காமீட்டரில் அடுத்த ஸ்டாப். ஸ்ரீ சத்யநாராயண் துல்ஸி மானஸ் மந்திர் ! பெரிய வளாகமா இருக்கு. கேட்டில் இருந்து ஒரு அம்பதறுபது மீட்டர் இருக்கும் போல் !
வாசலுக்குள் நுழைஞ்சால்........ அம்மாடியோவ்!!! பிரமாண்டமான ஹால். அந்தக் கோடியில் மூணு சந்நிதிகள் !
நடுவில் ராமர், லக்ஷ்மணர், சீதை & ஆஞ்சி. இடப்புறம் அன்னபூரணியும் பிக்ஷாண்டவரும். பிக்ஷையாப் பணம் கிடைச்சா போட்டு வச்சுக்க அட்டகாசமான ஹேண்ட்பேக் கையிலே மாட்டியிருக்கார் ! வலப்புறம் ஸ்ரீசத்யநாராயணரும் தாயாரும் !
இது தனியார் கோவில்தான். பளிச் சுத்தம், சொல்ல வேண்டியதே இல்லையாக்கும் ! 1960 இல் ஹௌராவைச் சேர்ந்த தாக்கூர்தாஸ் சுரேகா குடும்பத்தினர் கட்ட ஆரம்பிச்சு 1964 இல் கட்டி முடிச்சுருக்காங்க. அப்போதைய இந்திய ஜனாதிபது திரு சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் திறந்து வச்சுருக்கார். சுரேகா, தன்னுடைய தாய் & தந்தையின் நினைவாகக் கட்டியிருக்கார்!
முழுக்க முழுக்க வெண் பளிங்குக் கட்டடம். இந்த இடத்தில்தான் பதினாறாம் நூற்றாண்டில் நம்ம துல்ஸிதாஸ், ராமசரிதமானஸ் என்ற ராமசரிதம் எழுதினாராம். அவர் எழுதியது மஹரிஷி வால்மீகி ,ரெண்டாயிரத்து ஐநூறு வருஷங்களுக்கு முன் எழுதிய ராமாயணத்தை அனுசரித்துத்தான் !
கட்டடத்தின் உட்பக்கச் சுவர்களில் ராம்சரிதமானஸ் முழுக்கப் பளிங்குக் கல்வெட்டில் பொறிச்சுருக்காங்க. கங்கைப்படித்துறைகளில் ஒன்னு துல்ஸிதாஸுக்கும் உண்டு !
கடவுளர்களின் சிலைகள் எல்லாம் வெண்பளிங்கே ! நாங்க எல்லோரையும் கும்பிட்டுக்கிட்டு, மாடிக்குப் போனோம். அங்கே கண்ணாடிப்பெட்டிகளில் துல்ஸிதாஸின் ராமச்சரிதமானஸின் ஓலைச்சுவடிகள் காட்சிக்கு வச்சுருந்தாங்களாம். ஆனால் இப்போ இல்லை.காலிப்பெட்டிகள் காட்சியில் :-(
பக்கத்தில் இருந்த ஒரு ஜன்னலில் தோட்டத்தை எட்டிப் பார்த்தால் ராமன் அனுப்பிய அஸ்வமேதக் குதிரை நிக்குது !
இந்த மாடியில் ராம கிருஷ்ண லீலைகள்ன்னு ஒரு கண்காட்சி. வெறும் பத்து ரூ தான் நுழைவுக்கட்டணம். அஞ்சு வயசுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கும் முழுக்கட்டணமே ! காலை 8 முதல் 12 வரையும், மாலை 4 முதல் 8 வரையும் இந்தக் கண்காட்சியைத் திறந்து வைக்கிறாங்களாம். ஒரு நேரத்தில் அம்பது நபர்களுக்கு மட்டுமே அனுமதி. ரொம்ப நல்லது... கூட்டங்கூடிட்டால் கூச்சலும் பேச்சுமாத்தான் இருக்குமில்லே ?
கோவில் திறந்திருக்கும் நேரமுன்னு பார்த்தால் காலை 6 முதல் இரவு 10ன்னு சொன்னாங்க. வலையில் தேடினால் கோவிட் காலத்தில் வெவ்வேற நேரங்களா இருந்துருக்கும்போல..... நீங்க போகும்போது கொஞ்சம் விசாரிச்சுக்குங்க.
முதல் காட்சியே சிவனின் திருமணம். ராமாயணம் , மஹாபாரதம் & பாகவதம் காட்சிகள் அங்கங்கு ! பொம்மைகள் அசையும் விதத்தில் இருப்பதால் சுவாரஸ்யம் கூடுதல்தான் !
துளசிதாஸ், சூர்தாஸ், பக்த மீரா, சுரேகா குடும்பத்தினரின் குரு இப்படி ரொம்பவே மெனெக்கெட்டு இந்தக் கண்காட்சியை உருவாக்கி இருக்காங்க !
நான் ச்சும்மா இங்கே படங்காட்டிக்கிட்டு இருக்கேன். ஆனால் நேரில் பார்க்கும்போது இன்னும் நல்லாவே உங்களால் ரசிக்க முடியும்.
நேத்துதான் ஃபேஸ்புக்கில் சின்னச் சின்னதா பல வீடியோ க்ளிப்பிங்க்ஸ் போட்டு வச்சேன். அதிக பட்சம் ஒரு நிமிட் வரலாம்.
அதன் சுட்டிகள் இங்கே.... நேரமிருந்தால் பாருங்களேன் !
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02CzsqkCDHgDSHL5spufwKir8bcQzRm1w5H1xTyChjK8DSvxEgsv7YJ64nvG77QEKMl&id=1309695969&mibextid=Nif5oz
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02XN7Vd1tzzeT1qkVxXgc6CD4f7LDtLjsxNQKWiWQxoqGk8UATUzo5tYYwhQnwNuJtl&id=1309695969&mibextid=Nif5oz
இந்தக் கோவில் 1964 முதல் இருக்குன்னாலும் நாம் 2014 இல் இங்கே காசிக்கு முதல்முறை வந்தப்ப எப்படித் தவறவிட்டோமுன்னு தெரியலை !
வேளை வரலைன்னு நினைச்சுக்க வேண்டியதுதான் !
இதுவரை கண்டதில் கவனிச்சது, காசியில் பல ஆஸ்ரமங்களும் கோவில்களும் வங்காள மக்கள் உபயம்தான் !
தொடரும்........ :-)
10 comments:
படங்கள் யாவும் அழகு. கோவில் பளிச்!
வித்தியாசமான கோயில் அமைப்பு. உங்களால், எங்களுக்கு தரிசனம் கிடைத்தது.
கண்காட்சி அழகிய பொம்மை கள் மூலம் கதைகளை எடுத்துக் காட்டியுள்ளரர்கள்.
படங்களே பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றன .நீங்கள் கூறியதுபோல நேரில் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
ரொம்ப நன்றி மா அருமையான படங்கள் , எங்க லிஸ்ட் ல இருந்த கோவில் ஆனால் நேரில் காண கொடுத்து வைக்கவில்லை.
அருமை நன்றி
வாங்க ஸ்ரீராம்,
உண்மையில் தனியார் கோவில்கள் படுசுத்தமாத்தான் இருக்கு. இதே சுத்தம் மற்ற கோவில்களிலும் இருக்கப்டாதா ?
வாங்க ஜம்புலிங்கம் ஐயா,
ஆஸ்ரமத்தைச் சேர்ந்த கோவில்களை ரொம்ப அழகா, வித்தியாசமாக் கட்டிடறாங்க !
வாங்க மாதேவி,
குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். இப்படிக் கதைகள் சொன்னால் அவர்கள் மனசிலும் பதியும் !
நாமெல்லாம் அம்மம்மாக்களிடம் புராணக் கதைகள் கேட்டு வளர்ந்தவர்கள் இல்லையோ ! அதான் சட்னு காட்சி புரிஞ்சுருது !
வாங்க அனுப்ரேம்,
காசியை முழுசுமாப் பார்க்கறது மட்டும் முடியவே முடியாது. பலமுறைகள் போனாலும் ஏதாவது விட்டுத்தான் போகும் !
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
Post a Comment