ஜனவரி 21 க்கும் ஃபிப்ரவரி 20க்கும் இடையில் வரும் அமாவாசைதான் சீனர்களுக்கு புத்தாண்டு தினம். கூட்டிக்கழிச்சுப் பார்த்தால் தை அமாவாசை கணக்குதான். எப்பவாவது ஒரு சமயம் மாசி மாதத்துலே வந்துருது. அடுத்த புத்தாண்டு மாசியில்தான்! பித்ரு தர்ப்பணமுன்னு நம்ம பக்கத்து மக்கள்ஸ் ராமேஸ்வரம், காசின்னு போகும்நாளில் சீனர்கள் விருந்து சாப்பாட்டுடன் வருசப்பிறப்பு கொண்டாடுறாங்க. வருசம் பொறந்து 15 வது நாள் பவுர்ணமி தினம் சீனர்களின் விளக்குத் திருவிழா. கார்த்திகை தீபம் ஞாபகம் வருதே!
வருசப்பொறப்புக் கொண்டாட்டம் ஒரு நாள் சமாச்சாரம் இல்லை கேட்டோ. ஆற அமர பத்து நாள் கொண்டாடறாங்க. பனிரெண்டு ஜீவராசிகளை வருசத்துக்கொன்னுன்னு வச்சுக்கிட்டு அதுலேயே ஜோசியம், ஆரூடம் எல்லாம் சொல்றாங்கப்பா. அந்தக் கணக்கிலே போன வருசம் பாம்பு. இந்த வருசம் குதிரை! எனக்கென்ன ஒரே வருத்தமுன்னா எலி, புலி, முயல், பன்றி நாய்,குரங்குன்னு இருக்கும் வரிசைகளில் பூனையும் இல்லை யானையுமில்லை:(
சீனர்களுக்கு சிகப்பு நிறத்தின் மேல் அப்படி ஒரு மோகம். அதிர்ஷ்டம் கொணரும் நிறமாம். விழாக்களுக்கான தோரணங்கள் ,கொடிகள், அலங்காரங்கள் எல்லாம்சிகப்பு நிறத்துலேயே இருக்கும்படி பார்த்துக்கறாங்க.
நாங்க Bபூகி ஜங்ஷன் மாலில் மகளுக்குத் தேவையானதை வாங்கியதும், பூகிஸ் மார்கெட் வழியா நடந்து வந்தோம். சைனா டவுனின் ஒரு பகுதி இது. அடுக்கு வரிசையில் இருக்கும் ஸ்டால்களை வேடிக்கை பார்த்துக்கிட்டே ஒரு பொடி நடை. பழவரிசைகள் குவியல் குவியலா 'வா வா'ங்குது. ஆனால் எந்தப்பழமும் வாங்கக்கூடாதுன்னு ஒருமுடிவு. போனமுறை பலாப்பழமுன்னு பாய்ஞ்சேன். அறைக்கு வந்து பார்த்தால் கெட்டுப்போயிருந்தது:( பாடம் ஒன்னு:-)
வரப்போகும் புது வருசத்துக்கான சந்தைப்பொருட்கள் ஏகத்தும் குவிஞ்சு கிடக்கு. குதிரைதான் எங்கே பார்த்தாலும். குதிரை வண்டிகள் நிறைச்சு சாக்லேட் மற்ற இனிப்புகந்தான். ஆனாலும் இனிப்புகளில் என்னதான் சேர்த்திருப்பாங்களோ என்று நமக்கொரு பயம். சாப்பாட்டு சமாச்சாரத்தில் நான் ஒரு கோழை.
அதனால் என்னன்னு (கேமெரா) கண்ணால் தின்னுட்டு வந்தேன். Bபூகிஸ் மார்கெட் சிங்கையிலேயே பெருசு. ஸ்பெஷல் சாப்பாடு வகைகள் அநேகம். குழிப்பணியாரம் மாதிரி ஒன்னு பல்லாங்குழித் தட்டு போல இருக்கும் ஒரு வகை மின்சார சாதனத்தில் செஞ்சுக்கிட்டு இருந்தார் ஒரு கடைக்காரர். திருப்பி விடாமல் ஒரே பக்கம் சுட்டு(!) எடுத்து அடுக்கறார். இன்னொரு கடையில் கண்ணை கவர்ந்து இழுக்கும் பன் வரிசை! படு சூப்பர் கேட்டோ!
சின்னச்சின்ன ப்ளாஸ்டிக் கண்டெய்னர்களில் ஜெல்லிவகைகளை நிரப்பி அதையே அன்னாசிப் பழ டிஸைனில் வச்சு விக்கறாங்க. சும்மாச் சொல்லக்கூடாது..... பார்த்தாலே வாங்கத் துடிக்கும் வகையில் அலங்காரம் செய்வதில் சீனர்களை அடிச்சுக்கவே முடியாது.
ஜப்பான் நாட்டு கலாச்சாரத்தின் வாஸ்துவான maneki-neko ஹேப்பி கேட் என்ற கை உயர்த்திக் கூப்பிடும் பூனை பொம்மை சீனர்கள் கைவண்ணத்தில் Lucky Cats ஆனதுமில்லாமல் வா வான்னு கையாட்டிக் கூப்பிட ஏதுவா பேட்டரி மூலம் ஏற்பாடும் ஆகிருச்சு. கடைகடையா..... கூப்பிடுதே:-))
ரெண்டு சந்துகள் சந்திக்கும் இடத்தில் ஒரு பெரிய மேடையில் ஒரு சீனச்சாமி பொம்மை. பொம்மையை மட்டும் விழாக்காலத்துக்கேத்தபடி மாத்தறாங்க. புது வருசக் கொண்டாட்டமா, சீனர்களின் பனிரெண்டு ராசிகளின் விவரங்கள், எந்தெந்த வருசம் பிறந்தால் அவுங்க என்ன ராசி , அதற்குரிய குணாதிசயங்கள் , எப்படி வாழ்க்கை அமையுமென்றெல்லாம் சாமிக்குக்கீழே இருக்கும் பீடத்தில் போஸ்ட்டர் ஒட்டிவச்சுருக்காங்க. போறவங்க, வாரவங்க எல்லோரும் ஒரு நிமிசம் நின்னு படிச்சுட்டுத்தான் போறாங்க.
ஒரு முழு வரிசையில் ரெண்டு பக்கமும் பூச்செடிகளும் மலர்க்கொத்துகளுமா விற்பனைக்கு இருக்கு. பல செடிகள் எனக்கு ஆசையா இருக்குன்னாலும் புத்தரை நினைச்சுக்கிட்டேன். ஒரு பூவோ, பழமோ, காயோ, இலையோ நாட்டுக்குள்கொண்டு வரப்டாது என்பது நியூஸியின் சட்டம்.
கடைகள் வரிசையின் கடைசியில் இருக்கும் சீன மாரியம்மா(Kwan Im Thong Hood Cho Temple), ஸ்ரீ கிரிஷ்ணன் கோவில்களையும் தரிசிக்கலாமுன்னு போனால், மாரியம்மன் கோவிலை மூடி இருக்காங்க. கோவிலுக்கு முன்னே இருக்கும் கல்பாவிய பெரிய இடத்தில் கொட்டகை போட்டு மேசை, இருக்கைகள் எல்லாம் முதியோர்கள் நிரம்பி வழிகிறாங்க. கோவில்வகையில் முதியோருக்கு Hong Bao கொடுக்கறாங்களாம். சிகப்பு நிற கவர்களிலும் பைகளிலும் சில பரிசுப் பொருட்களைப்போட்டு விநியோகம் நடக்குது. பொருளாதார வசதி குறைவில் இருக்கும் முதியோருக்கு இலவச உணவு, மருத்துவ வசதி, வாழ்க்கைக்குத் தேவையான பலசரக்கு வாங்கிக்க இலவச கூப்பான்கள் இப்படி தேவையானவைகளை வழங்கும் சமூகத்தொண்டு நிறுவனம். இதுக்கு அரசாங்கமும் உதவுது.
குடும்ப அங்கத்தினருக்கும் நண்பர்களுக்கும் இந்த Hong Bao சின்ன சிகப்புக் கவரில் கிடை க்குதுன்னா அதுலே காசுதான் இருக்கும். நம்ம பக்கங்களில் 51, 101, 501, 1001 இப்படி ஒத்தப்படையில் கொடுப்பது இங்கே கொடுத்தால் அது கெட்டது.துரதிஷ்டம். ஆகவே எப்பவும் கொடுக்கும் காசு எவ்வளவு சின்னதா இருந்தாலும் ரெட்டைப்படையில் இருக்கணும். 2,4, 6,8,10, 20, 24 இப்படி அவரவர்சக்திக்கு ஏற்றபடி.
பண்டிகை சமயத்தில் (சிகப்பு) கவர் கிடைச்சால் மறுக்காம வாங்கிக்கணும் என்பதே பண்பாடு. இதை எல்லா நிறக் கவருக்கும் பொதுவாக்கி வச்சுருக்கோம் நம்ம நாட்டில்:( விழாக்காலமா இருக்கணும் என்ற அவசியம் இல்லை.வேலை நடக்கணுமா.... அப்பக்கொடு என்றாகிப்போச்சு!
நம்ம கிரிஷ்ணன் கோவில் திறந்திருக்க, பெரிய அண்ட் சிறிய திருவடிகள் வா வான்னு கைகூப்பி வரவேற்றாங்க.
உள்ளே தீபாராதனை நடக்குது. தீப ஆரத்தி, தீர்த்தம் சடாரி எல்லாம் ஆச்சு. சின்னக்கோவிலா இருந்தாலும் எப்பவும் பளிச் தான். நான் போகும் சமயத்தில் எல்லாம் எதாவது மராமத்து வேலை நடந்துக்கிட்டே இருக்கு. இப்போ சப்த நதிகள் பகுதியில் நடக்குது. கோவில் படு அழகு. முன்னே ஒருக்கில் எழுதுனது இங்கே. அப்போ பார்க்காதவங்க இப்போ ஒருமுறை க்ளிக்கிப் பார்க்கலாம்.தப்பே இல்லை:-)
கோவிலை வலம் வரும்போது புளியோதரையும் பாயாஸமும் பிரசாதமாகக் கிடைத்தது. அண்டா நிறைய இருக்கு. யாருமே வரலை. பேசாமப் பிர'சாதம்' நல்லா சாப்பிட்டுப் பெருமாளுக்கு மகிழ்ச்சி தரலாமுன்னு கோபால் முடிவு செஞ்சுட்டார். சும்மா சொல்லப்டாது....கோவில் புளியோதரைக்கு சூப்பர் ருசி. சிங்கையில் பொதுவாக ப்ரவுன் பேப்பர் இலைதான் பிரசாத விநியோகத்துக்கு. குழம்பு சாதம் பேப்பரில் ஒட்டாமல் இருக்க ஒருவித கோட்டிங் கொடுத்துருக்கு அதில்.
ஒரு டாக்ஸி பிடிச்சு ஹொட்டேலுக்குத் திரும்பினோம். படிகளில் கால் வைக்கும்போது வணக்கம்மான்னு குரல்.தலை நிமிர்ந்து பார்த்தால் கோவியார் தன் குடும்பத்துடன்! நமக்கு முன்னால் வந்து நின்ன டாக்ஸியில்வந்து இறங்கி இருக்காங்க. கோவியார், நாம் வந்திருக்கும் சமாச்சாரத்தையும், நாளை காலை வேலைக்குப் போகும் வழியில் சந்திக்கும் எண்ணம் இருப்பதாகவும் வீட்டில் சொல்லி இருக்கார். அதெப்படி நாங்களும் சந்திக்க வேணாமான்னு தங்கமணி . சிவ செங்கதிர் உடன் கிளம்பிட்டாங்க. மகள் மட்டும் வீட்டுப் பாடம் செய்யும் வேலையில் மும்முரம். இப்பவே வர்றோமுன்னு அவர் டெக்ஸ்ட் செஞ்சுருக்கார். ஆனால் கோவிலுக்குள் போறோமேன்னு கோபால் அலைபேசியை ஸ்விட்ச் ஆஃப் செஞ்சு வச்சதால் சேதியைப் பார்க்கலை.
நல்லவேளை அவர்களைக் காக்க வைக்கலைன்னு மனசு நிம்மதி ஆச்சு. எல்லாம் நலமே! அறைக்குப்போய் ஒரு முக்கால் மணி நேரம்போல பேசிக்கிட்டு இருந்தோம். பதிவர் வாசகர் சந்திப்பு சுவாரஸியமா நடந்தது:-))))) ரொம்ப நேரம் பேச முடியலைன்னு கொஞ்சம் வருத்தம்தான்:( அவர்கள் வீட்டுக்கு சிலநண்பர்கள் இரவு விருந்துக்கு வர்றாங்களாம். சட்னு டாக்ஸி பிடிக்கக் கிளம்பினாங்க. இத்தனை நெருக்கடியிலும் சந்திக்க வந்த அன்பை நினைச்சு மனசு நெகிழ்ந்தது உண்மை. குட்டிக் கண்ணன் வழக்கம்போல் என்னைக் கண்ணால் கட்டிப்போட்டான். நல்ல துரு துரு. க்ளிக்க நின்னால்தானே:-)))
இன்னிக்கு துளசிக்கும், கோபாலுக்கும், கிரிஷ்ணனும் குட்டிக்கண்ணனும், கோவி கண்ணனுமா ஒரே கோகுலம் தரிசனம்தான்:-)
தொடரும்.........:-)
PIN குறிப்பு : இனி வரும் பயணங்களில் முன் நோக்கலாம்!
வருசப்பொறப்புக் கொண்டாட்டம் ஒரு நாள் சமாச்சாரம் இல்லை கேட்டோ. ஆற அமர பத்து நாள் கொண்டாடறாங்க. பனிரெண்டு ஜீவராசிகளை வருசத்துக்கொன்னுன்னு வச்சுக்கிட்டு அதுலேயே ஜோசியம், ஆரூடம் எல்லாம் சொல்றாங்கப்பா. அந்தக் கணக்கிலே போன வருசம் பாம்பு. இந்த வருசம் குதிரை! எனக்கென்ன ஒரே வருத்தமுன்னா எலி, புலி, முயல், பன்றி நாய்,குரங்குன்னு இருக்கும் வரிசைகளில் பூனையும் இல்லை யானையுமில்லை:(
சீனர்களுக்கு சிகப்பு நிறத்தின் மேல் அப்படி ஒரு மோகம். அதிர்ஷ்டம் கொணரும் நிறமாம். விழாக்களுக்கான தோரணங்கள் ,கொடிகள், அலங்காரங்கள் எல்லாம்சிகப்பு நிறத்துலேயே இருக்கும்படி பார்த்துக்கறாங்க.
நாங்க Bபூகி ஜங்ஷன் மாலில் மகளுக்குத் தேவையானதை வாங்கியதும், பூகிஸ் மார்கெட் வழியா நடந்து வந்தோம். சைனா டவுனின் ஒரு பகுதி இது. அடுக்கு வரிசையில் இருக்கும் ஸ்டால்களை வேடிக்கை பார்த்துக்கிட்டே ஒரு பொடி நடை. பழவரிசைகள் குவியல் குவியலா 'வா வா'ங்குது. ஆனால் எந்தப்பழமும் வாங்கக்கூடாதுன்னு ஒருமுடிவு. போனமுறை பலாப்பழமுன்னு பாய்ஞ்சேன். அறைக்கு வந்து பார்த்தால் கெட்டுப்போயிருந்தது:( பாடம் ஒன்னு:-)
வரப்போகும் புது வருசத்துக்கான சந்தைப்பொருட்கள் ஏகத்தும் குவிஞ்சு கிடக்கு. குதிரைதான் எங்கே பார்த்தாலும். குதிரை வண்டிகள் நிறைச்சு சாக்லேட் மற்ற இனிப்புகந்தான். ஆனாலும் இனிப்புகளில் என்னதான் சேர்த்திருப்பாங்களோ என்று நமக்கொரு பயம். சாப்பாட்டு சமாச்சாரத்தில் நான் ஒரு கோழை.
அதனால் என்னன்னு (கேமெரா) கண்ணால் தின்னுட்டு வந்தேன். Bபூகிஸ் மார்கெட் சிங்கையிலேயே பெருசு. ஸ்பெஷல் சாப்பாடு வகைகள் அநேகம். குழிப்பணியாரம் மாதிரி ஒன்னு பல்லாங்குழித் தட்டு போல இருக்கும் ஒரு வகை மின்சார சாதனத்தில் செஞ்சுக்கிட்டு இருந்தார் ஒரு கடைக்காரர். திருப்பி விடாமல் ஒரே பக்கம் சுட்டு(!) எடுத்து அடுக்கறார். இன்னொரு கடையில் கண்ணை கவர்ந்து இழுக்கும் பன் வரிசை! படு சூப்பர் கேட்டோ!
சின்னச்சின்ன ப்ளாஸ்டிக் கண்டெய்னர்களில் ஜெல்லிவகைகளை நிரப்பி அதையே அன்னாசிப் பழ டிஸைனில் வச்சு விக்கறாங்க. சும்மாச் சொல்லக்கூடாது..... பார்த்தாலே வாங்கத் துடிக்கும் வகையில் அலங்காரம் செய்வதில் சீனர்களை அடிச்சுக்கவே முடியாது.
ஜப்பான் நாட்டு கலாச்சாரத்தின் வாஸ்துவான maneki-neko ஹேப்பி கேட் என்ற கை உயர்த்திக் கூப்பிடும் பூனை பொம்மை சீனர்கள் கைவண்ணத்தில் Lucky Cats ஆனதுமில்லாமல் வா வான்னு கையாட்டிக் கூப்பிட ஏதுவா பேட்டரி மூலம் ஏற்பாடும் ஆகிருச்சு. கடைகடையா..... கூப்பிடுதே:-))
பூசணி விதைகளை சிகப்பு, கருப்புன்னு நிறம் சேர்த்து வறுத்து வச்சுருக்காங்க. ஒரு விதையை முன்பல்லில் வச்சுக் கடிச்சு உள்ளே இருக்கும் பருப்பைத் தின்னணுமாம். சரியான டைம்பாஸ் சமாச்சாரம். நமக்கு அவ்ளோ பொறுமை இருக்கா என்ன? உரிச்சு வச்சே நம்மூரில் கிடைக்கும்போது இதை ஏன் தின்னு பார்க்கணும்?
ஒரு முழு வரிசையில் ரெண்டு பக்கமும் பூச்செடிகளும் மலர்க்கொத்துகளுமா விற்பனைக்கு இருக்கு. பல செடிகள் எனக்கு ஆசையா இருக்குன்னாலும் புத்தரை நினைச்சுக்கிட்டேன். ஒரு பூவோ, பழமோ, காயோ, இலையோ நாட்டுக்குள்கொண்டு வரப்டாது என்பது நியூஸியின் சட்டம்.
கடைகள் வரிசையின் கடைசியில் இருக்கும் சீன மாரியம்மா(Kwan Im Thong Hood Cho Temple), ஸ்ரீ கிரிஷ்ணன் கோவில்களையும் தரிசிக்கலாமுன்னு போனால், மாரியம்மன் கோவிலை மூடி இருக்காங்க. கோவிலுக்கு முன்னே இருக்கும் கல்பாவிய பெரிய இடத்தில் கொட்டகை போட்டு மேசை, இருக்கைகள் எல்லாம் முதியோர்கள் நிரம்பி வழிகிறாங்க. கோவில்வகையில் முதியோருக்கு Hong Bao கொடுக்கறாங்களாம். சிகப்பு நிற கவர்களிலும் பைகளிலும் சில பரிசுப் பொருட்களைப்போட்டு விநியோகம் நடக்குது. பொருளாதார வசதி குறைவில் இருக்கும் முதியோருக்கு இலவச உணவு, மருத்துவ வசதி, வாழ்க்கைக்குத் தேவையான பலசரக்கு வாங்கிக்க இலவச கூப்பான்கள் இப்படி தேவையானவைகளை வழங்கும் சமூகத்தொண்டு நிறுவனம். இதுக்கு அரசாங்கமும் உதவுது.
குடும்ப அங்கத்தினருக்கும் நண்பர்களுக்கும் இந்த Hong Bao சின்ன சிகப்புக் கவரில் கிடை க்குதுன்னா அதுலே காசுதான் இருக்கும். நம்ம பக்கங்களில் 51, 101, 501, 1001 இப்படி ஒத்தப்படையில் கொடுப்பது இங்கே கொடுத்தால் அது கெட்டது.துரதிஷ்டம். ஆகவே எப்பவும் கொடுக்கும் காசு எவ்வளவு சின்னதா இருந்தாலும் ரெட்டைப்படையில் இருக்கணும். 2,4, 6,8,10, 20, 24 இப்படி அவரவர்சக்திக்கு ஏற்றபடி.
பண்டிகை சமயத்தில் (சிகப்பு) கவர் கிடைச்சால் மறுக்காம வாங்கிக்கணும் என்பதே பண்பாடு. இதை எல்லா நிறக் கவருக்கும் பொதுவாக்கி வச்சுருக்கோம் நம்ம நாட்டில்:( விழாக்காலமா இருக்கணும் என்ற அவசியம் இல்லை.வேலை நடக்கணுமா.... அப்பக்கொடு என்றாகிப்போச்சு!
நம்ம கிரிஷ்ணன் கோவில் திறந்திருக்க, பெரிய அண்ட் சிறிய திருவடிகள் வா வான்னு கைகூப்பி வரவேற்றாங்க.
உள்ளே தீபாராதனை நடக்குது. தீப ஆரத்தி, தீர்த்தம் சடாரி எல்லாம் ஆச்சு. சின்னக்கோவிலா இருந்தாலும் எப்பவும் பளிச் தான். நான் போகும் சமயத்தில் எல்லாம் எதாவது மராமத்து வேலை நடந்துக்கிட்டே இருக்கு. இப்போ சப்த நதிகள் பகுதியில் நடக்குது. கோவில் படு அழகு. முன்னே ஒருக்கில் எழுதுனது இங்கே. அப்போ பார்க்காதவங்க இப்போ ஒருமுறை க்ளிக்கிப் பார்க்கலாம்.தப்பே இல்லை:-)
கோவிலை வலம் வரும்போது புளியோதரையும் பாயாஸமும் பிரசாதமாகக் கிடைத்தது. அண்டா நிறைய இருக்கு. யாருமே வரலை. பேசாமப் பிர'சாதம்' நல்லா சாப்பிட்டுப் பெருமாளுக்கு மகிழ்ச்சி தரலாமுன்னு கோபால் முடிவு செஞ்சுட்டார். சும்மா சொல்லப்டாது....கோவில் புளியோதரைக்கு சூப்பர் ருசி. சிங்கையில் பொதுவாக ப்ரவுன் பேப்பர் இலைதான் பிரசாத விநியோகத்துக்கு. குழம்பு சாதம் பேப்பரில் ஒட்டாமல் இருக்க ஒருவித கோட்டிங் கொடுத்துருக்கு அதில்.
ஒரு டாக்ஸி பிடிச்சு ஹொட்டேலுக்குத் திரும்பினோம். படிகளில் கால் வைக்கும்போது வணக்கம்மான்னு குரல்.தலை நிமிர்ந்து பார்த்தால் கோவியார் தன் குடும்பத்துடன்! நமக்கு முன்னால் வந்து நின்ன டாக்ஸியில்வந்து இறங்கி இருக்காங்க. கோவியார், நாம் வந்திருக்கும் சமாச்சாரத்தையும், நாளை காலை வேலைக்குப் போகும் வழியில் சந்திக்கும் எண்ணம் இருப்பதாகவும் வீட்டில் சொல்லி இருக்கார். அதெப்படி நாங்களும் சந்திக்க வேணாமான்னு தங்கமணி . சிவ செங்கதிர் உடன் கிளம்பிட்டாங்க. மகள் மட்டும் வீட்டுப் பாடம் செய்யும் வேலையில் மும்முரம். இப்பவே வர்றோமுன்னு அவர் டெக்ஸ்ட் செஞ்சுருக்கார். ஆனால் கோவிலுக்குள் போறோமேன்னு கோபால் அலைபேசியை ஸ்விட்ச் ஆஃப் செஞ்சு வச்சதால் சேதியைப் பார்க்கலை.
நல்லவேளை அவர்களைக் காக்க வைக்கலைன்னு மனசு நிம்மதி ஆச்சு. எல்லாம் நலமே! அறைக்குப்போய் ஒரு முக்கால் மணி நேரம்போல பேசிக்கிட்டு இருந்தோம். பதிவர் வாசகர் சந்திப்பு சுவாரஸியமா நடந்தது:-))))) ரொம்ப நேரம் பேச முடியலைன்னு கொஞ்சம் வருத்தம்தான்:( அவர்கள் வீட்டுக்கு சிலநண்பர்கள் இரவு விருந்துக்கு வர்றாங்களாம். சட்னு டாக்ஸி பிடிக்கக் கிளம்பினாங்க. இத்தனை நெருக்கடியிலும் சந்திக்க வந்த அன்பை நினைச்சு மனசு நெகிழ்ந்தது உண்மை. குட்டிக் கண்ணன் வழக்கம்போல் என்னைக் கண்ணால் கட்டிப்போட்டான். நல்ல துரு துரு. க்ளிக்க நின்னால்தானே:-)))
இன்னிக்கு துளசிக்கும், கோபாலுக்கும், கிரிஷ்ணனும் குட்டிக்கண்ணனும், கோவி கண்ணனுமா ஒரே கோகுலம் தரிசனம்தான்:-)
தொடரும்.........:-)
PIN குறிப்பு : இனி வரும் பயணங்களில் முன் நோக்கலாம்!
16 comments:
அவர்களது கலாச்சாரத்தை
தங்கள் அருமையான புகைப்படங்களுடன் கூடிய
பதிவின் மூலம் ஓரளவு மிகச் சரியாகப்
புரிந்து கொள்ள முடிகிறது
பகிர்வுக்கும் தொடரவும்
மனம்மார்ந்த நல்வாழ்த்துக்கள்
ஆகா... ஒவ்வொரு பொருட்களும் என்னவொரு அழகு அம்மா... இனிய பதிவர் சந்திப்பு... வாழ்த்துக்கள்...
படத்திற்கு கீழே CAPTION போட்ட நல்லா இருக்கும்!
வணக்கம்
நீங்கள் சொல்வது உண்மைதான் அவர்களின் கலாச்சார விழுமியங்களை அறியக்கிடைத்து.. படங்கள் எல்லாம் அழகு வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
டீச்சர் எனக்கும் பூசணி விதைகள் கொறிக்கிறதுன்னா ரொம்பப் பிடிக்கும். ஒரு தடவை இடைவிடாமல் கொறிச்சு தொண்டை வலியே வந்துடுச்சுன்னாப் பார்த்துக்குங்க.. பூசணி விதையைப் போலவே இங்கு சூரியகாந்தி விதையையும் வறுத்து விற்கிறாங்க..கொறிக்க நல்லாருக்கும் :-)
//ஒரு முழு வரிசையில் ரெண்டு பக்கமும் பூச்செடிகளும் மலர்க்கொத்துகளுமா விற்பனைக்கு இருக்கு.//
நிஜப் பூக்களா டீச்சர்? பார்க்க ப்ளாஸ்டிக் மாதிரியிருக்கு?
துளசிக்கும், கோபாலுக்கும், கிரிஷ்ணனும் குட்டிக்கண்ணனும், கோவி கண்ணனுமா ஒரே கோகுலம் தரிசனம் கிடைத்தற்கு மகிழ்ச்சிகலந்த பாராட்டுக்கள்..
பழைய பதிவும், இன்றைய பதிவும் அருமையான விளக்கங்களுடன் கண்முன் தெரிகிறது . நன்றி .
ரசித்தேன்.
/ என்னதான் சேர்த்திருப்பாங்களோ/ இதே பயம் எனக்கும் உண்டு. கேமரா கண்ணாலதானே:)? ஆம் எவ்வளவு வேணுமானாலும் சாப்பிடலாம்.
நல்ல பகிர்வு.
--
(அட்வான்ஸ்) பிறந்தநாள் வாழ்த்துகள்:)!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
இனிய பதிவர் சந்திப்பு.
அசத்துகிறார்கள் பூனையார்கள். அழகிய படங்கள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் துள்சிமா. படங்கள் அத்தனையும் சிங்கப்பூருக்குப் போ போன்னுது. இந்த ஊரில் சீன புதுவருஷம் ட்ராகன் சகிதம் கொண்டாடினாங்க.
அத்தனை விஷயங்களையும் அள்ளிட்டு வந்திட்டீங்களே - புகைப்படங்கள்ல தான்! :)
சீனப் புத்தாண்டு நிகழ்வுகள் - ரசித்தேன்.
ஓ! சிங்கையிலா? அங்கு இருப்பது போல் ஒரு உணர்வு வந்துவிட்டது.
வாரஇறுதியில் சீனர்கள் குடும்பத்தோடு ஒரு நாற்காலியை குத்தகை எடுத்துக்கொண்டு கடல் சம்மந்தப்பட்ட அத்தனை சமாச்சாரங்களையும் ஒரு கட்டு கட்டுவாங்க. அவங்க சாப்பிட்டுட்டு போன இடத்தைப் பார்த்தால் ஒரு போர்க்களம் போலவே காட்சியளிக்கும். எங்க வீட்டு பந்தி போலவே இருக்கும். உண்ண உடுக்க அவங்ககிட்ட தான் கத்துக்கனும்.
அப்புறம் சீனர்களுக்கு நான் பார்த்தவரைக்கும் கருப்பு நிறம் தான் விருப்பம்.
ரொம்ப நாளைக்குப் பிறகு கோவி கண்ணன் படம் இதுல நல்லா வந்துருக்கு.
பளிச் படங்கள் உங்கள் வலைப்பதிவின் பாராட்ட வேண்டிய அம்சம். பதிவர் சந்திப்பு, குட்டி பையனின் படம் எல்லாம் அருமை.
Post a Comment