போனமுறை காசிப்பயணத்தில் எது வேணாமுன்னு கண்டிப்பா இருந்தேனோ...... அதெல்லாம் இப்ப வேணுமுன்னு ஒரு தீர்மானம் எடுத்தாச்:-) ஆஞ்சி தரிசனம் முடிஞ்சு வெளியே வந்ததும் , புடவை ஏதாவது 'பார்க்கறீங்களா? 'ன்னு ஆட்டோக்காரர் மெதுவாக் கேட்டார். 'நம்மவர் ' வேணாமுன்னு சொல்ல வாயைத் திறக்குமுன்.... 'பார்க்கலாம். போங்க'ன்னேன் :-)
ஒரு ஏழெட்டு நிமிட தூரத்தில் 'பவ்யா பனாரஸி' வந்துருந்தோம். வெளியே பார்க்க ரொம்ப சாதாரணமாத்தான் இருக்கு. உள்ளே முன் ஹாலில் ஸல்வார் கமீஸ் துணிகளும், அடுத்த அறையில் புடவைகளுமா............ சொந்தமாத் தறி வச்சு நெய்ததுன்னு சொன்னாங்க. எனக்கென்னமோ எல்லாம் கசமுசான்னு இருக்குன்னு பட்டது. சின்னத்தேடலுக்குப்பின் ஒரு புடவையும் , ஒரு ஸல்வார் செட்டும் எடுத்தேன். எல்லாம் ஒரு அரைமணி நேரத்துக்குள்தான் !
அதுக்குள்ளே நாம் வேண்டாம் வேண்டாமுன்னு கதறினாலும் ஷெல்ஃபில் இருந்த துணிமணிகளில் பாதிக்கும் மேல் நம் காலடியில்....... ஐயோ... இத்தனையையும் மடிச்சு வைக்கணுமே......... பாவம் இல்லையோ.... துணி மடிக்கன்னே ரெண்டு ஆட்கள் இருக்காங்க. சரசரன்னு எடுத்து நிமிஷமா மடிச்சு வச்சுட்டாங்க.
அஞ்சு கோவில்களில் ஒன்னு பாக்கி இருக்கேன்னு பார்த்தால் 'நம்மவர்' 'புடவைக்கோவில்' பார்த்த அதிர்ச்சியில் களைப்பா இருந்தாரா..... சரி. பார்த்தது போதுமுன்னு தோணுச்சு. ஆட்டோக்காரரிடம் நாட்கோட்டில் விடச் சொன்னோம். கொண்டு வந்து சந்துமுனையில் விட்டவரிடம் நானூறுக்குப் பதிலாக ஐநூறு கொடுத்தார் நம்மவர். பொறுமையாக எல்லா இடங்களிலும் காத்திருந்தாரே ! ஆனால் சென்னை மக்களோடு மூணுமணி நேரத்துக்கும் மேலாக இருந்த காரணமோ என்னவோ.... இன்னும், கூடக் காசு வேணுமுன்னு கேட்டார்.நம்மவர் ஒரு அம்பதைக் கொடுத்துட்டு நடையைக் கட்டினார்.
நாட்கோட்டில் பகல் சாப்பாடு தயாராக இருந்தது. இன்றும் அன்னதானம்தானாம். தீபாவளிக்காக விருந்து ! உபயதாரர் கோட்டையூர் பார்வதி நாச்சியப்பன் அவர்கள் ! ஆரம்பம் வெஜிடபிள் சூப் ! பின்னே பழம், பப்படம், பாயசத்துடன்....... எல்லோருடனும் நாமும் ஒரு கை பார்த்தோம்.
அப்புறம் ?
பொடிநடையில் ஹொட்டேல் சீதா ! வழி பழக்கப்பட்டுப்போயிருச்சு :-)
வரவேற்பில் இருந்த படங்களை அப்பதான் கவனிச்சேன். சீதாவின் உரிமையாளர் பிரதமரையும், முதல் மந்திரியையும் வரவேற்கிறார் ! ஓனர் முகத்தைப் பார்த்தால் நம்ம பாண்டே ( சீதாவின் மேனேஜர் )போலவே இருக்கோன்னு தோணுச்சு. உடம்பொறப்போ ? இல்லையாம்.
ம்ம்ம்ம்ம்ம் சொல்ல மறந்துட்டேனே......... என்னுடைய ஹேண்ட்பேக் ரொம்ப கனமா இருக்குன்னு நேத்து ராத்ரி, கேதார் காட்டில் இருந்து வரும் வழியில் ஒரு கடையில் ரெண்டு பைகள் வாங்கினேன். எனக்கொன்னும் மகளுக்கொன்னுமாக. 150 ரூ தான் ரெண்டும் சேர்த்தே ! இதைவிட சிறிய பைகளைச் தி நகர் வணிக வளாகத்தில் (அப்பவும் ரெண்டு பைகள்தான்) 250 ரூ கொடுத்து வாங்கியவை, லோட்டஸில் வச்சுட்டு வந்த பெட்டியில் இருக்கு. ச்சும்மா சொல்லக்கூடாது..... இந்தப் பை பயணம் முழுதும் நல்லாவே உழைச்சது. இங்கே வந்த பிறகு கைப்பிடியை மற்றும் மாத்தினேன்.

உண்ட மயக்கத்தில் 'நம்மவரின்' ஒரு ரெண்டுமணி நேர ஓய்வுக்குப்பின் மீண்டும் ஊர்சுத்தல்னு கிளம்பியாச். நான் நம்ம இடம் எங்கேன்னு கூகுள் மேப்பில் பார்த்துக்கிட்டு இருந்தேனா.... அப்பதான் தெரியுது, இந்த சீதா அருமையான இடத்தில்தான் அமைஞ்சுருக்குன்னு. கொஞ்சம் பரிசோதிச்சுப் பார்க்கணுமுன்னு தீர்மானம் பண்ணிக்கிட்டேன்.
நம்மவருக்குப் புதுப்பாதைகளில் போகணுமுன்னா கொஞ்சம் தயக்கம்தான் எப்பவும். இதுக்கு நேர்மாறா.... நான் ! புதுப்புதுப் பாதைகளில் போய்ப் பார்ப்பேன். ரொம்பக் கஷ்டமா இருந்தால் போன வழியிலேயே திரும்பி வந்தால் ஆச்சு. 'எங்கியாவது தொலைஞ்சுருவே'ம்பார். காரில் போகும்போது எப்படித் தொலைய முடியும் ? அங்கே இங்கேன்னு திரும்பி ஏதாவது ஒரு மெயின் ரோடுக்குப் போயிரமாட்டோமா என்ன ? இதெல்லாம் கூகுள் மேப், செல்ஃபோன் எல்லாம் வராத காலத்துலே ..... இப்பதான் ஆளாளுக்குக் கையில் செல்ஃபோன் இருக்குல்லே ?
மணி அஞ்சு. வாங்க போகலாம்.........
தொடரும்.......... :-)

9 comments:
பேசியபடி நானூறை மட்டும் கொடுத்திருந்தால் அவராய் அதிகம் கேட்டதும் 450 அல்லது அநூறோடு போயிருக்கும். நாமாய் அதிகம் கொடுத்தால் இவர்களிடம் எவ்வளவு வேண்டுமானாலும் கறக்கலாம் என்று நினைத்து விடுகிறார்கள் ஆட்டோவாலாக்கள்!
அருமை நன்றி
ஆகா! சாறியும் அகப்பட்டது.
யானை பை நன்றாக இருக்கிறது.
ஆட்டோக்காரர் , பாவம் பார்த்ததில் வந்த வினை.
துளசிக்கா, எனக்கும் புது புது பாதைல போய் எல்லாம் தெரிஞ்சுக்கணும்னு ஆசை உண்டு. செய்வதும் உண்டு. என்னென்ன இருக்குன்னும் தெரிஞ்சுக்குவேன்...சின்ன வயசுலருந்தே...
ஆட்டோக்காரர்களிடம் நாமாகவே கூடக் கொஞ்சம் கொடுத்தால் ஒரு சிலர் மட்டும் சந்தோஷப்படுவாங்க மத்தவங்க நம்மகிட்டருந்து கறக்கத்தான் பாப்பாங்க...
கீதா
வாங்க ஸ்ரீராம்,
பாவம் பார்க்கக்கூடாதுன்றதுதான் இனிமேல்! ஆனால்..... ப்ச்....
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
வாங்க மாதேவி,
பயணத்தில் அஞ்சானை கிடைச்சாச்சு !
வாங்க கீதா....
வாராய்... வாராய் னு புதுப்பாதையில் கூட்டிப்போகணும் :-)
ஆட்டோக்காரருக்கு சென்னைக் காத்து அடிச்சுருச்சு !
நாட்கோட்டில் சாப்பாடும், பனாரஸ் பட்டும் சூப்பர் சூப்பர் ...
Post a Comment