சென்னை இசைவிழாவைக் கொஞ்சம் பார்த்து ரசித்துத் திரும்பிவந்த மயக்கம் தீருமுன்னே இங்கே இசைவிழான்னு தினசரியில் ஒரு விளம்பரம்,. ஒன்பது மாசமா தினசரி வாங்குனதுக்கு இன்னிக்குத்தான் பயன்.
சண்டிகரில் (யூத்துகளுக்கு) இசைவிழா
மூணு நிகழ்ச்சிகள் வரிசை கட்டி நிக்குது. விஸ்வ மோஹன் வாசிக்கப் போறார். அவர் படத்தையும் போட்டுருந்தாங்க. அட! இவரா! நாலைஞ்சு நாளுக்கு முன் சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியில் மடியில் கிதாரைப் போட்டுக்கிட்டு வாசிச்சவராச்சே! ஆள் கூட பார்க்க அசப்பில் சினிமாக்களில், விளம்பரங்களில் 'அந்த பணக்கார அப்பா' வேஷம் கட்டும் நடிகர் போல இருப்பார்.
தினசரி விளம்பரத்தில் இருந்த இமெயில் ஐடிக்கு ஒரு மெயில் தட்டி விட்டேன். நிகழ்ச்சிக்கு வரணும். டிக்கெட்டு எங்கே கிடைக்குமுன்னு. பழம் நழுவி அப்படியே 'தடக்'ன்னு பாலில் விழுந்துச்சு. இலவசமாம். 'கிளம்பி வா'ன்னாங்க டாக்டர் சகுந்தலா லவசா. உள்ளூர் டாக்டரம்மா.
மாலை ஆறரைக்கு நிகழ்ச்சி. இம்டெக் ஆடிட்டோரியம். சண்டிகர் செக்டர் 39 லே இன்ஸ்டிட்யூட் ஆஃப் மைக்ரோபயல் டெக்னாலஜி Institute of Microbial Technology (IMTECH) ( CSIR முழு செக்டரையும் வளைச்சுப் போட்டு வச்சுருக்கு. 47 ஏக்கர்!!) அழகான கட்டிடங்களில் அருமையா இருக்கு. மாணவ மாணவிகளை உதவிக்கு வச்சுக்கிட்டு டாக்டர் சகுந்தலா எல்லாம் ஒழுங்குபடுத்திக்கிட்டு இருந்தாங்க. சின்னதா அறிமுகம் செஞ்சுக்கிட்டு இருக்கைகளில் போய் உக்கார்ந்தோம். சகுந்தலா, அபிமன்யூன்னு கழுத்தில் தொங்கும் பெயர்களைப் பார்த்ததும் என்னடா இது... நாடகத்தனமா எல்லோருக்கும் பேர் வச்சுருக்காங்களோ.... மற்றவர்கள் பெயரை உத்துப் பார்த்தால் வாலண்டியர்னு இருந்துச்சு:-)))))
டெல்லியில் இருந்து வரும் ப்ளைட் தாமதம். காத்திருந்தோம். நேத்து கோபாலும் இதே ஃப்ளைட்டில்தான் வந்தார். தினம் இந்த ப்ளைட் இதே கதைதான்:( அதுவரை மக்களுக்குப் பொழுது போகட்டுமேன்னு SPIC MACAY டாக்குமெண்ட்ரி போட்டுவிட்டுருந்தாங்க. நம்ம டி.கே.பட்டமாள் அவர்களைப் பார்த்ததும் மனசுக்கு குஷி. இதன் ஸ்தாபகர் கிரன் சேத். 1977 இல் டெல்லியில் ஆரம்பிச்சுருக்காங்க. இந்திய பாரம்பரிய இசை, கலை & கலாச்சாரங்களைப்பற்றி நம்ம இளைஞர்களுக்கு உணர்த்த ஆரம்பிச்ச சங்கம் Society for promotion of Indian classical Music And Culture amongst Youth
ஆஹா.... அருமையா ஐடியாவா இருக்கேன்னு நம்ம ICCR (Indian council for Cultural relations) கூட்டு சேர்ந்து ஆதரவு கொடுத்துக்கிட்டு இருக்கு.
பண்டிட் விஸ்வ மோஹன் பட். ( Pt. Viswa Mohan Bhatt) பண்டிட் ரவிஷங்கரின் சிஷ்யப்பிள்ளை. நரம்பு வாத்தியங்களில் பரிசோதனைன்னு ஆரம்பிச்சுக் கடைசியில் ' ஹவாயன் கிடார்' இருக்கு பாருங்க அதில் இன்னும் 14 கூடுதல் கம்பிகளைச் சேர்த்து தன் கண்டுபிடிப்பா ஒரு இசைக்கருவியை உண்டாக்கிக்கிட்டார் இந்த புதுமையான இசைக்கருவியை. கைப்பிடிக்குப் பக்கத்தில் வீணையில் இருப்பது போல சின்னதா ஒரு குடம். நல்லாத்தான் உக்காந்து யோசிச்சு இருக்கார்!!!! மோஹன் கண்டுபிடிச்சது மோஹன வீணை! குழந்தையைப்போல மடியில் போட்டுக்கிட்டு ரெண்டு கைகளும் மேற்புறமாவே வச்சு வாசிக்கிறார்.
இந்த உருவாக்கம் 1967 வருசம். கடந்த 43 வருசமா கச்சேரிகள் ஏராளம். பல வெளிநாடுகளில் போய் நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கார். 1970 இல் 'சூர் மணி' (Sur Mani) என்ற முதல் பட்டம். அதுக்குப்பிறகு 17 முறை வெவ்வேற ஊர்களில் நாடுகளில் வெவ்வேற பட்டங்கள் வாங்கிக் குவிச்சாச்சு. முக்கியமாச் சொல்ல வேண்டியது கிராமி அவார்டும், பத்மஸ்ரீயும்.
ரெண்டு பள்ளிகூடங்களில் இருந்து மாணவர்கள் கூட்டமா வந்து அரங்கை நிறைச்சாங்க.
"ஆடியன்ஸுக்காகவா?"
"ஆமாம். சபை நிறைஞ்சாத்தானே நிகழ்ச்சி கொடுக்கறவங்களுக்கு மகிழ்ச்சியா இருக்கும். கூட்டம் முக்கியம். நேத்து நீங்க டெல்லி ஏர்ப்போர்ட்லே கழகக்கண்மணிகள் கூட்டம் கருப்பு சிவப்பு கட்சிக்கொடியோடு குழுமி இருந்தாங்கன்னு சொன்னீங்கல்லே? வரவேற்க செஞ்ச ஏற்பாடு. அப்படி இல்லைன்னா 'முதல்வர்' நொந்துறமாட்டாரா? வாடகைக்குன்னாலுமே.........கூட்டம் அதி முக்கியம். நார்த் இண்டியாவுலே பிரியாணி நல்லாவே இருக்கும். இல்லை?"
" ஓ..... எதுக்கு வந்தாராம் திடீர்ன்னு? முக்கிய விஷயமா? "
"இல்லையா பின்னே? ரொம்ப முக்கியமான விஷயம் இல்லைன்னா வருவாரா? தொகுதிப் பங்கீடு பத்தி கேட்டுக்கிட்டுப் போக வந்துருக்காரு"
பண்டிட்ஜி ஆரஞ்சு குர்தாவும் கழுத்தில் மின்னும் ஸ்படிக மாலையுமா ( இது தங்கமுன்னு கோபால் சாதிச்சார். பாவம். தங்கம் நினைவில்லை போல! நாளைக்கு ஒரு நகைக்கடைக்குக் கூட்டிட்டுப்போய் காமிக்கணும்.அப்படியே தனிஷ்கில் எதாவது........) அவசர அவசரமா ஆறே முக்காலுக்கு வந்து சேர்ந்தார். பின்னாலேயே அவருடைய 'வீணை'வந்து சேர்ந்துச்சு. சின்னதா இருந்த பொட்டியைத் திறந்து 'பௌலிங் பால்' போல ஒன்னு எடுத்து அந்த கிடாரில் இணைச்சதும் வீணை தயார்!
ட்யூன் செய்ய ஆரம்பிச்ச பதினைஞ்சாவது நிமிசம் ஓடி வந்தார் பண்டிட் ராம்குமார் மிஷ்ரா. தப்லாக்காரர். உள்நாடு & வெளிநாடுன்னு ஏகப்பட்ட விருதுகளுக்குச் சொந்தக்காரர். இந்த வருசம் கிராமி அவார்ட் வாங்கி இருக்கார். பனாரஸ் சொந்த ஊர். சின்ன ஸூட்கேஸில் இருந்து தப்லாக்களும் பிரிமணைகளும் வெளியில் வந்தன.
இந்த வருச விழா சமீபத்தில் மறைந்த திரு பீம்ஸென் ஜோஷி அவர்களுக்கு சமர்ப்பணம் என்பதால் அவருடைய படத்தை மேடையில் வச்சுருந்தாங்க. மலர்தூவி Mile sur mera tumhaaraa to sur bane hamaaraa பின்னணியில் ஒலிக்க
வழிபாடு செஞ்சு நிகழ்ச்சி ஆரம்பமாச்சு.
ராகம் ஸ்ரீரஞ்சனியும் மதுவந்தியும் கலந்து இவரே உண்டாக்குன புது ராகமான விஸ்வரஞ்சனியில் முதல் ஐட்டம். (கொஞ்சம் வலையேத்தி இருக்கேன். கேளுங்க)
அப்புறம் அவரே ஒரு பாடலைப் பாடிக் காட்டி எங்களையும் அவரோடு சேர்ந்து பாடச்சொன்னார். ராஜஸ்தானி நாட்டுப்புறப்பாடல் வகையாம். 'ஆவோஜி.....பதாரோ மாரி தேஷ்...' சின்னதா ஒரு ஹரி பஜன், கடைசியா அவரோட தாயார் பாடும் தாலாட்டுன்னு கச்சிதமா எல்லாம் ஒன்னேகால் மணி நேரத்துக்குள்ளே அடங்கிருச்சு.
கேள்வி நேரம் ஆரம்பமாச்சு நமக்கு நேரம் ஆகிருச்சுன்னு கிளம்பி வந்துட்டோம். எனக்கும் ஒரு கேள்வி இருந்துச்சுதான்.............. அது தங்கமா கிறிஸ்டலான்னு............. :-)
PIN குறிப்பு: புது வீணைக் கண்டுபிடிப்புகளில் ரஞ்சன் வீணைன்னு ஒன்னு இருக்கு. பார்க்கலாம் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்குதான்னு!
Friday, February 04, 2011
மோகன வீணையைப் பார்க்கலாமா?
Posted by துளசி கோபால் at 2/04/2011 01:37:00 AM
Labels: Spic macay, அனுபவம் Chandigarh Mohanaveena
Subscribe to:
Post Comments (Atom)
31 comments:
Hai thulasiakka,
vadai enakkuthan.pathivum super.
நல்லா இருக்கு இசை...
நல்ல பகிர்வு. மோகன வீணை! ம்ம்.. நல்லா இருக்கு பார்க்க! :) இசையையும் ரசித்தேன். நன்றி.
மோகன வீணையைப் பார்த்தோம்.அதிலிருந்து வரும் இனிமையான இசையை கேட்டோம். நன்றி.
அவரோட தாயார் பாடும் தாலாட்டு--
அவரும் தூங்கி உங்களையும் தூங்கவைத்தாரா? இல்லை தூங்கவிடாமல் வாசித்து அசத்தினாரா?
இசையும் நல்லா இருக்கு. பதிவும் நல்லா இருக்கு. அது ஸ்படிக மாலை தான்னு சொல்லுங்க. அதௌமாதிரியே தனிஷ்க்ல மணிமாலை வாங்கித் தரச் சொல்லுங்க.:)
இசை,கொஞ்சம் அரசியல் எல்லாம் நல்லாருக்கு டீச்சர்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் டீச்சர்:))))
இனிய மோகன இசையுடன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் துளசி கோபால்.
வாங்க தேனிக்காரி.
வடையும் கூடவே 'தேனீ'ரும் உங்களுக்குத்தான்:-)
வாங்க கயலு.
நன்றிப்பா.
வாங்க வெங்கட் நாகராஜ்.
உங்கூர்லேதான் ஸ்பிக் மேகி தலைமையகம் இருக்கு. நிறைய நிகழ்ச்சிகள் நடக்குதாமே அங்கே!
ரசிப்புக்கு நன்றி.
வாங்க கோமதி அரசு.
நன்றிங்க.
என் கவலை எல்லாம் இவருக்கு சிஷ்யப்பிள்ளைகள் இருக்காங்களா என்பதே!
கலை தொடர்ந்து வளரணும் இல்லையா?
வாங்க ராஜேஸ்வரி.
வணக்கம்.
முதல் வருகை போல இருக்கே!
அதெல்லாம் தூங்கவிடலையாக்கும்:-)))))
வாங்க வல்லி.
தனிஷ்க்லே மணி மாலை!!!!!
நோ ஒர்ரீஸ்:-))))))
thulasiakka,
theniku theneer.mmmm.....nallathan irukku.en veetukku vanga. thanks.
வாங்க சுமதி.
எல்லாம் கலந்துகட்டி அடிப்பதுதான்:-))))
வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.
வாங்க மாதேவி.
தொடர்ந்துவரும் அன்புக்கு நன்றிப்பா.
Many Happy Returns Thulasiji.... ஏதாவது டிரீட் உண்டுன்னா ஃபோன் பண்ணுங்க :)
http://kgjawarlal.wordpress.com
05-02-2011
அன்பு துள்சிக்கு அதாவது
சண்டி(கார்)ராணிக்கு அடையார் மனுஷியின் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!!!
உங்க அலை பேசி பேசவே மாட்டேங்குதே!? ஏன்? 2ஜி அலைக்கற்றையா?
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் துளசியக்கா..
இன்னிக்கு டிட்வாலா புள்ளையாரை கண்டுக்கிட்டு வந்தேன், அவரும் தன்னோட வாழ்த்துகளை சொல்லச்சொன்னார்.. சொல்லிட்டேன் :-)))))))
துளசி மாமி
Many Happy Returns of the day.
ஒரு வருஷமா உங்களைப் படிச்சுண்டு இருக்கேன் - குஜராத் travelog லேர்ந்து.
என் blog பக்கம் சமயம் கிடைக்கும் போது வரவும்
http://srinivasgopalan.blogspot.com
//ஆள் கூட பார்க்க அசப்பில் சினிமாக்களில், விளம்பரங்களில் 'அந்த பணக்கார அப்பா' வேஷம் கட்டும் நடிகர் போல இருப்பார்.//
அவர் ஒரு அருமையான நிழல்பட கலைஞர்.
இசையை ரசித்தேன். பிறந்த நாள் வாழ்த்து(க்)கள் :-)
(கோபால் ஷ்ஷ்ஷ் கிட்டே வாங்க.. இனி பித்தளையப் பாத்தாலும் தங்கம் வைடூரியம்னு சொல்லிடுங்க..)
கட்டிட புகைப்படம் ஜோர். வீணையிசையும் ஜோர் என்று சொல்ல ஆசைப்படுகிறேன் :)
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாங்க ஜவஹர்.
ட்ரீட்க்கு உங்க ஊருக்கு வரலாமுன்னு இருக்கேன் (வாங்கிக்கத்தான்)
வாங்க நானானி.
வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.
ஆஆஆ ஜி டூ........ ஆடிக்காத்துலே ராசாவே பறக்கும்போது (சண்டி)ராணியின் கதியை நினைச்சுப்பாருங்க.
ரெண்டு பக்கத்துக் காசையும் கரைக்கிறானுங்கன்னு செல்லை ஒழி/ளிச்சு வச்சுட்டேன்.
விடாமப் போனிலே பிடிச்சதுக்கு ஒரு ஸ்பெஷல் டேங்கீஸ்ப்பா;-)
வாங்க அமைதிச்சாரல்.
புள்ளையார் என்ன சொன்னார்? இந்த வருசமாவது ஒழுங்கா எழுத அருள்வாராமா?
எல்லாத்துக்கும் நன்றிகள்ப்பா.
வாங்க ஸ்ரீநிவாஸ் கோபாலன்.
முதல் வருகையா!!!! (விட்றதில்லை)
குஜராத்துக்கு முந்தியே ஏகப்பட்டது இருக்கே. நேரம் கிடைக்கும்போது பாருங்கள். அர்ரியர்ஸ் க்ளியர் பண்ணுங்க என்ற அக்கறைதான்:-)))
வாழ்த்துகளுக்கு நன்றி.
உங்க வீட்டுக்கு வர்றேன்:-)
வாங்க நன்மனம்.
ஆஹா..... அவர் நிழற்படக் கலைஞரா!!!!!! அவர் பெயரைச் சொல்லுங்களேன்.
வாழ்த்துகளுக்கு நன்றி.
வாங்க அப்பாதுரை.
இப்பதான் ரெண்டடி உசரத் தங்கக் குத்துவிளக்கை ஏற்றி வச்சுட்டுப் போயிருக்கார்:-))))
எதோ ஒரு டாக்குமெண்ட்ரியில் பித்தளைச் சாமான்களுக்கு மவுசு கூடி இருக்குன்னு பார்த்தேன். இப்பதான் புரியுது ஏன்னு:-)))))
வாழ்த்துகளுக்கு நன்றி.
Post a Comment