Wednesday, February 26, 2014

சங்கர மடத்துக்குள்ளே ...............


தெருமுழுசும் அடைச்சு நின்னிருக்கும் கூட்டம் பார்த்து ஒரு  கணம் அரண்டுதான் போனேன்.  பட்டரிடம் பேசிக்கொண்டிருந்த நபரும்  'இன்று  சங்கரமடத்தில் ஆராதனை. அதுக்குத்தான் வந்தேன் ' என்றார்.  அதான் என்னன்னு பார்க்கணும்.


இந்த அடுக்கு மாடங்கள்  இருப்பது சங்கரமடத்தில். பராமரிப்பு வேலைகள் நடக்குது இப்போ.



நியூஸியின் நம்ம தோழியின் வீட்டுக்கு ஒரு விஸிட் போனபோது அங்கே 'சம்மர் க்ளீனிங் செஞ்சுக்கிட்டு இருக்கோம்.  அலமாரியைச் சுத்தம் செய்யும்போது  இந்த செட் கிடைச்சது'ன்னு ஏழு புத்தகங்கள் உள்ள தொகுப்பைக் காட்டி, நீங்க படிச்சுட்டுத்தாங்கன்னு சொன்னாங்க.



மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்.  வானதி பதிப்பக வெளியீடு.

அப்போ கொஞ்சநாள் முந்திதான் நம்ம வல்லியம்மா  'கலியுக வரதன் கண்ணன் காட்சி கொடுப்பது காஞ்சியிலே'ன்னு ஒரு பதிவு போட்டுருந்தாங்க.

அது நினைவுக்கு வரவே சம்பவத்தை தோழியிடம் சொன்னபோது,  இது இந்தப் புத்தகங்கள் ஒன்றில் இருக்குன்னாங்க.  ஆஹான்னு எடுத்து வந்தவள் தினமும் தூங்குமுன் வாசிப்புன்னு  கொஞ்சம் கொஞ்சமா  மூணு புத்தகங்களை முடிச்சுட்டு நாலாவதில் பாதியில் இருந்தேன்.  அப்போதான் நம்ம இந்தியப்பயணம் ஆரம்பிச்சது. வந்து வாசிக்கலாமுன்னு  நியூஸி வீட்டுலே வச்சுட்டு வந்திருந்தேன். இந்தப்பதிவு எழுதும் சமயம்  மொத்த தொகுதியையும் வாசித்து முடிச்சு புத்தகங்களைத் தோழிக்குத் திருப்பிக் கொடுத்தாச்சு



புத்தகத்தில் இருக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்னும்  அவர்மேல்  இருக்கும் மதிப்பை உயர்த்தியதால்   நடமாடும் தெய்வம் என்று அவர் பக்தர்கள் சொன்னது  ரொம்பச் சரி என்று தோணுச்சு.  அவர் மேல் பக்தியும் அன்பும் மனசில் வந்தது உண்மை.

சங்கரமடத்துக்கு  ஒருநாப்பது வருசத்துக்கு முந்தி  என் அறைத் தோழியுடன் போயிருக்கேன். தோழியின் வீடு காஞ்சிபுரத்தில்.  தினமும் சென்னைக்கு வந்து போவதில் சிரமம் இருக்குன்னு  ஹாஸ்டலில்  எங்களோடு இருந்தாங்க. மாதம் ரெண்டு முறை வீகெண்ட் விஸிட்  உண்டு. அப்படிப்போனப்பதான் ஒருமுறை நானும் போயிருந்தேன்.  ஊரைச்சுற்றிப் பார்த்துக்கிட்டு இருந்தப்ப, இதுதான் சங்கரமடம்னு சொல்லி அதுக்குள்ளே சட்னு நுழைஞ்சதும்   முதலில் எனக்கு ஒன்னும் புரியலை. ஒரு முற்றத்தை அடுத்திருந்த  பெரிய வெராந்தாவில் மணையில் அமர்ந்து இருந்தவரை நாங்கள் இருவரும் விழுந்து வணங்கினோம். கல்கண்டு  பிரசாதம் கிடைச்சது.  வெளியே வந்தபின்  அவர் யாருன்னு  கேட்டேன்.  சங்கராச்சாரியார் என்றும்  பெரியவர் வேறு இடத்தில்  தவம் செய்கிறார்.  இவர்  புதுப்பெரியவர். என்றாள். எனக்கு அப்போ அவ்வளவா  விவரமில்லை.  மனம் முழுக்க  அஞ்ஞானம்:(  இப்போ ஞானியான்னு கேக்காதீங்க. குறைஞ்சபட்சம்  உலக அறிவு ஒரு சதவீதம்  வந்துருக்கு:-)

ஆதிசங்கரரே ஸ்தாபிச்சது  இந்த காஞ்சி காமகோடி பீடம் என்றே  பலரும் சொல்கிறார்கள்.  நம்ம மகாபெரியவர் ஸ்ரீ  சந்த்ரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இந்த மடத்தின்  68வது பீடாதிபதியாக பலவருசங்கள் இருந்து,பின்பு புதுப்பெரியவர்  என்ற  ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ,அறுபத்தியொன்பதாவது  பீடாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் தவம் செய்ய  தேனம்பாக்கம் என்ற சிறு கிராமத்துக்கு (இதுவும் காஞ்சிக்கு அருகில்தான் இருக்கு) போய்விட்டார்.


கூட்டத்தில் நீந்தி  உள்ளே போனோம். அங்கங்கே எதோ  நீண்ட வரிசைகள். மூங்கில் கூடையில்  இருந்து என்னவோ பிரசாத விநியோகம் செய்யறாங்க.  இதுக்கிடையில் போவோரும் வருவோருமா இருக்காங்க. எங்கே போறோமுன்னு ஒரு விவரமும் இல்லாம உள்ளே போகும் மக்களைப் பின்தொடர்ந்து  போறோம்.

ஒரு  பெரிய ஹாலில் மக்கள்ஸ் நெருக்கியடிச்சுத்  தரையில் உக்கார்ந்துருக்காங்க. எனக்கு திகிலாப் போச்சு, எல்லோரும் எப்படி எழுந்துக்குவாங்கன்னு! நம்மை வச்சுத்தானே எல்லா எண்ணமும் வருது.  எல்லோருக்கும் என்னைப்போல் முட்டி வலி இருக்காதுன்னு   அப்புறம் தோணுச்சு. அவர்கள் பார்வை போகும் திக்கில்  கண்ணை ஓட்டினேன். தூரத்தில் பூஜை ஒன்னு நடந்துக்கிட்டு இருக்கு.   இவர் இப்ப இருக்கும்  புது சங்கராச்சாரியார்னு  கோபால் சொன்னார்.  ஓ.... அப்ப அங்கே நடப்பது சந்த்ரமௌளீஸ்வரர் பூஜையா இருக்குமுன்னு சொன்னேன். மூணரைப்புத்தக வாசிப்பில் கிடைச்ச தகவல்களை பயன்படுத்த வேணாமா? :-)

மேலே உள்ளது வலையில் சுட்டது.  ஆண்டவருக்கு நன்றி.

இங்கிருந்தே ஒரு கும்பிடு. நகர்ந்து  அடுத்த வாசலில்  போனதுமே  கோவிந்தா  கோபாலான்னு  பஜனைக்குரல் கேக்குது. இந்த  ஹால் ரொம்பப்பெரூசு.  ஆனால்  இங்கேயும் நல்ல கூட்டம்.  கூட்டத்துக்கு நடுவில் வீடியோ எடுத்துக்கிட்டு இருக்காங்க பலர். இன்னும் சிலர் நிகழ்ச்சியை செல்லில் பதிவு பண்ணறாங்க. அப்பதான் தோணுச்சு,  உள்ளே நுழைஞ்சது முதல்  கெமராவை க்ளிக்கவே இல்லையேன்னு.

பஜனை பாடுபவர்  ரொம்ப  புகழ் பெற்றவராம். பெயர் விட்டல்தாஸ் என்று விவரம் சொன்னவர் நம்ம கோபால்தான்.  எப்படி இதெல்லாம் இவருக்குத் தெரியுமுன்னு எனக்கு வியப்புதான்.  நிறைகுடம்!

இந்தப் பக்கத்துலே  இன்னொரு பூஜை நடக்குது. ஆராதனைன்னதும் சரியா விவரம் ஒன்னும் தெரியாம வந்துருக்கேன்.  இன்னிக்கு  மகா பெரியவாளின்  வருஷாப்திகமாம். இருபது  வருசங்களாகி  இருக்கு அவர்  விண்ணுலகம் ஏகி.  இப்போ பூஜை நடப்பது அவருடைய அதிஷ்டானத்துக்கு!  லேசாப் புரிஞ்சது  இது  பெரியவரின் சமாதி என்று.   எனக்குத் தெரிஞ்சவரை ப்ருந்தாவனம் என்று தான் அம்மம்மா சொல்வார்கள்.

திண்ணைபோன்ற  கொஞ்சம் உயரமான  இடத்தில் நின்னாலும்  கேமெராவை எடுத்துக்கிளிக்க  இடமில்லாமல் கூட்டத்தில் நசுங்கிப் போய்க்கிட்டே இருக்கேன்.  கோபால் கேமெராவை வாங்கி  கையை நல்லா உயர்த்தி  சில படங்கள் எடுத்தார். தாளமுடியாத ஒரு கணத்தில் சட்னு அங்கிருந்து இறங்கி வேற வழியில் வெளியே போனோம்.

வழியில்  கண்ணாடிச் சுவருள்ளில்  பெரியவரின் உருவச்சிலை.  நல்ல ஜீவகளையோடு  இருக்கு.  பிரதிபலிப்பின் காரணம் படம் சரியா வரலை:(

காஞ்சி மடத்தில்  நமக்குக் காணக்கிடைச்ச  இடங்களில் எல்லாம் யானையோ  யானை!  ரொம்பப்பிடிச்சதுன்னு  தனியாச்சொல்லணுமாக்கும்:-))))



மடம் ரொம்பவே பெருசுபோல.  விசேஷம்  இல்லாத ஒரு நாள் வந்தால்  ஆற அமர சுற்றிப்பார்க்க விடுவாங்களான்னு................    தெரியலையே:(

கிளம்பி வெளிவரும்போது  யாரோ நம்ம கையில்  என்னமோ திணிச்சாங்க. என்னன்னு பார்த்தால்  ஐஸ்க்ரீம்! மடத்துக்குள் வரும் யாரையுமே  சாப்பாடுபோடாமல் அனுப்புவதில்லையாம்(புத்தகத்தில் இருந்தது)

இன்றைக்கு  மடத்துள்ளே  வெவ்வேறு  கூடங்களில்   வேதபாராயணம்,  ருத்ரம்  சொல்லுதல் எல்லாம் நடப்பதால் அதெல்லாம் முடிஞ்சு  இலை போட  நாலுமணி ஆகுமுன்னு  யாரோ  சொல்லிக் கொண்டிருந்தார்.

நமக்கு சரவணபவனில் சாப்பாடு!

தொடரும்..........:-))


PIN குறிப்பு: நேத்து காலையில் காஞ்சி வரும் வழியில் பெரியசிவன் சிலையும் நந்தி சிலையும் கண்ணில்பட்டதுன்னு சொன்னேன் பாருங்க.  அதைப்பற்றிய விளக்கம் ஒன்னு நம்ம கீதா சாம்பசிவம் பதிவிலிருந்து இன்று காணக் கிடைச்சது.  அதில் ஒரு முக்கியபகுதி கீழே!

"சங்கரமடம் மற்றும் அதன் பக்தர்கள் இணைந்து 65 அடி உயர சிவன் சிலையும், 32 அடி உயர நந்தியையும் இங்கு உருவாக்கியுள்ளனர். சுப்பையா என்ற சங்கர மடத்தின் ஆஸ்தான ஸ்தபதி இந்தச் சிலைகளை உருவாக்கியுள்ளார். "


அவுங்க பதிவில் தெளிவான  படங்களும் இருக்கு. ஒரு நடை அங்கேபோய் எட்டிப்பார்த்து மகிழலாம்.








24 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பெரியவரின் உருவச்சிலை சிலை போலவே இல்லை... அருமை...

சிறப்பான பகிர்வுக்கு நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

நம்பள்கி said...

பகவான் ஆசிர்வாதத்தால் உங்களின் "சங்கர மடத்துக்குள்ளே" இடுகை தமிழ்மணம் மகுடம் சூட்டியுள்ளது!

வாழ்த்துக்கள்!

தி.தமிழ் இளங்கோ said...

மக்கள் நெரிசலில் வித்தியாசமான அனுபவம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி நான் எழுதினது எனக்கே மறந்து போகும் இந்தநேரத்தில் மஹா பெரியவரை எழுதிய நேரத்தில் என்பதிவையும்ம் போட்டு இருக்கிறீர்கள். கீதாவின் பதிவையும் பார்க்கப் போகிறேன். விழிக்குத்துணை சங்கர நாமம். படங்கள் அனைத்தும் அற்புதம்.நன்றி மா.

Unknown said...

ஒங்களுக்கு எவ்ளவு தகிரியம் இருந்தா தமிள்நாட்ல இருந்துக்குட்டு இதெல்லாம் எளுதுவீங்க.

கோபாலன்

தருமி said...

//ஆதிசங்கரரே ஸ்தாபிச்சது இந்த காஞ்சி காமகோடி பீடம் என்றே பலரும் சொல்கிறார்கள். //

இதப் பத்தி ஒரு பதிவு போடப்போறேனே!!!

subha said...

ஒரு 10 வருடத்துக்கு முன்னாடி சங்கரமடம் போயிருந்தோம்.அப்ப உள்ள ஜயந்திரா் ஆசி வழங்குறார் வாங்கன்னு 100 வாங்கிட்டு உள்ள அனுப்பினார் ஒரு ஐயர்.
ஜயந்திரா் கண்முடி தியானத்துல இருந்தார்.பணமாலை போடுகிற பக்தருக்கு மட்டும் அவர் கையால குங்குமம்.
மத்தவங்களுக்குகீழ இருக்கறவா் குடுப்பாங்களாம்.என்ன நியாமோ.அதுக்கு மேல அங்க போக மனசு வரலை.அங்க பணம்தான் பிரதானம்

குலசேகரன் said...

பிறந்த பலனை அனுபவித்து விட்டீர்கள் எனலாம்.

Unknown said...

Adishtanam: when sanyasies leave their body, it is burried and a vilwa tree is planted. It is called Brinda(Thualsi) vanam when Thualsi is planted. For the periava it is Brindavanam (not adhistanam)

Unknown said...

Hindus cremate their body. But when a yati(sanyasi) leaves his body, it is buried and either Thualis (Brinda) or Vilwam is planted. It is called Brindavanam if Thualsi or Adhisthanam if Vilvam

துளசி கோபால் said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

துளசி கோபால் said...

வாங்க நம்பள்கி.

துளசிதளம் வரலாற்றில் இது போல 18 ஓட்டு வந்ததே முதல் முறையாக்கும்!

டெபாஸிட் இழக்கவில்லை:-)

ஆமாம்.....என்ன செஞ்சீங்க?

சாமி ஆசீர்வாதத்தின் பின்னே ஆசாமி ஆசீர்வாதம் இருக்கே:-))))

நன்றிகள் பல.

துளசி கோபால் said...

வாங்க தமிழ் இளங்கோ.

உண்மைதான். அனுபவம் புதுமை!

துளசி கோபால் said...

வாங்க வல்லி.

யானைக்கும் இப்பெல்லாம் மறதி வந்துக்கிட்டே இருக்குப்பா:-=)))))

துளசி கோபால் said...

வாங்க கோபாலன்.

ஆஹா.... அப்படின்னா தமிழ்நாட்டுக்கு வெளியில் இருந்தால் இப்படி எழுதலாமாக்கும்!!!!

வருகைக்கு நன்றி.

துளசி கோபால் said...

வாங்க தருமி.

ஆஹா ஆஹா.... ஒரு நாத்திகரின் பார்வையில் வரப்போகும் பதிவை வாசிக்க ஆவல்!

காத்திருப்போம்.

துளசி கோபால் said...

வாங்க சுபா.

அட! இப்படியெல்லாமா நடக்குது!!!

பணம் பாதாளம் வரை பாயும் என்பது சரிதான்போல:(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

துளசி கோபால் said...

வாங்க குலசேகரன்.

எதிர்பாராத அனுபவம் இது! கிடைக்கணும் என்பது கிடைக்காமல் போகாது!!!!

வரவுக்கு நன்றி.

துளசி கோபால் said...

வாங்க Strada Roseville,

வணக்கம். முதல் வருகைக்கு நன்றி.

ஐயம் தெளிவித்தமைக்கு நன்றி.

ஆனால் அங்கே வில்வமரம் பார்த்த நினைவில்லை.

அதிஷ்டானம் கதவுகளோடுள்ள ஒரு பெரிய அறையில் இருக்கிறது.

வில்வமாலைகளால் அலங்கரித்து இருந்தார்கள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு......

Unknown said...

கடவுளைப்பற்றிய சந்தேகத்துடன் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டிருந்த என்னை நம்ப வைத்தவர் இந்தக் கடவுள். அவர்களின் பணிவு என்னை வியக்கவைக்கிறது.

ந்ன்றி,

கோபாலன்

மாதேவி said...

பெரியவாள் தர்சனம். நன்றி.

துளசி கோபால் said...

வாங்க கே.கோபாலன்.

உண்மையில் அவர் பெரியவரே! அதுவும் மஹா பெரியவர் என்பது சத்தியமான உண்மை.

துளசி கோபால் said...

வாங்க மாதேவி.

அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் பிறந்தோம் என்பதே மனசுக்கு இன்னும் மகிழ்ச்சியா இருக்குப்பா.