங்க ரெண்டு பெரும் கைதட்டி 'ஊக்கு வித்தோம்'. பாவம்..... ட்ரயல் ட்ரயலாவே நின்னுடப்போகுதுன்னு அப்போ நாங்க ஊகிக்கலை :(
இன்னிக்கு அதிசயமா ஒரு அம்மா வந்து பண்டிட் பீம்ஸென் ஜோஷி அவர்கள் படத்துக்கு ஊதுவத்தி ஏத்தி வச்சாங்க. வழக்கம்போல் 'கலைஞர்' கையால் பூச்சொரிதல் இருக்காதுன்னு முன்கூட்டியே தெரிஞ்சுருக்குமோ!
பூனாவில் நாம் இருந்தப்ப நம்ம வீட்டுக்கு முன்பக்கம் இருந்த கூர்க்கா ரெஜிமெண்ட் மைதானத்துக்கு அந்தப் பக்கம் ஒரு தர்கா. நம்ம வீடு இருந்த வரிசையில் பேர்பாதி வீடுகளில் இஸ்லாமியர் இருக்காங்க. நமக்கு அவுங்க எல்லோருமே பயங்கர நட்புதான். இந்து முஸ்லீம் விரோதம் ஒன்னும் அப்போ கிடையாது. எல்லோரும் தாயும் புள்ளையுமாத்தான் இருப்போம். இப்பவும் அப்படித்தான் இருக்கோம்.

நம்ம கீழ்வீட்டு உம்மா கூட நான் அந்த தர்கா போய்வருவேன். அவுங்க என் கூட கோர்புரி பஸார் அனுமனைக் கும்பிட வருவாங்க. ஒரு சமயம் தர்காவில் எதோ விழா. அங்கே கவாலி பாட ஜானி பாபு வர்றார். நிகழ்ச்சி ராத்திரி பத்து மணிக்கு. அதனால் லேடீஸ் யாரும் வரமாட்டாங்களாம். நீச்சே உப்பா நம்ம கோபாலைக் கூட்டிக்கிட்டுப் போனார்.

ரெண்டு மணிக்குத் திரும்பி வந்த கோபாலுக்கு முகமெல்லாம் தூக்கக் கலக்கத்தோடு அப்படி ஒரு மகிழ்ச்சி. நமக்கு இதுவரை கவாலின்னா அது சினிமாவில் வருவதுதான். முக்கியமா ரிஷிகபூரின் பர்தா ஹே பர்தா ஹைதான். அதான் நாம் பூனா வந்தபிறகு பார்த்த முதல் ஹிந்திப்படம்.

புத்தம்புது ஒரு ரூபா நோட்டுகளை அப்படியே சட்டைப் பாக்கெட்டில் இருந்து உருவி உருவிப் போட்டுக்கிட்டு இருந்தராம் உப்பா!!!! இதுக்குன்னே புது நோட்டுகளை பேங்கிலே போய் வாங்கிவந்துருக்கார். 70களில் ஒரு ரூபாய் கொஞ்சம் பெரிய காசுதான். நமக்கோ அப்ப கட்டை சம்பளம். அதான் வியப்பில் இவருக்குக் கண்கள் விரிஞ்சுபோயிருக்கு அங்கே!

ஆறு மணி நிகழ்ச்சிக்குப் பத்து நிமிசம் இருக்கும்போது ஏழுபேர் பரபரப்பா நுழைஞ்சாங்க. மேடையில் போட்டுவச்சுருந்த சின்ன மெத்தையில் ஆறு பேர் தப்லா, மத்தளம், ஹார்மோனியங்கள் மைன்னு பரபரன்னு செட் செஞ்சு நடுவில் ஒரு இடம்விட்டு உக்கார்ந்தாங்க. தலைவர் அதுவரை பார்வையாளர்களுக்குன்னு இருந்த இருக்கையில் உக்கார்ந்துருந்தார். முழுக்கை வச்ச பட்டு ஜிப்பா. கழுத்தில் முத்து ஆரங்கள் இப்படி......
பார்க்க ரொம்ப சாதாரணமா இருக்காரேன்னு முதலில் நினைச்சுட்டேன்.

அப்புறம் வலையில் தேடுனா ............. (இதுக்குத்தான் தாடி சொல்லி இருக்கார் உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்று) தலையில் ஒரு குட்டு வச்சுக்கிட்டேன்.

உஸ்தாத் காதர் நியாஸி ( Qadar Niazi )அண்ட் பார்ட்டி இன்னிக்குப் பாடப்போறாங்க. உஸ்தாத் காதர் அவர்கள் கவாலி ஸாம்ராட் என்ற பட்டத்தை இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் கியானி ஸெயில் ஸிங்கிடம் பெற்றவர். அவர் மகன்கள் ரெண்டுபேரும் ஹைதர் & ஹஸன், அப்பாகூடவே பாடறாங்க இப்போ. சுமார் 700 வருசங்களா இவரோட முன்னோர்கள் பரம்பரையாவே கவ்வாலி பாடகர்கள்தானாம். சூஃபி ஞானி ஹஸ்ரத் நிஸாமுதீன் ஆவ்லியாவின் பரம்பரையில் வந்தவர் இவர்.


கவ்வாலி இசைக்கு நல்ல பாரம்பரியம் இருக்கு. கிட்டத்தட்ட 1200 வருசங்களுக்கு முற்பட்டது. பெர்ஸியாவிலே ஆரம்பிச்சதுன்னு சொல்றாங்க. உருது, ஹிந்தி, பஞ்சாபின்னு பல மொழிகளில் கவ்வாலி பாட்டுகள் இருக்கு. (தமிழில் இருக்கான்னு தெரியலை)


கவாலின்னதும் நமக்கு நினைவுக்கு வரும் பாடகர் நம்ம நுஸ்ரத் ஃபடே அலி கான் அவர்கள்தான். நிறைய ஸீடீக்கள் கேட்டிருக்கேன். 49 வயசுலேயே போயிட்டார்:(


இந்த வகைப் பாடல்களுக்குன்னு சில நியமங்கள் இருக்கு. லீட் சிங்கரா ஒருத்தர். அவர்கூடவே சேர்ந்து பாட பக்கத்துக்கொன்னா ரெண்டு பாடகர்கள். பலசமயங்களில் இவுங்களே ஹார்மோனியம் வாசிச்சுக்கிட்டே பாடுவாங்க. சில சமயங்களில் ஹார்மோனியம் வாசிக்கத் தனி ஆட்கள். அப்புறம் பின்பாட்டுக்கு ரெண்டு பேர். தப்லா, டோலக் வாசிக்க ரெண்டு பேர் இப்படி சின்னக் குழுன்னாக்கூட 7 பேர் வேணும். இன்னும்கூட விதி முறைகள் இருக்கலாம். எனக்குத்தான் சரியாத் தெரியலை:(

ஹார்மோனியம் ஒலிக்க ஆரம்பிச்ச சமயம் திடீர்னு மின்சாரம் போயிருச்சு. வரும் வருமுன்னு இருந்தால்......ஊஹூம். ஏற்கெனவே சுமார் வெளிச்சம்தான். இந்த அழகில் உள்ளதும் போச்சுரா..... கதை:( இப்போ மட்டும் நம்ம விஜயகாந்த் இருக்கணும், மொபைல்ஃபோன் வெளிச்சம் போட்டுருப்பார்னு என் மனசுலே தோணுச்சு பாருங்க...... இதைப் படிச்சதுபோல் சட்னு நாலைஞ்சு செல்போன் ஒளி அங்கங்கே இருந்து வந்துச்சு.

அங்கங்கே ஒன்னு ரெண்டு மெழுகுவத்திகள் கொண்டு வந்து ஏத்தி வச்சாங்க. அப்ப திடீர்னு 'இப்போ நிறைய டீ கேண்டில்ஸ் ஏத்திவச்சுப் பாடுனா எவ்வளோ நல்லா இருக்கும் இல்லே?ன்னு கோபாலிடம் கிசுகிசுத்தேன். 'கேண்டில் லைட் கவ்வாலி' ன்றார் அவர். என் மனசில் தோணியதை யார் கண்டுபிடிச்சாங்களோ தெரியலை, ஒரு பெரிய பாக்கெட் மெழுகுவத்திகளைக் கொண்டுவந்து வரிசையா மேடையின் முன்பக்கத்துலே ஏத்தி வச்சாங்க.

அரை இருட்டுலே பந்தா ஏதுமில்லாம தலைமைப்பாடகர் காதர் நியாஸி மேடைக்குப்போய் நடுவில் உட்கார்ந்தார். 'அல்லா ஹூ' பாடலைக்கடவுள் வாழ்த்தா ஆரம்பிச்சார். பாட்டுப் பட்டையைக் கிளப்புது. மக்கள்ஸ் எல்லாம் இசையின் தாளத்துக்கேத்தபடி கைதட்டிக்கிட்டே கேக்கறோம். பாடல் முடிவுறும் சமயம் பளிச்ன்னு விளக்குகள் எரிய ஆரம்பிச்சது. யா அல்லா உன் கருணையே கருணை! ( இன்னிக்கு முழுசும் பயங்கரமாக் காத்து வீசுனதுலே உடைஞ்ச மரக்கிளை பவர் லைன் மேல் விழுந்துருச்சாம். மறுநாள் காலை தினசரியில் போட்டுருக்கு) பெரிய பெரிய கேமெராக்களுடன் அப்பப்ப சிலர் வந்து நாலு ஷாட் எடுத்துக்கிட்டுப் போயிடறாங்க. செய்தித்தாள்களுக்கு சப்ளை?? யாரும் உக்கார்ந்து நிகழ்ச்சியைப் பார்த்தமாதிரித் தெரியலை.
அடுத்து 'நய்னா மிலாயே கே' ( Chhap tilak sab chheeni re osey naina milayee ke) ( அடுத்து பஞ்சாபியில் 'ஸஜ்னா தேரே பினா' ( Saanu ik pal chein na aavee sajna tere bina ) அப்புறம்....'பேவஃபா தேரா முஸ்குரானா யாத் ஆனேகி காபில் நஹி ஹை (Bewafa yoon tera muskurana yaad aane ke kabil nahin hai)

பாட்டின் இடையில் அவ்வப்போது நடக்கும் சம்பவங்கள் நாட்டு நிகழ்ச்சிகள் எல்லாம் சட்னு இட்டுக்கட்டிப் பாடும்போது முதலில் நாம் திகைச்சாலும் ஜோக் பிடிபட்டதும் ஆரவாரமும் கைதட்டலும்தான். மொழி அறிவு கொஞ்சம் கூடத்தான் வேணும் இந்நிகழ்ச்சிகளுக்கு. மற்ற கர்நாடக, ஹிந்துஸ்தானி சங்கீதம் போல இசையைச் சும்மா ரசிக்க முடியாது.

மாணவர்கள் கூட்டம் ஒன்னு.... பின் வரிசைகளில். ஏகப்பட்ட விஸில் சப்தமும் இரைச்சலும். முன்னாலயோ இந்த இரைச்சலை அடக்கன்னு மைக்கின் வால்யூமைக் கூட்டிக்கிட்டே போறாங்க. காது நமக்குப் பழுக்குது:(

இதுக்குமேலேயும் இருந்தா காபில் நஹின் ஹை ன்னு கிளம்பிட்டோம்.

கடைசிப் பாட்டாக 'தமாதம் மஸ்த் கலந்தர்' பாடினாராம்.
24 comments:

said...

விதவிதமான நிகழ்ச்சிகள்
ஒவ்வொன்னுலயும் விதவிதமான அனுப்வங்கள் :)

said...

ஹா ஹா ஹா ஹா அசத்துங்க அசத்துங்க......
இதோ நானும் வந்துட்டேன்......
மை பன் ஆகையா ஹூம் ஜி...

said...

கலக்குங்க

said...

இந்தக் கச்சேரியில யாரும் நோட்டு மழை பெய்யலையா. படு ரொமாண்டிகா இருந்திருக்கும் போல இருக்கே.:)அதனால் உங்கள் பழைய ஆசை நிறைவேற இத்தனை வருஷம் பிடிச்சிருக்கு!!!!

said...

//'கேண்டில் லைட் கவ்வாலி'//

ஹைய்யோ.. நல்லாருந்துருக்கும் இல்லே :-))

பின்வரிசையில் கைத்தட்டிக்கிட்டே கோரஸ்பாட ஆட்கள் இருப்பாங்க, இங்கே இல்லை போலிருக்கு

said...

எல்லாவிதமான இசையும் ரசிக்க ஒரு வாய்ப்பு - எங்களுக்கும் உங்கள் பகிர்வு மூலம் :)))

said...

கவ்வாலி இசை நம்மையும் கைதட்டிஆடவைத்திடும்போல.

said...

கவ்வாலி இசையை பழைய ஹிந்தி படங்களில் பார்த்த்து போல உள்ளது,அப்படியே தலைப்பையும் தமிழில் சொல்லிடுங்க டீச்சர்.

said...

nalla anubavam thaan pongka...

said...

நல்ல பகிர்வு.

said...

thulasiakka,
isaiyil thaan etanai vagai.anubavichu rasikavum uyarntha rasanai vaenum.piramipa irukku.

said...

கவ்வாலி நான் கேட்டதில்லை. ஒரு வாட்டி சிடி வாங்கிக் கேக்கிறேன்.

செலவு வச்சுட்டீங்களே:-)

said...

வாங்க கயலு.

கிடைச்சதை விடக்கூடாது பாருங்க:-)))))

said...

வாங்க நாஞ்சில் மனோ.

முதல் வருகைக்கு நன்றி.

ப்ளீஸ் கீப் கமிங்.

said...

வாங்க சதீஷ்குமார்.

தெளியவிடாமத்தான் கலக்கிக்கிட்டே இருக்கேன்:-))))

said...

வாங்க வல்லி.

இது கவர்மெண்ட் ஸ்பான்ஸார் பண்ண நிகழ்ச்சி. (கோடிக்கணக்குலே) அவுங்ககிட்டே இல்லாத நோட்டா?


எத்தனை வருசங்கள் ஆனாலும் கிடைக்கணும் என்பது கிடைக்காமல் போகாது :-)))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

ப்ரைவேட் ஃபங்க்ஷனில் இன்னும் கூட்டமா மேடையில் ஆட்கள் இருப்பாங்கப்பா கை தட்ட.

கை தட்டும் எக்ஸ்ட்ரா ஆட்களுக்கு விமானடிக்கெட் முதல் எல்லா படிச்செலவும் கொடுக்க அரசு ரெடி இல்லை போல.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நம்ம சுஜாதா சொன்னது போல எதையும் ஒரு தடவை அனுபவிச்சுரணும்.

said...

வாங்க மாதேவி.

உண்மைதான். ஒரு ரிதம் வரும்போது தாளம் தட்டத்தான் வேணும்.

said...

வாங்க சுமதி.

நானும் படங்களில்தான் நிறையப் பார்த்திருந்தேன்.

'உன் புன்சிரிப்பு நினைவில் வருவதற்கு அருகதை அற்றது'

ஏன்?

நீ வஞ்சகி.

இப்படிப்போகுது பாட்டு!

said...

வாங்க மதுரை சரவணன்.

அது என்னமோங்க தானே இப்படி அனுபவங்களா வந்துக்கிட்டே இருக்குதுங்க (வாழ்க்கை முழுசும்)

said...

வாங்க சுசி.

வருகைக்கு நன்றிப்பா.

said...

வாங்க தேனீக்காரி.

வாழ்க்கை ஒரு முறைதானே? அதான் வாழ்ந்து பார்த்துறணும்.

ஓசியில் கிடைச்சதை ரசிக்க காசா பணமா? :-))))

said...

வாங்க கோபி ராமமூர்த்தி.

செலவு எதுக்கு இப்போ இந்த கணினி யுகத்தில்?

யூ ட்யூப், ம்யூஸிக் இண்டியா இங்கெல்லாம் கொட்டிக்கிடக்கு.

அதைக் கேட்டுட்டு முடிவு பண்ணுங்க. காசை செலவழிக்கலாமா வேண்டாமான்னு-)