Wednesday, October 14, 2020

ஊருக்கு ஒன்னு.......(ரோட்டோருஆ பயணம் . பகுதி 11 )

உண்மையில் ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு ஊருக்கும்  சரித்திரம்  ஒன்னு இருக்குல்லே ?  அந்தந்த இடங்களின் சரித்திரம் ஓரளவு தெரிஞ்சக்கணுமுன்னா....  லோக்கல் ம்யூஸியம் போகவேணும். நான் பார்த்த வரையில்  சின்னச் சின்ன ஊர்களில் கூட அங்கங்கே சரித்திரக்குறிப்புகள் ஒளிஞ்சுக்கிட்டு இருக்கு !  நெடுஞ்சாலையில் போகும்போது..... 'ஹிஸ்டாரிக் ப்ளேஸ்'னு  ஒரு போர்டு பார்த்தவுடன்,  அது என்னன்னு தெரிஞ்சுக்கிட்டுத்தான் போவோம்.   சில இடங்களில் இங்கே இருந்துதான் இந்த ஊரை சர்வே பண்ணாங்கன்னு 'அளந்து' விட்டுருப்பாங்க.  சில இடங்களில் வேறெதாவது இருக்கும். ஒன்னும் எழுதாத இடங்களில்....'கேப்டன் குக் வந்தப்ப, இங்கேதான் 'ஒன்' போயிருப்பாரா இருக்கும்னு நினைச்சுக்குவேன் :-)
எங்கூருலேயே நூத்துக்கும் அதிகமான  சரித்திரம் & பாரம்பரியம் இருக்கும் இடங்கள் இருக்கு. இதுலே யாரும் கைவைக்க முடியாது. இதுக்குன்னு ஒரு ட்ரஸ்ட் அமைப்பு உண்டு.   ஆனால் பாருங்க.... விதி விளையாடிருச்சு. 2011 ஃபிப்ரவரி நில நடுக்கம்,  சரித்திர முக்கியத்துவம்னு குறிப்பிட்டு இருந்த பல கட்டிடங்களை உடைச்சுப் போட்டுருச்சு. ரொம்பவே பாதிக்கப்பட்டதுன்னா.... இங்கத்து சர்ச்சுகள்தான்.  நூறு, நூத்தியெம்பது வருசக் கட்டிடங்கள் எல்லாம் போயே போச் :-(

எங்கூருதான்  வெள்ளையர்கள்  முதல்முதலா குடிவந்த இடம் என்பதால் மெயின் லேண்டுன்னு   ஒரு பெயர் இருக்கு.  இப்பவும் நாட்டில் எதாவது புதுவித வசதிகள் , மக்களுக்குச் செய்றாங்கன்னா.... அதுக்கு வெள்ளோட்டம் மாதிரி நம்மூரில்தான் ஆரம்பிப்பாங்க ! பாருங்க.... உங்க சரித்திர டீச்சர், சரித்திரம் சார்ந்த ஊருலேயெ இருக்காங்க !  -)

உள்ளூர் சரித்திரம் தெரிஞ்சுக்க லோக்கல் ம்யூஸியம் போறோம் இப்போ.  பெரிய ஊர்களில்  இதைப் பார்க்க சார்ஜ் எல்லாம் இல்லை. இலவசமே!  இங்கே  ஒரு சின்னத்தொகை கொடுக்கணும். நமக்கு மூணு. 

நாய்களை வரவேற்கிறோம் னு அறிவிப்பு :-) லொள் லொள்.....

ஒரு காலத்துலே  சந்திரனில்கூட நாயர் டீக்கடைன்னு  கேலிபண்ணிக்கிட்டு இருந்தது நினைவிருக்கோ....  உண்மையில் பார்த்தால்  குஜராத்திகளுக்குத்தான் இந்தப் பெருமை போய்ச் சேரணும். இங்கே நியூஸியில் கூட முதல்முதலா வந்த இந்தியர்கள் குஜராத்திகளே!   ஆனால் சீனர்கள், வெள்ளையர் நுழைஞ்சபிறகு  வந்துருந்தாங்க. தங்க வேட்டைதான்.  எங்க தெற்குத்தீவில் தங்கம் கிடைக்க ஆரம்பிச்சதும், சுரங்கம் தோண்டித் தங்கம் எடுக்கும் வேலைக்காக வந்தவங்க இவுங்க.  காலம் 1860 !  நியூஸியின் ஆதி சீனர்!
இப்ப இருக்கும் கூட்டம்,  ஹாங்காங் சீனா வசம் போனபிறகு இங்கே வந்து குடியேறுனவுங்க. பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டும்  கைவசமிருந்த காசும் உதவியிருக்கு!   போகட்டும்.....   இப்ப நியூஸியில் இவுங்க சமூகம் முக்கிய இடத்தைப் பிடிச்சுருக்கு !  அவுங்களும் தங்கள் கலை கலாச்சாரத்தை இங்கே  பரிச்சயப்படுத்துவதில் கில்லாடிகளா இருக்காங்க.  இப்போ அவுங்க புதுவருஷக் கொண்டாட்டத்தில் ஒரு பகுதிதான் இந்த நாய் ஷோ !  இந்த வருஷம் நாய்ப்பா !  



ம்யூஸியத்துக்குள்ளே நம்மை வரவேற்பது போல  ஒரு மராய். முழுக்கட்டடமே இருக்கு!   
மீன் பிடிப்பதும், மரம் வெட்டும் தொழிலும்தான் அதிகம். அதான்  மானாவாரியாக் காடுகள் வளர்ந்தும், சமுத்திரம் நிறைய  குறையாத மீன்களுமா இருந்துருக்கே !  எடுத்துப்பார்ன்னதும்  நானும் ஒரு மீனைக் கையில் எடுத்துப்பார்த்தேன் :-)

கேம்பர் ட்ரெய்லர்கள்தான் வீடு,  அத்யாவசியப் பொருட்கள் விற்கும் கடை, பழங்காலத்து விளக்குகள்,  இப்படி  சுவாரஸ்யமானவைகளைக் காட்சிப்படுத்தி இருக்காங்க. எல்லாம் 1840களுப்பின்தான்!   கேம்பர் ட்ரெய்லர்களில்  வசதிக்குக் குறைவில்லை.... சின்ன இடம். நம்ம வீடுகளில் மட்டும் ஏன் இடம் பத்தலைன்னு தோணுது :-)



மக்கள் வரத்தொடங்கியதும்  காடு எப்படிக் குறைஞ்சுக்கிட்டே வந்ததுன்னு.....   புதுசா குடியிருப்புகளும், ஊர்களும்  வரத்தொடங்கியாச்சே.... 




நியூஸியில் இப்ப இருக்கும் டெஸிமல் காசு 1967 இல் தான் வந்துருக்கு. அதுக்கு முன்   ப்ரிட்டிஷாரின் பவுண்டு, ஷில்லிங் வகைதான்.
விலைவாசி கொள்ளை மலிவுப்பா !   

Gunter Chain ... நிலம் அளக்கும் கருவி.....  நீட்டலளவையில்  சங்கிலின்னு ஒரு அளவு இருந்துருக்கு !  க்ரிக்கெட் பிட்ச்.... ஒரு சங்கிலி நீளமாம் !  அட !  66 அடி =  ஒரு சங்கிலி

மோனா என்ற பெயரில் புதுப்படகு, டாப்போ ஏரியைச் சுத்திப்பார்க்க ! படகுவீடு .... வீகெண்ட் சனிக்கிழமை பகல் ரெண்டு மணிக்கு ஏறினால்....  ஞாயித்துக்கிழமை சாயங்காலம் ஆறரைக்குக் கொண்டு வந்து விட்டுருவாங்க.  வாவ்!  
நாய்கள் இருக்குமிடத்துக்குப் போனோம். ஒன்னு கூட குலைக்கலைப்பா !  அமைதியா இருக்குதுகள் ! எத்தனைவிதமான ஐடியா !   எல்லாம்  ரீசைக்கிள் சாமான்கள்தான் 

 நாயும் நானும் :-)

ஒரு நாய் கேலரி போட்டு வச்சுருக்காங்க. மோனாலிஸாவின் நாய் கூட இருக்கு :-)
எந்த நாயையும் விட மனசில்லை....  ஃபேஸ்புக் ஆல்பமாப் போட்டு வச்சுருக்கேன்... விருப்பம் இருந்தால் க்ளிக்கலாம் !
நாய்வேஷம் போடத்தெரியலை....

ஒரு ஃபோட்டோபூத் கூட இருக்கு.  நாய் டாக்ஸி!  ட்ரைவர்  வாலாட்டிக்கிட்டே நக்கிருவார் :-)


டவுனில் ஒரு பீட்ஸா வாங்கிக்கிட்டு அறைக்குத் திரும்பியாச் !
 

தொடரும்...... :-) 


4 comments:

said...

என்னுடைய பெரும்பாலான பயணங்களில் அருங்காட்சியகத்திற்கும் ஒரு விசிட் உண்டு! நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடியும் என்பதும் ஒரு வசதி.

விரிவான தகவல்கள்.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி டீச்சர்.

said...

அருமை நன்றி

said...

ரொம்பவே விளக்கமா எழுதியிருக்கீங்க. நிறைய தகவல்கள்.

said...

சுவாரசியம்.