Monday, December 21, 2015

இந்த வாரத்தை க்றிஸ்மஸ் வாரமாக் கொண்டாடலாமா?

எதுவும் வீட்டில் இருந்தே ஆரம்பிக்கணும் என்ற நியதியின் படி,  முதல்லே பசங்களுக்கு சின்னதா ஒரு அலங்காரம் செஞ்சு பார்த்தேன்.

க்ருஷுக்குத்தான்  பொருத்தமா ஒன்னும் கிடைக்கலை.  வீட்டுலே இருந்த சாண்ட்டா பேரிடம் இருந்து குல்லாவும் ஸ்கார்ஃபும் கடன் வாங்கினேன். திரும்பிக்கொடுக்கும் வரை  இருந்து வாங்கிப் போகும் குணம் அதுக்கு :-)  பக்கத்துலே உக்கார்ந்துருக்கு. பார்த்ததும் நம்ம செல்லம் சும்மா இருக்குமா? புதுசா என்ன மாற்றம் செஞ்சாலும்  கிட்டே நின்னு பார்க்கலைன்னா.......  

பயங்கர நோஸி :-)

வாசல் அலங்காரம்.......   பழைய ரீத் காணோம். குக்கர் கேஸ்கட்டில் செஞ்சு வச்சுருந்தேன்.

போன வருசம் கொஞ்சம்  ட்ரீ டெகரேஷன்  பால்ஸ் வச்சுச் சமாளிச்சாச்சு.

இந்த வருசம் ஒரு குட்டி ரீத்.


சாமி ரூம் ஜன்னலுக்கு வேற  விளக்குச்சரம்  மாத்தினோம்.

நம்ம  கப்புச்செல்லத்தின் நினைவாக  இருக்கும் எவர்க்ரீன் லைவ் க்றிஸ்மஸ் மரத்து அலங்காரங்கள் பல , போனவாரத்து  ஆலங்கட்டி மழையில் உடைஞ்சு போச்சு :-( அதனால் ஒரு ஸோலார் லைட் வாங்கிப் போட்டோம். என்ன ப்ராப்லமுன்னா இருட்டானதும் அது தானாக எரியத்தொடங்கும். இங்கே சம்மர் காலம் என்பதால் ராத்திரி  ஒன்பதரைக்குத்தான்  இருட்டவே ஆரம்பிக்குது!




10 comments:

said...

அமர்களமாக இருக்கிறது
இவ்வாரம் முழுதும் தங்கள்துளசித் தளம்
வண்ணமயமான தளமாக இருக்கும் என்பதற்கு இப்பதிவின் மூலம்
கட்டியம் கூறியமைக்கு நல்வாழ்த்துக்கள்

said...

அலங்காரம் அமர்க்களமாயிருக்கு. இன்னும் கேக் பண்ணவேண்டியது ஒண்ணுதான் பாக்கி. வாழ்த்துக்கள்.

said...

கொண்டாட்டங்கள் பலவிதம் அதில் இது ஒரு விதம் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

said...

கண்ணனும் க்றிஸ்துவும் ஒரே இடத்தில். மூன்று ராஜாக்கள் முயல் வடிவத்தில். அன்னை மரியைத்தான் காணொம்.
அவங்களையும் வைங்க. ரொம்ப நல்லா இருக்கு துளசி. இனிய க்ரிஸ்மஸ் தின வாழ்த்துகள்.

said...

அட்டகாசமா இருக்கு :) பொம்மைகளும் அவற்றின் அலங்காரமும் ஆல்வேஸ் அழகோ அழகு
செல்லத்துக்கும் ஒரு சாண்டா ஸ்கார்ப் கட்டி விட்டிருக்கணும் :)

said...

ஆஹா! அமர்க்களமா இருக்கே!

said...

அழகான அலங்காரங்கள் ...

wreath சூப்பர் ..

said...

superb decoration . !!!

said...

படங்கள் எல்லாம் அருமையா இருக்கு.

said...

வணக்கம் நண்பர்களே!

நல்லபடியாப் பண்டிகையைக் கொண்டாடி இருப்பீங்கன்னு நம்பறேன்.

பின்னூட்டிய நட்புகளுக்கு மனம்நிறைந்த நன்றிகள்.

@ வல்லியம்மா,

எந்த மூன்று முயல்கள்? ஙே..........