எப்பவுமே அலுக்காத ஒரு பொழுதுபோக்குன்னா எங்க ஹேக்ளி பார்க் போய்வர்றதுதான். ஊருக்கு நடுவிலே இருக்கு ! சுமார் 180 வருஷங்களுக்கு முன் பார்க்கைச் சுத்திதான் நகரத்தையே நிர்மாணிச்சுருக்காங்க. நகரமே , நியூஸியின் கார்டன் ஸிட்டி என்றுதான் பெயர் வாங்கியிருக்கு !
இங்கே வருமுன், கோபால் வாங்கிவந்த க்றைஸ்ட்சர்ச் நகரப் படப்புத்தகம் பார்த்துட்டு, நாம் அங்கே போயிட்டால் தினமும் பார்க் போய் வரணும்னு நினைச்சுருக்கேன். நெனப்புத்தான் பொழைப்பைக் கெடுக்குதுன்னு சும்மாவாச் சொல்லிவச்சுருப்பாங்க ?
தினமும் முடியறகாரியமா ? மாசம் ஒரு முறை போய் வந்தாலே அதிகம் இல்லையோ ! அதுவும் நடக்கலை. குறைஞ்சபட்சம் மூணுமாசத்துக்கொருமுறை ? அதான் ஃபோர் சீஸன்ஸ் ஊரில் இருக்கோமே......... ஊஹூம்..... வருஷம் ஒருக்கா கோடையில் மட்டுமே வாய்க்குது ! பொதுவா க்றிஸ்மஸ் தினம்தான் அமையும். அது தவறினால் புதுவருஷம். வேறெங்கும் போக முடியாதில்லை தானே ?
இந்த முறை புதுவருஷ நாள், காலையில் நம்ம ஹரேக்ருஷ்ணாகோவில், மாலையில் நம்ம புள்ளையார் கோவில், இடைப்பட்ட நேரத்தில், வீட்டில் சின்னத் தொட்டிச் செடிகளுக்கு பெரிய தொட்டி மாற்றம் , குங்குமப்பூ பூண்டுகளை நட்டுவைத்தல் என்று கொஞ்சம் பிஸியாத்தான் போச்சு. ராத்ரி ஒன்பதுக்கு மேலாகியும் கூட சூரிய வெளிச்சம் இருந்தது அருமை. இனி ஒரு மூணு மாசங்களுக்கு இப்படித்தான் !
அதனால் மறுநாள் நம்ம தோட்ட உலாவை நடத்தினோம். நாலு சீஸன்களில் ஒவ்வொன்னும் ஒருவித அழகுதான் ! முக்கியமாக் கோடையில் பசுமையும் மலர்களுமே ப்ரதானம். அதனால் பதிவில் எழுத்தைக் குறைத்துப் பசுமையை ரசிப்போமா !!!!
6 comments:
அழகிய படங்கள். பாதையில் அந்தப் பக்கம் திரும்பி ஜஸ்ட் நின்று போஸ் கொடுத்திருக்கிறீர்கள். நடப்பது போல எடுத்திருந்தால் இயற்கையாக இருந்திருக்கும்.
பூங்காவின் பசுமை மனதைக் கொள்ளைகொள்கிறது
புது வருட பிள்ளையார் ஹரே கிருஷ்ணா கோவில் வழக்கங்களும் ஆரம்பித்தது நிறைவு.
ஹேக்ளி பார்க் படங்கள் பசுமையும் பறவைகளும் படங்கள் நன்றாக உள்ளன.
வாங்க ஸ்ரீராம்,
நீங்க சொல்லும் வகையில் க்ளிக்கணுமுன்னா ஸ்டடி ஹேண்ட்ஸ் வேணுமே !
வாங்க நெல்லைத் தமிழன்,
நம்ம ஊர்தான் கார்டன் ஸிட்டி ஆஃப் நியூஸி என்பதால் அந்தப்பெருமையைத் தக்க வச்சுக்க நம்ம ஸிட்டிக்கவுன்ஸில் ஏராளமான பொருட்செலவும், பணியாட்களுமாக பராமரிக்கிறது. இங்குள்ள க்ளாஸ் ஹௌஸ் படம் , அப்புறம் ஒரு பதிவாகப்போடுகிறேன். எனக்கு ரொம்பவே பிடிச்ச இடம் !
வாங்க மாதேவி,
ரசித்தமைக்கு நன்றிகள்ப்பா !
Post a Comment