இன்னும் 260 பேரைக் காணவில்லை. நிலநடுக்கம் மனநடுக்கத்தைக் கொண்டாந்து போட்டுருக்கு. செவ்வாய்க் கிழமை பகல் 12.54 ( நியூஸி டைம்) ஏற்பட்ட நிலநடுக்கம் 6.3 MAGNITUDE. வேலைநாள்.
நகரமையத்தில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம். இப்போ கோடைகாலம் என்றபடியால் பயணிகள் எண்ணிக்கை வழக்கம்போல் கூடுதல். சம்பவம் நடந்தநாள் மகள், தன்னுடைய நெருங்கிய தோழியின் தாத்தாவின் சவ அடக்கத்துக்குப் போயிருக்கிறாள். ஃப்யூனரல் பார்லரில் இருந்து வெளியேறி வீட்டுக்குள் நுழைந்த போது நிலம் நடுங்கி இருக்கு.
உடனே அப்பா அம்மாவுக்கு டெக்ஸ்ட் மெஸேஜ் அனுப்பி இருக்காள். அது என்னவோ நமக்குக் கிடைக்கலை. நாங்க சிங்கப்பூரில் இருந்தோம் அந்த சமயம். எழுத்தாளர் தோழி ஜெயந்தி சங்கர் நம்மைப் பார்க்க அறைக்கு வந்துருந்தாங்க. மடிக்கணினியை மூடி எடுத்து வைக்கப் போகுமுன் வழக்கம் போல் நியூஸி நியூஸ் ஒரு வினாடி பார்க்கும் பழக்கம் உண்டு. அதிர்ச்சியான சேதி! உடனே மகளுக்குத் தொலைபேசினால்...... அவள் நலம். குடும்ப நலன் தெரிஞ்சதும் நண்பர்கள் நலனைப் பற்றிய கவலை.
யாரையும் தொடர்பு கொள்ள முடியலை. ஃபேஸ்புக்லே போய்ப் பார்க்கலாமுன்னா..... உன் பெயரில் யாரோ லாகின் செய்ய முயற்சிக்கிறாங்கன்னு எங்கிட்டேயே சொல்லுது. 'அது நாந்தாய்யா'ன்னு விளக்கி நண்பர்களுக்கு சேதி விட்டேன்.
பஸ் பயணிகள் யாரும் பிழைக்கலை:(
ஆஸ்ட்ராலியன் தொலைக்காட்சியில் விஸ்தாரமான தகவல் கிடைச்சது. அதுக்குள்ளே 65 மரணம். 300 மிஸ்ஸிங்:(
நிறைய நட்புகள் நம்ம வீட்டுக்கு தொலைபேச முயன்று, பதில் இல்லைன்னு கவலைப்பட்டாங்களாம். நாம்தான் ஊரில் இல்லையே!
கிறைஸ்ட்சர்ச் கதீட்ரல் மணிக்கூண்டு இடிஞ்சு 22 பேர் மரணம். பொதுவாக மேலே ஏறிப்போய்ப் பார்க்கப் பயணிகள் விரும்புவாங்க. பார்த்துவிட்டுத் திரும்பினால் இத்தனை படிகள் ஏறிப்போய்ப் பார்த்தோமுன்னு ஒரு சான்றிதழ் கொடுப்பாங்க. ரொம்ப குறுகலான சுழற்படிகள். நல்ல கருங்கல் கட்டிடம்.
உள்ளூர் தொலைகாட்சி CTV கட்டிடம் முழுசுமா விழுந்து நொறுங்கிப் போயிருச்சு. இன்னொரு நாலுமாடிக் கட்டிடம் நொறுங்கியாச்சு. நியூஸிக்கு ஆங்கிலம் படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்கள் முக்கியமாக ஜப்பான் நாட்டு மாணவர்களின் பள்ளிக்கூடம் இந்தக் கட்டிடத்தில் செயல்படுது. இது இல்லாமல் நாலைஞ்சு வெவ்வேறு அலுவலகங்கள் இதில் உண்டு.
அடைமழை வேறு வந்துருச்சுன்னு மீட்புப்பணிகள் தாமதமாகி இருக்கு. நகரில் முக்கால் வாசிக்கு மேல் மின்சாரமோ, தண்ணீரோ, இல்லை. கடற்கரைக்கு அருகில் இருக்கும் குன்றுகளின் மேல் உள்ள வீடுகள் பலவும் இடிந்து விழுந்துவிட்டன. அந்த ஏரியாவில் மட்டும் 12 தெருக்களைக் காலி செய்யச்சொல்லி மக்களை வேறு இடத்தில் பாதுகாப்பாக வச்சுருக்காங்க. பல இடங்களில் சாலைகள் எல்லாம் பழுதாகிப் போச்சு. பல சாலைகளில் நிலத்தடி நீர் நிறைஞ்சுப் போய்க்கிடக்காம்.
சாலையின் நிலை
ஸ்டேட் எமர்ஜென்ஸி டிக்ளேர் செஞ்சுருக்காங்க. பள்ளிக்கூடங்கள் எல்லாம் மூடியாச்சு. காயம் அடைஞ்சவர்கள் பொது மருத்துவர்களை அணுகி மருத்துவ உதவி பெற்றுக் கொள்ளலாம். இந்த GP சர்வீஸுக்கு பணம் கொடுக்க வேண்டாம் என்று அறிவிச்சுருக்கு அரசு.
சேதி தெரிஞ்சதும் ஆஸ்ட்ராலியாவில் இருந்து மீட்புப் பணிகளுக்கான நிபுணர்கள் வந்து சேர்ந்துட்டாங்க.
அஞ்சு மாசத்துக்கு முன்னேதான் (செப்டம்பர் 4)ஒரு நிலநடுக்கம் 7.1 Magnitude ஏற்பட்டது. அது பின்னிரவு என்றதால் உயிர்ச்சேதம் ஒன்னுமில்லை. ஒரே ஒருத்தருக்குத்தான் அடிபட்டது. அதுவும் அவர் வீட்டு புகைபோக்கியின் மூடி கழண்டு விழுந்ததால்.
தேவாலயத்தின் மணிக்கூண்டுக்குள் புதையுண்டவர்கள் உடல்களை மீட்கும் பணி இப்போ கொஞ்சநேரமுன்புதான் தொடங்கி இருக்காங்க.
தேவாலயம் அன்றும் இன்றும்
செவ்வாய் பகல் முதல் கிடைத்த உடல்களை தாற்காலிகமாக ஒரு இடத்தில் வச்சுருக்காங்க. உடல்களை அடையாளம் காணும் பணியும் ஆரம்பிச்சு இருக்கு. இதுவரை 113 சடலங்கள்.
ஒவ்வொருமுறையும் புதுச்சேதிகளைத் தெரிஞ்சுக்கும்போது பகீர்னு இருக்கு. ஒரு சில செய்தித்தளங்கள் ஒவ்வொரு பத்து நிமிசத்துக்கும் புதுச்செய்திகளைச் சேர்த்துக்கிட்டே இருக்காங்க.
நகரத்தைச் சீரமைக்கும் பணி நெடுநாட்களுக்கு நடக்கும். அதற்கான திட்டங்கள் ஒரு பக்கம் தயாராகுது.
ஊரைவிட்டுப் போய்விட விரும்பும் மக்கள் ஒரு பக்கம் கிளம்பிக்கொண்டே இருக்கிறார்களாம். விமானநிலையம் படு நெரிசலா இருக்காம்.
டைம்பால் ஸ்டேஷன்
தகவல் தெரிந்தவுடன் தனி மடலிலும் பின்னூட்டங்களின் மூலமும் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த அன்பு நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
மனசளவில் நொறுங்கிப் போயிருக்கும் எங்கூர் மக்களுக்கு உங்கள் பிரார்த்தனைகளின் தேவை அதிகமா இருக்கு. உங்கள் அன்பையும் ஆதரவையும் எங்களுக்கான பிரார்த்தனைகளையும் எதிர்பார்க்கின்றோம்.
என்றும் அன்புடன்
துளசி ( கிறைஸ்சர்ச் நகர மக்கள் சார்பில்)
Friday, February 25, 2011
எங்கூரின் இன்றைய நிலை:(
Posted by துளசி கோபால் at 2/25/2011 06:38:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
44 comments:
:(
பிராத்தனைசெய்கிறோம் மா.
அழகான நகரம்.. எதிர்பாராத சோகம் சின்ன நாட்டில்..
:(
நிலைமை சீக்கிரம் சீரடைய பிரார்த்தனைகள் துளசியக்கா..
பொண்ணு பத்திரமா இருக்காங்களா..
அன்பு துளசி, பிரார்த்தனையைத் தவிர வேறு எண்ணமில்லை. உங்க வீடு எப்படி இருக்குனு தெரியுமா. நாங்கள் அனைவருமே தவித்து விட்டோம்.
என்ன அழகான ஊரு. இப்படி ஆச்சே.
கீதா சாம்பசிவம் அவர்கள் நியூசிலாந்தில் மீண்டும் பூகம்பம் என்று போஸ்ட் போட்டு இருந்தார்கள்.
உங்கள் மகள் மற்றும் நியூசிலாந்து மக்கள் நலமாக இருக்க பிராத்தனை செய்தோம்.
உங்கள் மகள் நலமாக இருப்பதாய் முத்துலெட்சுமி சொன்னார்கள்.
ஆண்டவனுக்கு நன்றி கூறினேன்.
நிலமை சீரடைய வாழ்த்துவோம்.
இறந்தவர்களுக்கு அனுதாபங்கள்.
அவர்கள் குடும்பத்திற்கு சாந்தி அளிக்கட்டும் இறைவன்.
படங்களை பார்க்கும் போது இயற்கையின் சீற்றம் மனதை சங்கடப்படுத்துகிறது.
மனதை உலுக்குகிறது! சொந்தங்களையும் நட்பையும் இழந்தவர்க்கு இறைவன் தைரியத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும்! எங்களின் மனமார்ந்த பிரார்த்தனைகள்!
:(
விரைவில் நிலைமை சீராகவும், பாதிக்கப்பட்டவர்கள் இயல்பு நிலைக்கு வரவும், குணமாகவும்
இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையவும் இறைவனைப் ப்ரார்த்திக்கிறேன் அம்மா
உங்களை ஒரே கேள்வியைக்கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என்று உங்களை அழைக்கவில்லை.
அனைத்து பிரச்சனைகளும் சரியாகி மீண்டும் விரைவில் அமைதி திரும்ப வேண்டிக்கொள்கிறேன்.
தற்போது அனைவருக்கும் தேவை மனஉறுதி மட்டுமே.
The moment I heard the news, I was thinking about you and your family. I started reading your blog when you were writing about building your house. We pray for all the people affected. Take care
:-(
மகள் பத்திரமாக இருப்பதில் மகிழ்ச்சி. எங்களின் பிரார்த்தனைகள் அனைவருக்காகவும்.
உங்களது பதில் இமெயில் கிடைத்த உடன் தான் அப்பாடி என்று இருந்தது.
பி.பி.ஸி யில் இன்னமும் ஆங்காங்கே உள்ள இடிபாடுகளைக் காண்பிக்கிறார்கள்.
லாங்குவேஜ் ஸ்கூலில் மீட்புப்பணி இனி முடியாதென சொல்லி விட்டதாக சொல்கிறார்களே!
கிட்டத்தட்ட 100 மாணவர்கள் அங்கு உள்ளே இருப்பதாக வேறு சொல்கிறார்கள்.
சுப்பு ரத்தினம்.
படங்களையும் செய்திகளையும் பார்க்கும்போது துயரம் ஆட்கொள்கிறது.
மனப்பூர்வமான பிரார்த்தனைகள்.
செயதித்தாளில் படித்தவுடன் உங்க ஞாபகம் தான் வந்தது.
இதுவும் கடந்து போகும்.
:-(
My Prayers!
துயர சம்பவம் அம்மா.. :-(
:-(((
நியூசியில் பூகம்பம்னு கேள்விப் பட்டவுடன் உங்க நினைவு தான் வந்தது. உங்கள் குடும்பம், நட்பு, எல்லாரும் நலமாகவும், சந்தோஷம் / சொத்துக்கு சேதம் இல்லாமல் இருக்கவும் பிரார்த்தனை..
தொலைக்காட்சியில் பார்த்து கவலை அடைந்தேன்.
அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.சிரமங்களிலிருந்துமீள பிராத்திப்போம்.
உயிருடன்மீண்ட ஒரு காதல்ஜோடி திருமணம் செய்ததாகக் காட்டினார்கள் மகிழ்ச்சி.
என் துயரில் பங்குகொண்ட அன்புள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
வாங்க தருமி.
வாங்க சாந்தி.
வாங்க அமைதிச்சாரல்.
மகள் நலம். அவளுடைய பூனையும் நலம்.
வாங்க வல்லி.
கார்டன் சிட்டி இப்போ ப்ரோக்கன் சிட்டியா இருக்குப்பா:(
வீட்டின் ரிப்போர்ட் இன்னும் வரலை. முதலில் சமூகக்கூடத்தில் தங்கவைக்கப்பட்ட மக்களைக் காப்பாத்தணும். அப்புறம் இடிபாடுகளுக்குள் அகப்பட்டுள்ள உடல்களை மீட்டு எடுக்கணும். அதுக்கப்புறம்தான் மத்த எல்லாமே.
வாங்க கோமதி அரசு.
மனமார்ந்த நன்றிகள். மகள் நலம்.
விரைவில் நிலமை சீரடைந்துவிடும். நாட்டு மக்கள் அனைவரும் சேர்ந்தே நகரை மறுபடி நிர்மாணிக்க சில வருசங்கள் ஆகுமாம்.
வாங்க குலோ.
பிரார்த்தனைகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.
அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கிறோம் டீச்சர், செய்தி பார்த்தபோது மனதுக்கு வருத்தமாக இருந்தது:((((
வாங்க ராஜி.
மனமார்ந்த நன்றிப்பா.
வாங்க கிரி.
புரிந்துகொண்டேன். உங்களையெல்லாம் சந்தித்ததில் மகிழ்வே.
உண்மைதான். மன உறுதி முக்கியமான தேவை இப்போது.
மனமார்ந்த நன்றிகள்.
வாங்க PVS.
அந்த வீடுதான் போன நிலநடுக்கத்தில் ( செப்டம்பர்) ப்ளாஸ்டர் கொஞ்சம் விரிசல் என்று ரிப்போர்ட் வந்து அதை EQC சரிபண்ணித் தரேன்னு சொல்லி இருக்காங்க. இப்போ புதுசா என்ன டேமேஜ்ன்னு தெரியலை. ரிப்போர்ட்டுக்குக் காத்திருக்கோம்.
வாங்க கோபி ராமமூர்த்தி.
நன்றிகள்.
:( சோகமான நிகழ்வு! இதுவும் கடந்து போகட்டும்…. :(
வாங்க புதுகைத்தென்றல்.
மனமார்ந்த நன்றிகள்ப்பா.
வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.
அதே கட்டிடத்தில் ஒரு மெடிக்கல் செண்டரும் இருந்தது. அதிலும் சில நோயாளிகள் சிகிச்சைக்கு வந்திருப்பார்கள். ஆங்கிலப்பள்ளியிலும் மாணவர் நிறைய.
உள்ளே நுழைய முடியாத அளவுக்கு ஆபத்தான நிலையில் கட்டிடம் உள்ளது.
65 இல் ஆரம்பித்த உடல்களின் எண்ணிக்கை இப்போது 145 ஆக உயர்ந்துள்ளது:(
வாங்க ரத்னவேல்.
மனமார்ந்த நன்றிகள்.
வாங்க ஜோதிஜி.
கடந்துதான் போக வேணும். அதிக நாள் செல்லும் என்ற நிலை இப்போது.
குடும்ப அங்கங்களை இழந்தவர்கள்பாடுதான் மிகவும் துயரம்.
நகரை முன்போலவே நிர்மாணிக்க ஆவன செய்ய எல்லோரும் ஒன்று சேர்ந்தாகிவிட்டது. ஆனால் போன உயிர்களை............ப்ச்...
வாங்க குமரன்.
வாங்க கோபி.
வாங்க ரோஸ்விக்.
எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
வாங்க கெக்கே பிக்குணி.
நினைச்சதுக்கு நன்றிப்பா.
என் சொத்தே உங்கள் அனைவரின் அன்புதான். நல்லவேளை அதுக்கு ஆபத்து ஒன்னும் வரலை.
வாங்க நன்மனம்.
நன்றிகள்.
வாங்க மாதேவி.
அனுதாபங்களுக்கு நன்றிப்பா.
கல்யாணப்பெண் நிலநடுக்கத்தில் இருந்து தப்பி வந்த அதிர்ஷ்டசாலி. மணமக்கள் நீண்ட ஆரோக்கியத்தோடு நல்லா இருக்கணுமுன்னு நாங்க மனமார வாழ்த்தினோம்.
வாங்க வெங்கட் நாகராஜ்.
கடந்துபோகவேணும்தான். காலம் யாருக்காக நிக்குது?
எங்க ஊருக்குப்பெயர் மெயின்லேண்ட். வெள்ளையர்கள் முதலில் காலூன்றிய ஊர். அதனால் எந்த புது சமாச்சாரமுன்னாலும் இங்கேதான் வெள்ளோட்டம் பார்ப்பாங்க. எந்த வசதின்னாலும் முதலில் நாங்கதான் அனுபவிப்போம்.
வசதி மட்டும் போதுமான்னு இப்போ துயரமும் வந்துருக்கு:(
நியூஸியின் தோட்ட நகரம். இப்போ....இந்த கதின்னதும் மனசு தாங்கலை.
வாங்க சுமதி.
அன்புக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றிப்பா.
இழப்புக்கு வருத்தமும் மீண்டும் தழைக்க வாழ்த்துக்களும்.
Mrs Thulasi
3 years back I was there in Christchurch during my trip down under. NZ was charming and the first sight of C'church was the cathedral near which I was dropped and I remember the square and the trams distinctly still. Looking all of these in shambles is really painful. The same feeling I and others here in New York felt post 9/11.
வாங்க அப்பாதுரை.
தழைக்கணும் சீக்கிரம்! வாழ்த்துகளுக்கு நன்றிங்க.
வாங்க ஸ்ரீநிவாஸ் கோபாலன்.
வருகைக்கு நன்றி.
அடுத்தமுறை நீங்கள் எங்கூருக்கு வரும்போது மீண்டும் தளதளன்னு எழுந்து நிற்கும் புது நகரை அதே பழைய ஸ்டைலில் கட்டிருவோம்.
நாடே முனைஞ்சு நிக்குது!
செப் 11 ஐ இப்போ நினைச்சாலும் நெஞ்செல்லாம் பதறுதுங்க.
வருத்தங்களும், விரைவாக செப்பனிட பிராத்தனைகளும்
வாங்க லோகன்.
நன்றி.
Post a Comment