றம்பொட, ராம்பொட, ரம்பொடன்னு வகைவகையாச் சொன்னாலும் இந்த பொடவுக்கு என்ன பொருள்னு தெரியலை. சிங்களச் சொல்தானே?
காலையில் எழுந்து குளிச்சு ரெடியாகி மூட்டைமுடிச்சைக் கட்டி வச்சுட்டுக் கீழே போனோம். ப்ரெட், பட்டர் & ஜாம். டீ. கொஞ்சம் பழங்கள் சாப்பிடலாமுன்னா பழத்தை நறுக்கும் உதவியாளர் இன்னும் வேலைக்கு வரலையாம் ! வாழைப்பழம்? இனிமேத்தான் வாங்கணும். சமையல் உதவியாளர் வேலைக்கு வரும்போது வாங்கி வருவாங்களாம். விடிஞ்சது.....
மஞ்சு தப்பிச்சுக்கிட்டார். வேறெங்கியோ போய் சாப்பிட்டுட்டு வந்தாராம்.
செக்கவுட் செஞ்சுக்கிளம்பும்போது மணி எட்டரை. மொதல்லே இங்கிருந்து ஒரு 22 கிமீ தூரத்தில் இருக்கும் ரம்பொட நீர்வீழ்ச்சியைப் பார்த்துட்டுப் போகணும். நேத்து அந்த வழியில்தான் வந்தோம் என்றாலும் மழையா இருந்ததே.....
ஒரு மணி நேரப்பயணம்.
நுவரா எலியா ஊரைக் கடக்கும் வரை அங்கங்கே காய்கறிக்கடைகள் சாலையோரமா! இறங்கிப்போய் என்னென்ன காய்கள்னு பார்க்கவிடலை 'நம்மவர்'. ட்ராஃபிக் அதிகமுன்னார். ஒரு ரெண்டு வண்டிகள்தான் நம்ம பின்னால்....
ஊரைத்தாண்டுனதும் டீ எஸ்டேட் வழியாத்தான் போறவழி. ரம்பொட டன்னலுக்கு முன்னால் இடப்பக்கம் திரும்பணும். கார்பார்க்கில் கழுத்தில் பாம்பு மாலையோடு நம்ம வண்டியை நிறுத்தினார் சிவன் !
'நம்மவரை'ப் பார்க்கணுமே....... ஹாஹா....
வெள்ளைக்காரப் பயணி பாம்புமாலை போட்டுக்கிட்டுப் போஸ் கொடுத்தார். நீங்க மாலை போடுக்கறீங்களான்னு நம்மவரைக் கேட்டுவச்சேன் .
இங்கிருந்து கீழே இறங்கிப்போகணும். ஹொட்டேல் வண்டி வருமுன்னு செக்யூரிட்டி சொன்னார். ரெண்டு நிமிட்லே வண்டி வந்தது. ஹொட்டேல் கெஸ்ட்ஸ், கீழே போகவும், மேலே வரவும் இலவச சேவை. நாம்தான் இங்கே தங்கலையேன்னு தயங்குனதுக்கு, வண்டி ட்ரைவர், பிரச்சனையே இல்லை, வாங்கன்னு கொண்டுபோய் விட்டார். செங்குத்தா இறங்கிக் கொஞ்சம் வளைஞ்சு போகுது பாதை. ரெண்டு நிமிட் பயணம் :-)
ரெண்டு மூணு கடைகளுடன் வெளி முற்றம். கட்டடத்துக்கு வெளியிலே உக்கார இருக்கை போட்டு வச்சுருக்காங்க. உள்ளே போனால் ஒரு பக்கம் ஹொட்டேல் வரவேற்பும் இன்னொரு பக்கம் டைனிங் டேபிள்ஸ் ஒரு ஏழெட்டும். சாப்பிட்டுக்கிட்டே வேடிக்கை பார்க்கும்வகையில் கண்ணாடி அமைப்பு.
வரவேற்பில் ஃபால்ஸ் ஆக்ஸெஸ் வழி கேட்டப்ப, 'அந்தப்பக்கம் லிஃப்ட்லே போங்க'ன்னு கை காமிச்சாங்க.
வாவ்! அருமையான வ்யூ! கீழே போகப்போக ஹொட்டேல் ரூம்ஸ் எல்லாம் இருக்கு. தெரிஞ்சுருந்தா இங்கே வந்து தங்கி இருக்கலாம். சீதை, சீதை, நுவரா எலியான்னு தேடி இதைக் கோட்டை விட்டுட்டோம்.
வெளியே வந்து நீர்வீழ்ச்சியை நோக்கிப்போறோம். படிகள் எல்லாம் இருக்குன்னாலும் நம்மால் கடைசிவரை போய்க் கீழே இறங்கெல்லாம் முடியாது. கொஞ்சதூரம் போய்ப் பார்த்தால் போதும். ஆனால் கொஞ்சம்பேர் கீழே போய் நீர்வீழ்ச்சியைப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க !
இலங்கையின் 12 பெரிய நீர்வீழ்ச்சிகளில் இந்த ரம்பொட 11 வது இடத்தில் இருக்கு. உயரம் 109 மீட்டர்!
பம்பரக்கண்டா (பெயர் நல்லா இருக்குல்லே?) நீர்வீழ்ச்சிதான் நம்பர் ஒன்னு! 263 மீட்டர் உசரம்! நாம் அந்தப் பக்கம் போகலையே....
ரம்பொட நீர்வீழ்ச்சி நேரடியா கீழே விழாமல் ரெண்டு இடத்தில் மடங்கி விழறதால் உயரம் தெரியறதில்லை. விழும் தண்ணீரின் வேகம் கூடக் கொஞ்சம் குறைஞ்சுருதுன்னு நினைக்கிறேன்.
இன்னொரு ஜோடி கொஞ்ச தூரத்துலே நீர்வீழ்ச்சி நோக்கிப் போய்க்கிட்டு இருக்கு. நல்ல காடு..... இங்கேயும் தேயிலைச் செடிகள் குத்துகுத்தாய் நிக்குது. நம்ம டாஃபடில் போல டிஸைனில் வெள்ளை நிறத்தில் பூக்கள் ரொம்பவே அழகு!
நின்னு ரசிச்சுட்டுக் கிளம்ப வேண்டியதுதான். இந்த தண்ணீர் சமாச்சாரங்கள் எல்லாம் எப்பவுமே பார்க்கப்பார்க்கத் தெவிட்டாது. நாமாகப் 'போதும் போ'ன்னு வந்துறணும் .
மறுபடி லிஃப்ட்டில் புகுந்து மேலே வந்தோம். ரெஸ்ட் ரூம் சூப்பர்!
வெளியே டீ அவென்யூ என்ற கடையில் விதவிதமான டீத்தூள், டீ இலை விக்கறாங்க. மேலே போன இலவச சேவை வண்டி, திரும்பி வர்றவரை உக்கார்ந்து வேடிக்கை பார்த்தேன்.
தொடரும்.... :-)

8 comments:
உங்க பதிவும்,படங்களும் ரெம்ப அழகு டீச்சர். எனக்கு இந்த இடங்கள் போன ஞாபகங்கள் (ஜனவரியில்) திரும்ப வந்து போகின்றன. மிக அழகான இடம். Tea factory ஏதும் போனீங்களா?
ரம்பொட நீர்வீழ்ச்சி - கண்ணுக்கு குளிர்ச்சி
அருவி மிக அழகு
நான்கூட ரம்பூட்டான் பழத்தின் பெயர்க் காரணமோ என்று நினைத்தேன்
இராவணனுடன் போர் செய்வதற்காக ராமர் படைகள் இங்கு இருந்ததாகவும் "ராம்படை"என்றபெயர் காலமாற்றத்தில் ரம்பொட ஆனதாகவும் சொல்கிறார்கள்.
அழகிய கோவிலும் நீர்வீழ்சியும்.
வாங்க ப்ரியசகி.
தொடர்வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா.
டீ ஃபேக்டரி போகலை. ஏற்கெனவே முன்னாரில் போய் வந்தோம்.
வாங்க அனுப்ரேம்.
ஆமாம்ப்பா... அழகோ அழகு !
வாங்க நெல்லைத்தமிழன்,
ஹாஹா... ராமனின் படை தங்கிய இடமாம் ! மாதேவி சொல்லி இருக்காங்க.
வாங்க மாதேவி.
ராமனின் படை..... ஆஹா.... எனக்குத் தோணவே இல்லை பாருங்க !
நன்றிப்பா !
Post a Comment