கொடி மாற்றம் செய்யப்போறோமுன்னு போன பதிவில் சொல்லி இருந்தேன்.
முதல்முறை நடந்த மக்கள் கருத்துக்கணிப்பு ஓட்டுகளில் முதலிடம் பெற்ற கொடி இது!
இந்தக் கொடிக்கும் இப்போ நடைமுறையில் இருக்கும் கொடிக்கும் (படம்: கீழே இருக்கு) அடுத்த வருசம் மார்ச் மாதம் ஒண்டிக்கு ஒண்டின்னு போட்டி வச்சுருக்காங்க.
அதுலே ஜெயிப்பதுதான் இனி நியூஸியின் தேசியக்கொடியாக இருக்கப் போகுது!
ஏப்ரல் முதல் வாரம் இன்னொரு ஃபாலோ அப் எழுதுவேன்:-)
இப்ப எனக்கு இருக்கும் ஒரே மகிழ்ச்சி... போனவார ஓட்டெடுப்பில் நான் தெரிவு செய்த கொடிதான் ஜெயிச்சுருக்கு!
இது என்னோட வாக்குச்சீட்டு .
கொசுறுத்தகவல்: இதையேதான் எங்க பிரதமரும் தெரிஞ்செடுத்தாராம்!!!!!!

16 comments:
கொடி மாற்றம் - வாழ்த்துகள். மக்களிடம் கருத்துக் கணிப்பு கேட்ட பிறகே இதைச் செய்வது இன்னும் சிறப்பு.
அட...!
ஒரே கொடியை எத்தனை நாளைக்குத்தான் பறக்கவிடுவீங்க? மாத்துங்க, அப்பத்தான் ஸ்கூல் குழந்தைங்க எல்லாம் குழம்பும்.
ஓஹோ... same pinch உங்களுக்கும் பிரமதருக்கும்..
எத்தனை மாற்றங்கள் வந்தாலும் உங்கள் கொடி பறக்கும்...
புதுக்கொடிக்கு எனது வாழ்த்துகள். நீங்க குறிப்பிட்டிருந்த வரிசை அருமை. என்னோட கருத்தோடயும் ஒத்துப் போகுது.
புது கொடி பயன்படுத்த (?!) இருக்கும் நியூசி.க்கு நல்வாழ்த்துகள்!
முதலாவது அழகு.
வாங்க வெங்கட் நாகராஜ்.
பின்னால் அரசைக் குறை கூறிப் பிழைக்க இடம் கொடுக்கலையே!!!
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
ஜன நாயகமுன்னு தண்டோராப் போட்டுக்காத ஜனநாயகம் இது!
வாங்க பழனி கந்தசாமி ஐயா.
எதுக்குக் குழந்தைகளைக் குழப்பணும்? நம்மைவிட அவுங்களுக்குத்தான் விவரம் அதிகம்.
அரசு புதுகொடியையும் பழைய கொடியையும் இலவசமா இப்ப தருது. ஒரு மெயில் அனுப்பினால் போதும். ஒரே ஒரு கண்டிஷன் மட்டும்தான். ரெண்டு கொடிகளையும் சம உயரமுள்ள கம்பத்தில் பறக்க விடணும். நமக்குக் கொடிக்கம்பம் நட்டு வைக்க வீட்டில் வசதி இல்லாததால் கொடிகளை வாங்கிக்கலை.
மூணு மாசத்துக்கு அவை இரண்டும் ஒன்னாப் பறக்கும் அழகை ரசிக்கலாம். பின்னே தேர்தல் வருது. பழைய கொடிதான் வேணுமுன்னு சொல்லும் மக்கள்ஸ், அவுங்க வீடுகளில் அதை மட்டும் பறக்க விட்டுருக்காங்க. தெருவுக்குப் பத்து கொடிகள் பார்க்கலாம், இப்போதைக்கு:-)
வாங்க அனுராதா ப்ரேம்.
இல்லையா பின்னே :-)
வாங்க நான் ஒன்று சொல்வேன்.
கேட்டுச் செய்யும் மாற்றம் என்பதால் பிரச்சனை இல்லை :-)
வாங்க ஜிரா.
ஆஹா.... நமக்கெல்லாம் ஒரே டேஸ்ட்டு!
வாங்க முஹம்மது நிஜாமுத்தீன்.
வாழ்த்துகளுக்கு நன்றீஸ்.
வாங்க ராமலக்ஷ்மி.
புதுக் கொடி நல்லா அம்ஸமா இருக்குப்பா. ஜெயிக்கணுமுன்னு வேண்டிக்கறேன்.
ராஜவிசுவாசிகள்தான் பழசை விடாமப் பிடிச்சுக்கிட்டு இருக்காங்க.
Post a Comment