Thursday, April 11, 2024

விளக்கலங்காரம் நம்மூரில் !

ஒரு மூணு வாரமா நடந்துக்கிட்டு இருக்கும் கொண்டாட்டத்தைப் போய்ப் பார்க்க இப்பதான் நமக்கு நேரம் கிடைச்சுருக்கு !
நம்ம பக்கத்துப்பேட்டைதான் ! அஞ்சு கிமீவுக்கும் குறைவான தூரம். பத்து நிமிட்லே போயிறலாம்.  இன்னும் இருட்டலையே.....  அவுங்களே ராத்ரி எட்டரைக்குத்தான்  விளக்கேத்தறாங்க. ராத்ரி பத்தரைக்கு லைட்ஸ் ஆஃப்.  மணி ஒன்பதைத் தாண்டிருச்சேன்னு கிளம்பிப்போறோம்.

இந்த  அலங்காரம் ஆரம்பிச்சு இது அஞ்சாவது  வருஷம்.  நாலு லக்ஷம்  LED lights னு சொல்றாங்க. எண்ணிப்பார்க்க யாராலெ முடியும் ? :-) டிசம்பர் ஒன்னு முதல் ஜனவரி ஒன்னுவரை இருக்கும்.  இந்த வருஷம் (2024)நவம்பர் முப்பதுக்கு ஆரம்பிக்கப் போறாங்களாம். இப்பவே சொல்லிட்டாங்க. இன்னும் பெருசா இருக்குமாம் ! ஒருவேளை எட்டு லக்ஷமோ?   

இதுக்குன்னே ஒரு வலைப்பக்கம் வேற வச்சுருக்காங்க.  'நாட் இனஃப் லைட்ஸ்' னு பெயர். பாருங்க, நாலு லக்ஷம் போதலையாமே!!!! 

   http://www.notenoughlights.co.nz/

Cul de Sac லே  இந்த  ஷோ நடப்பதால்  பொதுவா வண்டிகள் போக்குவரத்து கிடையாது. ஷோ நடக்கும் நேரம், அந்தப்பகுதியில் இருக்கும் வீட்டுமக்களும் ஒத்துழைப்பதால்  அவுங்க வீட்டு வண்டி நடமாட்டங்களும் கிடையாது.  வேடிக்கை பார்க்கும் நாம்தான்  அடுத்துள்ள தெருவில் வண்டியை நிறுத்திட்டு நடந்து போகணும். போகட்டும், ஒரு ரெண்டு நிமிட் நடையில் நாமென்ன குறைஞ்சு போறோம் ? 

https://www.facebook.com/1309695969/videos/322881160657786/

இந்த வீட்டுக்கு எதிர்ப்பக்கம் இருக்கும் இன்னொரு வீட்டிலும் விளக்கு அலங்காரம் செஞ்சுருக்காங்க. 

இந்தப்பதிவை எழுதும்போதுதான் இது சம்பந்தப்பட்ட வீடியோ க்ளிப் கண்ணில் பட்டது. உடனே ஃபேஸ்புக்கில் போட்டுருக்கேன். 
அதன் சுட்டி இதோ !

https://www.facebook.com/1309695969/videos/1186434079400386/

இலவச அனுமதின்னாலும்..... எவ்ளோ வேலை செஞ்சுருக்காங்கன்னு பார்த்தால்  மலைப்புதான்!  அதுக்காகவே  அங்கிருக்கும் உண்டியலில் நம் வகையில் கொஞ்சம் போடத்தான் வேணும். அப்படியே ஆச்சு ! 



வீடுவந்து சேர்ந்தால் 'நம்மவன்'  வாசப்பக்கம் போய்ப் பார்த்தான்.  இவனுக்கு அந்த லைட் ஷோ பார்க்கக் கொடுத்துவைக்கலை..... அதுக்காக அப்படியே விடமுடியுமா ?
இப்படித்தாண்டா இருந்ததுன்னு 'கோடி' காமிச்சோம் :-) 



6 comments:

said...

சுவாரஸ்யமான தகவல்கள்.  நீங்கள் வெளியில் சென்றிருக்கும்போதோ, அல்லது வீட்டிலேயே இருக்கும்போதோ கூட ரஜ்ஜு வெளியில் அல்லது மற்ற வீடுகளுக்கு விசிட் செல்வதுண்டா?

said...

அருமை நன்றி

said...

லைட் அலங்காரங்கள் படு ஜோர்.

said...

வாங்க ஸ்ரீராம்,

ரஜ்ஜூ.... ஆஹா... அஞ்சாறு வருஷங்களுக்கு முன்னே திடீர்னு ஒரு ஸீக்ரெட் லைஃப் நடத்தியிருக்கான்.

காலையில் இருள்பிரியுமுன்பே, நம்மைப் பிடுங்கியெடுத்து சாப்பாடு போட வைப்பான். தின்னு முடிச்ச அடுத்த விநாடி தோட்டத்துக்குப்போனவன், எங்கே போவானோ.......... ராத்ரி 11 சிலசமயம் 12 க்கு பூனைபோல உள்ளே வருவான். கொலைப்பசியில் போட்டதையெல்லாம் அவசர அவசரமா முழுங்கிட்டு உடனே போய்ப் படுத்துருவான். மறுபடி காலை அஞ்சரைக்குப் பிடுங்கல்!

இப்படியே கிட்டத்தட்ட ஒரு மாசம் போச்சு. சின்னவீடு செட்டப் பண்ணிக்கிட்டான்னுகூட நாங்க நினைச்சோம்.
அக்கம்பக்கத்துத் தெருக்களில் எல்லாம் வாக் போகும் சாக்கில் போய்ப் பார்த்துட்டும் வந்திருக்கோம் !

எப்படியோ எல்லாம் முடிவுக்கு வந்தது. இப்பக் 'குந்துனையா குரங்கே உன் சந்தடி எல்லாம் அடங்க' ன்னு !

இளமை தொலைஞ்சதும் ஐயா வீட்டோடு :-)

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க மாதேவி,


ரசித்தமைக்கு நன்றிப்பா !