Tuesday, December 22, 2015

கண்டெயினர் மேல் வந்திறங்கிய சாண்ட்டா!

ரொம்பநாளா சிட்டி மால் பக்கம் போகவே இல்லை.  எங்கூரில் அது இப்போ கண்டெய்னர் மால்.  ரீ ஸ்டார்ட்னு பெயர்.  வந்து போன  பேரிடரால் நகரம் தொலைஞ்சு போன பகுதி!  அதுக்காக அழுதுக்கிட்டே உக்கார்ந்துட முடியாதுல்லே? உயிர்த்தெழும் இடத்தில் பண்டிகை கோலாகலங்கள் எப்படி இருக்குன்னு  பார்க்கப் போனோம்.


அப்போதைய நிலை இதுலே. க்ளிக்கலாம்! 


 இப்போ  ஜோடி ஜோடியா நிறைய மரங்கள் டாப்லே ஏறி நிக்குதுகள். சாண்ட்டாவும் அவருடைய ரெயின்டீரும், அவருடைய ஸ்லெட்ஜ் வண்டியும் கூட  மேலேதான். பரிசுப்பொருட்களைக்  கொண்டுவந்து கொட்டிட்டுப் போவார் போல!



கொஞ்சம் அலங்காரங்கள் அங்கங்கே தரையிலும்!  இந்தக் களேபரத்திலும் செல்லங்களைக் காப்பாற்றும்  நல்ல உள்ளங்கள் சில.



கிவி ஆண்களின் முக்கியப்  பகல் நேரப் பொழுது போக்கு இது :-)


இந்த மாலில்தான் பாரம்பரியம் மிக்க ஒரு பழைய கடை,  டைரக்ட் இம்போர்ட்  ஃப்ரம் த லேண்ட் ஆஃப்  மாட்சிமை தாங்கிய மஹாராணி இருக்கு. இந்த வருசம் அதுக்கு 160 ஆவது  பொறந்தநாள். இது எப்படித் தப்பிச்சது?

1947 இல்  ஒரு பெரிய தீ விபத்துலே முழுக்கட்டிடமும் எரிஞ்சு போச்சு. அதைத் திரும்பக் கட்டி எழுப்பினாங்க.  அப்ப நல்ல ஸ்ட்ராங்கான  புதுமாதிரிக் கட்டிடச் சமாச்சாரங்கள் வந்துக்கிட்டு இருந்ததே அதுகாரணம் நல்லாக் கட்டிட்டாங்களோன்னு நினைச்சேன். ஆனா... சமீபத்துலே கட்டுனதெல்லாம் கூட  இடிஞ்சு விழுந்துருந்துச்சே :-(  ஒருவேளை இதுக்கு அதிர்ஷ்டம் இருந்துருக்கு போல!   சின்னதா இருந்த பழுதுகளையெல்லாம்  சரி செஞ்சுட்டாங்க. நகர மையம்தான்  ஒரு வருசத்துக்கு  மூடிக்கிடந்துச்சே. அப்ப சரிசெஞ்சுருக்கலாம்.

1896 லேயே மெயில் ஆர்டரில் பொருட்களை  சப்ளை செஞ்சுக்கிட்டு இருந்துருக்காங்கன்னா பாருங்க!  நம்ம எட்மண்ட் ஹிலரி  எவரெஸ்ட் மலை மீது ஏறி  வெற்றிகண்ட சமயம் அவர் பயன்படுத்திய பனிக்கோடாரியை  இவுங்க கடையில் காட்சிப்பொருளா வச்சாங்களாம்! அதைக் கடன்வாங்க  ஒரு அம்பது பவுண்ட் தானம் கொடுத்தாங்களாம்.

இப்படி  இந்த 160 வருசங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகளை  வெளிப்புறம்  சுவரில் போட்டு வச்சுருக்காங்க.  வைனல் போஸ்ட்டர்தான். ஆனால் சுவர்மாதிரியே இருக்கு!









அந்தக் கடையில் எப்போதும் க்றிஸ்மஸ் அலங்காரங்கள்  வெளிப்புற ஜன்னல்களில் அட்டகாசமா செய்வாங்க. என்ன இருந்தாலும் ப்ரிட்டிஷ் பாரம்பரியம் பாருங்க!  பெருங்காய டப்பா !!! :-)


அங்கேயும் கொஞ்சம் படங்களை எடுத்துக்கிட்டோம்.




எல்லாருக்கும் ஒரு வழின்னா இடும்பிக்குத் தனி வழி இருக்கு தெரியுமோ?  அந்த வகையில் எங்க நியூஸிக்குன்னே  இயற்கை ஒரு வகை க்றிஸ்மஸ் மரத்தை வழங்கி இருக்கு. இதோட பேர் மவோரி மொழியில் பொஹுட்டுக்காவா.

 NEW ZEALAND CHRISTMAS TREE, POHUTUKAWA.

 இப்போ எல்லோரையும் போலப் பைன் மரத்தைத்தான்  கிறிஸ்மஸ் மரமாப் பயன்படுத்தறோம் என்றாலும் இனி  வருங்காலங்களில்  இதுக்கு மாறும் சான்ஸ் இருக்கு. என்ன.... இன்னும் சீனாக்காரன் செஞ்சு அனுப்பலை!

நகருக்குள் ஓடும் ஆத்தங்கரையில் இருக்கும்  மரத்தையும்  க்ளிக்கினேன்.  வெயில் எதிர்ப்பக்கம் இருந்ததால்  படம் தெளிவா வரலை. இப்பப் போட்டுருக்கும் படம் கடற்கரைப் பகுதிக்குப் போனப்ப எடுத்தது.

போகட்டும்......அலங்காரங்கள் பிடிச்சுருக்கா?



6 comments:

said...


/கிவி ஆண்களின் முக்கியப் பகல் நேரப் பொழுது போக்கு இது :-)/புல் செதுக்குவதா? படங்கள் பிரமாதம்

said...

பொஹுட்டுக்காவா அழகோ அழகு . இயற்க்கை யை விட ஒரு சிறந்த ரசனையாளன் வள்ளல் யாரும் இல்லை .
அலங்காரங்கள் அட்டகாசம் தான் !! நீங்க போட்ட படங்களும் அட்டகாசம் .
//பெருங்காய டப்பா // !!! :))

said...

படங்கள் பிரமாதம்.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.


புல் வெட்டலைன்னா நமக்கு சிட்டிக் கவுன்ஸில் நோட்டீஸ் அனுப்பிருமே :-(


பகல் நேரப்பொழுதுபோக்கு ஆண்களுக்கும் வேணும்தானே :-)

படங்களை ரசித்தமைக்கு நன்றிகள்.

said...

வாங்க சசி கலா.

பொஹுட்டுக் காவா படம் போட்ட காஃபி கப் வந்துருச்சு. தமக்குத்தாமே திட்டத்தில் வாங்கிய க்றிஸ்மஸ் கிஃப்ட் :-)

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

ரசிப்புக்கு நன்றிகள்.