இப்போதைய உலகில் பெரிய பிரச்சினை என்னன்னா குப்பைதான். அங்கே போய் குப்பை கொட்டினோம், இங்கேவந்து குப்பை கொட்டிக்கிட்டு இருக்கோம் என்றெல்லாம் பேச்சு வழக்கில் சொன்னாலும் உண்மை என்னவோ அதுதான்! இதுவும் பேரிடர் வகைதான். என்ன ஒன்னு.... இது இயற்கை வழியில் வந்த இடர் இல்லையாக்கும். மனுசன் உண்டாக்கின செயற்கைப் பேரிடர்!
குப்பை மேலாண்மையில் கவனம் வைக்கும் ஒரு சில நாடுகளில் நம்ம நியூஸியும் ஒன்னு. இதைப் பற்றியெல்லாம் முன்பே ஒரு அஞ்சாறு வருசத்துக்கு முன்னாலேயே புலம்பியாச். அப்பப் பார்க்கலைன்னா இப்பப் பார்க்கலாம். இது மங்காத குப்பைன்னு வச்சுக்கலாமா:-))))
நம்மூரில் மறுசுழற்சிக்கான ECO Shop ஒன்னு பெரிய அளவில் நடக்குது. ஒரு மனுசன் வேணாமுன்னு நினைக்கும் பொருள், இன்னொரு மனுசனுக்கு ரொம்பத் தேவையா இருக்கு பாருங்க. அதை உத்தேசித்து இதை நடத்துது நம்ம சிட்டிக்கவுன்ஸில். இது நம்ம வீட்டுக்குப் பேட்டையில்தான் என்பதால் தோணும்போது எட்டிப் பார்க்கும் வழக்கம்! நம்மூட்டுக் கொலுப்படிகூட அங்கே வாங்குனதுதான்!
பழைய பொருட்களானாலும் சேதமில்லாமல், பயன்படுத்தக்கூடிய அளவில் இருந்தால் இங்கே விற்பனைக்கு வைப்பாங்க. நம்மூர்களில்தான் செகண்ட் ஹேண்ட் சமாச்சாரமுன்னா கேவலமுன்னு ஒரு எண்ணம் எப்படியோ தோணிப்போயிருக்கு. இங்கே அதுக்குப் பெயர் ப்ரீலவ்டு. யூஸ்டு ஐட்டம்ஸ். (Pre loved. Used Items)இவைகளில் பழமை வாய்ந்த நல்ல நல்ல ஆன்ட்டீக் பொருட்களும் கிடைக்கும். வாழ்க்கைத்தரத்தில் கொஞ்சம் பரவாயில்லாம இருக்கும் மக்களும் இந்தக் கடையில் வந்து எதாவது வாங்கிக்கிட்டுத்தான் இருக்காங்க. கார்பார்க்கில் நிற்கும் அட்டகாசமான வண்டிகளை வச்சுத்தான் இந்தக் கணிப்பு:-)
பொதுவா, இங்கே படிக்கன்னு வரும் மாணவர்களுக்கு இந்த இடம் ஒரு வரப்ரஸாதம். நாலைஞ்சு மாணவர்கள் சேர்ந்து ஒரு ஃப்ளாட்டை வாடகைக்கு எடுத்துக்கிட்டு, இங்கே வந்து கொஞ்சம் வீட்டுப்பொருட்கள் வாங்கிக்கிட்டு தாங்களே ஆக்கித்தின்னுக்கலாம். படிப்பை முடிச்சுட்டுப் போகும்போது நல்ல கண்டிஷனில் வச்சுருந்தால் (!) திரும்ப ரீஸைக்கிளிங் டெப்போவில் கொடுத்துட்டுப் போயிடலாம். சிலர் வீட்டுலே காராஜ் ஸேல் போட்டும் வித்துட்டுப் போறதுண்டு.
க்றிஸ்மஸ் விழாவையொட்டி, இங்கே பிள்ளைகளுக்கு ஒரு போட்டி வச்சாங்க. க்றிஸ்மஸ் மரம் தயாரிக்கணும். அதுவும் அங்கே இருக்கும் பொருட்களை வச்சு! பிள்ளைகள் ஆர்வமாக் கலந்துக்கிட்டாலும் கொஞ்சம் உருப்படியாத் தேறினவைகளைக் காட்சிக்கு வச்சுருந்தாங்க.
போய் க்ளிக்கிக்கிட்டு வந்தோம். குட்டியா ரெண்டு விதூஷகி பொம்மை இருந்துச்சு. விலை அதிகமுன்னு நம்மவர் சொன்னதால்(!) வாங்கிக்கலை. ஆனால்... ரொம்பவே அழகு. யுனீக்கா இருந்துச்சுன்றது உண்மை.
வாங்கி இருந்தால் நம்ம வீட்டு விதூஷகனுக்கு ஒரு கம்பெனி கிடைச்சிருக்கும். இவனையும் இங்கேதான் ஒரு நாலு வருசத்துக்கு முந்தி வாங்கினேன்:-)

2 comments:
அப்பா மிகவும் அற்புதம் பா. என்ன கறபனை்.அத்தனையும அழகு. இனிய கறிஸ்மஸ் தினுத்துக்கான வாழ்த்துகள்.
வாங்க வல்லி.
ஒற்றை வைரமா உங்க பதில்! நன்றீஸ்.
Post a Comment