Monday, November 07, 2016

ஐவர் மாநாடு :-) (இந்தியப் பயணத்தொடர். பகுதி 95)

நாலு பதிவர்கள், ஒரு வாசகர் என்ற வகையில் இனிய சந்திப்புக்கு ஏற்கெனவே ஏற்பாடு ஆகி இருந்தது:-)  இதில் மூன்று பதிவர்கள் ஒரே வீட்டில், ஒரே குடும்பம்!

ஸ்ரீரங்கம் வந்தவுடன்,   வந்து சேர்ந்த சமாச்சாரம் சொல்லி  மாலை 6 மணிக்கு சந்திப்புன்னு முடிவு ஆச்சு.

போனமுறை பார்த்ததுக்கு  இளம்பதிவர் இன்னும் கொஞ்சம் உயரமா வளர்ந்துருந்தாங்க. ரெண்டு மூணு முறை பார்த்திருந்ததால்  நம்மைப்பார்த்து பயப்படலை:-)
படிப்பில் மட்டுமில்லாமல் மற்ற க்ராஃப்ட் வேலைகளிலும், ஓவியம் வரைவதிலும் கில்லாடி  இந்தக் குட்டிப் பதிவர்!
யாருன்னு ஊகிச்சு இருப்பீங்களே!    எஸ் எஸ்..... அவுங்களேதான் :-)

அப்பா, அம்மா மகள் எல்லோரும் பதிவர்கள்ப்பா!  பதிவர்  குடும்பம்!
வெங்கட் நாகராஜ்  அவர்களை உங்களுக்குத் தெரியாதா என்ன?  கேள்விப்படாத இடங்களுக்கெல்லாம் கூட நம்மை அழைத்துப் போகும் பயணப்பதிவர்!  அவருடைய தங்க்ஸ்தான் நம்ம ரோஷ்ணியம்மா.  கோவை 2 தில்லி!    மூணாம் நபர் நம்ம ரோஷ்ணியேதான்.

 க்வில்லிங் என்றொரு கலை. ஏராளமான நகையும் நட்டும் செஞ்சு வச்சுருக்காங்க. ஒவ்வொன்னும் ஒரு அழகு!

புதுவீட்டுக்குப் போயிருக்காங்க இப்போ. சூப்பர் வீடு!  ரோஷ்ணியின் அலமாரியை அடுக்கி வச்சுருக்கறது கூட அழகு !
ரோஷ்ணியம்மா 'அக்கா ' புத்தகம் வாங்கி வச்சுருக்காங்க. அதுலே எழுத்தாளர் கையெழுத்துப் போடணுமாம்!  ஆஹா ஆஹா.... இதைவிட வேறு இனிப்பு வேணுமா?

ஆமாம்னு  மைசூர்பாவும் சிவ்டாவும் சொல்லுதே  :-)

வீட்டு, நாட்டு விஷயங்கள் பேசிப்பேசி ரெண்டேகால் மணி நேரம் போயிருச்சுன்னு சொன்னா நம்புங்க!  அடுக்குமாடியகத்தின் மொட்டை மாடிக்குப் போய்  வேடிக்கை தெரியுதான்னு பார்த்தோம். எக்கச்சக்கமான தெங்குகள் கண்ணில் பட்டன!

அக்கம்பக்கத்துலே நாம் பார்க்க வேண்டியதுன்னு ஒரு பட்டியல் கொடுத்தார் வெங்கட். இதுவரை இந்தக் கோவில்கள் பற்றிய விவரமே எனக்குத் தெரியாது. எப்போ வந்தாலும் யானைக்குக்  கண்பட்டி போட்டதுபோல் ரெங்கனே கதின்னு இருந்துடறேனே....

நம்ம பயணத்தைப் பற்றிப் பேச்சு வந்தப்ப, மரச்சொப்பு பற்றிச் சொன்னதும், மாக்கல்  செட் ஒன்னு கொண்டு வந்து காமிச்சாங்க!  அழகோ அழகு!  இன்னும் நவீனகாலச் சொப்புகளும் வச்சுருக்காங்க:-)


நிறையப்படங்கள் எடுத்தாலும்  அனுமதி  வாங்கிக்காததால் வெளியிடலை. மன்னிக்கணும்.

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்   சொல்ல விட்டுப்போச்சே.... ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், ஸ்ரீரங்கத்தில் கிளை திறந்துருக்குன்ற  விவரமும் வெங்கட் சொல்லித்தான் தெரிஞ்சது.

மீதிப்பேச்சை மறுநாளுக்கு ஒத்தி வச்சுட்டுக் கிளம்பினோம்.  வீட்டுக்கு வந்தவங்களுக்கு  வெத்தலை பாக்கு, மஞ்சள் குங்குமம்  கொடுத்தாங்க.இதெல்லாம் வரவு!
மறுநாள் நம்ம கீதாம்மா ( கீதா சாம்பசிவம்) வீட்டில் மாலை ஒரு பதிவர் சந்திப்பு ஏற்பாடு செஞ்சுருக்கார் வெங்கட். ஸ்ரீரங்கம் பதிவர் சந்திப்பு. சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் அப்பவே சுடச்சுடப் பதிவெல்லாம் போட்டுட்டாங்க.  இந்த யானைதான்  ஆடி அசைஞ்சு  இப்பதான் இந்தக்கட்டத்துக்கு வந்துருக்கு  :-)


நம்ம வெங்கட் நாகராஜ் அவர்களின் பதிவு நம்ம தமிழ் இளங்கோ  அவர்களின் பதிவு நம்ம   கீதா சாம்பசிவம் அவர்கள் எழுதியது


 ஹயக்ரீவா திரும்பினால் வாசலில் மாப்பிள்ளை ஊர்வலம்!


தொடரும்...........  :-)17 comments:

said...

'நீங்கள் மூன்று பதிவர்கள் ஒரே வீட்டில் என்று சொல்லும்போதே மூவரும் ஞாபகம் வந்துவிட்டார்கள். மற்ற க்ராஃப்ட் வேலைகள் ரொம்ப நல்லா இருக்கு. என் பெண்ணின் ஞாபகம் வந்துடுத்து. அவளும் இப்படித்தான் ஏதானும் செய்துகிட்டே இருப்பா (எனக்கு அதைப் பாராட்டும் தன்மையோ அல்லது recognize செய்யும் குணமோ இல்லாவிட்டாலும். இருந்தாலும் மனதில் அவளைப் பற்றி மிகவும் உயர்வாக எண்ணுவேன்.. அதுல என்ன பிரயோசனம்? சொன்னாத்தானே தெரியும்)

நல்லவேளை.. நீங்கள் உணவு செய்முறைகளை எழுதுவதில்லை. ரோஸ்ட் தோசை எப்படிச் செய்வது என்று நீங்கள் எழுதினால், எங்கள் கைகளில் அது வரும்போது, கோபு சார் பாணியில், தொஞ்ச தோசையாத்தான் இருக்கும்.

ஃபெப்ரவரியில் நடந்ததைக் கிட்டத்தட்ட வருட முடிவிலா சொல்லவேண்டும். நீங்கள் கொஞ்சம் ஸ்லோதான். அதுக்காக இப்படியா? (இருந்தாலும் சுலபமாக மற்றவர்கள் எழுதியதின் சுட்டியைக் கொடுத்ததற்கு நன்றி. மீண்டும் படித்தேன்)

said...

அட குதிரை சாரட் வண்டில மாப்பிள்ளை அழைப்பு. தூத்துக்குடில நாங்க இருந்த வீட்டுக்கு எதுத்த தெருவில்தான் ஏ.எஸ்.கே.ஆர் கல்யாண மண்டபம். அதுல எதுவும் கல்யாணம்னா நான் வாசப்படில உக்காந்துக்குவேன். சீரியல் செட் பாக்குறது ஒரு மகிழ்ச்சின்னா.. சாரட் வண்டில பொண்ணு மாப்பிள்ளை பாக்குறது ஒரு இன்பம். கிருத்துவர்கள் நெறைய இருக்கும் ஊர்ங்குறதால பல கல்யாணங்கள்ள அல்லது ரிசப்ஷன்கள்ள சாரட் வண்டிகள் இருக்கும். அந்த ஊர்வலத்தைப் பாக்குறதும் ஒரு இன்பந்தான்.

மாக்கல் சொப்பு அழகா இருக்கு. அது எங்க வாங்குனாங்களாம்? திருவரங்கத்துலயேவா?

said...

அட???????????? புத்தம்புதிய பதிவுனு நினைச்சால்!!!!!!!!!!!!!!!!!!!!!!! பழசு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))))))

said...

ஆதி, வெங்கட், ரோஷ்ணி சந்திப்பு பகிர்வு அருமை.
குழந்தையின் கைவண்ணம் அருமை.

said...

ரோஷ்ணியின் அலமாரி அழகாய் அடுக்கிவைக்கப் பட்டிருப்பதை பார்க்கும்போது என் மகன்களின் அலமாரி நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை! ஃபிப்ரவரியில் சந்தித்ததையா இப்போது எழுதி இருக்கிறீர்கள்? நியூஸி திரும்பியாச்சா?

said...

படங்களோடு தந்தவிதம்...
படிக்க, இரசிக்க...

said...

ஆஹா அதற்கு அடுத்த முறையும் நாம் சந்தித்து விட்டோம் என் வீட்டில்! :) இருந்தாலும் அந்த சந்திப்பு பற்றி இப்போது படிக்கும்போது மனதில் மகிழ்ச்சி. சந்திப்புகள் தொடரட்டும்.....

ராகவன் ஜி, மாக்கல் சொப்பு இப்போதையது கிடையாது. என் அம்மா/பெரியம்மா விளையாடினது.... அதற்கு வயது 75 வருடங்களுக்கு மேல் இருக்கலாம். :) இன்னமும் வைத்திருக்கிறோம்.

said...

அனைத்து படங்களும் அருமை... இன்னமும் உள்ளனவா...? விரைவில் இதை பற்றி ஒரு தொழிற்நுட்ப பதிவு எழுதுகிறேன்...

said...

செல்வி ரோஷ்ணியின் கைவேலைகளைக் காட்டும் படங்கள் அருமை. மற்றவர்களின் பதிவுகளையும்படித்திருக்கிறேன் ஆனால் இத்தனை அன்னியோன்னியம் காணவில்லை வாழ்த்துகள்

said...

Aahaaa :)

said...

மகிழ்வான நினைவுகள்...


said...

வாங்க நெல்லைத் தமிழன்.

பயணக்'கதை'யை வரிசையா எழுதும்போது இப்பதான் அதுக்கான இடம் வந்துருக்கு. இப்பப் பாருங்க இதுக்குள்ளே அடுத்த பயணம் அமைஞ்சு இன்னொருக்காவும் இவுங்களை சந்திச்சுட்டு வந்துருக்கோம். அது எப்ப வருமோ? பெருமாளுக்கே வெளிச்சம் :-)

said...

வாங்க வாங்க

@ ஜிரா
@ கீதா சாம்பசிவம்
@ கோமதி அரசு
@ ஸ்ரீராம்
@ முஹம்மது நிஜாமுத்தீன்
@ வெங்கட் நாகராஜ்
@ திண்டுக்கல் தனபாலன்
@ ஜிஎம்பி ஐயா
@ நாஞ்சில் கண்ணன்
@ அனுராதா ப்ரேம்

வருகை தந்த, கருத்திட்ட அனைவருக்கும் நன்றீஸ்.

said...

குழந்தை ரோஷ்ணியின் காய் வண்ணம் அருமை. புகைப் படங்கள் எடுத்தது preofessional cameraவோ? பொருள்கள் மட்டும் தெளிவாக ஜூம் செய்யப் பட்டிருக்கிறதே?

மாக்கல் சொப்பு திருவரங்கத்தில் கிடைக்குமா என்று தெரியாது, திருவல்லிக்கேணியில் கிடைக்கும்.

said...

மாக்கல் சொப்பு எங்க வீட்டு கொலுவிலும் காணக்கிடைக்கும். அதுக்கும் என் வயசு ஆகுதுனு நினைக்கிறேன். :) ஆனால் இப்போவும் புதுசு மாதிரி இருக்கு! இங்கே ஶ்ரீரங்கம் கோயில் கடையில் மாக்கல் சொப்புக் கிடைக்கும்னு நினைக்கிறேன்.

said...

ஆஹா! நம் சந்திப்பு அடுத்த முறையும் அழகாய் அமைந்து விட்டது. படங்கள் ரொம்ப நல்லா வந்திருக்கு.. அலமாரி இப்படியே இருக்கத் தான் தினமும் துடைப்பமும், துணியும், டஸ்டருமாக சுற்றிக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் கவனிக்காமல் போனாலும் பாழாகிவிடும் வீடு...:)

said...

அடுத்த சந்திப்பும் முடிந்து விட்டதே.... ஒவ்வொரு திருவரங்கம் விசிட்டிலும் எங்கள் வீட்டுக்கு அவசியம் வர வேண்டும் என்பது என் அன்பு கட்டளை டீச்சர்...:)) படங்கள் அழகா வந்திருக்கு. தினமும் துடைப்பமும், துணியும், டஸ்டருமாக சுற்றிக் கொண்டிருப்பதால் தான் வீடு பாழ்படாமல் உள்ளது..

முந்தைய பின்னூட்டம் என்னவரின் ஐடியில் இருந்து அனுப்பிவிட்டேன்...:)