இலங்கையின் பாரம்பரிய உணவு ஒரு இடத்துலே கிடைக்குமுன்னு மஞ்சு சொன்னார். காமணி ஆகுமாம் அங்கே போக..... ஆகட்டுமே... ஏற்கெனவே மணி ரெண்டரை....
வேளான்மைத் துறை நடத்தும் இடம் இது. உண்மையான இலங்கையின் சுவையாம் ! Traditional Food Centre, Hela Bojun.
மிகப்பெரிய இடம். ஏராளமான மரங்களோடு அருமை!
பெரிய ஓப்பன் சமையலறை! நிறையப் பெண்கள்தான்சமையல் வேலை முழுவதும் ! (அம்மா உணவகம் ? ) நடுவில் சமையல் நடக்கும்போதே உணவுவகைகள் விற்பனைக்கு அடுக்கி வச்சுருக்காங்க கைப்பிடி சுவருக்கு அந்தப் பக்கம்.
எல்லா வகைகளுக்கும் பெயரும் எழுதிப்போட்டுருக்காங்க. தமிழிலும் இருக்கு. ஆனாலும் அவை எல்லாம் பரிச்சயமான பெயராக இல்லை ஒன்னுரெண்டைத் தவிர !
பருப்புவடைக்குப் பெயரே இல்லை! ஆனாலும் கண்டுபிடிச்சுட்டேன் :-)
உக்கார்ந்து சாப்பிட சின்னச் சின்ன குடில்கள் போன்ற அமைப்பு. எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு!
அவரவருக்கு வேண்டியதை வாங்கிக்கலாம். நாம் கேட்கும் வகைகளை வரிசையா ஒரு தட்டில் போட்டுட்டுக் கடைசியிலே பணம் அடைக்கணும். கையிலே காசு...வாயிலே தோசை!
மஞ்சு தோசையும் வேறென்னமோ ஒன்னும் வாங்கிக்கிட்டார். 'நம்மவர்' இடியப்பம், பருப்புவடை.
நாந்தான் ஒவ்வொன்னாப் பார்த்துக்கிட்டே வந்து பலாப்பிஞ்சு கறி வைத்த கட்லட், ஒரு நாரன் (?) பலகாரம், ஒரு அரிசிமாப்பிட்டு வாங்கினேன். என்னோடதை எல்லோருமா பகிர்ந்து உண்டோம்.
இதே கட்டடத்தின் அடுத்தபக்கம் விதைகளும் பூச்செடிகளும் , மரக்கன்றுகளும் விற்பனைக்கு வச்சுருக்காங்க. காய்கறி விதைகளைப் பார்க்கும்போது கொதியா (மலையாளம்... பேராசை) இருந்தது உண்மை. இங்கே கொண்டுவர முடியாது. அனுமதிக்க மாட்டாங்க என்பதால்..... வாங்கலை.
மஞ்சக்கனகாம்பரம் பூத்துக்குலுங்குது.... ஹைய்யோ!!! பூக்கள் விற்கப்டாதோ?
நாங்க அங்கிருந்த அரை மணி நேரத்துலேயே நிறையப்பேர் சாப்பிட வந்துக்கிட்டே இருந்தாங்க. !
விலையும் ரொம்பவே மலிவுன்னு மஞ்சு சொன்னார்!
சாப்பாடானதும் கிளம்பிக் காட்டுப்பாதையில் போனஅரைமணி நேரத்தில் சிகிரியா (சிங்கக்குன்று, சிங்கப்பாறை) கண்ணில் பட்டது.
இங்கே 1200 படிகள் என்பதால் ஏற்கெனவே போவதில்லை என்ற முடிவு. சிங்கத்தின் பின்னம்பக்கம் முதுகு தெரிஞ்சதே தவிர முகம் தெரியலை. என்னால் ஏறிப்போவது கஷ்டம் என்று மஞ்சுவும் சொன்னார். சரி. குறைஞ்சபட்சம் சிங்க முகத்தைப் பார்க்கலாமேன்னால்.... நாம் போகும் வழியில் இருந்து முன்பக்கம் போக ரொம்பவே சுத்தணுமாம். புத்தர் சொன்னதை எடுத்துக்கிட்டேன். ஆசையை ஒழி!
கொஞ்சம் சின்ன வயசா இருக்கும்போது இங்கெல்லாம் வந்துருக்கணும். இல்லே... உடம்பாவது ஃபிட்டா இருக்கணும். ரெண்டும் இல்லாமப் போச்சே...... ப்ச்.... வலை எதுக்கு இருக்கு? வீசினால் முகம் கிடைக்காதா? கிடைச்சது :-)
போற போக்கில் சில க்ளிக்ஸ். பின்னால் பார்த்தால் சிங்கம் மாதிரி இல்லையே... யானை மாதிரி இருக்கேன்னால்.... ஆமாம்னு சொல்றது போல யானை ஒன்னு நின்னுக்கிட்டு இருக்கு. பயணிகளை ஏத்திப்போகுமோ என்னவோ...
காட்டுவழியிலேயே தொடர்ந்து போய் ஒரு இடத்தில் திருக்கோணமலை ஹைவே பிடிச்சு அடுத்த இருபத்தியஞ்சாம் நிமிட், ஹபரண என்ற ஊருக்குள் நுழைஞ்சு இன்றைக்கு நாம் தங்கப்போகும் ரிஸார்ட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம்.
இந்த ஹொட்டேல்தான், நாம் கொழும்பு ஃபுட் கோர்ட்டில் சந்திச்ச தில்லிப்பெண்மணி பரிந்துரைத்த இடம்!
தொடரும்........... :-)
வேளான்மைத் துறை நடத்தும் இடம் இது. உண்மையான இலங்கையின் சுவையாம் ! Traditional Food Centre, Hela Bojun.
பெரிய ஓப்பன் சமையலறை! நிறையப் பெண்கள்தான்சமையல் வேலை முழுவதும் ! (அம்மா உணவகம் ? ) நடுவில் சமையல் நடக்கும்போதே உணவுவகைகள் விற்பனைக்கு அடுக்கி வச்சுருக்காங்க கைப்பிடி சுவருக்கு அந்தப் பக்கம்.
எல்லா வகைகளுக்கும் பெயரும் எழுதிப்போட்டுருக்காங்க. தமிழிலும் இருக்கு. ஆனாலும் அவை எல்லாம் பரிச்சயமான பெயராக இல்லை ஒன்னுரெண்டைத் தவிர !
பருப்புவடைக்குப் பெயரே இல்லை! ஆனாலும் கண்டுபிடிச்சுட்டேன் :-)
அவரவருக்கு வேண்டியதை வாங்கிக்கலாம். நாம் கேட்கும் வகைகளை வரிசையா ஒரு தட்டில் போட்டுட்டுக் கடைசியிலே பணம் அடைக்கணும். கையிலே காசு...வாயிலே தோசை!
மஞ்சு தோசையும் வேறென்னமோ ஒன்னும் வாங்கிக்கிட்டார். 'நம்மவர்' இடியப்பம், பருப்புவடை.
நாந்தான் ஒவ்வொன்னாப் பார்த்துக்கிட்டே வந்து பலாப்பிஞ்சு கறி வைத்த கட்லட், ஒரு நாரன் (?) பலகாரம், ஒரு அரிசிமாப்பிட்டு வாங்கினேன். என்னோடதை எல்லோருமா பகிர்ந்து உண்டோம்.
இதே கட்டடத்தின் அடுத்தபக்கம் விதைகளும் பூச்செடிகளும் , மரக்கன்றுகளும் விற்பனைக்கு வச்சுருக்காங்க. காய்கறி விதைகளைப் பார்க்கும்போது கொதியா (மலையாளம்... பேராசை) இருந்தது உண்மை. இங்கே கொண்டுவர முடியாது. அனுமதிக்க மாட்டாங்க என்பதால்..... வாங்கலை.
மஞ்சக்கனகாம்பரம் பூத்துக்குலுங்குது.... ஹைய்யோ!!! பூக்கள் விற்கப்டாதோ?
நாங்க அங்கிருந்த அரை மணி நேரத்துலேயே நிறையப்பேர் சாப்பிட வந்துக்கிட்டே இருந்தாங்க. !
விலையும் ரொம்பவே மலிவுன்னு மஞ்சு சொன்னார்!
சாப்பாடானதும் கிளம்பிக் காட்டுப்பாதையில் போனஅரைமணி நேரத்தில் சிகிரியா (சிங்கக்குன்று, சிங்கப்பாறை) கண்ணில் பட்டது.
இங்கே 1200 படிகள் என்பதால் ஏற்கெனவே போவதில்லை என்ற முடிவு. சிங்கத்தின் பின்னம்பக்கம் முதுகு தெரிஞ்சதே தவிர முகம் தெரியலை. என்னால் ஏறிப்போவது கஷ்டம் என்று மஞ்சுவும் சொன்னார். சரி. குறைஞ்சபட்சம் சிங்க முகத்தைப் பார்க்கலாமேன்னால்.... நாம் போகும் வழியில் இருந்து முன்பக்கம் போக ரொம்பவே சுத்தணுமாம். புத்தர் சொன்னதை எடுத்துக்கிட்டேன். ஆசையை ஒழி!
கொஞ்சம் சின்ன வயசா இருக்கும்போது இங்கெல்லாம் வந்துருக்கணும். இல்லே... உடம்பாவது ஃபிட்டா இருக்கணும். ரெண்டும் இல்லாமப் போச்சே...... ப்ச்.... வலை எதுக்கு இருக்கு? வீசினால் முகம் கிடைக்காதா? கிடைச்சது :-)
போற போக்கில் சில க்ளிக்ஸ். பின்னால் பார்த்தால் சிங்கம் மாதிரி இல்லையே... யானை மாதிரி இருக்கேன்னால்.... ஆமாம்னு சொல்றது போல யானை ஒன்னு நின்னுக்கிட்டு இருக்கு. பயணிகளை ஏத்திப்போகுமோ என்னவோ...
தொடரும்........... :-)
12 comments:
இடுகைல பின்னால போட்டிருக்கிற புகைப்படங்களை அப்புறம் பார்க்கலாம்.
எல்லா உணவின் படங்களும் பெயர்களோடு போட்டிருக்கலாமே. அதுக்கு ஒரு கர்ர்ர்ர்ர்ர்ர்ர் உங்களுக்கு. முடிந்த வரை அழகு தமிழில் இருக்கு.
சுகியனுக்கு (சீயன்), தேங்காய் பூரணம் இருப்பதால் நாரன் பலகாரம் (நாரியல்-தேங்காய்). உந்துவெல் - உளுந்தில் செய்யும் ஜிலேபி போன்ற ஐட்டமோ.
நிறையுணவு ரொட்டி - அழகு தமிழ்
இலை அடை போல இருக்கு படத்துல. ஆனால் பேரைக் காணோம்
அரிசி உப்புமாவைத்தான் அரிசிமா பிட்டு என்று சொல்றாங்களோ?
கடைசில ஒரு ரொட்டியும் தயிரும் நீங்க சாப்பிட்டிருப்பீங்க (இல்லைனா பருப்பு வடை).
சிகிரியா குன்று - ரொம்ப அழகா இருக்கு.
யானைக்கூட்டமே பார்த்தும் இன்னும் யானைமீது ஆசை போகலையா?
இலங்கைச் சுற்றுப்பயணத்தில் இந்த இடமும் என் கண்ணைக் கவர்ந்தது.
சுத்தமா இருக்கு ..சுவையாகவும் இருந்து இருக்கும் ...
அப்புறம் அம்மா உங்க பயணத்தில் காஞ்சி கோவில்கள் பற்றிய லிங்க் வேணுமே தேடினேன் கண்டுபிடிக்க முடில...
பாரம்பரிய உணவு பார்க்கும்போது சுவையாகவே இருக்கும் என தோன்றுகிறது.
தொடர்கிறேன்.
எங்க பயணத்தில் நாங்க இந்த நிறையுணவு இடத்தில் மட்டுமே சாப்பிட்டோம். மற்றைய உணவங்களில் சாப்பிட வயிறு அப்செட். கொஞ்சகாலம்தான் ஆரம்பித்து என ரம்பொட உணவக ஊழியர் சொன்னார். போர்ட் ல எழுதியிருந்தது பார்த்து தெரிந்துகொண்டோம். லவேரியா என்ற சிற்றுண்டி நல்லாயிருக்கும்.
சிகிரியா ஏறுவது கடினம் நீங்க போகாது விட்டது நல்லது. சிகிரியா குன்று படங்கள் அழகு.
வாங்க நெல்லைத் தமிழன்.
எல்லாத்துக்கும் பெயர் எனக்குத் தெரியாதே... அவுங்க அங்கே வச்சுருக்கும் பெயர் எழுதிய அட்டைகள் வரும்படிதான் க்ளிக்கினேன்....
எனக்குப் பிட்டும் பருப்புவடையும் ஒரு நாரனும் :-) பலாப்பிஞ்சு கட்லெட் வாயில் வைக்க முடியாத காரம்.....
அரிசிமா புட்டுதான் அது. உப்புமா இல்லையாக்கும் :-)
@நெ.த,
யானை ஆசை விடாது கருப்பு :-)
அடுத்த பதிவைப் பாருங்க !
வாங்க அனுப்ரேம்,
சுத்தம் ஓக்கே. சுவை? என் நாக்கு இன்னும் பழகலை......
காஞ்சிபுரக் கோவில்களில் எது வேணுமோ அந்தப் பெயர் போட்டு, துளசிதளம் என்று தேடுங்க. கூகுளாண்டவர் அருள் பொழிவார் :-) தமிழில் தேடணும் !
பாண்டவதூதன் துளசிதளம்
வாங்க வெங்கட் நாகராஜ்.
சுவை 'நமக்கு' கொஞ்சம் முன்னேபின்னேதான் இருக்கு. பயணிகளாக நாம் இருப்பதால் சமாளிச்சுக்குவோம் :-)
வாங்க ப்ரியசகி.
உரைப்புதான் கூடுதல். ஒருவேளை எனக்கு அப்படித்தோணுது போல.....
மத்தபடி ஓக்கேதான்.
சிகிரியா ஓரிரூ வருடங்களுக்கு முன் சென்று வந்தோம். மேலே செல்ல செல்ல சிரமமான படிகள்தாம் இறுதியில் இரும்பு படியும் உள்ளது.
Post a Comment