Thursday, December 24, 2015

வள்ளுவர் வாக்கைக் கடைப்பிடிக்க முடியாத நிலை! (க்றிஸ்மஸ் ஸ்பெஷல்!)

டிக்கெட்டை வாங்கிக்கிட்டு உள்ளே  நுழைஞ்சதும் முதல்லே  சாப்பாடு! ஏற்கெனவே  நிகழ்ச்சி விவரம் நமக்கு புது செகரட்டரி மூலம் வந்தது. டிக்கெட்டைக்  கொண்டுவரட்டான்னார். அங்கேயே ஒதுக்கி வச்சுருப்பா. அதுக்குன்னு ஒரு நடைவர வேணாமுன்னேன். அப்புறம் மெயிலும் வந்துச்சு.  பதில் அனுப்பும்போது   சாகபக்ஷிணிகளுக்கு எதாவது ஏற்பாடு செய்யுங்கன்னு  சொல்லிவச்சேன்.
சாப்பாடு ஐட்டங்களைக் கிளிக்கும்போதுதான் எனக்கு ஒரு புது விவரம் கிடைச்சது. க்றிஸ்மஸுக்கு(ம்) விரதம் இருப்பாங்களாமே!  நெசமாவா? ஈஸ்ட்டருக்கு 40 நாள்  இருப்பாங்கன்றது தெரியும். ஏகாதசி மாதிரி வயித்தைக் காயப்போட்டுப்  பட்டப்பட்டினின்னு இல்லாம  வெறும் மரக்கறி உணவுன்னு  இருப்பாங்க. ஆமான்னு சொன்ன தோழி இதுக்கு  25 நாள்னு  சொன்னாங்க. இப்போ இருக்கும் அங்கங்களில் பாதிப்பேர்  க்றிஸ்மஸ் விரதம் பிடிக்கிற மக்கள்ஸ்!  அட!  அதான் எல்லா வருசமும் புதுப்புது ஆட்கள் வந்துக்கிட்டு இருக்காங்களே. இந்த க்ரூப்   விஷூவுக்குப் பிறகு வந்ததா இருக்கலாம்!

நம்ம கேரளா அசோஸியேஷனில் வருசத்துக்கு  மூணு விழாக்கள். அத்தனையும் முத்துக்கள்!  விஷூ & ஈஸ்ட்டர் சேர்த்துத்தான் கொண்டாடுவது வழக்கம். இது முதல் முத்து!  ரெண்டாவது  ஓணம்!  மூணாவது  க்றிஸ்மஸ். இந்த மூணு விழாக்களுமே ஓப்பன் டு பப்ளிக். மற்ற தீபாவளி, கேரளப்பிறவி போன்றச் சின்னச்சின்னக் கொண்டாட்டங்களையெல்லாம்  வெறும் அங்கத்தினர்களாச் சேர்ந்து  சின்ன அளவில் கொண்டாடிக்குவோம். இந்த வருசம் அதுகூட இல்லாமத்தான் போச்சு.











புலாவ் சோறு, நான், தால் மக்கானி, மிக்ஸட் வெஜிடபுள் கறி நமக்கும்,  Lamb Rogan Josh, Chilli Chicken நான்வெஜ் மக்களுக்குமாக! டிஸ்ஸர்ட்க்கு  ஐஸ்க்ரீம். கஸாட்டா...  சூப்பர்!

நம்ம கூட சேர்ந்து சாப்பிட குட்டீஸ் வந்தாங்க:-) அப்பூப்பன், அம்மம்மா என்ற நினைப்பு போல!  குட்டிக்களுக்கு  நானைப் பிச்சுப்போட்டும்,  குடிக்க ஜூஸ் எடுத்துக் கொடுத்துமா நாமும்  ஹேப்பியா இருந்தோம்:-)



ஏழரைக்கு  கலைநிகழ்ச்சிகள் ஆரம்பம். சரியச்  சொன்ன நேரத்துக்கு ஆரம்பிச்சது இன்னும் கூடுதல் விசேஷம்! க்ரிப் ரொம்ப அழகா அமைச்சுருந்தாங்க.  இப்ப ஒரு நாலைஞ்சு வருசமா, இளைஞர்களிடம்  கிளப்பின் பொறுப்புகளை ஒப்படைச்சாச்சு. நாங்க பெரியவங்களா லக்ஷணமா ஆலோசனைகள் சொல்வதோடு நிறுத்திக்கிட்டோம். இளைஞர்களும் ரொம்பப் பொறுப்போடு கவனமா எல்லாத்தையும் செய்யறாங்க. நாளைய   உலகம் மட்டுமில்லை.... இன்றைய உலகத்தைக்கூட  இளைஞர்கள் பொறுப்பில் விட்டுடலாம். நோ ஒர்ரீஸ்:-)

வழக்கமா  வீடுகளில்  அலங்கரிக்கும்   க்றிஸ்மஸ் மரம் போட்டிகள் தவிர, இந்த வருசம் க்றிஸ்மஸ் கேக்  போட்டியும் வச்சுருந்தாங்க.  நம்ம வீட்டில் எவர்க்ரீன் க்றிஸ்மஸ் மரம் வருசம் முழுக்க    பூரண அலங்காரத்துடன் தோட்டத்தில்  இருப்பதால்  நான் போட்டியில் கலந்துக்க மாட்டேன்:-)

போன மாசம்தான்  க்ளப்  தேர்தல் முடிஞ்சு புது கமிட்டி வந்து,  அவுங்களை இன்றைக்குத்தான்  அஃபீஸியலாப் பார்த்தேன்:-)

முதலில் ஒரு அஞ்சு  கேள்விகள்  க்விஸ். அதுலே நாலுக்கு பதில்  எனக்குத் தெரிஞ்சுருந்தது. தெரியாத பதில் க்றிஸ்மஸ் மரம் வைக்கும்  மரபு எந்த நாட்டில் ஆரம்பிச்சது என்பது. ஆளாளுக்கு  ஒரு நாடு சொன்னாங்க.  கேள்வி கேட்டவருக்கும் பதில்  சரியாத் தெரியாததால்  எல்லோருக்கும் சந்தோஷம்:-)

சாண்ட்டா க்லாஸ் வந்தார், ஜிங்கிள் பெல்ஸோடு!  குட்டீஸ்களுடன் கூடவே வந்தாங்க. முட்டாய் கிடைச்சது நமக்கெல்லாம்.

க்றிஸ்மஸ் கேரல்ஸோடு நிகழ்ச்சி ஆரம்பிச்சது. அப்பத்தான் நினைவுக்கு  வந்துச்சு, ஏன் இந்த வருசம் கேரல்ஸ் பாடும் குழு  நம்ம வீட்டுக்கு வரலை?    நேரப்பற்றாக்குறையால்  இந்த வருசம் வீடுகளுக்கு விஜயம் செய்யலை(யாம்!)

கேரல்ஸ் பாடும்போது கூடவே பாடினேன். நம்மவருக்கு ஆச்சரியம். எனக்கெப்படி இது தெரியுமுன்னு :-) பள்ளிக்கூட நினைவு. இன்னும் மறக்கலை என்பது  விசேஷம்.

அஞ்சு    கேக்ஸ் வந்தன போட்டிக்கு. அதுலே ஒன்னு எனக்கு ரொம்பப் பிடிச்சது. இன்னொன்னு கேக் வச்ச ஸ்டேண்ட் அழகு. மற்ற மூணும் பரவாயில்லை ரகம். நம்ம அச்சன் ( பாதிரியார் ஃப்ரம் கேரளா,)  அப்புறம் முக்கிய விருந்தினரா வந்தவரும் அவர் மனைவியும் கேக்கைப் பார்வையிட்டார்கள். கொஞ்சூண்டு ஒரு துளி வெட்டி எடுத்துத் தின்னக் கொடுத்தோம்.   கூடிப்பேசி  'ஜெயிச்ச கேக்' எதுன்னு சொன்னாங்க. நான் நினைச்சதுக்குத்தான் வெற்றி! கூரைமேல் பனி விழுந்த வீடு அது. நல்ல கிரியேட்டிவிட்டி!


அந்த அஞ்சு கேக்குகளையும் துண்டம் போட்டு எல்லோருக்கும் ஒரு மிடறு ஒயினோடு  பறிமாறினாங்க. குடிக்கலைன்னாலும் க்ளிக்கிக்கிட்டேன்:-)
அப்புறம் நேட்டிவிட்டி ப்ளே! ஆங்கிலத்தில்! எல்லாம் சின்னப்பிள்ளைகளே!  நல்லாவே இருந்துச்சு. ஃபேஸ்புக்கில்  வீடியோ போட்டுருக்கேன். சுட்டி இதுதான்.

https://www.facebook.com/gopal.tulsi/videos/10205511482609003/

ஹரியானாவைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் ரெண்டு பேர் ஒரு ஹிந்திப் பாட்டுக்கு ஆடினாங்க. பல இடங்களில் பார்த்துட்டோம். ஆனால் ஸ்டேஜில் இருக்கும் பிள்ளைகளை வீடியோ எடுத்தபடி  அவுங்களுக்கு  டான்ஸ் ஸ்டெப்ஸ்  நினைவூட்டிக்கிட்டு இருந்த அப்பாவை இன்றுதான்  பார்த்தேன்:-) அம்மா வரலை. இங்கே நடனத்தை முடிச்சுட்டு  வேறிடம் போகணுமாம், இதையே ஆட!

 இன்றைக்கே ரெண்டு  விழாக்கள் நம்ம கம்யூனிட்டியில்.  ஒன்னு இங்கே க்றிஸ்மஸ். இன்னொன்னு இண்டியன் கல்ச்சுரல்  க்ரூப் நடத்தும்  பாலிவுட் ஸ்ட்ரீட் ஷோ. நமக்கு அழைப்பு இருந்தும் நாம் போகலை.  பாலிவுட் டான்ஸ் போரடிக்குது இப்பெல்லாம்.

சின்னக்குட்டிகள் சேர்ந்து  வெள்ளிமூங்கா படத்தில்  வந்த  'வல்லாரும் கண்ணுள்ள வெள்ளிமூங்கா' பாட்டுக்கு  டான்ஸ் ஆடுனாங்க.  சூப்பர்!

இத்தனை வருசமாகியும்  'ரோஜா' பாட்டுகள்தான்  கொண்டாட்டத்தில் பங்கெடுத்துக்குது! புது வெள்ளை மழை  பாட்டும், காதல் ரோஜாவேயும் உண்மையாவே நல்லாத்தான் இருக்கு!

மேடை நிகழ்ச்சியை விட  குட்டீஸ் எல்லாம் மேடைக்குக் கீழே சேர்ந்து சைட் ஷோ நடத்திக்கிட்டு இருந்தாங்க. பலூனை வச்சுக்கிட்டு ஒரே விளையாட்டு!

நிகழ்ச்சியில் பங்குபெற்ற குட்டீஸ்களுக்குப் பரிசு கொடுக்க நம்மவரைக் கேட்டுக்கிட்டாங்க.  என்ன ஆனாலும்  மூத்த அங்கம் இல்லையோ!  மூத்தோருக்கு மரியாதை செய்வதில் கேரளா க்ளப்  முன்னிடத்தில் இருக்கு என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேணும்.

கோபால் மேடைக்குப்போனார். குட்டிகளும் வந்து சேர்ந்தாங்க. அப்போ வெள்ளிமூங்கா பாட்டை பின்னணியில் ஒலிக்க விட்டதும்,  முதலில் ஆடின குட்டிகள் திரும்பவும் ஆடினது ரொம்பவே ஜோர்! பரிசு வாங்குவதைவிட ஆடுவதில்தான் நாட்டம்:-)


https://www.facebook.com/gopal.tulsi/videos/10205494057333382/?pnref=story

இன்னும் சில நடன நிகழ்ச்சிகளுடன்  மேடை நிகழ்ச்சிகள்  சரியா ஒன்பதரைக்கு முடிஞ்சது!  நல்ல டைமிங்.

நல்ல கொண்டாட்டமா அமைஞ்சதில் நமக்கும் திருப்தி! நல்ல கூட்டம்தான்!

என்ன ஒன்னுன்னா....முதலில் வயிற்றுக்கு ஈந்து அதன்பின் செவிக்கும் கண்ணுக்கும் ஈய வேண்டியதாப் போச்சு 


PINகுறிப்பு:  சின்ன வீடியோ க்ளிப்புகளை யூ ட்யூபில் ஏற்றுவதைவிட ஃபேஸ்புக்கில்  போடுவது சுலபமா இருக்கு.


7 comments:

said...

அழகான கொண்டாட்டம் ....

merry christmas

said...

நாங்களும் கொண்டாடினோம்.எம்மாம் பெரிய பாத்திரங்கள்ல சாப்பாட்டு ஐட்டங்கள்!

said...

வணக்கம் டீச்சர்! கிறுஸ்மள்,மிலாது நபி,புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பத்திரிகை நிருபர் மாதிரி காமிராவை வச்சுகிட்டே சுத்துறீங்க. உங்க எழுத்தின் அழகோடு தொடர் பயனம் செய்வது உங்கள் காமிரா கதைகள்தான்.

said...

இந்தமாதிரியான கம்யூனிடி விழாக்கள் சிறப்பாக இருக்கும் அவற்றில் நீங்கள் இருந்தால் சுவை சேர்ந்து விடும் வாழ்த்துக்கள்

said...

அந்த குழந்தைகளின் நடனமும் பாட்டும் சூப்பர் . கோபால் அவர்கள் கொடுத்த பரிசுகளை வாங்கும் போது கூட தாளம் தப்பாமல் ஆடிக்கொண்டே வாங்கி, பின் எவ்வளவு பத்திரமாக அப்பாவிடம் கொடுத்துவிட்டு கடமை உணர்ச்சி மாறாமல் நடனத்தை தொடருது .

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் !!!!

said...

இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!

சூப்பர் மெனு. இந்தியர்களில் மலையாளிகள் கோவன்கள் பெங்காலிகள் பஞ்சாபிகளைப் போல நல்ல கொண்டாடிகளைப் பார்க்க முடியாது. வாழ்க்கையே ஒரு கொண்டாட்டம் தானே.

said...

வாங்க ஃப்ரெண்ட்ஸ்.


அடுத்த கொண்டாட்டத்துக்கு ரெடி ஆகிட்டீங்களா?

பொங்கிறலாமா? :-)

பின்னூட்டிய நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றீஸ்.