Wednesday, September 05, 2018

அன்புமழையில் நனைந்தேன்..... (பயணத்தொடர், பகுதி 5 )

பத்திரிகையாளர், கைவினைப் பொருட்கள், க்ராஃப்ட், வெளி அண்ட் உள்ளலங்கார நிபுணர், உரத்த சிந்தனையாளர்  இப்படி பன்முகத் திறமையாளர்!!!  இவுங்களைப் பத்தி நான் சொல்றதைவிட, நம்ம 'தேன்' சொல்லி இருப்பதைப் பாருங்க!

அவுங்க பேரனுக்குச் சமீபத்தில் கல்யாணம் நடந்துருந்தது!  புது மணமகளைச் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது!   எப்படி நேரம் போச்சுன்னு  தெரியாம, எல்லோருமா பேசியும், கேட்டும் மகிழ்ந்தோம்!  உடலுக்கு மட்டுமே வயசாகுது, மனசு ரொம்பவே  இளமையாத்தான் இருக்கு !
இப்படி நல்ல நண்பர்கள் கிடைச்சதெல்லாம்  எதோ நான் எழுதும் ரெண்டெழுத்தும், இணையம் தந்த கொடையும்தான்!
உரத்த சிந்தனை ஆண்டுமலர் கொடுத்தாங்க. ரொம்ப மகிழ்ச்சி! கூடவே  இன்னும் சிலபல பத்திரிகைகள். கடைசியில் கிளம்பும் சமயம் 'சம்ப்ரதாயமா  இங்கேயும் 'வச்சுக்கொடுக்கல்' ஆச்சு. புடவை, ப்ளவுஸ் பிட், அழகா ஒரு ட்ரே அதுலே குட்டியூண்டு சம்புடம்! (மஞ்சள் குங்குமம்  வச்சுக்கலாம்!)  மங்கலச்சின்னமா வெத்திலை வகையறாவும், கூடவே மாதுளம்பழமும்!  இது என்ன அக்கிரமமா இருக்கு? வச்சுக்கொடுக்க ஒரு அளவே இல்லையா?
பெரியவங்க கொடுப்பதை வேணாமுன்னு சொல்ல மனசு வரலை! பெருமாளே கொடுத்தாப்டிதானே!

அங்கிருந்து கிளம்பி லோட்டஸ் வரும் வழியில்  நம்ம கீதா கஃபேயில் பகல் சாப்பாடு. மாடியில் ஏஸி டைனிங் ஹால் இருக்கு!
அறைக்கு வந்து கொஞ்சம் ஓய்வு.  மூணே முக்காலுக்குக் கிளம்பி  கயிலையாம் மயிலைக்குப் போறோம்.  ராஜகோபுரத்தாண்டை மல்லிப்பூ!



கோவிலில் பூனை நடமாட்டம் கூடி இருக்கு! போனமுறை பார்த்தவை எல்லாம் இப்போ பெரிய குடும்பஸ்த்ரீகள் !  அதுவும் வாயிலார் சந்நிதிகிட்டே நாலைஞ்சு ! என்ன பொருத்தம் பாருங்க :-)  ஆனால் எல்லாம் நோஞ்சானாக்கிடக்கே!






நம்ம கற்பகாம்பாளைத் தரிசிக்கப்போனால்  வெளிப் படிக்கட்டுக்கு முன்னாலேயே நல்ல கூட்டம். இன்றைக்கு வியாழந்தானே.....  என்ன விசேஷமுன்னு   மெள்ள நகரும் வரிசையில் ஒட்டிக்கிட்டே முன்னேறிப்போனால்... இன்ப அதிர்ச்சி!  திருமஞ்சனம்! முதல்முறையாப் பார்க்கிறேன்! அப்புறம் கோவில் தகவலில் பார்த்தால் அன்றைக்கு உத்திரம் நக்ஷத்திரம்.  ஆனி மாசம்!  ஆஹா.... ஆனித்திருமஞ்சனம் தரிசிக்க முடிஞ்சதில் பரம திருப்தி எனக்கு!  (இப்படித்தான் எதிர்பாராத நேரங்களில் அருமையான சமாச்சாரங்களை அனுபவிச்சுக்கோன்னு சொல்லிடறான் எம்பெருமாள்!  அப்புறம் வேறெதாவது சமயத்தில் தலையில் ஒரு  அடியும்  கொடுப்பான்.  இதான் அணைக்கிற கை(யும்) அடிக்கும் என்பது!  )

இன்றைக்குக் கபாலிக்கும் திருமஞ்சனம் உண்டு!  அந்த சந்நிதியில் பயங்கரக்கூட்டம்.  'நம்மவருக்குத்' தொட்டுக்கும்பிட   தீபாராதனை கிடைச்சது. எட்டிப்பார்த்துட்டு நகர்ந்துட்டேன். உள்பிரகாரம் சுத்தி வந்தோம்.  பதஞ்சலி முனிவர்தான் இந்த ஆனித் திருமஞ்சனம் ஆரம்பிச்சு வச்சவராம்!
பயணக்குறிப்புகளா, தினம் கொஞ்சூண்டு ஃபேஸ் புக்கில் போட்டுக்கிட்டு இருந்தேன். அதான் லோட்டஸில் வைஃபை நல்லா இருக்கே!   அப்போ நம்ம ரோஷ்ணியம்மாவும் ஆனித்திருமஞ்சனம்னு ஃபேஸ்புக்கில் பின்னூட்டினாங்க!


மத்த சந்நிதிகளையும்,  மாடுபாப்பாக்களையும் தரிசனம் செஞ்சுட்டு, நேராப் போனது   வடக்கு மாடவீதி சரவணபவனுக்கு. ஒரு காஃபி வேண்டி இருக்கு.  என்னவோ மாற்றங்கள் அங்கெ!  தோஸாக்குடில் நட்ட நடுவில்  நிக்குது. ப்ச்....

லோட்டஸ் திரும்பும்வழியில் தோழி வீட்டுக்கு விஜயம். தோழி  வேற நாட்டில் இருக்காங்க இப்போ.  தோட்டம் எப்படி இருக்குன்னு  பார்க்கணும் எனக்கு!  தோழியின் மருமகள் வேற, 'அங்கே மாங்காய் நிறைய இருக்கு. எல்லாம் உங்களுக்கே'ன்னு சொல்லி இருந்தாங்க.  ஆனால் சீஸன் முடிஞ்சுருச்சே....  மற்ற செடிகள் நல்லாவே இருக்கு.
கொய்யாவில் இருந்த  ஒரே பழம் எனக்கு :-)

தோட்டக்காரர் நல்லாதான் பார்த்துக்கறார்.  வெயிலால் சின்ன வாட்டம் காமிச்ச 'எனக்கு' நானே தண்ணீர் பிடிச்சு ஊத்திட்டு வந்தேன். கூடவே சில க்ளிக்ஸ் ஆச்சு!

கண்ணாடி ரெடியா இருக்குன்னு  சேதி வந்தது. இந்த மூணுநாளா படிக்க முடியாமல் கொஞ்சம் சமாளிப்புதான். முதலில் போய் வாங்கிவந்து படிப்பறிவை மீட்டுக்கணும்.
ராமராஜ் ரொம்ப உதவியா இருந்தார்.  புதுக்கண்ணாடி நல்லாத்தான் இருக்கு. ஆனால் விலை அதிகமோன்னு .... அதுவும் ஏற்கெனவே இருந்த ஃப்ரேமில்தான் போட்டுத் தரச் சொன்னோம்.  லென்ஸ், வெளிநாட்டுச் சமாச்சாரமோ என்னவோ?
மோச்சியில் வாங்குன செருப்பில் பிரச்சனை இப்போ..... இதுவும் ரெண்டுநாளில்  காலில் இருந்து கழண்டுவர ஆரம்பிச்சுருக்கு. பாதம் இளைச்சுக்கிட்டே போகுதா என்ன?
திரும்ப மோச்சி கடையில் (பாண்டிபஸாரில் நம்ம கீதா கஃபேக்கு நேரா எதிர்வாடையில் இருக்கு) போய்க் கேட்டதுக்கு அங்கிருந்த  விற்பனைப்பிரிவு மேலாளர், தானே வந்து என்ன ஏதுன்னு பார்த்துட்டு, 'கொடுத்துட்டுப் போங்க. என்ன செய்யலாமுன்னு பார்க்கலாம்'னு சொன்னார்.  செருப்பைக் கழட்டிக் கொடுத்துட்டு  வெறுங்காலில் போக முடியாதே....  நாளைக்குக் கொண்டுவரேன்னு சொல்லி வச்சேன்.

கொஞ்சதூரம்  போனப்ப, நம்ம  Bata கடை கண்ணில் பட்டது. வழக்கமா வாங்கிக்கும் Dr Scholls இருக்கான்னு பார்த்தால்  ஸ்லிப் ஆன் ஒன்னும் சரிப்படலை.  மாடல்ஸ் மாறிக்கிட்டே இருக்கு. ப்ச்....   பின்பக்கம் ஸ்ட்ராப் வச்சது  ஒன்னு கிடைச்சது. எப்படியும் இது கழண்டு வராதுல்லே?

வாங்கினதும்,  மோச்சியைக் கொடுத்துட்டே போயிடலாமேன்னு திரும்பவும் மோச்சிக்கே போனோம்.
அதே மேலாளர் ராஜேஷ்,  சரி செஞ்சு தர்றேன்னு  சொல்லி அதுக்கான ரசீது எழுதிக்கொடுத்தார். இந்திய வழக்கப்படி (எதுக்கெடுத்தாலும் ஃபோன் பண்ணறோம்,  செல் நம்பர் கொடுங்கன்னு எங்கெபோனாலும் கேக்கறாங்க!  காய்கறிக் கடையில் கூடன்னா பாருங்க.... ) எல்லாம் ஆச்சு. ஒரு பொருளை வாங்கும்போது இருக்கும் இனிப்புப் பேச்சு, அதைப் பற்றிய குற்றம் குறை சொல்லப்போகும்போது  இருக்காதுன்னு  இந்தியாவில் பலமுறை அனுபவிச்ச என்னால், ராஜேஷ் ரொம்பத் தன்மையாப் பேசுனதை நம்பவே முடியலை! கோடியில் ஒருவரை விடலாமோ? க்ளிக்! உங்க படத்தை நெட்லே போடப்போறேன்னு சொன்னேன்.
ஆச்சு மணி, ஒன்பதே கால். சாலையைக் கடந்தால் கீதா கஃபே.  தோசையும் பாலும்  போதும்.

இன்றைக்கு ரொம்பவே சுத்திட்டோம், இல்லே!   நாளைக்கு உள்நாட்டுப் பயணம் போறதால் அதுக்குண்டான வேலை பாக்கி இருக்கு!

தொடரும்...... :-)

15 comments:

Anuprem said...

ஆஹா நல்ல தரிசனம் கிட்டி இருக்கு ..எல்லாம் அவன் செயல்...

Unknown said...

As usual interesting to read. Is mrs Padma Mani your sister ?

விஸ்வநாத் said...

அருமை நன்றி சிறப்பு தொடர்கிறேன்

ஸ்ரீராம். said...

கீதா கஃபே தவிர வேறெங்கும் முயற்சிக்கவே மாட்டீர்களா! வேறு புதிய சுவைகளை அனுபவிக்கும் வாய்ப்பை இழக்கிறீர்களோ!

ப(திவை)டங்களை ரசித்தேன்.

G.Ragavan said...

பண்டைய தமிழ் வழக்கத்தில் மங்கலப் பொருட்கள் வெச்சுக் கொடுக்கும் போது வாழை மா எல்லாம் வைக்க மாட்டாங்க. மாதுளை பலா மாதிரியான பழங்கள்தான். வாழையெல்லாம் பின்னால் வந்த வழக்கம். அந்த வகைல மாதுளை வெச்சுக் கொடுத்தது சிறப்பு.

மயிலாப்பூர் கோயிலுக்கும் போய் ரொம்ப நாளாச்சு. இப்பல்லாம் கோயிலுக்குப் போறத விட ரெண்டு திருப்புகழ் வாசிச்சாலே திருப்தியா இருக்கு.

கண்ணாடி விலை கூடிக்கிட்டேதான் போகுது. வெறும் கிட்டப்பார்வைன்னா ஒரு விலை. கூடவே ஒயிட் லெட்டர்ஸ்... அட அதாங்க வெள்ளெழுத்து சேந்துச்சுன்னா ஒரு விலை. அதுக்கப்புறம் லென்சோட அளவை வெச்சு ஒரு விலை. லென்ஸ் மெலிய மெலிய விலை பெருகும் பெருகும். அதுக்கப்புறம் ஆண்டி ரிஃப்ளக்‌ஷன் கோட்டிங் அது இதுன்னு மேற்படிகளுக்கு ஒரு விலை. அதான் அந்த விலை.

துளசி கோபால் said...

வாங்க அனுராதா ப்ரேம்!

ஆமாம்ப்பா! உண்மைதான். அவனன்றி அணுவும் அசையாதே!

துளசி கோபால் said...

வாங்க Unknown,

wish she was my sister !

துளசி கோபால் said...

வாங்க விஸ்வநாத்,

வருகைக்கு நன்றி!

துளசி கோபால் said...

வாங்க ஸ்ரீராம்.

சென்னையில் பல இடங்களிலும் சாப்பிட்டுப் பார்த்தாச்சு. ரொம்ப உறைப்பா சமைச்சுடறாங்க. கடைசியில் கீதா கஃபே சாப்பாடு வயித்துக்கு ஒன்னும் பண்ணலைன்னு அங்கே அடிக்கடி போறோம். ஆடம்பரம் ஏதும் இல்லாத பழைய ஸ்டைலில் சாதாரணமா இருக்கு இது!

புதிய சுவைகளில் அவ்வளவா விருப்பமும் இல்லை. சிம்பிள் உணவு போதும்.

துளசி கோபால் said...

வாங்க ஜிரா.

பலாப்பழம் முழுசா வச்சுக்கொடுத்தால்..... நான் காலி :-)

படிக்கிற கண்ணாடிதான். கனமில்லாமல் இருக்கணும் என்பதால் மெலிசான லென்ஸ்தான்.

Angel said...

எப்படின்னே புரியலை தெரியலை பூனை வர போஸ்டுங்க என்னை இழுத்திட்டு வந்திடுதே :)
இந்த குட்டீஸ்க்கு போன வருஷம் ஒரு லேடி மாலையில் பால் கொண்டாந்து கொடுத்தாங்க னு போன் வருஷ போஸ்டில் பார்த்த நினைவு .
தோழி வீடு :) ஆங் தெரிஞ்சிடுச்சி ..
தட்டில் அந்த குட்டி ட்ரே கியூட் அழகா இருக்கு .

sarav said...

Muthalil Perumal apparum Eswaran, Irundhu , poi sevitha thiruthalangal thaan irundhalum ungaludaya varnanaiyae thani ...

ella uyirukkum amudhu idubavan , vasalilae poonai kuttigal , angeyavadhu antha jeeva raasigal nimmadhiyaga irukkatum !

Aduthathu enna, mayilailiye , thadukki vizhundhal velliswarar, malliswarar madhava perumal , veerabhadrar, mundagakanni amman endru pala kovilgal ullanavae !

Bhanumathy Venkateswaran said...

பத்மா மணியை எப்படி அறிவீர்கள்? எங்கள் பேட்டையை(ராமாபுரம்) சேர்ந்த அவரை எனக்கும் நன்றாகத் தெரியும். எனக்கும் அவருக்கும் பொதுவாக ஒரு விஷயம் உண்டு, எங்கள் பிறந்த தேதி. அவரை ஒரு ப்ளாக் ஆரம்பிக்கச் சொன்னேன், எப்படி தொடங்குவது என்று தெரியவில்லை என்றார். நான் துவங்கி கொடுப்பதாக கூறியிருந்தேன். நேரம் சரியாக அமையவில்லை. அதற்குள் நான் சென்னையை விட்டு பங்களூர் வந்து விட்டேன்.

Bhanumathy Venkateswaran said...

பத்மா மணியை எப்படி அறிவீர்கள்? எங்கள் பேட்டையை(ராமாபுரம்) சேர்ந்த அவரை எனக்கும் நன்றாகத் தெரியும். எனக்கும் அவருக்கும் பொதுவாக ஒரு விஷயம் உண்டு, எங்கள் பிறந்த தேதி. அவரை ஒரு ப்ளாக் ஆரம்பிக்கச் சொன்னேன், எப்படி தொடங்குவது என்று தெரியவில்லை என்றார். நான் துவங்கி கொடுப்பதாக கூறியிருந்தேன். நேரம் சரியாக அமையவில்லை. அதற்குள் நான் சென்னையை விட்டு பங்களூர் வந்து விட்டேன்.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா நல்ல கலெக்‌ஷன் தான். :)))

அன்பு மழை எங்கும் பொழியட்டும்.

தொடர்கிறேன்.