டிசம்பர் ஒன்னாம் தேதி முதல் எங்களுக்குக் கோடை காலம் ! காலமாற்றத்தைக் கொண்டாடக் கடற்கரை வரை போய் வந்தோம். போகும் வழியில் இருக்கும் நம்ம சநாதன் ஹாலுக்குப்போய் சாமியைக் கும்பிட்டோம். இனி பகல்பொழுதுகள் நீண்டு கொண்டு போகும்!
சூரிய அஸ்தமனம் இரவு ஒன்பதுக்குப்பிறகு! ட்வைலைட் என்னும் மாலையும் இரவும் சந்திக்கும் நேரம் இன்னொரு ஒன்னரை மணிக்காலம். கிட்டத்தட்ட ராத்ரி பதினொன்னுக்குத்தான் இருட்டு !
வீட்டிலும், நகரமையத்திலும் க்றிஸ்மஸ் விழாவுக்கான தீப அலங்காரங்களைச் செய்யலாமுன்னா.... இருட்டினால்தானே ? இருட்டுவர தேவுடு காக்கவேணும்தான் ! கீழே படம் இரவு எட்டரை.
இரவு 9.30
விழாக்காலம் & கோடை காலம் கூடவே வருஷாந்திர விடுமுறைக்காலம் என்றபடியால் விடுமுறை ஆரம்பிக்குமுன் வருஷக்கடைசி பார்ட்டின்னு நவம்பர் கடைசி வாரத்துலேயே ஆரம்பிச்சுரும். எதுக்கு இவ்ளோ சீக்கிரமா ? பார்ட்டி நடத்திக்கும் ஹால்கள் வாடகைக்குக் கிடைப்பது கஷ்டம் என்பதால் முந்திக்கோ முந்திக்கோதான் !
நம்ம யோகா வகுப்புக்கும் விடுமுறைக் காலம் உண்டு. அதனால் கடைசி வகுப்பில் க்றிஸ்மஸ் பார்ட்டி ! ட்ரெஸ் கோட்.... க்றிஸ்மஸ் கலர்ஸ் :-)தீனி வகைகள் ஆளுக்கொன்னு கொண்டு போனால் ஆச்சு !
மராத்தியர்களின் குழு ஒன்னு , கலைவிழாக் கொண்டாட்டத்துக்கு விருந்தினரா அழைச்சாங்க. நமக்கும் பூனா வாழ்க்கை அனுபவம் இருக்குல்லே ! நம்ம யோகா குடும்பத்திலும் மராத்தியர்கள் பெரும்பான்மை ! Swar Sandhya என்று பாட்டு நடனம்னு அருமையான நிகழ்ச்சியாக இருந்தது. 'ஹிடன் டேலண்ட்' ன்னு சொல்லும் வகையில் நம்ம மக்களிடம் மறைந்திருக்கும் கலை ஆர்வமும், ஆற்றலும் கண்ணுக்கெதிரில் !
நம்ம யோகா குடும்ப அங்கத்தினர் தூள் கிளப்பிட்டாங்க ! அப்போ பேஸ்புக்கில் போட்டுருந்தேன். நேரம் இருப்பின் கீழே உள்ள சுட்டியில் பார்க்கலாம்.
https://www.facebook.com/1309695969/videos/3245983945705444/
https://www.facebook.com/1309695969/videos/695303876036215/
https://www.facebook.com/1309695969/videos/367342305877055/
https://www.facebook.com/1309695969/videos/689449019980922/
https://www.facebook.com/1309695969/videos/339175302196936/
நிகழ்ச்சி முடிஞ்சு வெளியே வந்தால் அடுத்துள்ள வீட்டில் க்றிஸ்மஸ் ஒளி அலங்காரம் ! பொதுவாக வீடுகளின் வெளியில் இங்கே அலங்கரிப்பதெல்லாம் அத்தி பூத்தாற்போலத்தான் ! ரொம்ப வருஷங்களுக்கு முன் உள்ளூர் பேட்டை ஒன்னில் அக்கம்பக்கத்து வீடுகளெல்லாம் சேர்ந்து அந்தத் தெருக்களையெல்லாம் விளக்குகளால் அலங்கரிச்சாங்க. ஊரே போய் வேடிக்கை பார்த்தது. அப்புறம் ரெண்டு வருஷத்துக்குப்பிறகு அதை நிறுத்திட்டாங்க. பார்வையாளர்கள் ஒழுங்கா இல்லையாம். (இத்தனைக்கும் ஏகப்பட்ட ரூல்ஸ் போட்டு வச்சும் ! ) போகட்டும் போ.....
இப்ப ரெண்டு வருஷமா நம்ம பேட்டைக்குப் பக்கத்துப்பேட்டையில் ஒரு சில வீடுகளில் அலங்காரம் வந்துருக்கு. நாம் விடுவோமா ? போகணும்தான். இப்ப இந்த அடுத்த வீட்டைப் பார்த்துட்டுப் போகலாமா ?
நாள் எப்படி ஓடுது பாருங்க..... இதோ நாளைக்கு மார்கழி பிறக்குது...... நம்ம ஜன்னுவின் தீபாவளி வேஷத்தைக் களைஞ்சு ஜன்னாண்டாளாக மாத்தணும். இந்த வருஷம் பாவாடை தாவணியில் குட்டிப்பொண்ணாக இருக்கட்டும், பொழுதன்னிக்கும் மடிஸார் என்ன வேண்டிக்கிடக்கு ?
நம்மூர்லே ரோட்டரி க்ளப் ஞாயிறு சந்தைன்னு ஒன்னு 1989 இல் ஆரம்பிச்சது. அப்பெல்லாம் அவரவர் ஏதாவது விற்கணும் என்றால் அவரவர் கார்பூட்டில் வச்சு வித்துருவாங்க. இப்படி வண்டிகளை எல்லாம் ஒரு பொது இடத்தில் சேர்ந்தாப்லெ நிறுத்துவதால் ..... வாங்கும் மக்களுக்கும் ஒரு பொழுதுபோக்குபோலச் சுத்திப்பார்த்து தேவையானது கண்ணில் ஆப்ட்டா வாங்கிக்கலாம்.
அதுக்குப்பிறகு விற்பனை செய்யும் மக்கள் பெருகியதால் நம்ம (பழைய)வீட்டுக்கு முன்னால் இருக்கும் ஷாப்பிங் சென்ட்டர் கார்பார்க்கில் தரையில் விரிப்புப்போட்டு அவரவர் கொண்டுவரும் பொருட்களை விற்க ஆரம்பிச்சாங்க. நான் குக்கர் வச்சுட்டு, தேவையான நேரம் ஆனதும், அடுப்பை அணைச்சுட்டு, நீராவி வெளியேற எடுக்கும் நேரத்தில் சாலையைக் கடந்து எதிர்சாரிக்குப்போய் மார்கெட்டை வேடிக்கை பார்த்துட்டு வந்துருவேன்.
கொஞ்சம் கொஞ்சமா விரிவடைஞ்சு போய், நம்மூர் ரேஸ் கோர்ஸ் பார்க்கில் பெரிய அளவில் இப்போ நடக்குது. பழைய பொருட்கள் மட்டுமில்லாமப் புதுப்பொருட்களும், காய்கறிகள் பழங்கள், பூச்செடிகள், பூக்கள், காய்கறிச் செடிகளின் நாற்றுகள், ஆன்டிக் பொருட்கள் , தீனிகள்னு ஏராளம் ஏராளம். ஃபுட்கோர்ட்னு இருக்கும் கடைகளில் மதிய உணவை வாங்கிக்கிட்டு உக்காந்து சாப்பிட இருக்கைகள் போட்டு வச்சுருமிடத்தில் பொழுதுபோக்குக்காக..... ஏதாவது பாட்டு நிகழ்ச்சி வேற நடக்கும். ரோட்டரியின் ஏற்பாடுதான் ! சின்னப்பிள்ளைகளுக்காக விளையாட்டு சமாச்சாரங்களாக மெர்ரிகோ ரௌண்ட், பௌன்ஸிங் காஸில்ன்னு ஒரு பக்கம். நியூஸியின் தெற்குத்தீவின் மிகப்பெரிய சந்தை ! நியூஸிக்கு வரும் பயணிகளை பஸ்ஸில் கொண்டுவந்து காமிக்கிறாங்கன்னா பாருங்க !
ஸ்டால் போடும் மக்கள் ஒரு குறிப்பிட்ட தொகை அடைக்கணும். செலவு போக பாக்கிக் காசை ரோட்டரி க்ளப், தர்ம காரியங்களுக்குக் கொடுத்துரும் ! இதுவரை மூணு மில்லியன் டாலர்கள் தருமம் செஞ்சுருக்கறதாச் சொல்றாங்க. இருக்கும் தான், ஆச்சே 35 வருஷம்!
பொதுவா எல்லார் வீட்டுலேயும் வேண்டாத பொருட்கள்னு கொஞ்சம் இருக்கும்தானே? கராஜ் ஸேல் (யார்ட் ஸேல்)னு வீட்டுலே வச்சு வித்துக்கிட்டு இருந்த மக்களுக்கு இப்படி மக்கள் கூடும் இடத்துலே கொண்டு வந்து வச்சால் சுலபமா விற்பனை ஆகிரும் ! இதுவும் நம்ம வீட்டாண்டைதான். ஒரு ஒன்னேகால் கிமீ இருக்கும். ரேஸ் கோர்ஸ் என்பதால் பார்க்கிங் பிரச்சனை இல்லை. குறிப்பா ஒன்னும் வாங்கிக்கலைன்னாலும்கூட சந்தையைச் சுத்திப்பார்க்கன்னு போவோம்தான். ஒரு மூணு நாலு கிமீ நடை ஆச்சு ! கோடைகாலத்தில் நம்ம நடை இங்கே.... குளிர்காலத்தில் ஷாப்பிங் மால்களில் :-)
ஞாயிறு காலை ஒன்பது முதல் பகல் ரெண்டு மணி மார்கெட். பகல் சமையலை முடிச்சுட்டு, மார்கெட் சுற்றுலா போய் வந்தால் லஞ்ச்! எல்லா வாரமும் போவதில்லை. குறைஞ்சது மாசம் ஒன்னு அல்லது ரெண்டு முறைதான்.
லண்டன்லே போர்ட்டபெல்லோ ரோடு மார்க்கெட்( Portobello Road Market ) போலன்னு வச்சுக்குங்க.
இன்றைக்குப்போனால் அங்கேயும் முதல் முறையா க்றிஸ்மஸ் அலங்காரங்கள் செஞ்சுருந்தாங்க. வேடிக்கை பார்த்துட்டு, ஒரு ஸ்டாலில் புகைவிடும் யானையை வாங்கி வந்தோம் !
4 comments:
கோடையும் விழாக்களும், சந்தையும் களைகட்டியது.
புகைவிடும் யானை புதிதாக உள்ளது. சூப்பர்.
சூரிய அஸ்தமனம் இரவு ஒன்பதரைக்கு அப்புறம்தானா? இருட்டு பதினொன்றுக்கு மேலா? ஆ... காலை எப்போது விடியும்? படங்கள் அழகு. எல்லா விழாக்களிலும் உணவு பிரதானம்!
வாங்க மாதேவி,
எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. அதான் வீட்டுக்குக் கூட்டிவந்தேன் :-)
வாங்க ஸ்ரீராம்,
கோடையில் நாலே முக்காலுக்கே வெளிச்சம் வந்துரும். அடுத்த அரைமணியில் சூரியன் !
இப்பப் பாருங்க.... ஏப்ரல் வந்துருச்சுல்லே.... சாயங்காலம் அஞ்சரைக்கே இருட்ட ஆரம்பிக்குது.....
உணவில்லாமல் விழா ஏதுமில்லை. இன்றைக்குத்தான் ஒரு சீனியர் சிட்டிஸன் மீட்டிங் போய்வந்தோம். அங்கேயும் தீனியோ தீனிதான் !
Post a Comment