Friday, January 31, 2014

சிங்கைச் சீனுவின் கோவில்.


மாலை நாலுமணிக்கு மேல்கிளம்பி நிதானமா நடந்து  சிங்கைச் சீனுவின் கோவிலுக்குப் போனோம். சிங்கைச் சீனுவுக்குன்னே நான் ஒரு ஸ்பெஷல்  வச்சுருக்கேன்.  அங்கேயே ஒரு ஓரமா உக்கார்ந்து ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பேன்.   அதனால் பயணங்களில் மறக்காமல் விஷ்ணு சகஸ்ரநாமம் (பெரிய எழுத்து) புத்தகம் கையோடு கொண்டு போவேன். எப்ப ஆரம்பிச்சதுன்னு சரியா நினைவில்லை. இப்ப இந்தப் பழக்கம் நம்ம கோபாலுக்கும்  தொத்திக்கிச்சு.

கோவிலுக்குள் நுழைஞ்சதும் கோபுரவாசலில் இருந்தே பெருமாளுக்கு ஒரு கும்பிடு போட்டுட்டு புள்ளையாரில் இருந்து ஆரம்பிச்சுக் கோவிலை வலம் வருவோம். தாயார், ஆண்டாள், துளசி மாடம் எல்லாம்  தரிசனம் ஆனதும் கடைசியில்  ஆஞ்சிசந்நிதியில் ஒரு கும்பிடு.


பிறகு நேராப்போய் பெருமாளின் முன்னால் நின்னுருவோம். இங்கே நோ ஜருகு என்பதால் மனம் நிறையும் அளவுக்கு கண்ணால் தரிசித்து மனசுக்குள்ளே அவரைக் கொண்டுபோய் பிரதிஷ்டை செஞ்சுக்கலாம்.
பெரிய திருவடி.

மூலவரும் உற்சவரும்.

மேலும் கோவிலில் கேமெரா பயன்படுத்த தடை ஏதுமில்லை. மூலவரைக்கூடக்  க்ளிக்கலாம்.

இங்கே புள்ளையார் சந்நிதியிலேயே அதே மேடையில்  வேல் உருவில் முருகன் இருக்கார்.  இன்னிக்கு அங்கே  வேலுக்கு பதிலா  முருகனின்  விக்கிரஹம் இருந்துச்சு. புள்ளையார் சந்நிக்கு முன்னால் ஒரு ரிஷப வாகனம் வேற!  என்னடா இது......  சிவன் கோவில் சமாச்சாரமெல்லாம் இங்கே  இருக்கேன்னு விசாரிச்சால்,  சிவன் இங்கே விஸிட் வரப்போறாராம்.

மச்சினன் வீட்டுக்குப் போகவர இருந்தால் நல்லதுதானே! மாமன் மச்சானுக்குள்ளே எந்த விரோதமும் இல்லை. மனுசங்கதான் சைவம் வைஷ்ணவமுன்னு  பிரிஞ்சு நின்னு சண்டை போட்டுக்கறாங்க.  இப்பக் காலப்போக்கில் எவ்வளவோ மாற்றங்கள்  வந்து போச்சு. எங்க அம்மம்மா சிவன் கோவிலிருக்கும் தெருவில்கூடப் போகமாட்டாங்க. அப்படி ஒரு ஆங்காரம்:(
 தாயாரும் ஆண்டாளும்.


சந்தியா காலப் பூஜைக்கு ஏற்பாடாகுது.  சந்நிதியைத் திரைபோட்டு மறைச்சிருக்க,  திரையில் வழக்கமான சங்கு சக்ர திருமண் இல்லாம அங்கே ஸ்ரீ வேணுகோபாலன் குழலூதிக்கிட்டு இருக்கார். ஆஹா.... சகுனம் சூப்பர்! புதுசா  அங்கே வச்சுருக்கும் டிவியில் முன்னெப்பவோ  நடந்த  பூஜைகளைக் காமிக்கிறாங்க. அடடா.... என்ன ஒரு மலர் அலங்காரம்!  7677



ஷோடஸ  உபசாரம் முடிஞ்சது. மக்களுக்குத் தீப ஆரத்தி, தீர்த்தம் , சடாரி எல்லாமும் கிடைச்சது. மனநிறைவோடு கிளம்பி செராங்கூன் சாலையில் நடந்து  பொங்கல் சந்தைக்குப் போறோம். போகும் வழியில் மசூதிக்கு அந்தப்பக்கம் இருந்த ஒரு காலி இடத்தில் பெரிய  கொட்டகை போட்டுக்கிட்டு இருக்காங்க. தைப்பூசத்துக்கு  அன்னதானம் நடத்தவாம்.



நம்ம சீனு கோவிலிலும் நாளை  16 ஆம் தேதி பகல் 12 மணி முதல்  17 ஆம்தேதி பகல் 3 வரை தொடர்ச்சியா அன்னதானம் நடக்கப்போகுதாம். அனைவரும் வருகன்னு  ஒரு விளம்பரம் வச்சுருந்தாங்க. ஓஹோ.... அதான்  இன்னிக்குப் பாத்திரங்களைக் கழுவி கமர்த்திட்டாங்களா?

தைப்பூசத்துக்கு  என்னென்ன வேண்டுதல்களுக்கு  அரசின் அனுமதி கிடைச்சிருக்குன்னு சொல்லும்  போஸ்டர், பால் குடம், பால் காவடி, அலகு,  வேல்காவடி , ரதக் காவடி முதலியவைகளுக்கான கட்டண விவரம், எத்தனை மணிக்கு அவுங்க முறை வருது. அதுக்கு  என்ன நிறச் சீட்டுன்னு எல்லாத் தகவலும் அடங்கிய பேனரும் வச்சுருந்தாங்க.


இன்னொருக்கா போய் காய்கறிக்கடையில் நின்னேன். காய்களை விடுங்க..... இந்தக் கீரைகள் எப்படி தளதளன்னு  இருக்கு பாருங்க.  முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, புளிச்சக்கீரை  எல்லாம்கூட இருக்கு! ஹூம்.... கொடுத்து வச்ச சிங்கைவாசிகள்!

மாடுகளைப்போய் பார்த்துட்டு அப்படியே அங்கே மேடையில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கு கண்ணை ஓட்டினேன்.  ரொம்ப சுமாரா இருக்கு.  சினிமாப் பாட்டுகளைப் பாடிக்கிட்டு இருக்காங்க.  எல்லாமே  அபஸ்வரம். லோக்கல் டாலண்ட்களை ஊக்குவிக்கத்தானே வேணும் இல்லையோ! அரங்கு நிறைஞ்ச மக்கள் வெள்ளம்.  உள்ளே நுழையும் வாசலிலேயே அன்னதானம் நடக்குது.  ரொம்பப்பெரிய வரிசை.  ஜஸ்ட் க்ளிக்கிட்டு நகர்ந்துட்டோம்.

  இன்னொரு மேஜையில் ரெண்டடித் துண்டுகளாய் கரும்பை வெட்டி வச்சுருக்காங்க. இலவசம்தானாம்.  சரி. அவர்கள் மனதை நோகடிக்கலாமா?  ஊஹூம்:-)))))

கோமளவிலாஸில் லைட்டா டிஃபன் முடிச்சுக்கிட்டோம்.

மெயில் செக் பண்ணிக்க மணிக்கு 2 டாலர்னு  போர்டு பார்த்துட்டு  அங்கே கூட்டிப் போனார். கோபால். எனக்கு கோல்ட் டர்க்கி  வந்துருமோன்ற பயம்தான். பாவம்.:-) நாம் தங்கி இருக்கும்  ஹொட்டேலிலும் இண்ட்டர்நெட் தொடர்பு  வாங்கிக்கலாம். ஆணால் மணிக்கு 6 டாலர் என்பது எனக்கு அநியாயமாத் தெரிஞ்சது.அதிலும் குறைஞ்சது ரெண்டு மணி நேரம் வாங்கணுமாம்.  சென்னையில் நாம் வழக்கமாத் தங்கும் கெஸ்ட் அபார்ட்மெண்டில்  இலவச  இணையத் தொடர்பு தர்றாங்க. நமக்கு எப்ப வேணுமுன்னாலும் நம்ம கணினியைப் பயன்படுத்திக்கலாம்.  இங்கே இவ்ளோ பெரிய ஹொட்டேலில்  எதுக்கெடுத்தாலும் காசு , காசு:(

மறுநாள் காலையில் கொஞ்சம் நிதானமாக எழுந்து  கடமைகளை முடிச்சுட்டுக் கோவிலுக்குப் போனோம். முருகர்  தன்னிடத்தில் மீண்டும் வேலை வச்சுட்டுக் காணாமப் போயிருந்தார்.  தரிசனம், சகஸ்ரநாமம் எல்லாம் ஆச்சு. அறைக்கு வந்து மாத்திரையை முழுங்கிட்டுப் படுத்துட்டேன். காய்ச்சல் கூடி இருக்கு.

மாலை அஞ்சு மணி அளவில் ஜுரம் விட்டதும் மாலை உலாவுக்குத் தயாரானேன். பொங்கல் சந்தையில் மக்கள் கூட்டம். தைப்பூசத்துக்குத் தண்ணீர் பந்தல் பேனர் வைக்கும் வேலை ஒன்னு பக்கத்திலே !  காணும் பொங்கல் ஆச்சே. இதுவரை ஒரு நட்புகளையும் சந்திக்கவே இல்லையேன்னு  மனதில் ஒரு நெருடல். எல்லாம் காய்ச்சல் படுத்தும் பாடு:(

நம்ம கோவி.கண்ணனுக்கு மட்டும் சிங்கையில் இருக்கும் விவரத்தையும் மறுநாள் நியூஸி கிளம்பும் சமாச்சாரத்தையும்  டெக்ஸ்ட் அனுப்பி இருந்தார் கோபால். ஏதோ முக்கிய வேலையில் இருப்பதாயும்,  சந்திக்க இரவு 11 மணிக்குமேல் ஆகுமே என்றவர், மறுநாள் காலை வேலைக்குப்போகும் வழியில் வந்து சந்திப்பதாகச் சேதி அனுப்பினார்.

மகளுக்கு ஒரு சில சாமான்கள் வாங்க பூகி ஜங்ஷனுக்கு  ஒரு டாக்ஸி பிடிச்சுப்போனோம். வழக்கமா நடந்துதான் போவேன். இப்பக் கொஞ்சம் உடம்பு முடியலை:( டாக்ஸி ஸ்டேண்ட் போகும் வழியில்  ரெண்டு மூணு வலை அடிச்ச ட்ரம்வச்சு தீயில் ஆஹுதி நடக்குது.  சீனர்கள்! பக்கத்துக்கோவிலில் இருக்கும் பழைய காகிதங்களைக் கொண்டு வந்து எரிச்சுக்கிட்டு இருக்காங்க. வரப்போகும் புது வருசத்துக்கான க்ளீனிங் அப்.






இறந்த உயிர்களுக்குப் படையல் போட்டுருக்காங்களாம்.


தொடரும்.......:-)

பின்குறிப்பு:  இன்று சீனப்புத்தாண்டு கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்து(க்)கள்.





19 comments:

said...

செங்கையிலும் நம்ம போகிப் பண்டிகை போல பழசு எல்லாத்தையும்

தீயுட்டு கொளுத்துற பழக்கம் சீனர்களுக்கு இருக்குது .

நம்ம நடு தெருவிலே குப்பையெல்லாம் கொளுத்தறோம்
அவங்க ஒரு டிரம் லே போட்டு தீயிடறாங்க.

அதான் வித்யாசம் .

மீனாச்சி பாட்டி.

said...

அழகான, அருமையான படங்கள் மூலம் எங்களுக்கும் தரிசனம் கிடைத்தது அம்மா...

நன்றி... வாழ்த்துக்கள்..,.

said...

இனிய சீனப்புத்தாண்டு வாழ்த்துக்கள்...

said...

வாங்க மீனாட்சி அக்கா.

சிங்கையில் சுதந்திரத்தின் கூடவே ஒரு ஒழுங்கு முறையும் இருக்கு.

"ஏய் நான் யார் தெரியுமா?" இங்கே எடுபடாதேக்கா:-)

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

உங்கள் ரசனைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

said...

நல்ல தரிசனம் எங்களுக்கும் கிடைத்தது தங்கள் அழகான படங்களின் மூலமாக. நன்றி.

said...

பாஸ்போர்ட், விசா இல்லாமயே தரிசனம் கிடைச்சுது

Anonymous said...

சிங்கப்பூரின் ஒழுங்கு, கட்டுப்பாடு, சுத்தம், திட்டம், நேர்த்தி எனப் பலவற்றையும் நாம் கற்க வேண்டியவை நிறைய இருக்கு, இங்குள்ளோரே கவனிக்கவும்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

வருகைக்கும் ரசனைக்கும் நன்றீஸ்ப்பா.

said...

வாங்க ராஜி.

நான் ஆரணி அரண்மனையில் சுத்திக்கிட்டு இருக்கேன்.நீங்க அதுக்குள்ளே சிங்கைக்கு வந்துருக்கீங்க:-)

said...

வாங்க விவரணன் நீலவண்ணன்.

வணக்கம். முதல் வருகைக்கு நன்றி.
நீங்க சொல்வது உண்மைதான்.
சிங்கை வரும் அரசியல் வியாதிகள் நாடு திரும்பியதும் சென்னையை சிங்கை ஆக்கிக் காட்டுவோம் என்று சொல்வதோடு சரி:(

சுதந்திரம் என்பது பொறுப்போடு செயல்படுவது என்பதை எப்போதுதான் நம் மக்கள்ஸ் உணர்வார்களோ:(

said...

சிங்கை சீனு கண்ணையும் மனசையும் நிறைச்சுட்டார் . அருமையான படங்களுக்கு நன்றி !!

said...

தள்ளுமுள்ளு இல்லாமல் அருமையான தரிசனம் கிடைத்தது.... படங்கள் எல்லாமே சூப்பர்..

said...

சிங்கை சீனுவின் அருமையான தர்சனம் கிடைத்தது.

said...

சிங்கை சீனுவின் அருமையான தரிசனம்.

ஒரு படம் மிஸ் ஆகிடுச்சோ! - நம்பர் வந்திருந்தது!

சிறப்பான படங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.

said...

படங்கள் அத்தனையும் அழகு.

ரிஷபனார் வந்த கால்லயே நிக்கிறாரே.. சிவனைக் கூட்டியார அடுத்த ரவுண்ட் போகணும் போலிருக்கு :-)

said...

இன்னும் பத்து வருடம் கழித்து அற்புதமான படங்கள் உள்ள இந்த தளம் குறித்து பல முறை யோசித்ததுண்டு. பேசாமல் பிடிஎப் ஆக மாற்றி ஈ புக் தளத்தில் பதிவேற்றி விட வேண்டியது தானே.

said...

இவங்க இப்ப எரிக்க ஆரம்பித்ததால்.. இரவெல்லாம் புகை நாற்றம். கதவு ஜன்னல் அனைத்தையும் மூடி வைக்க வேண்டியதா இருக்கு.

said...

கோவில் என்ன ஒரு சுத்தம்! பெருமாளும் தாயாரும், பெரிய திருவடியும் அழகோ அழகு!